October 20, 2013

Kulachirai Nayanar- Nayanmar 21

Kulachirai Nayanar

Kulachirai Nayanar was born in Manamyerkudi, one of the flourished lands under the regime of Pandya kings.  The Pandya King Nedumaran was impressed at the remarkable qualities of Kulachirai Nayanar and appointed him as a minister in his assembly. Kulachirai Nayanar was an ardent devotee of Lord Sundareshwarar & Goddess Meenakshi of Madurai.  He believed in the self-less service to Lord and service to his devotees as an important mission in his life.  He received the devotees of Lord with great honor and respect, prostrated before them without any hesitation and served them genuinely.  He understood the ultimate fact that service to His devotees is equivalent to service to Lord.  His riches were not a hindrance to his mission; in fact he treated his material possessions were belonged to Lords of Lord and his devotees.  Kulachirai Nayanar’s firm devotion to Lord and on the whole his humble nature persuaded Thiru Gnana Sambandhar.  Later, Thiru Gnana Sambandhar sung priaisng the remarkable qualities of Kulachirai Nayanar in one of his compositions.

During this period of time believers of Jainism multiplied expansively on this land.  Soon King Nedumara also turned out a follower of Jainism, but Kulachirai Nayar was remained firm in his belief of Lord Shiva and Shaiva Siddhantha.  The Jains were created a huge commotion amongst the shivaites and their principle.  Kulachirai Nayanar was  patiently waited for an opportunity to reinstate the Shaiva Siddhantha once again in the minds of King Nedumaran and the people of his Kingdom.

Kulachirai Nayanar along with Mangayarkarasiyar, the queen of Pandya King Nedumaran made all attempts towards bringing back the glories of Shaiva Siddhantha and restoration of belief in Lord Shiva once again in the Pandya Kingdom.  They collectively prayed to Thiru Gnana Sambandhar to guide them in their objective to bring back the Shaiva Siddhantha and reinstate the strong belief in King Nedumaran and the people in his Kingdom.  Kulachirai Nayanar succeded in his mission of restoration of age old belief in Shaiva Siddhantha in Pandya Kingdom with the generous support of Thiru Gnana Sambandhar and Mangayar karasiyar. Thus, he raised the glorious status of a King into Nindraseer Nedumara Nayanar – a zealous devotee of Lord Shiva. Later, Thiru Gnana Sambandhar praised the noble mission of Kulachirai Nayanar in a few glorious verses in one of his compositions known as ‘Mangayarkarasi’ Thirupathikam.

In the Tamil month Avani Anusham is widely celebrated as 'Guru Puja' of Kulachirai Nayanar, the  day he attained the Abode of Lord Shiva (Sivagadhi or Sivan Adi Serantha Nal).

Tamil : Courtesy:  Dinamalar


குலச்சிறை நா‌யனார்

Temple imagesகத்தும் கடலும் அதனில் முத்தும் மூத்த முத்தமிழும் சந்தனமும் செந்தண்மையும் உடைய பாண்டி நாடு என்று பழம்பெரும் புலவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட பாண்டிய நாட்டில் அமைந்துள்ள திருத்தலம் மணமேற்குடி! இத்திருநகரில், சிவனடி போற்றும் தவசீலர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் உயர் குடியில் பிறந்த குலச்சிறையார் என்பவரும் ஒருவராவார். 

இளமை முதற்கொண்டே முக்கண்ணரின் பாத கமலங்களில் தம் சித்தத்தை செலுத்தி, சிவனடியார் களுக்குத் திருத்தொண்டு புரிவதில் திண்மையையும், உண்மையையும் உடையவராய் விளங்கினார். தொண்டர்களின் திருவடி‌ய‌ே பேரின்ப வீடு பேற்றிற்குப் பாதை காட்டும் நன்னெறி என்ப‌தனை உணர்ந்தார். தம்மை வந்தடையும் அடியார்கள் எக்குலத்தவராயினும் வேற்றுமை பாராது, சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார். 

உயிரை வளர்த்துப் பக்தியைப் பெருக்கும் சமய ஞானமே சகல நலங்களுக்கும் ஆணிவேர் போல் விளங்குகிறது. அத்தகைய சமயஞானமற்ற வாழ்வு அஸ்திவாரமில்லா கட்டிடம் போலாகும் என்ற சமயக் கொள்கையின் சிறப்பினை நன்கு கற்றுத் தெளிந்திருந்த வித்தகர் குலச்சிறையார். இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய்ப் பணியாற்றி வந்தார்.

இத்தொண்டர் அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். குலச்சிறையாரும் சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார். அத்தோடு சமணக் கொள்கைகளை மண் மூடுவதற்கு உறுதுணையாகவும் இருந்தார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு உண்மைத் தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். குலச்சிறை நாயனார் திருஞான சம்பந்தரை மதுரைக்கு எழுந்தருள செய்து, சைவ மதத்தின் கொள்கையை உலகறியச் செய்தார். 

குலச்சிறையாரை சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பதிகங்களில் பாராட்டியுள்ளார்கள். இவ்வாறு சிவநாமத்தைச் சித்தத்தில் பதிய வைத்து சைவ நெறியை உலகமெல்லாம் பரப்பிட வாழ்ந்து காட்டிய குலச்சிறையார் இறுதியில் எம்பெருமானின் தூய மலர்ப் பாதகமலங்களைப் பற்றி வாழும் பேரின்பத்தைப் பெற்றார்.


குருபூஜை: குலச்சிறையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

பெரு நம்பிகுலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.

Home  Previous                                                                     
                                                           Next  

No comments:

Post a Comment