June 17, 2013

Meiy Porul Nayanar - Nayanmar 4

Meiy Porul Nayanaar 

 

Reigning the kingdom of Sethu from its capital Thiru-k-kovilur, once, was a king who was also a great devotee of Lord Shiva. He was a good king, who cared for his subjects. He was also a brave king who brought victory to his kingdom, in the many battles he fought. Because he was devoted to Lord Shiva, he served all ‘sivan-adiyaar’s with love. He considered the sivan-adiyaars as the form and representation of ‘Truth’ itself – so, his subjects started calling him ‘Meiy Porul Naayanaar’*.

In one of the neighboring kingdoms, was a king called ‘Muth-tha Naadhan’. He had led several compaigns against Meiy Porul Naayanaar and the kingdom of Sethu. However, he kept losing in these battles. After many such losses, Muth-thu Naadhan decided that he would not be able to defeat Meiy Porul Naayanaar, in a fair battle. He decided to use deceit, to bring about the end of Meiy Porul Naayanaar.

Muth-thu Naadhan was aware of Meiy Porul Naayanaar’s devotion and belief that the very form of sivan-adiyaar was the representation of Truth. He decide to use this to his advantage.

So, Muth-thu-Maadhan disguised himself as a sivan-adiyaar, entered the kingdom of Sethu and reached Thiru-k-kovilur. He then proceeded to the palace of Meiy Porul Naayanaar. The palace guards thought him a true sivan-adiyaar and let him pass. Muth-thu Naadhan entered the palace and proceeded towards the private quarters of the king. At this time, Meiy Porul Naayanaar was resting in his bedroom with his queen. So, when Muth-thu naadhan tried to enter the king’s bedroom, a guard by the name of Dhath-than stopped him.

But the wily Muth-thu Naadhan told Dhath-than that he had with him an old manuscript, which would most certainly help Meiy Porul Naayanaar, in his quest in reaching Truth and attaining Mukthi. So saying, Muth-thu Naadhan brushed aside Dhath-than and entered the bedroom.

Meiy Porul Naayanaar woke up and seeing a sivan-adiayaar at his bedside, was overjoyed. He jumped out of his cot and obsequiesed in front the sivan-adiyaar. Naayanaar then, asked the sivan-adiyaar the purpose of his visit at that late hour and promised to be of service to him, in whatever way he could.

Muth-thu Naadhan told the king about the rare manuscript in his possession and offered to partake of its wisdom with the king. But he insisted that queen leave the room and leave them both alone. The Queen immediately left them alone and as Meiy Porul Naayanaar bowed his head in from the ‘sivban-adiyaar’, Muth-thu Naadhan drew from among his manuscripts and books, his sword, which he had kept hidden. With one swift movement, Muth-thu Naadhan struck the unsuspecting Meiy Porul Naayanaar and the mortally wounded king fell.

 Dhath-than who was standing guard, rushed inside on hearing the nose and finding his king thus, pounced on Muth-thu Naddhan. But Meiy Porul Naayanaar stopped Dhath-than saying that irrespective of who it was, the sivan-adiayaar’s form itself warranted the king’s love, devotion and protection. Naayanaar then made Dhath-than swear that he would ensure the safe passage of the sivan-adiyaar.

By then, many more had gathered at the scene and all wanted to wreak vengeance on Muth-thu Naadhan for his heinous act against their King. But Dhath-than conveyed to them, their king’s wishes and concern for the safety of the sivan-adiyaar. Dhath-than, then proceeded to accompany Muth-thu Naadhan until the edge of the town, where there was no danger of any subject seeking revenge on Muth-thu Naadhan. Dhath-than then returned to the palace where the king was awaiting him. On hearing the news from Dhath-than about the sivan-adiyaar’s safe passage, Meiy Porul Naayanaar was pleased and called for his family, friends and subjects and instructed them to continue their devotion to Lord Shiva. He, bade them farewell and started medidating on Lord Shiva.

Lord Shiva, then appeared to Meiy Porul Naayanaar as ‘Nataraja’ and blessed Meiy Porul Naayanaar with a place by his very side.

Such was the total trust and belief of Meiy Porul Naayanaar had, that the very form and figure of a sivan-adiyaar was the represenatation of the Truth, the Essence and the Meaning, that even when a mortal enemy came in the form of a sivan-adiyaar, the Naayanaar did all he could to protect him, in his dying moments.

