April 27, 2014

Kaliya Nayanar - Nayanmar 43

Kaliya Nayanar - Nayanmar 43


Chengundrirai Yellatti Padhamarinthu Thilathayilam 
Pakkamezha Mikavuzhanthum Pandilvarum Yeruthuyathum 
Thakkathozhil Perumkooli Than Kondu Thazhamai 
Mikanthiru Vilakkittar Vizhithondu Vilakkittar
 
Thiru Kaliya Nayanar was born in a family of Oil Merchants in Thiruvotriyur, Tamil Nadu. He was a passionate devotee of Lord Shiva; he found immense pleasure in lightening the lamps at the temple of Lord Shiva – Sri Adipureeswarar with his consort Goddess Sri Vadivudai Ammai. He blissfully engrossed in this amusing service of lightening lamps at the entire temple premises for several years. Soon, his whole wealth diminished into nothing but his yearning to lighten the lamps at the temple remained untouched. He struggled to find a source for living. He least bothered about his status and glorious past, wandered all around searching for a job. Somehow he managed to find a work under well-known merchants in his town. In this way, he resumed his tireless service to Lord for quite some time. In a little while, he lost that too and left with no money.    Thiru Kaliya Nayanar was firm in his mission; he arrived at the sanctum sanctorum of Lord Adipureeswarar along with his wife. He was already decided in his mind that nothing could stop his service to Lord, he raised sharp knife to his throat and began to cut. His wife was alarmed at this sight; instantly a hand stopped Thiru Kaliya Nayanar from his fearless act. There appeared Lord Shiva with his consort Goddess Sri Parvathy before the righteous couple and blessed them with Salvation.

In the Tamil month Adi – Kettai is widely celebrated as Guru Puja day, the day Thiru Kaliyanar attained the Abode of Lord Shiva. 

கலிய நாயனார் 

Source: Dinamalar

 Temple images
ஓங்கிய புகழுடைய தொண்டை நன்நாட்டில், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இங்குள்ள சக்கரப்பாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர் குடியில் கலியனார் என்பவர் பிறந்தார். சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார். தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்க நாதருடைய கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும் பகலும் இடுகின்ற பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு <உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பதில் ஈடுபடலானார். இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு கோயில் திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே நாயனார் வீட்டிலுள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார். இறுதியில் மனையை விற்று, மாண்புடைய மனைவியையும் விற்க முன்வந்தார்.

மனைவியாரை பெற்றுக்கொண்டு பொன் கொடுக்க ஆளில்லாமை கண்டு செய்வதறியாது திகைத்தார்; சித்தம் கலங்கினார் அடிகளார். மன வேதனை தாளாமல் மனை நலமிக்க மங்கை நல்லாளையும் அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து, ஐயனே! திருவிளக்குப் பணி நின்று விடுமாயின் இவ்வெளியேன் மாள்வது திண்ணம். அம்பலத்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார். திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்தார். எண்ணெய்க்குப் பதிலாக உதிரத்தைக் கொடுக்க உறுதிபூண்டிருந்த கலியநாயனார் வாள் எடுத்து வந்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார். திருத்தொண்டர்களை தடுத்தாட்கொள்ளும் தம்பிரான் எழுந்தருளி நாயனாரது திருக்கரத்தைப் பற்றினார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளிபரப்பின. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது. நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. நாயனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் அலங்கார விடை மீது எழுந்தருளி அன்புத் தொண்டர்க்கு காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறைப் பணிந்து எழுந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு திருவருள் செய்தார்.

குருபூஜை: கலிய நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கலியனுக்கு அடியேன்.

