40. Narasinga Muniyaraiyar
This saint was a petty chieftain. He lived in Tiru Munaipadi. He was highly devoted to Lord Siva. He was a champion of Saivism. On every Tiruvathirai day he would conduct special Puja, feed Siva Bhaktas in whatever form they appeared and offer the gift of a hundred gold coins to each. On one such occasion, one Bhakta came with sacred ashes on his stark naked body: this evoked disgust in the hearts of the other Bhaktas. Nayanar understood this and fell at the naked devotee’s feet and welcomed him with more respect. He fed him nicely and gave him 200 gold coins. This earned the Lord’s supreme grace for the Nayanar.
Here is an illustration of the subtle way in which saints manifest their cosmic vision, and also the subtle way in which they bring about the necessary change in the outlook of others. To the Nayanar, all the devotees are the manifestations of Lord Siva. The naked man does not evoke the least trace of disgust or contempt. When he finds this unhealthy attitude in others, he does not violently correct them. In his own subtle, mysterious but very effective way, he demonstrates the truth: and brings about a change in the attitude of the ignorant. Both these lessons are important.
நரசிங்க முனையரைய நாயனார் Courtesy: Dinamalar
சீரும் சிறப்புமிக்க திருமுனைப்பாடி நாட்டை நரசிங்க முனையரையர் என்னும் சிவத்தொண்டர் சைவநெறி வழிகாத்து மாண்போடு ஆண்டு வந்தார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றை பெற்றவர். ஒரு திருவாதிரைத் திருநாளன்று மன்னர் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிப் கொண்டிருந்தார். அப்பொழுது மன்னரிடம் பொருள் பெற்றுப் போக வந்த ஒருவர் காம நோயால் உடல் சீர்கெட்டு நோய் பெற்ற நிலையில் காணப்பட்டார். அவரைப் பார்த்து பலரும் அருவருப்படைந்து விலகிச் சென்றனர். ஆனால் மன்னர் அடியாரது ரோகம் பிடித்த மேனியில் தூய திருவெண்ணீறு துலங்கக் கண்டு விரைந்து அவர்பால் சென்று அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து அனுப்பி வைத்தார். திருவெண்ணீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவபெருமான் சேவடிக்கமலங்களை அடையும் அமர வாழ்வைப் பெற்றார்.
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க்கு அடியேன்.
நரசிங்க முனையரைய நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
1. திருவேடமுடையாரினும் திருவேடமேபெரிதாதல்
மெய்ஞ்ஞான விளக்கிற் சிவக்காட்சி பெற்றநுபவிக்கும் மேலோர் தம்மலம் நீங்கினபின்பந் தம்மை நீங்காதிருக்கத்தகும் மலவாசனை முற்ற அகலுமாறு சிவலிங்கத்தையுஞ் சிவனடியார் திருவேடத்தையுஞ் சிவனெனவே கண்டு வழிபடும் விதியுடையராவர். அது "செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழீஇ அன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" எனுஞ் சிவஞானபோத சூத்திரத்தாலமையும். மற்றெங்கிலும் பாலில் நெய்போல் விளங்குஞ் சிவன் இவ்வீரிடங்களில் தயிரில் நெய்போல் விளங்கும் பண்பு அவர்களுக்கு அநுகூலமாம் என்பர். அவ்வகையிற் சிவவேடத்தைச் சிவன் விலங்கும் நிலைக்களமாகக் கண்டு தொழுவோர் அவ்வேடமுடையார் பற்றிய நோக்கு அறவே அற்றிருக்கவேண்டுவதும் அவர்க்காம் ஒரு நெறிப்பாடாகும். அது, "எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறு மஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே அவரவரைக் கண்ட போதிலுகந்தடிமைத்திற நினைந்தங்குணர்வே மிக்கு இவர்தேவ ரவர்தேவ ரென்று பேசியிரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" - "அங்கமெலாங் குறைந்தழுகுதொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே" என அப்பர் சுவாமிகள் தேவாரத்தும் "நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற குலமில ராகக் குலம துண்டாகத்தலம் பணிகுலச்சிறை" எனச் சம்பந்த சுவாமிகள் தேவாரத்தும் "உலகர் கொள்ளும் நலத்தினராயினும் அலகில் தீமையராயினும் அம்புலி இலகு செஞ்சடையாரடியாரெனில் தலமுறப் பணிந் தேத்துந் தகைமையார்" எனத் திருவேடத்தையே பொருளெனக் கொண்டு போற்றும் நிர்மலமான அன்பில் லயங்கொண்டிருக்கும் அன்பர்கள் மற்றெக்காரணம் பற்றியும் அந்நிலையிலிருந்து வழுவுதலிலர். அது மெய்ப்பொருள் நாயனாரால் மெய்யன்புருகப் பணியப்பெற்ற திருவேடத்தனான முத்தநாதன் தன் கைவாளெடுத்துத் தாக்கிய போதிலும், அவர்தம் உறுதி வழுவுதலின்றி, "வேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வீழ்ந்தார்" எனச் சேக்கிழார் நாயனார் தெரிவிப்பதனால் விளங்கும்.
