KURRUVA NAYANAR
Kalandhaik Kon Kurruvar was true devotee of the Lord Shiva who always kept the feet f the matted haired Lord in his mind. He was a humble servant to the devotees but a very courageous person and always with flying colours in the combats with the enemies. He won the battles and saved many innocent from the horrible practise of ruling of some Kings. This was regarded by a great boon by the true devotees of Lord Shiva who suffered from these Kings. His valour won a vast land and wealth. He could take the pride of having the powerful in all the four kinds of armies - squads of elephants, speeding horses, showy still strong chariots and specialized soldiers. So, wanted to build an own Kingdom in this massive land he won. So, he approached the priests of Thillai (Thillaivaz Andhanar) for his coronation. But they refused saying, "Except for the emperors in Chola tradition we do not do that ceremony". So he moved to the mountain state of Cheralam(Kerala) making some of the priests of Thillai to take care of the crown.
He felt sad on his failure to get coronated by the priests of Thillai. Kurruva prayed to the Merciful Lord who resides in the form of pleasing dance to put His Lotus feet as the crown on his head and thereby coronate him. The Almighty was pleased with his devotion and service, granted his wish. The Compassionate Lord crowned Kurruvar by palcing His peerless feet on the devotee’s head in the sweetest dream of Kurruvar.
He got the coveted coronation!!! Kurruva who served his people with all his wealth got the coronation directly from the Lord. Instead of getting crowned by the priests of Thillai he got coronated by the power which is prayed by the priests of Thillai !! His tremendous wealth served the true objective of earning as he spent it on the worship of the Lord of the world with the world worshiping his love for the Lord Shiva. While the money that is spent for material benefits never returns, the property that was used by Kurruvar out of his prosperous loving heart, brought him the worthy of all wealths - blissful place in the feet of God.
கூற்றுவ நாயனார் Courtesy: Dinamalar
Temple images
வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், சீரோடும், சிறப்போடும் செங்கோலோச்சி வந்த திருத்தலம் திருக்களந்தை! இத்திருத்தலத்தில் களப்பாளர் மரபில் தோன்றிய கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர். வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்ற காரணம் பற்றியே இத்திருப்பெயர் பெற்றார். அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. வாள் சுழற்றும் வீரத்தோடு, பரமனின் தாள் போற்றும் பக்தியையும் பெற்றிருந்ததால் , களந்தை நாட்டை, அரனார் அருளோடு பெரும் வெற்றிகளைப் பெற்று அறம் பிறழாது புகழ்பட ஆட்சியும் புரிந்து வந்தார். சிவனருட் செல்வர்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். இவ்வரசர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதிவரும் பக்தி படைத்தவர். இக்குறுநில மன்னர், தம்மிடமுள்ள அணி, தேர், புரவி, ஆட்பெரும் படை கொண்டு நாடு பல வென்று தமதுக் கொடி கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரி நிலமானது. முடியுடைய மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்றார். இவ்வாறு திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில்தான் முடி சூட்டிக் கொள்வது வழக்கம். மணிமகுடம், ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணிமகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லை வாழ் அந்தணர்கள் இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.
இவற்றை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்த கூற்றுவ நாயனார் தில்லைவாழ் அந்தணர்களிடம் தமது எண்ணத்தைச் சொல்ல எண்ணியபடியே, ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையை வந்தடைந்து தில்லை நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, தில்லைவாழ் அந்தணர்களைச் சந்தித்தார். தமக்கு மணிமுடி சூட்ட வேண்டும் என்று வேண்டினார். மன்னரின் மொழி கேட்டு தில்லைவாழ் அந்தணர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்கள் மன்னர்க்கு முடிசூட்ட மறுத்தனர். மன்ன! நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது வழக்கம். மற்றபடி வேறு மன்னர்களுக்கு இத்திருமுடியைச் சூடுவதற்கில்லை என்று துணிச்சலோடு விடையளித்து மன்னரின் கோரிக்கையை நிராகரித்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் கூற்றுவ நாயனாரைக் கண்டு சற்று பயந்தனர். அவரால் தங்களுக்கு ஏதாகிலும் தீங்கு வந்துவிடுமோ என்று தங்களுக்குள் தவறான எண்ணங்கொண்டனர். தில்லையின் எல்லை நீத்து சேர மன்னர்பால் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் ஒப்புவித்து, பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இவர்கள் அச்சமின்றி மொழிந்ததைக் கேட்டு கூற்றுவ நாயனார் செய்வதறியாது திகைத்தார். முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? எனத் தமக்குள் எண்ணி வருந்தினாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்களை வற்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. கூற்றுவ நாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக்கிட்டவில்லையே என்ற மனவேதனையோடு, திருக்கோயிலுக்குச் சென்றார்.
இறைவனைப் பணிந்து, அருட்புனலே ! ஆடும் ஐயனே! உமது திருவருளால் மண்ணெல்லாம் என் வெற்றித் திருவடி பட்டும் தில்லைவாழ் அந்தணர்கள் மட்டும் அந்த மகுடத்தை எனக்குச் சூட்ட மறுத்துப் போய்விட்டார்களே! ஐயன் இந்த எளியோனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள்புரிதல் வேண்டும் என்று இறைஞ்சினார். தமது இருப்பிடத்தை அடைந்து துயின்றார். அன்றிரவு கண்ணுதற் பெருமான் மன்னன் கனவிலே எழுந்தருளி தமது திருவடியை நாயனாரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்து மறைந்தார். கூற்றுவ நாயனார் கண்விழித்தெழுந்தார். அவரது மகிழ்ச்சி அவர் களத்திலே பெற்ற வெற்றியைக் காட்டிலும் எல்லையற்று நின்றது. தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்தபோதும் தில்லைப் பெருமானே தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணிப் பார்த்துப் பேரானந்தமுற்றார். சென்னி மீது கைகூப்பி, நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து பரமனைப் பணிந்து எழுந்தார் நாயனார். எம்பெருமானுடைய திருவடியையே மணிமகுடமாகக் கொண்டு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார்! அறநெறி நிறைந்த கூற்றுவ நாயனார், இறைவன் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரி வாரிக் கொடுத்தார். தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களுக்கும் நித்திய நைமித்திய வழிபாடுகள் தங்கு தடையின்றி தட்டாமல் இனிது நடைபெற ஆவனச் செய்தார். திருத்தலங்கள் தோறும் சென்று சிவ வழிபாடு நடத்தினார். இவ்வாறு திருசடை அண்ணலின் திருவடி சூடி திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டி, பாராண்ட கூற்றுவ நாயனார், முடிவில் சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சிதபாதத்தில் கலந்து இன்பமெய்தினார்.
குருபூஜை: கூற்றுவர் நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்.
கூற்றுவ நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
அரசர் முடிசூடுதல் சிவனடி சூடுதற்கு அறிகுறியாதல்
உலகைக் காக்கும் பெரும்புரவு பூண்டுள்ள இறைவனால் உருவுடையாரை மட்டுந் தொடர்பு கொள்ள வல்லராகிய மனிதர்பொருட்டுத் தன்பிரதிநிதியாக நிறுத்தப்படுபவனே அரசன் என்றும் இறைவன் பிரதிநிதியாதல் குறித்தே அவன் இறை எனப் பெயர்பெறலாயினான் என்றும் முன் சேரமான் பெருமான் நாயனார் புரான சூசனத்திற் கண்டுள்ளோம். அவ்வுண்மைக்கிணங்க அரசனாம் நிலையேற்போன் ஒருவன் தனக்கது சிவன்பணித்த அறம் என்னும் நன்றிக் கடப்பாட்டுணர்வுடன் சிவன் திருவடிகளைத்தலை மேற்கொண்டு ஆட்சிபுரிய வேண்டுபவனாவான். திருவடிகளைத் தலைமேற் கொள்ளல் என்ற சைவ சம்பிரதாயத்தின் பொருளாவது ஒருவர் தமக்குளதாகக் கொள்ளும் சிற்றறிவு சிறுதொழில் அளவிலான ஞானம் கிரியை என்ற இரண்டினையும் திருவடி என்ற குறியீட்டிலடங்கும் இறைவன் முற்றறிவும் முழுத்த தொழிற்பாடுமாகிய அவனது ஞானங்கிரியை இரண்டுக்கும் அடங்கக் கொடுத்துத் தன் மதந்தோன்றாவகையில் ஒழுகுதல் என்பதாகும். தெய்வ சந்நிதியில் தலை நிலமுறத் தாழ்ந்து வணங்கல் என்ற பொதுவான வழக்கம் சைவர் வழிபாட்டு நெறியில் இடம் பெற்றதும் இப்பொருள் குறித்தேயாதல் இத்தொடர்பிற் கருதத் தகும். ஆனால், பலரைப் பொறுத்தவரையிற் பாவனை அளவாகவே இயலக்கூடும். இவ் விஷயத்தில் அருவமாகிய திருவடியையும் காண்டற் கபூர்வமாகிய அது சூடலையும் அறிவுறுக்கும் அறிகுறி மாத்திரையாகவே பொற்கிரீடங்கொண்டு முடி சூட்டுதல் வழக்கமாயிற்றெனல் பொருந்தும். அது, ஆதிகாலத்தில் முடிசூட்டும் உரிமை இறையுணர்வு கைவந்த ரிஷிகளாலும் ரிஷிகள் அருகிய பிற்காலத்தில் அத்தன்மைச் சார்புள்ள சமயத்தலைவர்களாலும் கையாளப்பட்டு வந்ததாகவுள்ள வரலாற்று உண்மையானும் வலுவுறும்.
