Nindraseer Nedumara Nayanar -
Life of Thiru Nindraseer Nedumara Nayanar !!
Courtesy: India Temple Tour
Annalin Aludaya Pillayar Arulale
Thennadu Shivaperum Chengol Uyithu Tharamalithu
Chonnama Neripondriruchar Nagarkon Thanaikonda
Ponnaram Animarbin Puravalanar Polikindrar
Thiru
Alavai/Madurai was ruled by King Kunpandiyan and his
Queen Managayarkkarisiyar. Queen Mangayarkkarasiyar was a staunch
devotee of Lord Shiva. The King Kunpandiyan was attracted towards
Jainism and embraced the Jain teachings and philosophies. Due to
this, people were forced to accept Jainism and prohibited to worship
Lord Shiva and practice Shaiva Siddhantha. The Queen Mangayarkkarasiyar
was worried at the state of affairs; she anticipated a substantial
damage that could affect the beliefs in Shaiva worship. Immediately,
she sought the help of Minister of their assembly Kulachiraiyar who was
also a fervent devotee of Lord Shiva. They invited Thiru Gnana
Sambandhar to Madurai with an intention of reinstate the glories of
Shaiva Siddhantha and worship of Lord Shiva.
Thiru Gnana Sambandhar paid a visit to Madurai and stayed outskirts of the city. Kulaichiraiyar, the minister of King’s assembly requested Sambandhar to visit the King Kunpandiya who was suffering from severe heat blisters. Sambandhar had to face several protests from the Jains but everything ended in vain. Seeing the miserable state of the King, Sambandhar earnestly prayed to Lord for the well being of King Kunpandya. Sambandhar passionately sung praising the glories of Lord Shiva. In a moment, all the heat blisters and the hunch on his back vanished miraculously. King Kunpandya stood straight once again. This phenomenal was a great revelation for King Kunpandya. He felt ashamed of his mistake and turned out a passionate devotee of Lord Shiva.
The King
Kunpandya / Thiru Nindraseer Nedumara Nayanar made great efforts to
spread Shaivism with its full strength right through the length and
breadth of his Kingdom with the help of Queen Mangayarkkarasiyar and
Thiru Kulaichirai Nayanar. This exceptional couple had utmost reverence
for Thiru Gnana Sambandhar and Shaiva Siddhantha. Lord was please at
the devotion and dedication of this couple. Finally, they both
attained the Abode of Lord Shiva.
நின்றசீர் நெடுமாற நாயனார் [Courtesy: Dinamalar]
பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசு புரிந்து வந்தார். இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியார் என்னும் சிவக்கொழுந்தைப் பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றார். இவர் சமணர்களது மாய வலையில் சிக்கிப் பின்னர் ஆளுடைப் பிள்ளையாரின் திருவருளால் சைவ சமயம் சார்ந்து சைவ ஆகம நெறிப்படி ஒழுகினார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார். ஒரு சமயம், வடபுலத்துப் பகை மன்னனை திருநெல்வேலியில் நடந்த கடும்போரிலே தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். திருநெல்வேலி களத்திலே வெற்றி கண்ட நெடுமாறனைக் கன்னித் தமிழ்த் தெய்வப் புலவர்கள், திருநெல்வேலி வென்ற நெடுமாறர் என்று சிறப்பித்தார்கள். இத்தகைய தமது சிறந்த வெற்றிக்குக் காரணம் சிவனாரின் திருவருள் ஒன்றேதான் என்பதை உணர்ந்த நெடுமாறன் ஆலயப் பணிகள் பல புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு, திருநீற்று பெருமையை ஓங்கச் செய்த புகழோடு நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபாதமடைந்து இன்புற்றிருந்தார்.
குருபூஜை: நின்றிசீர் நெடுமாற நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
தம்மகன் நண்பர் வேதியர் புதல்வனைப் பெண்ணென்று மறைத்து சொல்லியபடியே பெண்ணாகக் கண்டவர். இறைவன் திருவருளால் அவ்வேதியர்க்கு வேறோர் ஆண்மகனை அருளி வைத்தவர். வடபுலத்து அரசனை நெல்லைநாதர் பூதப்படைத் துணையால் வென்று நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் எனத் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் பாராட்டப் பெற்றிருப்பவர்.
இவ்வாலயத்தில் மணிமண்டபம் முதலியன் அனைத்துச் சிறப்புச் செய்திருப்பவர். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காலத்திற்குப் பின் வந்த பாண்டியர்கள் சாசனங்களே நம் பார்வைக்கு கிடைத்துள்ளன. நின்சீர் நெடுமாறன் நெல்லைநாதன் திருவருளையும் அன்னை காந்திமதியின் பேரருளையும் பெற்றவன்.