மன்னர் நரசிங்கமுனையரையநாயனார் சிவனுக்கினிதாகிய திருவாதிரைத் திருநாளிற் சிவனடியார்களை வரவேற்றுபசரித்து அமுதூட்டி நிதிக்கொடையுஞ் செய்து வழிபடும் நியதியுடையராயிருந்தார். ஒருநாள் அதிற்சம்பந்தப்பட்ட திருவேடத்தார் ஒருவரில் காமக்குறித்தழும்புகள் இருக்கக்கண்டு மற்றைய திருவேடத்தார்கள் கூசியொதுங்கக் கண்டபோது நாயனார் அங்ஙனம் நோக்காது அவர்வேடம் திருவேடமே யாதலை நோக்கி அவரை விசேடதரமாக உபசரித்து நிதியும் இருமடங்கு கொடுத்து உளங்குளிரக் கலந்துரையாடி அவரைக் கௌரவமாக வழியனுப்பி வைத்தார். அது அவர் புராணத்தில், "மற்றவர்தம் வடிவிருந்த படிகண்டு மருங்குள்ளார் உற்ற விகழ்ச்சிய ராகி யொதுங்குவார் தமைக் கண்டு கொற்றவனார் எதிர்சென்று கைகுவித்துக் கொடுபோந்தப் பெற்றியினார் தமை மிகவுங் கொண்டாடிப் பேணுவார்" - "சீலமில ரேயெனினுந் திருநீறு தரித்தாரை ஞாலமிகழ்ந் தருநரகை நண்ணாம லெண்ணுவார் பாவணைந்தார் தமக்களித்த படியிரட்டிப் பொன்கொடுத்து மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடைகொடுத்தார்" எனவரும். இந்த நாயனார் திருவேடமே பொருளெனப் போற்றுந் தம் தொண்டுநிலைக்குத் தாம் வேறாகாது ஒன்றித்து உடனாய்நின்ற உறைப்பு நிலை விசேடமே மற்றையோர் காட்சி நிலையிலிருந்து அவர் காட்சிநிலை வேறுபட்டதற்குக் காரணம் என இத்தருணத்திற் சேக்கிழார் தரும்விளக்கமுங் குறிப்பிடத்தகும். அது அவர் வாக்கில், "விடநாக மணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்தநிலை உடனாகும் நரசிங்க முனையரையர்" என வரும்.
2. சிவவேடத்தாரை இகழும் பழிக்குப் பிறர் ஆளாகாமைக் காத்தல்
சிவ காட்சி பெற்ற சிவஞான சீலமுடையோர் அது சைவரப் பெறாத ஏனையர் நிலைக் கிரங்குதலும் அவர் காருண்யப் பண்பின்பாற்படும். அது, "கள்ளத் தலைவர் துயர் கருதித் தங்கருணைவெள்ளத்தலைவர் மிக" என்ற திருவருட் பயனாற் பெறப்படும். திருவேடத்தின்பாற் கொண்டிருந்த பக்தி லயத்தில் திறம்பாதிருந்த நரசிங்கமுனையரையநாயனார், அந்நிலை நிற்கும் பண்பு கைவரப் பெறாமையால் குறித்த சிவவேடத்தாரை மதிக்காது கூசியொதுங்கிய மற்றையோர்பால் இரக்கமுடையவராயினார். அதனால், அத்தகைய அவமதிப்பிற் பயிலல் மூலம் அவர்கள் சிவாபராதிகளாய் நரகத்துன்ப மெய்தாவகை காப்பதும் அவர் கடனாயிற்று. ஆகவே, அவர்கள் தம்மில் தாமே உண்மையுணர்ந்து உய்தற்கு ஏற்றதொரு முன்மாதிரியாம்படி, அவர் குறித்த அத்திருவேடத்தார்க்கு விசேடவரவேற்பளித்ததும் இரட்டிப்பாக நிதி வழங்கியதும் ஆகிய செயல்களின் ஆந்தரங்கத்தன்மை உற்றுணர்ந்து கடைப்பிடிக்கத்தகும்.
திருச்சிற்றம்பலம்.
குருபூஜை: நரசிங்க முனையரையர் நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
Home Previous
Next

No comments:
Post a Comment