“Vellumaa miga valla meiy porulukku adiyen”   - Sundara moorthy

*- ‘meiy porul’  - pronounced ‘Meiyy poruL’; meaning ‘truth’, ‘essence’
  
  (attained ‘siva padham’  in the month of ‘Karthigai’ – under the nakshatram ‘ Uthiram’ )

மெய்ப்பொருள் நாயனார்
 
திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ள நடு நாடு. இந்நடு நாட்டிற்குச் சேதி நாடு என்றும் மற்றொரு பெயர் உண்டு. இரு நாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்ற இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர். இஃது தென்பண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கியது. இந்நகரில் மலாடர் என்னும் மரபினோர் செங்கோலோச்சி வந்தனர். சிவநெறியில் சிறந்து நிற்போரும், அடியார்கள் கருத்தறிந்து ஏவல் புரியும் சுற்றமும் பெற்ற இம்மரபில் தான் மெய்ப்பொருள் நாயனார் தோன்றினார். அம்மன்னர் சிவனடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் என்று கருதி வந்ததால் மெய்ப்பொருள் நாயனார் என்னும் திருநாமத்தைப் பெற்றார். இவர் திருக்கோவிலுரைத் தமது ராஜதானியாகக் கொண்டு அறநெறி வழுவாது மக்களைக் காத்து அரசாட்சி புரிந்து வந்தார். மெய்ப்பொருளார் அரசியல் நெறி பிறழா அரும்காவலன். மக்களுக்காக, நன்னெறியில் வாழ்ந்து காட்டும் குடிமன்னன்! வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட அஞ்சாநெஞ்சன். இம்மன்னன் அடியார்களை அல்லும் பகலும் போற்றிப் பணியும் சிவநேசச் செல்வன் ! ஞானத்தவக் கொழுந்து. இம்மன்னனின் மனதில் சிவனடியார்களின் தோற்றப் பொலிவு, கல் மேல் எழுத்துப் போல் நிலைத்திருந்தது. மன்னவரின் செல்வக் குவியல் கோவில் திருப்பணிக்கும் பயன்பட்டு வந்தது ! இவ்வாறு பண்போடும் பக்தியோடும் வாழ்ந்து வரும் புரவலனுக்கு ஓர் சோதனை ஏற்பட்டது ! இம்மன்னனின் பகை அரசனான முத்தநாதன், பன்முறை போர் புரிந்து புறமுதுகு காட்டி ஓடியவன் ! இவன் சூழ்ச்சியால் மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான்.  

முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். திருநீற்றை விதிமுறைகளோடு, எந்தெந்த அங்கங்களில் எவ்வாறு பூசிக்கொள்ள வேண்டும் என்பதை அறியாத அந்நாத்திகன், திருநீற்றை மேனி முழுவதும் வாரிப் பூசிக் கொண்டான். கையிலே ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அந்த ஓலைக் கட்டுக்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தை அடைந்தான். மன்னவனைப் போலவே, பக்தி மிகுந்த குடிமக்கள், இக் கபட வேடதாரியை, உண்மையான சைவ சன்மார்க்கத் தவசி என்று எண்ணிக் கைகூப்பி வணங்கினர். காண்போர் அனைவரும் உள்ளெழுந்தருள்க என்று வாழ்த்தி வழி காட்டியதால், தங்குதடை ஏதுமின்றி முத்தநாதன் மன்னரின் மாளிகையை அடைந்தான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தான். முத்தநாதன், மன்னனை உடனே பார்க்க வேண்டும் ! என்ற எண்ணம் முகத்திலே பிரதிபலிக்க, தத்தனை ஏற இறங்கப் பார்த்தான், குறிப்பால் அப்பொருளை உணர்ந்த தத்தன், முத்தநாதனை நோக்கி, என் தலைவர் அகத்தே துயில்கின்றார். காலம் அறிந்து தேவரீர் உள்ளே எழுந்து அருளுதல் வேண்டும் என்றான். தத்தன் வார்த்தைகளை அம்மூடன் செவிமடுப்பதாக இல்லை. அவன் தடையையும் மீறி மன்னவர்க்குத் தருமத்தை அருளிப் போகவே இங்கு எழுந்தருளியுள்ளோம் என்று கூறியவாறே கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான். மலர் மஞ்சத்திலே மன்னவன் அருகே அமர்ந்திருந்த அரசியார், சப்தம் கேட்டுத் திரும்பி, சிவனடியார் ஒருவர் வருகிறாரே என்று அஞ்சியவராய், சட்டென்று மஞ்சத்தினின்றும், துணுக்குற்று எழுந்தாள். தம் தலைவரையும் எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்தார் மன்னர்.  
சிவாயநம என்று குரல் கொடுத்தான் முத்தநாதன். அடியவர் குரல்கேட்டு மன்னர் அகம் மகிழ்ந்தார். திரும்பிப் பார்த்தார். தம் எதிரில் சிவனடியார் நிற்பதைக் கண்டார் ! கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட அரசர், திருநீறு அணிந்து வந்த முத்தநாதனை, முக்கண்ணன் அடியார் என்றெண்ணி, தமது முடிபட அவனது கால்களிலே விழுந்து வணங்கினார். ஐயனே தாங்கள் எழுந்தருளியது யாது கருதியோ ? என்று மலையமநாட்டு மன்னர் பணிவுடன் வினவினார். முத்தநாதன் நா கூசாமல் சிவபெருமான் பண்டைகாலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எம்மிடம் உள்ளது. அதனை உனக்கியம்பி உமக்கு மோட்ச பதவியை அளிக்கவே யான் வந்துள்ளேன் என்று கூறியபடியே தன் கையிலிருந்த ஏட்டுச் சுவடிக்கட்டைக் காண்பித்தான். முத்தநாதனின் கபட வார்த்ததைகளை உண்மை என்று நம்பி மோசம் போன மன்னர் முகம், பகைதனை வென்ற வீரனின் முகம்போல் மலர்ந்தது. அரசியாரின் முகமும் கதிரவனைக் கண்ட கமலம் போல் பூரித்தது. அரசர், இரு கை கூப்பி வணங்கியபடியே, இம்மையில் இவ்வடியேனுக்கு இதனினும் உயர்ந்த பேறு வேறு எதுவுமே இல்லை, தேவரீர் அம்பலவாணர் அருளிச் செய்த ஆகம நூலை வாசித்து அடியேனுக்கு அதன் பொருளையும் அருளிச் செய்தல் வேண்டும் என்று கூறினார். முத்தநாதனுக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்து, அரசியுடன் தாம் தரையில் அமர்ந்து கொண்டார் மன்னர். உயர்ந்த ஆசனத்தில், தாழ்ந்த உள்ளத்தோடு அமர்ந்திருந்த முத்தநாதன் வஞ்சகப் புன்னகையை உதட்டிலே நெளியவிட்ட வண்ணம், மன்னரையும், அரசியாரையும் மாறி மாறிப் பார்த்தான். எதைப்பற்றியோ சிந்திப்பவன் போல் பாசாங்கு செய்தான். முத்தநாதனின் செயலைக் குறிப்பால் உணர்ந்த மெய்ப்பொருளார், தேவரீர் ! யாது சொல்லத் தயங்குகிறீர் ! என்று கேட்டார் மன்னர் !  

பக்தா ! இவ்வாகம நூலைப் போதிக்கும் போது, மலர் மாலை சூடிய கூந்தலையுடைய தங்கள் அரசியார் பக்கத்தில் இருக்கக்கூடாது. இதை நான் சொல்லவில்லை. ஆகம நெறிதான் இவ்வாறு எடுத்து இயம்புகிறது. என்று முத்தநாதன் சொன்னான். உடனே மன்னர். திருமகளைப் போல் அருகே நின்று கொண்டிருந்த அரசியாரைப் பார்த்தார். கணவரின் கட்டளையைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட கற்புடைச் செல்வியான அரசியார், அரசரையும், முத்தநாதனையும் தொழுதுவிட்டு, அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். முத்தநாதன் சங்கரா சிவ ! சிவா! என்று பலமாக இறைவனின் திருநாமத்தை ஓதியபடியே, திருவெண்ணீற்றை எடுத்த உடம்பிலும் நெற்றியிலும் தேய்துக் கொண்டு மன்னனுக்கும் கொடுத்தான். திருவெண்ணீற்றை வாங்கி, பயபக்தியோடு நெற்றியிலும், மேனியிலும், முறையோடு விதிப்படி ஐந்தெழுத்தை மனதில் நினைத்தபடியே அணிந்து கொண்டார் மன்னர் ! ஐயனே ! இவ்வடியேனுக்கு அருள் செய்தல் வேண்டும் என்று பணிவுடன் வேண்டி நின்றார் மன்னர். மன்னவர் சிரம் தாழ்த்தி முத்தநாதனை வணங்கிய போது அப்பகையரசன் ஏட்டுச் சுவடியைப் பிரிப்பது போல் அதனுள் இருந்த உடைவாளை வெளியே எடுத்தான்.  மன்னர் தலைவணங்கி நின்ற தருணம் பார்த்து அந்த வஞ்சகன் தான் நினைத்தபடியே செய்தான். அந்நிலையிலும், மன்னர் மனம் அவன் மீது சற்றுகூட வெறுப்போ, வேதனையே, கோபமோ, கொள்ளவில்லை. மெய்ப்பொருளார், மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார். குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார். முத்தநாதன் வாளெடுத்து மன்னரைத் தாக்கியதை மறைந்திருந்து பார்த்து மெய்க் காப்பாளன் தத்தன் நொடிப் பொழுதில், உள்ளே நுழைந்து, முத்தநாதனைக் கொல்லத் தன் உடைவாளை உருவினான். குருதி கொட்ட, தரையில் சாய்ந்து வீழ்கின்ற மெய்பொருளார் அந்த நிலையிலும் தமது வீரக்கரங்களை உயர்த்தி அவனைத் தடுத்து தத்தா நமர் என்று கூறிச் சாய்ந்தார். 


தத்தா ! இவர் நம்மைச் சேர்ந்தவர் என்ற பொருளை உணர்ந்த தத்தா நமர் என்று பகர்ந்து, நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்தான் தத்தன், தலை வணங்கினான். அவன் உள்ளம் கோபத்தால் துடிதுடித்த போதும், தாபத்தால் உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரியத்தான் செய்தன. கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன். மன்னர் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு, தத்தனிடம், தத்தா ! இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லை வரைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவாயாக ! என்று ஆணையிட்டார். மறுமொழி பேசாது, அப்படியே ஆகட்டும் வேந்தே ! என்றவாறே அரசரை வணங்கிவிட்டு அந்த அரக்கமனம் கொண்ட பகையரசனோடு புறப்பட்டான் தத்தன். மன்னர்க்கு ஏற்பட்ட துன்பம் காட்டுத் தீபோல் நாடு நகரமெங்கும் பரவியது. அரசியார் செய்தியறிந்து அந்தப்புரத்தில் இருந்து உள்ளம் பதைபதைக்க ஓடோடி வந்தாள். ஐயனை மடிமீது தாங்கி பலவாறு புலம்பி அழுதாள். முத்தநாதனின் கொடிய செயலைக் கேள்வியுற்றுக் கொதித்தெழுந்தனர் மக்கள். தத்தன் மக்களிடம் மன்னர் ஆணையை எடுத்துக் கூறினான். அனைவரும் வேதனையோடு மன்னரைக் காண அரண்மனைக்கு வெள்ளம் போல் திரண்டு சென்றனர். தத்தனும் முத்தநாதனை நகரின் எல்லையைக் தாண்டி கொண்டு போய் சேர்த்தான். காற்றிலும் கடுகி அரண்மனை விரைந்தான். தத்தன் வரும்வரை மன்னர் உயிர் துடித்துக் கொண்டேதான் இருந்தது. மன்னரது கவலை எல்லாம் முத்தநாதனுக்கு எவ்வித பேராபத்தும் நேரக்கூடாதே  என்பதுதான் ! தத்தன், விரைந்து வந்து, மன்னரை வணங்கி, அரசே ! தங்கள் ஆணைப்படி அத்தவசியை நல்ல முறையில் ஆபத்து எதுவுமின்றி எல்லையைக் கடந்து அனுப்பி வைத்தேன் என்றான். மன்னர் நாக்குழற, இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார் என்று கூறியவாறே தலையைச் சாய்த்தார். அவரது ஆவியும் பிரிந்தது. அப்பொழுது அவ்வறையிலே பேரொளி பிறந்தது. இடபத்தின் மேல் எம்பெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளினார். எம்பெருமான் திருவருளால் மெய்பொருளார் புதுப்பொலிவுடனும், இளமையுடனும் உயிர் பெற்று எழுந்தார். அரசியார் அகம் மகிழ்ந்தார்கள். தத்தன் ஆனந்தத்தால் தத்திக் களித்தான். மக்கள் மனம் மகிழ்ந்தனர். மெய்ப்பொருளார்க்கு ஆனந்தக் காட்சி அளித்த அம்பலத்தாண்டவன் அச்சிவனருட் செல்வர்க்கும், அவரது அருமை மனைவியர்க்கும் எப்பொழுதும் தம்மோடு வாழும் சிவப்பேற்றினை அருளினார். உயிர் போகின்ற சமயத்திலும் கூட, சிவனடியார்களிடத்தும், வெண்ணீறு அணிந்தவர்களிடத்தும் பக்தியுடையவராய் வாழுங்கள் என்று வாழ்ந்து காட்டி, உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் என்றால் அவரது பக்தி எத்துணைச் சிறப்பு மிக்கது என்பதனை அளவிடயாரேவல்லார்!  