நின்றசீர் நெடுமாற நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
நெடுமாற நாயனார் சீர் நின்ற சீர் ஆதல்
செந்தமிழுஞ் சைவமும் சிறப்புற்று வாழுமாறு
சிவநெறி பேணி அரசியற்றிய பாண்டிய மன்னர் நிரலில் முதன்மை பெறுவர் நெடுமாற
நாயனார். இவர், திருவாசகம் போற்றுஞ் சிவனடியாரா மளவுக்குத் தன்னைச்
சிவனருளுக் காளாக்கவல்ல மாணிக்கவாசக சுவாமிகளை மந்திரியாகக் கொள்ளும்
அதிர்ஷ்டப் பேறு பெற்றிருந்த அரிமர்த்தன பாண்டியனைப்போல, திருத்தொண்டர்
நிரலில் இடம்பெறு மளவுக்குத் தன்னைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்
கருணைக்காளாக்கவல்ல மங்கையர்க்கரசியாரையுங் குலச்சிறையாரையும் முறையே
மனைவியாகவும் மந்திரியாகவுங் கொள்ளும் அதிர்ஷ்டப் பேறு பெற்றிருந்தவர்.
சிவபெருமானாற் சூலை நோய் ஏவப்பெற்றுப் பின் அவராலேயே அது தீர்க்கப்
பெற்றுச் சிவதொண்டிலுயர்வுற்ற திருநாவுக்கரசு நாயனார்போல, திருஞான சம்பந்த
மூர்த்தி நாயனாரால் வெப்புநோய் ஏவப்பெற்றுப் பின் அவராலேயே அது
தீர்க்கப்பெற்றுச் சிவதொண்டிலுயர்ந்தவர். நாயனார் திருக்கையால்
தீண்டப்பெற்றும் திருநீறு பூசப் பெற்றும் உடலுயிர்ப் பிணிகள் நீங்கி உய்யப்
பெற்றதன் மூலம் நாயனார் மகிமையும் திருநீற்று மகிமையும் விளக்கமுறுதற்
கிடமாயிருந்தவர். சைவத்தின் சர்வாதிபத்தியத்தன்மை வரலாற்று ரீதியாக
நிலைநாட்டப்படும் மேன்மை விளைதற்கு ஏதுவாயிருந்தவர். திருஞான
சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாசுரத்து
முதற்பாடலில், "வேந்தனு மோங்குக" என ஆசீர்வதிக்கப்பெற்றவர். அத்துடன்,
"நெல்வேலி வென்ற நெடுமாறன்" என்ற மெய்க்கீர்த்திக்கு விளை
நிலமாயுமிருந்தவர். அவ்வெற்றியும் அவரது சிவபக்தியின் பிரதிபலிப்பே என்பது,
"நெல்வேலிப் போர் நெருக்கிடையில் அவர் சிவனை நினையச் சிவபெருமான் தமது
சிவபூதங்களை அவர் சைனியத்திற் சேரச் செய்து வெற்றிநிகழ வைத்தார்" என்ற
நெல்வேலித் தலபுராண வரலாற்றாற் பெறப்படும். அது சேக்கிழார் நாயனார்
வாக்கிலுங் குறித்துணர நிற்கக் காணலாம். அது, "தீயுமிழும் படைவழங்குஞ்
செருக்களத்து முருக்குமுடல் தோயுநெடுங் குருதிமடுக் குளித்துநிணந்
துய்த்தாடிப் போயபரு வம்பணிகொள் பூதங்க ளேயன்றிப் பேயுமரும் பணி செய்ய
உணவளித்த தெனப்பிறங்க" என்ற செய்யுளில் அமையும்.
இவ்வளவுக்குச்
சிவனன்பிற் சிறந்திருந்த நெடுமாற நாயனார் சிவதொண்டுக்குரிய சகல துறைகளும்
மேலோங்கத்தக்க வாறாக அரசியற்றி உய்வுற்றார். அது, "வளவர்பிரான் திருமகளார்
மங்கையர்க்கரசியார் களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார் இளவர
வெண்பிறை யணிந்தார்க் கேற்ற திருத்தொண்டெல்லாம் அளவில்புகழ் பெறவிளக்கி
அருள்பெருக அரசளித்தார்" என அவர் புராணத்தில் வரும். ஆகவே, அவர் வரலாறு
சார்ந்த இத்தகு மகிமைகளினால் அவர் சீர் சைவவுலகில் என்றைக்கும் நின்ற சீர்
ஆதல் பெறப்படும் என்க.
திருச்சிற்றம்பலம்.
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
Home Previous
Next
No comments:
Post a Comment