June 25, 2014

Munaiyaduvar Nayanar - Nayanmar 50

50. Munaiyaduvar Nayanar


 (attained ‘siva padham’ in the month of ‘Panguni’ – under the nakshatram ‘ Poosam')
This saint was a Vellala by caste. He belonged to Tiru Needur in the Chola kingdom. He was a great Bhakta of Lord Siva and His devotees. He was always the hope of the desperate, the weak and the vanquished. They would call upon him to turn their defeat into a victory. He would hire himself out as a professional fighter. He fixed a wage for this service and with that money he would feed the Siva Bhaktas and look after them. He earned money in this way and hence he was called 'Munaiyaduvar'. Lord Siva was highly pleased with him and blessed him.
Two vital lessons that this Nayanar's life hold should not be ignored. The first and foremost, even in the exercise of the God-given talent of fencing, the Nayanar took care to see, that it was used to defend the weak, the oppressed and the downtrodden. Strength, too, is a manifestation of the Lord, according to Him: but it should be used in His service in a righteous way. The second one is that the fruits of such service were always dedicated to the Lord. This is the very core of the teaching of the Bhagavad Gita, and the teachings of all saints and sages. Righteousness rests on this pedestal of dedication to God and unselfishness. Selfishness is the root cause of all sins and consequent miseries.

“ arai  konda  vel  nambi  munaiyaduvaar-k-ku   adiyaen ” – 
Sundara Moorthy

* Munaiyaduvaar - pronounced ‘ munaiyaduvaar’; ‘munai’ meaning the tip, the edge or the front , here it indicates the battlefront 
** ThiruNeedur – pronounced ’thiru nEdUr’   

Courtesy: Dinamalar

முனையடுவார் நாயனார்
 Temple images
சோழவள நாட்டில் உள்ள சிவத்தலங்களில் ஒன்றான திருநீடுர் பதியில் வீர வேளாளர் குடியிலே முனையடுவார் நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார். இவர், தம்மோடு வீரமிக்க வேறு சில வீரர்களையும் சேர்த்துக்கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார். தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாக களம் சென்று அம்மன்னர்க்கு வெற்றியைத் தேடித் தருவார். இஃது ஒரு பழங்கால வழக்கம். இவ்வழக்கத்தையே தமது தொழிலாலக் கொண்டு, வாழ்ந்து வந்த முனையடுவார் தமக்கு கிட்டிய ஊதியத்தைச் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்கள் திருத்தொண்டிற்கும் பயன்படுத்தினார். திருநீடுர்ப்பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. அத்தனையும் ஆண்டவனுக்கும் அடியவர்க்கும் செலவிட்டார். உலகில் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார்.

குருபூஜை: முனையடிவார் நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்.

முனையடுவார் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

தொண்டுரிமையிலுள்ளார்க்கு எத்தொழில் வளமுஞ் சிவபணிக் கேற்கும் எனல்

ஆன்மாவுக்குஞ் சிவனுக்கு மிடையில் அநாதியாகவே இருந்துவரும் அந்தரங்கத் தொடர்பின் அடிப்படையில் அநாதியான ஆண்டானடிமைத்திறம் ஒன்று இருந்துகொண்டிருத்தல், "என்றுநீ அன்றுநா னுனதடிமை யல்லவோ" எனத் தாயுமானவர் பாடலினும், "அத்தா உனக்காளாயினி அல்லேனெனலாமே" எனத் தேவாரத்தினும் "என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கெழுதிய ஆவணம் ஒன்றாயுலகம் படைத்தான் எழுதினான் நின்றான் கடல்வண்ணன் நேரெழுத்தாயே" எனத் திருமந்திரத்தினும் "பாய ஆருயிர் முழுவதும் பராபரனடிமை" எனத் தணிகைப் புராணத்தினும் வருவனவற்றாற் பெறப்படும். ஆன்மா ஒவ்வொன்றுக்கும் அதனதன் மலபரிபாக நிலையை யொட்டி இந்த ஆண்டானடிமைத் திறம் எவ்வெப்போதிற் புலப்பட வருமோ அவ்வப்போதிலிருந்து மென்மேல் விருத்தியுற்று வந்து காலகதியில் அது முதிர்ச்சியுறும் நிலை நேர்கையில் சம்பந்தப்பட்ட ஆன்மா தொண்டுரிமையில் உள்ளதாகி மேல்வரும் பிறப்பொன்றில் அவ்வுரிமையோடே பிறந்து அதன் பலப் பேறடையும் என்பது திருத்தொண்டர் புராணத்து நாயன்மார் மேற்கொள்ளுந் தொண்டுகளின் அசாதாரணத் தன்மைகளும் அவற்றின் விளைவுகளும் இருந்தவாற்றால் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். அங்ஙனம் தொண்டுரிமையில் உள்ளதாக ஒரு ஆன்மா ஜனித்திருக்கையில், கன்மாநுசாரமாக அதற்கு வாய்க்குந் தொழில் துறைச் சூழ்நிலை எத்தகையதாயினும் அது அதன் தொண்டுக்குப் பாதகமாதற் கேதுவில்லை யென்பது முன், அதிபத்த நாயனார் புராண சூசனத்திற் கண்டவாற்றானமையும்.

முனையடுவார் நாயனார் இவ்வகைத் தொண்டுரிமையில் உள்ளவராகவே பிறந்து தம் கன்மாநுசாரமாக அமைந்த, கூலிக்குப் போரிடுந் தொழிலாற் பெறும் வருமானங் கொண்டே சிவனடியார்க்கு வேண்டுவன அளித்தலும் மகேசுர பூசை செய்தலுமாகிய திருத்தொண்டாற்றி முடிவிற் சிவலோகத்தமர்ந்து பிரியா உரிமைநிலை பெற்றருளினார். அது அவர் புராணத்தில், "விளங்கும் வன்மை மிக்குள்ள வேளாண் தலைமைக் குடிமுதல்வர் களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார் கழலிற் செறிந்த காதல் மிகும் உளங்கொள் திருத்தொண் டுரிமையினி லுள்ளார் நள்ளார் முனையெறிந்த வளங்கொடிறைவரடி யார்க்கு மாறா தளிக்கும் வாய்மையார்" - "மற்றிந்நிலைமை பன்னெடுநாள் வையநிகழச் செய்துவழி உற்ற அன்பின் செந்நெறியா லுமையாள் கணவன் திருவருளால் பெற்ற சிவலோகத்தமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன்னுடையார்" என வரும்.

ஆயின், கொலையை இன்றியமையாத் தொழிலாகிய போர்த்தொழில் பழிச்சார்புள்ளதும் அதனாற் பெறும் பொருள் சிவபுண்ணியத்துக்குத் தகுதியற்றதும் ஆமன்றோ எனின் அது வாஸ்தவமே யெனினும் சிவன் கழற்சார்பாகிய மெய்யன்பில் தம்மை இழந்து நிற்கவல்லார் செயற்பழி தம்மைச் சாரா வண்ணஞ் செயல் புரிய வல்லாராதல் முன் வந்துள்ள மூர்க்க நாயனார் புராண சூசனத்திற் கண்டுள்ளவாற்றால் இந்த முனையடுவார் நாயனார் பழிக்கிடனாகாப் பாவனசீலர் என்பதும் அவர்பொருள் எவ்வகையினுஞ் சிவபுண்ணியத்துக்குத் தகுதி யற்றதாதல் செல்லா தென்பதும் அறிந்துவக்கத்தகும்.
திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment