53. Cheruththunai Nayanar
The history of Cheruththunai Nayanar
Courtesy: Shaivam.org
The
place where the Lord of the Universe sits hearing the sound of the
frogs rifting apart the constant rhythm of the streams and slow wind
patting the paddies is the land of rice grains thanychAvUr. In the agricultural family of that town came the staunch servant of the Lord who stomped the kAla, by the name cheruththuNaiyAr.
Heart of love, hands and head tireless of saluting the Giver of
liberation, body and mind completely engaged in serving the Lord in
perfection. The Lord who dances in the streets who has taken abode in
the thiruvArUr temple, that Attracting beauty attracted the n^AyanAr to serve Him.
The
devotee like a bee that is not ordered to go to the flower but does it
on its own, at the abode of the Lord who stays in an anthill,
enthusiastically volunteered to do the various services of the God. The
service was his job, service was his pleasure, service was his living
and idealisation of service was his aim. The Ideal thing delighted in
his sacred work. One day the queen of the pallava emperor kOchchiN^ gar(1)
smelt a flower that was lying near the dais where the garlands and
floral offerings are made. The flowers that are offered to the Lord are
not to be smelt or used before.
The
devotee unable to bear this act became furious. How can one smell the
flower that is designated for the holy matted hair of the Supreme, he
felt. He rushed with a sharp weapon and cut her nose. His act might seem
extreme but was based on love and discipline. What matters to the
devotee whether it is the wife of the emperor or of a common man ? The
fearless devotee reached the floral feet of the Strong companion of
devotees in His service. Let the determination of cheruththuNai n^AyanAr
in offering an unstained service to the Lord shiva stay in the mind.
செருத்துணை நாயனார் Courtesy: Dinamalar.com
அறம்
வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும்
ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில்
செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது தூய வெண்ணீற்று
உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது
செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார்.
அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார்.
அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால்
உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும்
இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின்
நலனுக்காகத் தம் உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த
நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு
இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார்.
ஒருமுறை
ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ
தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய
வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய
பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார்
அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப்
பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த
குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக்
கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல்
நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன்
மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர்
அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும்,
அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகிநாதரின் தூய திருவடிகளுக்கு
இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார்
எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.
குருபூஜை: செருத்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

செருத்துணை நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
நின்மலராகிய
சுவாமிக்குப் பூசையில் அர்ப்பணிக்கப்படுவன யாவும் சகலவிதத்திலும்
நிர்மலமாயிருக்க வேண்டுமென்பது சொல்லாமேயமையும். அவையொவ்வொன்றும்
அசுத்தமற்ற சூழ்நிலையிலிருந்து சமயாசார ரீதியான அகப்புறச் சுத்தி உடையோரால்
எடுக்கப்பட்டுச் சிவ சிந்தனையோடு கையாளப்படவேண்டும் என்பது பூசைநியம
விதிகளில் ஒன்றாயமையும். அவற்றின் மணங் குணங்களில் ஈடுபட்டு வாயூறுதலும்
மூக்குளைந்து முகரவிழைதலும் கண்டிப்பாக விலக்கப்பட்டொழிந்தனவாம். அது,
பூசைத் திரவியங்களை நாக்கு மூக்குத் தள்ளியெடுத்துக் கொள்ளவேண்டும் என
நடைமுறை வழக்கிலிருந்து வரும் விதியால் சூசகமாக அறிவிக்கப்பட்டிருத்தல்
காணத்தகும். இனி, அவ்வகையிற் பூசைக்கெனச் சங்கற்பித்தெடுக்கப்பட்டவை
தற்செயலாக வழுவி விழுந்து கிடக்கும் நிலையிலும் பூசைப்பொருள்களே எனக்
கொள்ளுதல் பூசைத் திரவிய மகிமையைப் பேணும் நெறியாம். அது, பூசை செய்து
கழித்த பத்திர புஷ்பங்களாகிய நின்மாலியங்களை மிதித்தலாகாது என்ற வரையறை
போல்வதோர் நெறியாகும். ஆதலின், தற்செயலாக நழுவிக்கிடக்கும் அவற்றைத் தானும்
இரசனையுணர்வு முகர்வுணர்வுகளுக்கு விஷயமாக்குதலும் பழுதேயாம்.
செருத்துணை
நாயனார் புராணம் மஹத்தான இக்கருத்து நிலையினைச் சூசிப்பதாயமைதல்
காணத்தகும். இந்த நாயனார் திருவாரூர்த் திருக்கோயில் வளாகத்தில்
திருத்தொண்டாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் அங்குச் சென்றிருந்த
கழற்சிங்கர் என்ற அரசரின் பட்டத்துத் தேவி திருப்பூமண்டபத்தின்
பக்கத்திற்கிடந்த பூவொன்றை எடுத்து மோந்ததற்குத் தண்டனைத் தீர்வாக அவள்
மூக்கையே வார்ந்துவிட்டார் (இந்நிகழ்ச்சி விபரம் முன் கழற்சிங்கநாயனார்
புராண சூசனத்திற் காணப்பட்டுள்ளது) அவருடைய அச்செயல் திட்பம் சேக்கிழார்
திருவாக்கில், "உலகு நிகழ்ந்த பல்லவர்கோச்சிங்க ருரிமைப் பெருந்தேவி நிலவு
திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொரு மலரை யெடுத்து மோந்ததற்கு
வந்து பொறாமை வழித்தொண்டர் இலகு கூர்வாய்க் கருவியெடுத் தெழுந்த
வேகத்தாலெய்தி" - "கடிது முற்றி மற்றவள்தன் கருமென் கூந்தல்
பிடித்தீர்த்துப் படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்யசடை
முடியி லேறுந் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடுமூக்கைத் தடிவ னென்று
கருவியினா லரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்" என வரும்.
திருப்பூ
மண்டபத்துக்கு அயலிற் கிடந்ததேனும், சிவபெருமான் திருமுடிக்கேற வெனக்
கொணரப்பட்ட மலரல்லவா அது என்று நாயனார் அதன் கௌரவம் பற்றிக் கொண்டிருந்த
பேருணர்வே அவர்பால் குரூரச்சார்பான பெருந்தீரம் விளைந்ததற்கு உடனடிக்
காரணமாம். அது நன்கு புலப்படுமாறு, "பரமர் செய்யசடை முடியி லேறும் மலர்
மோந்த மூக்கைத் தடிவனென்று கருவியினா லரிந்தார்" எனச் சேக்கிழார்
அருளியிருப்பதும் அவ்விஷயத்தில் அத்தனைத் துடிப்பாக அத்தனைக் குரூரச்
செயலில் அவர் இறங்கியதற்கான பரம்பரைக் காரணம். சிவத்திரவிய மகிமை பேணுதலில்
பூர்வப் பயிற்சி வழியாக வந்து அவரிடத்தில் தழும்பேறியிருந்த தொண்டுறுதி
என்பது புலப்பட அவரை "வழித்தொண்டர்" எனக் குறிப்பிட்டிருப்பதும் அத்தகைய
தீரமானது தொண்டர்களுள் அவரவர்க்குரிய தனித்துவப் பண்புகளுக்கெல்லாந்
தலைமையானது எனல் புலப்படத் "தலைமைத் தனித்தொண்டர்" என மேலும்
விதந்திருப்பதுங் கொண்டு இந்த நாயனாரின் பெருமகிமை அறியத்தகும்.
திருச்சிற்றம்பலம்.
Next
No comments:
Post a Comment