நம் கூற்றுவ நாயனார் திருவருட் சகாயத்தினாலே பெருவெற்றியாளராகத் திகழ்ந்து சோழநாடு முழுவதையும் தம்மடிப்படுத்திக் கொண்டு சம்பிரதாயப்படி முடிசூடி அரசாள முயல்கையில் முடிசூட்டு உரிமையாளர்களான தில்லைவாழந்தணர்கள், மரபுப்படி சோழரல்லாதார்க்கு யாமது செய்யோம் என்றதுமே, "அசல் கைவசமிருக்க நகலுக்கு மன்றாடுவானேன்" என்னுந் துணிவினராய் அறிகுறிப் பொருளாகிய மணிமுடியைவிட்டு, இலட்சியப் பொருளாகிய திருவடியையே வேண்டி, வேண்டியவாறே சிவனால் தமக்கது சூட்டப்பெற்றுக் கொண்டு அரசாள்வாராயினர்.
தில்லை வாழந்தணர் அரசர்க்கு முடிசூட்டுந் தமதுரிமையை இவரிற் பிரயோகிக்க மறுத்தமை கொண்டு தமிழரல்லாத மற்றொருவராகக் கருதப்பட நிற்கும் இந்நாயனார் சைவமுஞ் சிவமுஞ் சிவபுண்ணிய ஒழுகலாறும் தம்மை யுணரவல்லார் எல்லார்க்கும்பொது என்னு முண்மை விளங்க நின்றுள்ளார். அஃதோருண்மை உளதாதல், உபதேச காண்டத்தில், "சேணெறிக் கந்தருவர் தைத்தியர் மாணெறிக் குடை மன்ன ரிவர்களில் நீணெடுந்திரை நேமியடுங்கடு ஊணுகர்ந்தவர்க் காட்படலுண்டரோ" - "வரமுனித்தலை வீரவ் வருணமாச் சிரமமென்பதவர்க்கிலை சேவுடை யரனருச்சனை யாவர்க்குமாமவர் பரமனென்னப் பணியப்படுவரால்" என வருவது கொண்டறியப்படும். தம்பூர்வ புண்ணியப் பேறாக இவர் சிவனெனுமுணர்வும் சிவநாமசெபமும் சிவனடியார் வழிபாடுந் தவறாது சிவபுண்ணிய சீலராகவே, விளங்கியுள்ளார். அது சேக்கிழார் வாக்கில், "துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப்படையார்தம் நன்னா மந்தந் திருநாவில் நாளும் நாளும் நவிலும் நலம்மிக்கார் பன்னாளீச ரடியார்தம் பாதம்பரவிப் பணிந்தேத்தி முன்னா கியநல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்" என வந்துள்ளமையானறியப்படும். தமக்கு முடிசூட்ட மறுத்த தில்லை வாழந்தணரை வலிந்துடன்படுத்தவோ அல்லது மாற்றுவழி கண்டு முடி சூடுவித்துக் கொள்ளவோ போதிய ஆற்றல் வலுவுள்ளவராயிருந்தும் இந்த நாயனார் அவற்றை நாடாது சிவபெருமான் திருவருளையே நாடி வேண்டித்திருவடியே தமக்கு முடியாகப் பெற்று உலக சாம்ராஜ்யத்துக்கேயன்றி மோக்ஷ சாம்ராச்சியத்துக்கும் தகுதியுடையோ ராயினமை கொண்டு இவர் பாலமைந்திருந்த உண்மை நாயன்மார் மகிமை தெளியப்படுவதாகும்.
திருச்சிற்றம்பலம்.
Home Previous
Next

No comments:
Post a Comment