February 23, 2014

Pukazch Choza Nayanar - Nayanmar 39


Pukazch Choza Nayanar - Nayanmar 39

pukazch chOza nAyanAr


The center from which the venturous early chOzas, who had fluttered their flag in the cliffs of Himalayas, ruled was uRaiyUr. As it was the capital, it had the movement of courageous corps and all the four kinds of fighting forces. It had the array of beautiful cliff-high houses. As the crown at the center is the temple of the crescent headed God, pa.nchavar Neshwarar, who showed Himself in five colors to a sage in this colorful city. It is now at the center of the city  thiruchchirAppaLLi.

pukazch chOzar whose name has got fame in it and whose deeds were fountain of fame was a king who ruled from that famous city. He was an emperor with the kings of the entire region keen on saluting his valor and accept his rule. But he was a slave of the shambhu and His selfless slaves. Shaivism spread its fragrance over the far reaching frontiers of his state. Temples of the Three eyed Lord had timely worships with tremendous devotion. The needs of devotees were taken care of by the caring king before they cared to ask. Peace and prosperity were predominant in that place and in the minds of the people. His respect for the devotees was so great that when his royal elephant was killed bye Ripaththar for straying down the flowers meant for the feet of God, he bowed down before eRipaththar and said, "It is not sufficient to just kill that elephant for the crime done, please kill me too".

Once he went to karuvUr, the traditional city of chOzas, accompanied by courtmen and beloved relations. He bowed in front of the Lord in karuvUr whose bow is the great mountain, before going to his bungalow. The gems of the empires were submitted to him by the kings who surrendered to his strength and love. He came to know that only one king adhiakan volunteered the trouble of not accepting his empire. As it was the tradition of the kings he ordered his four forces to overrun the fort of the foe. The powerful, plenty in number and courageous army of pukazch chOzar powdered the fort of enemy in the fight. They brought the heap of heads to show their valor to the king. He was petrified to see a head with plaited hair which is a mark of the devotee.

Though it was the custom of the kings of olden days to fight and enlarge the frontiers, our peerless king felt it was a crime that had happened. He said in all sadness, "Is it the way I am ruling the empire ? Even after seeing the matted head of a devotee how am I still governing, with grayed fame ?". He ordered the ministers to guide the new king, his son, in the right path of God and to the gloom of them he decided to give up his life. He, smeared in holy ash, held the matted haired head in a golden plate and entered the fire with the glory of the God quenching his heart. He entered the feet of Lord unreachable for nonbelievers with the increase of enchanting of his fame. Let the devotion of pukazch chOzar in which that king bowed to eRipaththar for the mistake of his elephant, and out of which he sacrificed his body for the mistake of his soldiers stay in the mind.


Temple images

புகழ்ச்சோழ நாயனார்

Temple imagesஇமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடை நிழலுக்கு அடிபணியச் செய்த மங்காத புகழ் தந்த மாமன்னர் சோழருக்குத் தலைநகரமாக விளங்கிய திருத்தலம் உரையூர். இத்தலத்தைத் தலைநகராகக் கொண்டு அநபாயச் சோழன் திருக்குலத்தின் மூதாதையராகிய புகழ்ச் சோழ நாயனார் அரியணை அமர்ந்து அறநெறி வழுவாது அரசாண்டு வந்தார். வீரத்திலும், கொடையிலும் புகழ்பெற்ற புகழ்ச் சோழன் சிவபெருமானிடத்தும், அவருடைய அடியார்களிடத்தும் எல்லையில்லா அன்பும்,  பக்தியும் பூண்டிருந்தார். சிவாலயங்களுக்குத் திருப்பணி பல செய்தார். இவர் ஆட்சியிலே சைவம் தழைத்தது. புகழ்ச் சோழர் கொங்குநாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு வசதியாக தம் தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றிக் கொண்டார். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு இன்புற்றார். பசுபதீசுவரர் புகழ்ச் சோழனின் ஒப்பற்ற பக்தியை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