குருபூஜை: மெய்ப்பொருளார் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்.


“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே-வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து”
என்கிறது திருக்குறள்.


இத்திருக்குறளுக்கு மெய்ப்பொருள் நாயனார் நல்ல உதாரணபுருஷராகத் திகழ்கிறார்.



ஒருவரின் தவறான செயலுக்குப் பழிக்குப் பழிவாங்குவது சுலபம். ஆனால், மிகவும் பொறுமையுடன் தவறுகளை மன்னிப்பது அரிதானதாகும்.



மன்னிப்பவர்களை உலகம் மதிக்கிறது. தண்டிப்பவர்களை அல்ல. மன்னிக்கும் சுபாவம் உடையவர்களையும் அவர்களது பெருமைகளையும் பொன்னைப்போல் போற்றி தன் மனத்துக்குள் பத்திரப்படுத்துகிறது சமுதாயம் என்கிறார் வள்ளுவர். மெய்ப்பொருள் நாயனார் கதையை உலகம் இன்றளவும் பேசுவதற்குக் காரணம் மன்னித்தருளிய அவரது குணம்தான்.


சிவனடியாரைப் போல் வேடமிட்டிருந்தாலும் அந்த வேடத்தை மதித்து இவர் நம்மவர் என்றார் மெய்ப்பொருள் நாயனார். காணும் உயிர்களையும், மனிதர்களையும் சிவ சொரூபமாகவே நாம் பார்த்துப் பழகிவிட்டால் மன்னிக்கும் குணம் தன்னால் வந்துவிடும்.

ஆக, பொறுமையுடன் நடந்து கொள்ள அளவுகடந்த அன்பு, அல்லது பக்தி நம் மனத்தில் வேண்டியிருக்கிறது.

ஒரு தாய் தன் குழந்தைகளின் குறும்புகளையும், தவறுகளையும் மன்னித்து விடுவதுபோல், பிறரை மன்னிப்பதற்கு மிகவும் பக்குவம் தேவை.

ஆனால், என்னவோ தெரியவில்லை, உடனே தண்டிப்பதில்தான் பலருக்கும் திருப்தி கிட்டுகிறது.

“என்னைப் பார்த்து அவர் இப்படிச் சொல்லிவிட்டார். நானும் பதிலுக்கு ஒரு வார்த்தை நாக்கைப் பிடுங்கிச் சாவதைப் போல் கேட்டுவிட்டேன்” என்கிறார்கள்.

பதிலுக்குப் பதில் திட்டுவது, பதிலுக்குப் பதில் தாக்குவது, என்பதில் கிடைக்கும் திருப்தி வெறும் ஈகோவிற்குக் கிடைக்கும் திருப்திதான். 

ஆணவத்திற்கு ஏற்படும் திருப்தி அது.
இது குறித்து வள்ளுவர் சொல்லுகிறார்.
“ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்”

பழிவாங்கிவிடுவதில் ஆணவம் தற்காலிகமாகத் திருப்தி அடைகிறது. அது ஒரு நாளைக்குக் கிடைக்கும் இன்பம்தான். ஆனால் மன்னிப்பதில் பேரின்பம் இருக்கிறது. மன்னிப்பவர்களை மரணம் வரையிலும் புகழ் தொடர்கிறது.

தண்டிப்பதில் ஆணவம் திருப்தி அடைகிறது. மன்னிப்பதில் ஆன்மா இன்பமடைகிறது. இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
இனி அடுத்த குறளைப் பார்ப்போம்.

“திறனல்ல தற்பிறர் செயினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.”
ஒருவர் நம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டாலும், அதற்காக மனம் வெதும்பி பொறுமை கெட்டு, நாமும் அதர்மம் செய்துவிடக்கூடாது. அதுதான் நல்லது என்கிறது குறள்.

ஒரு மகான் இருந்தார். நிறைய சித்துகள் எல்லாம் கைவரப் பெற்றவர் அவர். அவருடைய மகிமை தெரியாத ஒரு குடிகாரன் அவரை நையப் புடைத்து விட்டான் ஒரு நாள்.

குடிகாரன் அடிக்கும்போது, அந்த மகான் ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, நேரே குளக்கரைக்கு ஓடினார். குளத்தில் மூழ்கிக் குளித்துவிட்டு, குளக்கரையில் அமர்ந்து ஏதோ ஜபிக்க ஆரம்பித்தார். அந்த மகானின் சீடருக்கு அவருடைய செயல் ஒன்றும் புரியவில்லை.

தன்னை அடித்த குடிகாரனை ஏதோ மந்திரத்தின் மூலம் தண்டிக்கப் போகிறாரோ என்று நினைத்தான் சீடன். சற்று நேரத்தில் அந்த மகான் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. சீடன் பொறுமையிழந்து, “சுவாமி! ஏன் அழுகிறீர்கள்?” என்றான்.

“ஒரு குடிகாரன் என்னை அடித்துவிட்டான். எனக்கும் கணநேரம் கோபம் வந்துவிட்டது. எவ்வளவோ ஜப தபங்கள் செய்தும் என் கோபம் முற்றிலும் மறையவில்லையே. அதை நினைத்தே அழுகிறேன்.” என்றாராம்.

“மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம்தம்
தகுதியான் வென்று விடல்.”

என்கிறது மற்றொரு குறள். ஆணவமிகுதியில் பலர் தமக்குத் தீமை செய்தாலும் தம்முடைய தகுதியால் அதை வெல்லவேண்டும். அதைவிடுத்து நாமும் ஆணவம் மிகுந்து தகாதன செய்தால்... ஆத்மிக நஷ்டம் நமக்குத்தான். இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொறுமை என்னும் அரிய பண்பு எளிதில் வந்துவிடாது.

வன்முறை பழகிப்போன ஒரு சமுதாயத்தில், டிஸ்யும் டிஸ்யும் என்று முகத்தில் குத்து விடும் உபதேசம் பெற்ற ஒரு காலச் சூழலில் பொறுமையின் மதிப்பு எவருக்கும் புரிவதில்லை. பொறுமைசாலி இங்கே கோழை என்று மதிக்கப்படுகிறான்.

பொறுமையுடன் இருப்பதற்கு அதிக ஞானபலம் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
“துறந்தாரின் தூய்மை உடையர்; இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்”

துறவிகளினும் தூய்மை உடையவர்கள் யார் தெரியுமா? தரம் கெட்ட மனிதர்களின் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்கிறவர்கள் என்கிறார் வள்ளுவர்.

அதுமட்டுமல்ல, மற்றொரு குறளில் மிகவும் அழகாக ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறார்.

“உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்”

உண்ணாநோன்பு இருப்பவர்களை விடவும் பெரியவர் யார் தெரியுமா? பிறருடைய இன்னாச் சொல் பொறுப்பவர்கள் என்கிறார். காரணம் பசி வயிற்றைச் சுடும். இன்னாச் சொல் மனத்தில் தீ வைத்தது போல் சுடும். அதனால் தீய சொல்லைப் பொறுத்தவர்கள் அதிக சக்தி உடையவர்கள் என்பது அவரது கருத்து. பொறுத்தவன் பூமி ஆள்வான் என்பது பழமொழி. தன்னை ஆள்பவனே பொறுமையைக் கையாளமுடியும் என்பது அனுபவம். ஆதலால் தன்னை ஆள்கிறவன் “ஆண்டி” ஆகிறான். அவன் அரசனிலும் பெரியவன். இதை மறந்துவிடக்கூடாது.

Home  Previous                                                                                                                                        Next

No comments:

Post a Comment