கலிய நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

திருத்தொண்டுறுதி கடைபோதற்கு எவ்வித உழப்பும் இழப்பும் ஈடாதல் தகுமெனல்

சிவந்தாள் சேர்தலே வாழ்விலட்சிய முடிநிலை யாதலாலும் அதற்கு நேர்வாயில் சிவதொண்டே யாதலாலும் அதன்பொருட்டு ஒருவரின் இடம்பொருள் ஏவலுக்கமைந்த எல்லாம் ஈடாக்கப்படலாம்; சுயகௌரவமும் அதற்குப் பலியாக்கப்படலாம் என்பதற்குக் கலிய நாயனார் வரலாறு கண்கண்ட சாட்சியாகும். மதிப்புக்குரிய பெரும் வாணிபச் செல்வராயிருந்து திருவொற்றியூர்ப் படம்பக்க நாயகர் திருக்கோயிலில் திருவிளக்குத் தொண்டாற்றி வந்த இந்த நாயனார் திருவருட் செயலாகத் தமது செல்வ வளம் அற்றொழிதலும் இரவல் எண்ணெய் சேர்த்தெரித்தும் அது சாத்திய மாகாதபோது பிறர் எண்ணெய்யை விற்றுக்கொடுத்துப் பெறும் ஊதியத்தால் விளக்கெரித்தும் அவ்வாய்ப்புமற்றபோது செக்காட்டும் நிலையங்களிற் கூலித்தொழில் தேடிச்செய்து பெறுவது கொண்டது செய்தும் அதுவுமற்றபோது குடியிருக்கும் வீட்டையே விற்று வந்தபொருள் கொண்டது செய்தும் அதுவும் ஒழிந்தகாலை தம் இல்லக் கிழத்தியாரை விற்பதற்கு விலைபேசவும் முயல்வாராயினர். அவர் திருத்தொண்டுறுதியை, மேலும் அழுந்த ஊன்றிவிட்டுக் காணுந் திருவுளச் செயலாக மனைவியார் விலை போதலும் இயலாதாகவே தம் உதிரமே கொண்டு விளக்கெரிக்கத் துணிந்து தாமே தம்மிடற்றில் அரி கருவியை மாட்டிக்கொள்ள அதுகாணச் சகிக்கலாற்றாது வெளிப்பட்ட திருவருளினால் தடுத்து நிறுத்தப்பட்டுப் பேரின்ப வாழ்வுமருளப்பெற்றார். இவரது இத்தொண்டுறுதியின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியின் திட்ப நுட்பமும் தீரமும் திகில்விளைப்பனவும் அந்நிலையில் அவருக்குச் சிவனளிக்குங் கௌரவம் அற்புதப் பொற்பினதுமாம் அது சேக்கிழார் வாக்கில், "பணி கொள்ளும் படம்பக்க நாயகர்தங் கோயிலினுள் அணிகொள்ளுந் திருவிளக்குப் பணிமாறு மமயத்தின் மணிவண்ணச் சுடர்விளக்கு மாளில்யான் மாள்வனெனத் துணிவுள்ளங் கொளநினைந்தவ் வினைமுடிக்கத் தொடங்குவார்" -
 "திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பிச் செயல் நிரம்ப ஒருவிய எண்ணெய்க்கீடா உடலுதிரங் கொடுநிறைக்கக் கருவியினால் மிடறரிய அக்கையைக் கண்ணுதலார் பெருகுதிருக் கருணையுடன் நேர்வந்து பிடித்தருளி" - "மற்றவர்தம் முன்னாக மழவிடைமேலெழுந்தருள உற்றவூ றதுநீங்கி யொளிவிளங்க உச்சியின்மேற் பற்றியவஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம் பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க அருள்புரிந்தார்" என வரும். தம் திருத்தொண்டாகிய ஒன்றின் பொருட்டு, ஈயுஞ் செல்வநிலையில் இருந்தவர் இரக்கும் நிலைக்கிழிந்தும் அப்பால் கூலிநிலைக்கிழிந்தும் மேல், வீட்டையே விற்றதுடன் மனைவியையே விற்பதான மானமழி நிலைக்கிழிந்தும் இறுதியில் தம்மைத் தாமே மாய்த்துவிடும் வன்கண்மை நிலைக் கிறங்கியும் இந்தக் கலிய நாயனார் உழன்றாரென்றால் இவர் திருத்தொண்டுறுதியின் தரத்தை மதிப்பிடுதல் எளிதோ அன்றாம்.
திருச்சிற்றம்பலம்.


Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment