chOmAchi mARa nAyanAr
The town ambar where the chanting of vEdhAs were heard not only in the houses of chanters but also in the pleasant green gardens around the village because of the parrots that repeat the chanting, there n^AyanAr was born in the vEdhAs chanting tradition. Kept the Flawless Feet of the Lord who ripped apart the fierce elephant in his mind bathing in the stream of his pure love. Whenever the devotees of Tiger-skin cladded Lord came he was pleased to salute and serve them nice food. The fruit of performing the holy sacrifices that are aimed at praising the Lord of musical Goddess umA is to hail the holy feet of the Lord who owns us, was his feeling. Irrespective of who it was, if a person had love for the Mercy that held the terrific poison that threatened the existence of the worlds as a small stain in the throat, n^AyanAr would prostrate to him or her as his Lord. He stood for the principle of chanting the Holy Five Letters of the Lord that cleanses the thoughts leading to bliss. The Lord of various sacrificial rites with His consort the Mother of these worlds stood in his mind accepting his multifold worship.
He went to the Lord of Justice who has the holy water flowing through His shining matted Hair, His thiruvArUr. He worshipping Lord shiva, resided there in the friendship of chun^dhara mUrthi n^AyanAr (1) saluting that great saint. chOmAchi mARa n^AyanAr who stood removed the flaws of the mind stayed praising the saint chun^dharar. He stayed finally in the bliss of shivalOka. Let the love for Holy Five Letters and the devotees of the Lord that chOmAchi mARa n^AyanAr grew stay in the mind.
eththanmaiya rAyinum Ichanuk kanbar enRAl ,
aththanmaiyar thAmn^ammai yALbavar enRu koLvAr ,
chiththan^theLi yachchivan anychezuth thOdhum vAymai ,
n^iththan^n^iya mam enap pORRum n^eRiyil n^inRAr
Addendum:
upamanyu bhaktavilAsam adds that chOmAci mARa n^AyanAr worshipped God through sAmavEdham. At thiruvarUr, in the fire rite he performed, chun^dharar perumAn prayed and Lord shiva appeared there to be seen by these great devotees.
சோமாசி மாற நாயனார்
Temple images
சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் வலம் வரும். இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார். இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்விதான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால்தான் இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார் திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்.
சோம வேள்வி
வேதங்கள் இரு பெருங்கடல்களைக் குறித்துப் பேசுகின்றன. மேலும் கீழுமாக இருக்கும் நீர் பெருந்திரள்கள். ஒன்று அழ்மனதின் அடர்த்தியான இருள் நிறைந்த சமுத்திரம் மற்றொன்று அதிமனதின் ஒளிபொருந்திய பிரகாசமான பெருங்கடல்.
ஸ்ரீ அரவிந்தர் இதற்கான ஆதாரமாக ரிக்வேதத்தின் நான்காவது மண்டலத்தின் இறுதிப்பாடலைச் சுட்டுகிறார். வாமதேவ ரிஷியின் பாடல் அது. பெருங்கடலிலிருந்து இனிமையின் அலை ஒன்று எழுகிறது. அந்த அலை சோமம். அந்த அலையின் மூலமாக இறவாத்தன்மை பெறப்படுகிறது. அதன் ரகசியமான பெயர் (கடைந்தெடுக்கப்பட்ட) தெளிவு என்பதாகும். அது தேவ மொழி; அதுவே இறவாமையின் நாபியாகவும் (அமிர்தஸ்ய நாபி) உள்ளது.
ஆழ்மனதின் அடியாழங்களிலிருந்தே அமிர்தத்தை, இறவாமையை கோரும் இனிமையான சோமப் பேரலை எழும்புகிறது. மனம் அதன் ஒளிமிகுந்த தருணங்களில் எல்லாம் இப்பேரலையின் திவாலைகளையே ருசிக்கிறது.
வேதங்களில் ரசம் என்பது அனைத்திலும் ஊறும் ஆதாரத் திரவத்தின் அடிப்படைப் படிமம். மனிதர்களின் ஜீவ திரவங்கள், தாவரச்சாறுகள், உதிரம், வானின் மழை, நிலத்தடி நீரோட்டம், ஆற்றுப்பெருக்கு அனைத்துமே ரசத்தின் பல்வேறு வெளிப்பாடுகள். இந்த ஆதார ரசம் அதன் தெய்வீகத்தன்மையுடன் சடங்கு மூலமாக மானுடத்துக்குக் கிடைப்பதே சோமம்.
சோமம் ஒரு தெய்வமும் கூட. அக்னி போல. அது ஒரு பயன்படு பொருள். கூடவே அது ஒரு தெய்வம். இவ்விதமாகவே சோமம் சந்திரனுடன் தொடர்புடையதாயிற்று. இந்து எனும் சந்திரனின் பெயருக்குத் துளி என்பது பொருள். சோம ரசத்தின் துளியாக நமக்குக் காட்சியளிக்கும் நிலவே சோமன். தெய்வீக ரேதஸ். இதுவே அனைத்து தாவர சங்கமத்திலும் உயிர் சத்தாக இருப்பது. சோம வேள்வி சோமத்துடன் அக்னியையும் வாயுவையும் இணைக்கிறது. இம்மூவொருமையே மானுட உடல். இம்மூவொருமையே பிரபஞ்சம். அதன் சடங்குக் குறியீடே அக்னி மேடை. மானுட உடலைப் பிரபஞ்ச உடலாக சோமத்தை உட்கொள்வதன் மூலம் வேள்வியாளர் மாற்றுகிறார். (சதபத பிராமணம்: 9.5.1.11)
அக்னி-சோமத்திரவம்-வாயு ஆகியவற்றின் முக்கூட்டே பின்னர் இந்திய மரபின் வேதி மற்றும் உடலியல் கோட்பாடுகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் சித்த மரபுகளில் ரசவாதக் கோட்பாடுகளை ஆய்வு செய்த டேவிட் கோர்டன் வைட் என்பார். மற்றொரு முக்கியமான வேத கோட்பாடும் ரசவாதத்தில் மைய இடம் பெறுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பரிபாகமடைதல். இதுவே ஆயுர்வேத சிகிச்சைக் கோட்பாடுகளிலும் பௌத்தத்தின் உடல் குறித்த் கோட்பாடுகளிலும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் வைட்.
இங்கு சோமத்தைச் சந்திரனின் வளர்பிறை-தேய்பிறைகளுடன் இணைக்கும் ஒரு கவித்துவமான தொன்மத்தை பிராமணங்கள் முன்வைக்கின்றன. வானில் காணப்படாத இரவில் சோமனான நிலவு இவ்வுலகின் நீர்களில் கலக்கிறான். அப்போது அவன் கண்ணுக்குத் தெரியாத தன் 16 ஆவது கலையில் இருக்கிறான். அந்த இரவில் தனது சொந்த வீட்டில் (அமா) அவன் வசிப்பதால் அந்த இரவு அமாவாசை என அழைக்கப்படுகிறதாம். இந்தப் பதினாறாம் கலையே அமிருத கலை. இந்த பதினாறு கலைகள் வேள்வியில் பலியிடப்படும் புருஷ பிரஜாபதியின் உடல் கூறுகளின் எண்ணிக்கையாக உள்ளது. ரிக்வேதம் கலை என்பதையே 16 பாகங்களுடன் இணைக்கிறது (ரிக் 8.47. 17) சாந்தோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் மனிதன் பதினாறு பாகங்களால் ஆனவன் என்றும் அவை உணவினாலானவை என்றும் கூறுகிறார். பின்னாட்களில் இந்திய ஸ்மிருதி மரபில் இது பெண்ணின் சூதகச் சுழலின் பின் கருவுறுவதற்கு ஏற்ற நாட்கணக்காகவும் பதினாறு அமைகிறது.
சகஸ்ராதாரத்தில் ஊறும் ஆனந்த நீர் சந்திரனுடன் தொடர்புடைய சோமரசம் எனும் கருத்தாக்கம் பாரத சித்த மரபுகள் அனைத்திலும் காணப்படுவதாகும். வட இந்தியாவில் பிரபலமான நாத சித்த மரபின் முதன்மை சித்தரான கோரக்நாதரின் பாடல்களில் இறவா நிலை அளிக்கும் வானின் நீர் கேணியாக சோமம் சித்தரிக்கப்படுகிறது. கபீரின் பாடல்களில் இந்த சுவர்க்க கேணியின் அமுதத்தை ஹம்சம் அருந்துகிறது. அதர்வ வேதத்தில் இந்த சித்திரிப்பு வருகிறது. அப்பறவையின் தலையிலிருந்து அமுதம் வடிகிறது. (அதர்வ வேதம் IX.9.5) தமிழ் சித்த மரபிலும் இதை நாம் காணலாம். மிகவும் பிரபலமானது குதம்பைச் சித்தரின் பாடல்:
மாங்காய்ப் பாலுண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?
போகரும் ‘ஆக்கையா பொறியைந்தும் மடித்துத்தள்ளு/ ஆனந்தமதியமுதம் சிந்தும் சிந்தும்’ என்கிறார் (சிவயோகஞானம்).
தத்துவப் பேராசிரியர் டி.என்.கணபதி விளக்குகிறார்:
இந்த அமுதத்துக்குச் சித்தர் இலக்கியத்தில் நிறைய பெயர்கள் வழங்கப்படுகின்றன: உச்சிப்பால், சோமாசலம், மதியமுது, அருளமுது, கறவாப்பால், மாங்காய்ப்பால், காயாப்பால். உச்சியிலிருந்து கசிந்தூறும் இந்த அமுதத்தைப் பெறும் முயற்சியை ‘உச்சியிலே பிச்சையெடுத்தல்’ என்பர் சித்தர்கள். மது என்பது பூத சுத்தியை அதாவது உடல்தூய்மையைக் குறிப்பதாகவும் இருக்கலாம். பூத சுத்தியினால் சாதகன் உள்முகமாகத் திரும்புகிறான். குண்டலினி சக்தியை பரமசிவனுடன் ஒன்றிணைக்கிறான். மதுவை ‘குலாம்ருதம்’ என அழைக்கின்றன தந்திரங்கள். நாத சித்தர்கள் அதனை ‘சோமம்’ என்கிறார்கள்.
மேலதிக விவரங்களுக்கு:
பேரா. தண்டாங்கோரை.ந.கணபதி, தமிழ் சித்தர் மரபு, ரவி பப்ளிகேஷன்ஸ், 2004.
டேவிட் கோர்டான் வைட், The Alchemical Body: Siddha Traditions in MedievalIndia, University of Chicago Press,
குருபூஜை: சோமாசிமாற நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
Home Previous
Next

No comments:
Post a Comment