வேற்று அரசர்கள் கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப் பொருள்களையெல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்கள் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் பரிபாலனம் புரிந்து வருமாறு பணித்தார்.எண்ணற்ற மன்னர்கள் கப்பம் கட்டிவரும் நாளில் அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னர்க்குக் கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் திரை செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டான் மன்னன். அதிகனை வென்றுவர கட்டளையிட்டான். மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சர் மாபெரும் படையோடு சென்று அதிகனை வென்று பலவகை பொருட் குவியல்களையும், யானைகளையும், குதிரைகளையும், பெண்களையும் மாண்ட வீரர்களது தலைகளையும் எடுத்து வந்தார். படைகளின் வீரம் கண்டு பூரிப்படைந்த மன்னர் ஒரு தலையில் சடைமுடியிருக்கக் கண்டார். சடைமுடி கண்டு அரசர் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தார். அவர் கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வெதும்பினார். அடியார்களின் அன்பிற்குக் கட்டுப்பட்ட புகழ்ச்சோழர் எறிபத்த நாயனாரிடமும், தம் கழுத்தையும் வெட்டுமாறு பணிந்து நின்ற தொண்டர் அல்லவா...? மன்னர் உள்ளம் உருக அமைச்சர்களிடம், என் ஆட்சியில் சைவ நெறிக்குப் பாதுகாப்பில்லாமற் போய் விட்டதே ! திருமுடியிலே சடை தாங்கிய திருத்தொண்டர் என்னால் கொல்லப்பட்டிருக்கிறாரே! என் ஐயனுக்கு எவ்வளவு பெரும் பாவத்தைச் செய்து விட்டேன்.

சைவ நெறியை வளர்க்கும் வாள்வீரர் சிரசைக் கொன்ற நான் கொற்றவன் அன்று; கொடுங்கோலன். இனியும் நான் உலகில் உயிருடன் இருப்பதா? என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் புண்பட்டார். மன்னர் அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்து தீக்குளித்து இறக்கத் துணிந்தார். திருச்சடையையுடைய தலையை ஓர் பொற்தட்டில் சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே அழற்குண்டத்தை வலம் வந்தார் மன்னர். பொற்றாமரைக் குளத்தில் குளிப்பார் போல் உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னன். மெய்யன்பர்கள் மன்னரின் சிவபக்திக்கு உள்ளம் உருகினர். மன்னரின் பெருமையைப் புகழ்ந்து போற்றினர். மன்னர் தொழுதற்குரிய மகான் என்று கொண்டாடினர். எம்பெருமானின் திருவடி நீழலை அடையும் பெரு வாழ்வைப் பெற்றார் மன்னர் புகழ்ச்சோழர்!

குருபூஜை: புகழ்ச்சோழ நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழர்க்கு அடியேன்.
புகழ்ச் சோழ நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
பரிசனங்களால் நேரும்பழி அரசன் செய்பழியாமெனல்

