December 03, 2022

love

ஒரு அன்பு கணவனின் ஆசையான கடிதம்...

28 இல் என் வாழ்வில் நுழைந்தாய்...
68 இல் என்னை விட்டுப் பிரிந்தாய்...

40 வருட தாம்பத்யம்...
அதிக கொஞ்சல்கள், 
அதை விட கொஞ்சம் குறைவான சண்டைகள்...

அனுசரித்துப் போவதில் மன்னி நீ... என்னையும் தான் இருக்கச் சொன்னாய்...

நீ இருந்த வரையில் அப்படி நான் இல்லை...
பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய்...

நீ இல்லாத இப்போது 
அனுசரித்து மட்டும் தான்
போக வேண்டி இருக்கிறது. 

கிச்சன் இல் நடக்கும் யுத்தம்...
பாத்திரம் தேய்க்க பிக்பாஸ் போல ஷிப்ட்..

காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்
இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபி.

நம் ரூமில் நடு இரவில்  A/c ஆஃப் ஆகி விடுகிறது...

ஹால் இல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.  

அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே..
அதில் சுவையாய் மணமும் இருக்கும்
உன் மனமும் இருக்கும்...

இன்று எனக்கு கூகிள் சமையல் பிடிக்கவே இல்லை. 

ஒரே ஒரு நாள் எனக்காக இறங்கி வருவாயா நீ...
இதமாக உன் கை விரல்களை 
கோர்த்துக் கொண்டு காதலோடு சில மணி நேரம் காலாற நடக்க ஆசை...

எனக்குப் பிடித்ததில் நீ செய்யாமல் போனது ஓன்று தான்.
கண்தானம். 
என்னையும் தடுத்தாய்..

நீ சொன்ன காரணம் மண்ணுலகில் கண்தானம் செய்து விட்டால் விண்ணுலகிற்கு நீங்கள் வரும் போது எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் என்றுக் கூறினாயே..
உண்மை தான்...

முன்போல் இல்லை என் உடல்நிலை. எனக்கொரு இடம் முன்பதிவு செய்... சந்திப்போம் விரைவில்...

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்...
நமக்கே நமக்கான வாழ்க்கையை 
நமக்காக நாம் வாழ...

கதையின் நீதி :-

ஒரு ஆண்மகன் தன்னுடைய இளமைக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து அவனுடைய தாய்...
ஒரு ஆண்மகன் தன்னுடைய கடைசிக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து அந்த ஆண்மகனின் மனநிலை மற்றும் வருமானத்தைப் புரிந்துக் கொண்டு அழகாகவும், அன்பாகவும் குடும்பம் நடத்திய ஒரு நல்ல மனைவி மட்டும் தான்...

ஐ மிஸ் யூ அம்மா √

No comments:

Post a Comment