Naminandhi adikaL
நமிநந்தியடிகள் நாயனார்
ஏமப்பேறுர் என்னும் சிவத்தலம், சோழர்களுக்குச் சொந்தமாகிய பொன்னி நாட்டில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள அந்தணர்கள் வேள்விச் சாலையில் அருமையான பூசை மேடை மீது வெண் மணலைப் பரப்பி இடை இடையே செந்தீயை வளர்த்து வேத பாராயணம் செய்வர். இத்தகைய சீரும் சிறப்பு மிக்குத் தலத்தில் சைவ நெறியில் ஒருமைப்பட்ட அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் தோன்றினார்.
இவர் எக்காலத்தும் எம்பெருமான் திருவடிகளை இடையறாது வணங்கி வழிபட்டு வரும் பெரும் பேறு பெற்றிருந்தார். இவ்வன்பர் நாடோறும் அடுத்துள்ள திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார். திருவாரூர் திருக்கோயிலின் திருமதிலுக்கு அருகே அறநெறி என்று ஓர் தனிக்கோயில் உண்டு. அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அறநெறியப்பர் என்று பெயர். நமிநந்தியடிகளார் அறநெறிச் சன்னதியை அடைந்து அறநெறியப்பரையும் அம்மையையும் பக்திப் பெருக்கோடு வழிபட்டு வந்தார். ஒரு நாள் மாலைப் பொழுது அடிகளார் அறநெறியப்பரைச் சேவிததுக் கொண்டிருந்தார். அங்கே விளக்கேற்றாமல் இருந்தால் எங்கும் இருள் படர்ந்திருந்தது. ஒரே ஒரு விளக்கு மட்டும் எண்ணை தீர்ந்து போகும் நிலையில் சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஆலயத்துள் விளக்கேற்றி வைக்க எண்ணினார்.
தொலைவிலுள்ள தமது ஊருக்குச் சென்று விளக்கு ஏற்ற நெய் வாங்கி வருவதற்குள் பொழுது நன்றாக இருண்டுவிடும் என்பதை உணர்ந்தார் நாயனார். ஆலயத்தை அடுத்துள்ள ஒரு வீட்டிற்குள் சென்று அவ்வீட்டிலுள்ளோரிடம் விளக்கு ஏற்றுவதற்குக் கொஞ்சம் நெய் வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டினார். அந்நாளில் திருவாரூரில் சமணர்கள் சற்று அதிகமாகவே குடியேறியிருந்தார்கள். நமிநந்தியடிகள் விளக்கு ஏற்ற நெய் கேட்ட இல்லத்தில இருந்தவர்கள் சமணர்கள். அச்சமணர்கள் அடிகளாரைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள்.
அவர்கள் அவரைப் பார்த்து, கையில் கனல் ஏந்தி ஆனந்தத் தாண்டவம் ஆடும் உங்கள் இறைவனுக்கு விளக்கு வேறு வேண்டுமா ? கனல் ஒளி ஒன்றே போதுமே ? அப்படியும் விளக்கேற்றத்தான் வேண்டும் என்ற நலல எண்ணம் உமக்கு இருந்தால், எதிரில் உள்ள குளத்து நீரை ஊற்றி ஏற்றுவதுதானே ? என்று சொல்லி எள்ளி நகையாடினர். சமணர்களின் இக்கேலி வார்த்தைகளைக் கேட்டு நமிநந்தியடிகள் நெஞ்சம் உருக ஆலயத்திற்கு வந்து இறைவனைப் பணிந்து, அறநெறியப்பபரே ! எந்தாயே ! எம்பெருமானே ! சமணர்களால் ஐயனுக்கு இழிமொழிகள் ஏற்பட்டுவிட்டதே ! இவற்றை இச்செவிகள் கேட்பதற்கு அடியேன் என்ன பாவம் செய்தேனோ ? மாற்றி அருள, மார்க்கம்தான் யாது உளதோ ? என்று இறைஞ்சினார்.
இறைவன் அருளியதைக் கேட்டு அடிகளார் ஆனந்தப் பெருக்கோடு தேவாசிரிய மண்டபத்தை அடுத்து உம்ம சங்கு தீர்த்தம் என்னும் பெயருடைய திருக்குளத்தை நோக்கி ஓடினார். நீரை மொண்டு வந்தார். விளக்கில் நீரை ஊற்றித் திரியைத் தூண்டிவிட்டார். ஐயனின் அருட்கருணையைத்தான் என்னென்பது ! நீர் விட்டு ஏற்றிய விளக்கு நெய் விளக்கு ஒளியைவிட பன்மடங்கு ஒளியோடு பிரகாசித்தது. ஆனந்தம் மேலிட அடியார் எல்லா விளக்குகளையும் இப்படியே குளத்து நீரை ஊற்றி ஏற்றினார். விளக்குகள் அனைத்தும் மங்களமாகப் பிரகாசித்தன. அடியார் எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கோடு யாது செய்வதென்றறியாது பேரின்ப சுகம் பூண்டு திகைத்து நின்றார். காலப்போக்கில் சமணர்களின் அக்கிரமத்திற்கும் ஒரு முடிவு காலம் வந்தது. சமணம் அழிநதது. சைவநெறி தழைத்தது. திருவெண்ணீற்றுப் பொன் ஒளி ஏமப்பேறுாரை வெள்ளியம்பலம் போல் விளங்கச் செய்தது. அப்பொழுது சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னர், அடியாரின் திருத்தொண்டினையும், பக்தியையும் கேள்விப்பட்டு கோயிலுக்கு நமிநந்தியடிகளையே தலைவராக்கினார். அத்தோடு கோயில் திருப்பணி தட்டாமல் நடைபெறுவதற்காக வேண்டி பொன்னும் பொருளும் கொடுத்து உதவினார்.
அடிகளார் எம்பெருமானுக்குப் பெருவிழாக்கள் பல நடத்தி பெருமிதம் பூண்டார். ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்தரத் திருவிழாவை அடிகளார் முன் நின்று மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். இந்த சமயத்தில் ஏமப்பேறுாரை அடுத்துள்ள மணலி என்ற ஊரில் ஆண்டுக்கொருமுறை, திருவாரூர் தியாகேசப் பெரமான் எழுந்தருளுவது வழக்கம். தியாகேசப் பெருமானுக்கு. மணலியில் பெருவிழா நடைபெறும். ஒருமுறை மணலியில் நடந்த தியாகேசர் விழாவிற்கு தொண்டர்களும், அன்பர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். நமிநந்தியடிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டு பரமனின் அருளைப் பெற்றார். மாலையில் புற்றிடங் கொண்ட பெருமான் முன்போல திருவாரூக் கோயிலில் எழுந்தருளினார். அடிகளார் தியாகேசப் பெருமானை வணங்கிவிட்டு, இரவென்றும் பாராமல், அங்கிருந்து புறப்பட்டு ஏமப்பேறுாரிலுள்ள தமது இல்லத்தை அடைந்தார். அந்தணர், வீட்டிற்கும் போக மனமில்லாமல் புறத்தே படுத்துவிட்டார்.அப்பொழுது உள்ளிருந்து வந்த அம்மையார் கணவன் வெளியே படுத்து உறங்குவது கண்டு திகைத்தாள்; காரணத்தை வினவினாள். அந்தணர் அம்மையாரிடம், அம்மையே ! திருவிழா விற்குச் சென்றிரு்ந்தேன். அங்கு சாதிமதபேதமின்றி எல்லாரும் கலந்து இருந்தமையால் தூய்மை கெட்டுவிட்டது. இந்த நிலையில், மனைக்குள் எப்படி வரமுடியும் ? தண்ணீரைச் சூடாக்கி எடுத்து வா! குளித்து விட்டுப் பிறகு வருகிறேன் என்று விடை பகர்ந்தார். அதுகேட்டு அந்தணப் பெருமாட்டியும் தண்ணீர் காய வைப்பதற்காக உள்ளே சென்றார்கள்.
அதற்குள் அடிகளார் சோர்வின் காரணமாகத் திண்ணையில் சற்றுக் கண் அயர்ந்து உறங்கிவிட்டார். அப்பொழுது எம்பெருமான் அவரது கனவிலே பேரொளி பொங்க எழுந்தருளினார். அந்தணரே ! திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவருமே எனது கணங்கள்தான் ! அப்படியிருக்க உமக்கு மட்டும் ஏன் இப்படியொரு எண்ணம் எழுந்தது ? இவ்வுண்மையை நாளை திருவரூர் வந்து காண்பீராக ! என்று திருவாய் மலர்ந்து அருளினார். அந்தணர் கனவு கலைந்து எழுநதார். தம் தவற்றை உணர்ந்து இறைவனிடம் பிழை பொறுத்து அருளுமாறு வேண்டினார் ! அம்மையார் குளிப்பதற்கு வருமாறு கணவனை அழைத்தாள். அடிகளார் கனவிலே எம்பெருமான் மொழிந்ததைச் சொன்னார். குளிக்காமலேயே வீட்டிற் குள் சென்று துயின்றார்.
மறுநதாள் பொழுது புலர்ந்தும் அந்தணர் தூய நீராடி திருமேனியில் திருவெண்ணீறு பிரகாசிக்கத் திருவாரூருக்குப் புறப்பட்டார். அந்நகருக்குள் நுழையும்போதே நகரிலுள்ளோர் அனைவரும் சிவகண உருவத்ததில் பேரொளிப் பிழம்பாகத் திருவெண்ணீறு மேனியோடு திகழும் காட்சியைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி பூண்டார் நாயனார். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். உடனே, அனைவருமே சிவசொரூபத் தோற்றப் பொலிவு மாறி, பழையபடியே திகழவும் கண்டார். அடிகளார் திருக்கேயிலில் சென்று எம்பெருமானே ! அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்று வேண்டினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாருக்கு திருவாரூரை விட்டுக் செல்ல மனம் வரவில்லை. தியாகேசப் பெருமானின் திருவடிகமலங்களிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். அடிகளார் மனைவியாருடன் ஏமப்பேறுாரை விடுத்துக் திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டார். தியாகேசப் பெருமானுக்கு திருத்தொண்டுகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வரலானார். இவ்வாறு திருவாரூரிலே வாழ்ந்து வந்த நமிநந்தி அடிகளார் இறுதியில் அரனாரின் திருவடி நீழலை அடைந்து பேரின்பம் பூண்டார்.
குருபூஜை: நமிநந்தியடிகள் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்.
திருஞானசம்பந்தர் தேவாரம்
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. 1.62.6
திருநாவுக்கரசர் தேவாரம்
ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. 4.102.2
துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர் பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொற௮ ்டர் பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன் ஆரூர் அமுதினுக்கே. 4.102.4
கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே. 4.102.6
நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலத் தானம்
இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.33.4
சுந்தரர் தேவாரம்
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.4
பதினோறாம் திருமுறை
திருத்தொண்டர் திருவந்தாதி
வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே. 11.31-நம்பி
Home Previous
Next
In the kingdom where the river kAvEri flows through beautifully was the town Emap pERUr. The town where the houses wear the mango leaves indicating good deeds, the fumes of vEdic rites that forms the clouds, the red lotuses in the pond that look like the flame in the rite with surrounding ghee offering, was heard echoing the knowledge of the vEdas. In the tradition of vEdic chanters who live in the unique shaivite discipline, came the ardent devotee of snake ornated Lord by name n^amin^an^dhi adikaL. He was like the fire that is grown with truth of the vEdas, firmly believed in the sacredness of Holy Ash, stood blissfully in holding up the feet of the Black-throated Lord who sings music.
He with a great eagerness to salute the Lord of thiruvArUr went there. He worshiped the only hold for the devotees the Lord who has the feathers decorated matted hair who has taken abode at the ant-hill. Very many days he spent saluting the the Supreme who smashed the three cities into heaps of ash. Then he went to serve the Lord at the araneRi abode. With his heartful of love, mind full of mahEsha he prostrated many times the Lord and stood up in the interest of lighting the lamps thus serving the Kindling flame. By then the time was already evening, and he went to a nearby house to ask for some ghee for the lamps. The house he entered happened to be a house of a Jain. The people in the house mocked at him saying while the God Himself had the fire in His hand why unnecessarily he needed to put the light. No ghee was available if he wanted he could pour the water form the pond to light the lamps, they laughed in the ignorance of half shuttered realization. n^AyanAr felt bad, left to the temple and cried to the Lord.
There rose a voice ordering him to shed the sorrow and pour the pond water in the lamps and lit them. Praising the Lord who has the Sun, Moon and fire as the Three eyes, he brought the water from the pond and put it on the cotton plaited thread. With the world wondering, vengents whispering down, the White-Ash smeared Lord blessing, he lit the lamp that glowed till the dawn. He lit the complete sets of lamps the same way to illuminate the abode fantastically. While the absolute Source of energy is with, what other source could be hurdle ?! As he had the principle of worshiping the Lord shiva at his house everyday, he left the same night to his town and did the worship. The next morning he returned to the temple at thiruvArUr, did all the required services inside and outside the temple with the joy of working for the Greatest Master. In the evening he decorated in his way the abode of the Light with luminant lamps. This continued for many days. By then because of the great love and deed of dhandiyadigaL(1) Jains lost their faith and left the area. The shaivite discipline prospered. The king donated and organized many endowments for the service of the Lord.
The festival town of thiruvArUr geared up for celebrating the auspicious paN^guni uththiram(2). The Street Dancing Lord with the inseparable shakti on the victorious Bull came blessing all the way to thirumaNalai as part of the festivities. There the crowd that mingled with the chanting of the traditionless Lord's fame was without any caste and creed barriers. What barrier, caste, creed, age, sex, race, language or any form of life, could be there while thepashupati is there to salvage every creature. Along with them our n^AyanAr praised the God of nature. He returned home and was sleeping in the darkness of night on the outside corridor of the house. His wife came out and enquired why he did not do the Lord's worship by growing fire that night and skipped the food. When he was in the festival crowd everybody was present so the impurity followed him, he replied. He further asked his wife to bring water to bathe and then start the pUja. As she left, by the wish of God or by tiredness who knows, he slept immediately. The Lord came as if He comes to the pUja, and enlightened him that those who were born in the thiruvArUr belong to His squad. The devotee woke up shivering and with realization. He felt bad for not doing the night worship of the Ultimate Source. Did the worship, told the wife the happenings and rushed to thiruvArUr in the wake of dawn. As he entered thiruvArUr he saw everybody living there to have the form of the Stain-throated Gold like bodied God. He, fearful, fell down on the ground saluted them and rejoiced.
He saw the scene changed again with people back in their normal form. He begged for excuse from the Lord who showers the grace, who shines in everything. He lived doing a great splendid service to the God. He served the devotees of the Ash smeared Lord with many needful things with a rising fame and got praised in the thEvAram of thirun^Avukkarachu n^AyanAr(3). His service to the Lord, to His truthful slaves continued as he was praised by the sage of service. With the world praising his service he entered the luminance of the shade of the Lord of thiruvArUR. Let the thirst to serve thehara in spite of the non-conducive circumstances stay in the mind.
n^IRu punaivAr adiyArkku n^edun^AL n^iyathi yAgavE , vERu vERu vENduvana ellAny cheydhu mEvudhalAl , ERu chiRappin maNippuRRil irun^dhAr thoNdark kANiyenum , pERu thirun^A vukkarachar viLambap peRRa perumaiyinAr

No comments:
Post a Comment