இறைமை என்பது அரசனானவன் தான், தன்பரிசனம், பகைவர், கள்வர், தீவிலங்குகள் என்பவற்றாற் பிரஜைகளுக்குத் தீங்கு நேராமற் காப்பதோர் அறமாகும். அது, "மாநிலங்கா வலனாவான் மன்னுயிர் காக்குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மா லானபய மைந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ" என வரும் மநுநீதி கண்டபுராணச் செய்யுளான் விளங்கும். இனி, முன் கூற்றுவநாயனார் புராண சூசனத்திற் கண்டபடி, இறைமை என்ற காரியம் இறைவனால் அரசன்மேல் வைக்கப்பட்ட பொறுப்பாகலின் இறைமை செலுத்தும் விஷயத்தில் இறைவன் சார்பினவாகிய குருலிங்கசங்கம பரிபாலனம் அரசனின் தலைக்கடனாம் என்பது தானே விளங்கும். எல்லாவற்றையும் ஆளுடைய சிவனும் அச்சிவனையறிவிக்குங் குருவும் அச்சிவன்பண்பே தம்பண்பாகக் கொண்டுலாவும் நடமாடுஞ் சிவங்களாகிய சிவனடியார்களுமே மக்கள் வாழ்விலட்சிய மேல்வரம் பாதலினாலும் அது அங்ஙனமாதல் துணியப்படும். அன்றியும் இவற்றுக்கு நேரும் நிந்தை முதலிய தீங்குகள் நேரடியாகவே அரசன் கேட்டிற்குக் காரணமெனப் படுதலினாலும் அது வலுவுறும். அவ்வாறாதல் திருமந்திரத்தில், "முன்னவனார்கோயிற் பூசைகள் முட்டிடின் மன்னற்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங்களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத்தானே" - "பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங்கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றின் மாய்ந்திடுஞ் சத்தியம் ஈது சதா நந்தியாணையே" - "நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல் நாடோறும் நாடுகெடும் மூடம் நண்ணுமால் நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே" - "ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத்தாரையுங் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே" எனவும் திருத்தொண்டர் புராணத்தில் மூர்த்திநாயனார் திருத்தொண்டுக்கு இடர் விளைத்த கருநடமன்னன் கெட்டகேடு கூறப்படுகையில், "இவ்வாறு லகத்தின் இறப்ப நல்லோர்மெய்வா ழுலகத்து விரைந்தணை வார்க ளேபோல் அவ்வாறரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரயத்திடை வீழவிரைந்து வீந்தான்" எனவும் திருவாதவூரடிகள் புராணத்தில், வையைப் பெருக் கவலத்தினால் தளர்வுற்ற பாண்டிய மன்னனின் பிரலாபந் தெரிவிக்கப்படுகையில், "ஆதியாங் கடவு ளெந்தை யாலவா யமலன் மங்கை பாதியான் சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண்டோ நீதியாந் தவத்தின் மிக்கார் நெஞ்சம் புழுங்க மண்மேல் நீதியாஞ் செய்ததுண்டோ செப்புமினமைச்சரென்றான்" எனவும் வருவன வற்றால் அறியப்படும். திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெறும் நாயன்மார்களான அரசர்கள் குருலிங்கசங்கம பரிபாலனத்தில் அதிதீவிர கவனஞ் செலுத்துவோராயிருந்துள்ளமையும் ஓரோர் வேளையில் குரு லிங்கசங்கமத் தீங்கான பழுதுகள் நாட்டில் இடம்பெறுவது தம்மவரால் அறிய முடியாநிலையிலிருக்குஞ் சாமானிய அரசர்களுக்குச் சிவபரம்பொருள் தாமாக விரைந்து கனாக்காட்சியாக அறிவித்துப் பணிந்து அவர்களை அத்துறையில் ஊக்கிவைத்துள்ளமையும் அப்புராணத்திற் காணலாகும்.

அரசராகிய புகழ்ச்சோழநாயனார் ஒருமுறைபோல் இருமுறை, தம்பரிசனரால் சிவனடியார்க்கு நேர்ந்த தீங்கு தம்மால் நேரே நேர்ந்த தீங்கெனக் கொண்டு பரிகாரம் வேண்டி நின்ற செய்தி சைவ அரசியலற நோன்மைக்கு உரைகல்லாதல் தகும். இவர் ஒருமுறை, கருவூர்த் தெருவில் சிவகாமியாண்டார் என்ற சிவனடியார் திருவானிலைக் கோயிற் சிவனுக்கெனச் சுமந்து சென்ற திருப்பூங்கூடை தமது பட்டத்து யானையாற் சிதறடிக்கப்பட்டதற்குப் பதிலாக எறிபத்த நாயனாரால் யானையும் பாகரும் கொலையுண்ட செய்தி கேட்டு நாயனாரைச் சந்தித்து விசாரிக்கையில், தம் யானையாலும் பாகராலும் நேர்ந்த தீங்கு தம்மால் நேர்ந்த தீங்காமெனக் கூறி அதற்குத் தீர்வாகத் தம்மையுங் கொல்லவேண்டுமெனத் தாமே தமது உடைவாளை நாயனாரிடம் நீட்டி நின்றகாலை திருவருள் தலையீட்டால் அது வேறு விதமாய் முடிவுற்ற சம்பவமொன்று அந்த நாயனார் புரான வரலாற்றிற் காணப்பட்டதுண்டு.

இவரே பின்னொருகால் கருவூரில் தம் அரசியற்கரும விசாரணை மேற்கொண்டிருக்கையில் குறும்பொறைநாடன் என்ற சிற்றரசன் ஒருவன் திறை செலுத்தாது வைரஞ்சாதித்தமை கண்டு, அவன்மேற் படையெடுக்க ஆணை பிறப்பித்திருந்தாராக, அங்ஙனம் படையெடுத்து வெற்றியீட்டிய மந்திரிமார் வெற்றிச் சின்னமாகக் கொணர்ந்து காட்டிய பகைவர் தலைக்குவையுள் திருச்சடையோடு கூடிய சிரமொன்றிருக்கப் பார்த்து அதனை நன்றாக இனங்கண்டு தெரிந்து கொண்டு அச்சிவனடியாரைத் தம் படைஞர் கொன்ற பழி தம்பழியெனப் பதறி நடுநடுங்கி மனங்கலங்கிப் பரிதபித்து உடன் தீர்வு நேர்வாராயினர். அது காலை அவர் திருவுள்ளமிருந்த வண்ணம் பின்வருமாறு.

குறும்பொறை நாட்டுக்குப் படையெடுத்துப் பெற்ற வெற்றி கிடக்க, அதன் மூலம் திருநீற்றன்பு பரிபாலிக்கும் எனது நியமத்துக்கு நானே தீங்கிழைத்துவிட்டேனே. இதுவா எனக்கழகாவது? வெட்டுண்ட சிவனடியார் சிரமொன்று என்முன்வரக் கண்டதுமே பழிதாங்கியாய் விட்ட எனதுயிர் இன்னும் பார்தாங்கியாளவா இருந்து கொண்டிருக்கிறது என்பது அது. இப்படியொரு உத்வேக நிலையுற்றமையினாலே அரசர் மேல் அரசாட்சிக்கு மகனை நியமித்து விட்டுத் தாமே தமக்கு முடிவு தேடுவாராயினர். சிவாபராதப் பழி நேர்ந்தபின் உயிர்தரித்திருக்க இயலாமையாகிய இந்த நாயனாரின் அதி உத்வேக நிலையானது, லௌகிகார்த்தப் பேறுகளில் ஏமாறுதல் சார்பான விரக்தியினாலோ மானாபிமானக் கதிப்பினாலோ நிகழும் சாமானிய உயிர்த்தியாகம் போலாது தம்மியல்பாகிய ஆத்மிகப் பேற்றிலட்சியத்தையே குறிக்கொண்டமைந்த ஒருவித ஆத்மிக அறவேள்வி நிலையதாதல், "ஏரி ஈசனதுருவருக்கம்" என அப்பர் சுவாமிகளும் "விருப்புறு மங்கியாவார் விடையுயர்த்தவரே" எனச் சம்பந்த சுவாமிகள் கருத்தாகத் திருத்தொண்டர் புராணமும் போற்றும் அக்கினியையே தமக்குச் சரணமாக அவர் தெரிந்து கொண்டமையானும் தமது இலட்சிய சாதனமான திருவெண்ணீற்றுக் கோலங்கொண்டு சிவனுருவாகிய எரிக்கு அர்ப்பணமாம்படி குறித்த அச்சிவனடியார் சிரத்தைப் பொற்றாம்பாளத்திட்டுச் சிரமேற் சுமந்து கொண்டு எரியை வலம் வந்தமையானும் முத்தி சாதனமாகிய திருவைந்தெழுத்தை ஓதிய வண்ணம் ஆத்ம திருப்திமயமான மகிழ்ச்சியுடன் அவ்வெரியிற் பிரவேசித்தமையானும் பிரவேசித்த காலை அவர் செயல்சிவப் பிரீதியானதற் கறிகுறியாக மலர்மாரியும் தேவதுந்துபி மங்கல நாதமும் இடம்பெற்று முடிவாக அவர் சிவபெருமான் சேவடிக்கீழ் அமரும் பேறு பெற்றுள்ளமையானும் இனிதிற் பெறப்படும்.

அது அவர் புராணத்தில், "அம்மாற்றங் கேட்டழியும் அமைச்சரையு மிடரகற்றிக் கைம்மாற்றுஞ் செயல்தாமே கடனாற்றுங் கருத்துடையார் செம்மார்க்கந் தலை நின்று செந்தீமுன் வளர்ப்பித்துப் பொய்மாற்றுந் திருநீற்றுப் புனைகோலத் தினிற் பொலிந்தார்." - "கண்டசடைச் சிரத்தினையோர் கனகமணிக் கலத்தேந்திக் கொண்டு முடித்தாங்கிக் குலவுமெரி வலங்கொள்வார் அண்டர்பிரான் திருநாமத் தஞ்செழுத்தும் எடுத்தோதி மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி உட்புக்கார்" - "புக்கபொழு தலர்மாரி புவிநிறையப் பொழிந்திழிய மிக்கபெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கெடுப்பச் செக்கர் நெடுஞ்சடைமுடியார் சிலம்பலம்பு சேவடியின் அக்கருணைத்திருநிழற்கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்" என வருவது கொண்டறியப்படும்.

திருச்சிற்றம்பலம்


Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment