Thiru Kalikkamba Nayanar - Nayanmar 42
Life of Thiru Kalikkamba Nayanar !!
Picture courtesy - shaivam.org
Veritha Kondrai Mudiyartham Adiyar Ivarmun Mevunilai
Kurithu Velki Nirvaradhozhinthal Yendru Manamkondru
Marithu Nokkar Vadivalai Vanagi Karakam Vangikkai
Dharithukaraka Neereduthu Thamey Avarthal Vilanginar
Thiru Kalikkamba Nayanar was born in the family of merchants in Thiru Pennadagam, one of the flourished lands in the Chola Kingdom. He was an ardent devotee of Lord Shiva and led an ascetic life at a young age. He selflessly served the devotees of Lord Shiva with utmost reverence. His chaste wife wholeheartedly accompanied him in serving the devotees of Lord.
Once, Kalikkamba Nayanar and his wife received a group of devotee of Lord Shiva to their home. The guests were received with utmost reverence. Kalikkamba Nayanar welcomed them with folded hands and nectar like speeches, he washed the feet of the devotees standing in front of him and his devoted wife dutifully poured water to his hands. Suddenly, she recognized a devotee of Lord was a servant of Kalikkamba Nayanar earlier; she sincerely wanted to avoid washing his feet by her husband, hence she refused to pour water. Kalikkamba Nayanar was shocked and least expected this kind of behavior from his wife. In a sudden rage he took a sharp knife and he cut off her hand into two. And calmly continued to wash his feet and served the devotees of Lord with sumptuous meal. Thiru Kalikkamba Nayanar and his virtuous wife continued their devoted service to the devotees of Lord and finally attained Salvation.
In
the Tamil month Thai – Revathi is widely celebrated as Guru Puja day,
the day Thiru Kalikkamba Nayanar attained the Abode of Lord Shiva.
கலிக்கம்ப நாயனார்
(Courtesy: Dinamalar)
(Courtesy: Dinamalar)
சீரும்
சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே
தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற
இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து
பொன்னும் பொருளும் வேணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார்.
திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு
வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலுள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில்
எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து
வந்தார்.வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். நாயனார் அச்சிவனடியாரைக்
கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார்.
அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக்
கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும்
அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம்
அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது
சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள். மனைவியின் தயக்க
நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப்
புரிந்து கொண்டார். சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது
திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின்
செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள்
எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து
அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு
துணுக்குற்றார் அடியார். கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம்
ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே
பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது
சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை
உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை
மீது எழுந்தருளினார். சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி
முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட்
தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான்
அன்பர்களுக்கு அருள்புரிந்து அந்தர்த்தியாமியானார். நாயனார் மனைவியோடு
உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில்
விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.
குருபூஜை: கலிக்கம்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்.
குருபூஜை: கலிக்கம்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்.
கலிக்கம்ப நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
சிவனடியாரைப் பூர்வாசிரமநிலை கருதி நோக்கல் பழுதெனல்
நல்லூழ்
தலைப்பட்டு யாதானுமோருபாயத்தான் மெய்யுணர்ந்து சிவனடியாராய் விட்டவர் தமது
பூர்வாசிரமமான முன்னைய வாழ்வியற் சூழ்நிலைப் பண்புகளை இழந்தோராவர். ஆகவே,
பிறர் அவர் விஷயத்திற் சாதிகுலாசார நோட்டங்கொள்வதுமில்லை: அவர் பிறரைச்
சாதிகுலாசார நோட்டங்கொண்டு பார்ப்பதுமில்லையாகும். அது திருமந்திர நூலில்
"மலமில்லை மாசில்லை மானாபி மானங்குலமில்லை கொள்ளுங் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தினாலே பல மன்னியன்பிற் பதித்துவைப் போர்க்கே" என
வரும். சிவனடியார் நேசமுஞ் சிவதொண்டு வீறும் வாய்ந்த மஹான்கள் இது
காரியத்தில் மிகக் கண்டிப்பாகவே யிருப்பர். எவ்வகையிலேனும் அக்கணியம்
அவமதிக்கப்படக்காணின் வன்முறையாலேனும் உண்மை சாதிக்கத் தவறமாட்டார்.
கலிக்கம்பநாயனார் இதற்குத் தக்க உதாரணமாவர். இந்த நாயனார் தம்மை யணையுஞ்
சிவனடியார்களுக்கு உரியமுறைப்படி மகேசுர பூசை செய்து வணங்குந் தமது
நியமப்படி ஒருநாள் சிவனடியார்களை ஒவ்வொருவராக அணுகிப் பாதபூசை புரியும்
பணியிலீடுபட்டிருந்தார். அதற்குதவியாக அவர் மருங்கில் நின்று பாதம்
விளக்கக் கரகநீர் தந்து கொண்டிருந்த அவர் மனைவியார், குறிக்கப்பட்ட
சிவனடியார் ஒருவரை அணுகுகையில் அவர் தம்வீட்டுமுன்னைநாள் வேலையாள் என
இனங்கண்டு கொண்டதனால் நீர்வார்க்கா தொழியவே. விசாரணைக் கவகாசம் வைக்காமலே
அது தெரிந்து கொண்ட நாயனார் நீர்க் கரகத்தைத் தாம் வாங்கிக்கொண்டு அவர்
கையை வாளால் தறித்து விட்டுத் தாம் வேண்டியவாறே பாதபூசை முடித்து அடுத்து
நிகழவேண்டிய அன்னம் பாலிப்புப் பணியையும் தம்கைப்படவே நிறைவேற்றுவாராயினர்.
சேக்கிழார் நாயனார் தெரிவிக்கும் பாங்கில் அவர் புரியும் மகேசுரபூசைக்கு
என்றும் எல்லா வகையிலும் உறுதுணையாயிருந்துவந்தவாறே அன்றும் தம்
கையிழக்கும் வரை அதற்காவனவெல்லாம் ஏற்பாடு செய்தமைத்து உடனாய் நின்றவர் தம்
மனைவியார் என்ற கண்ணோட்டத்துக்குச் சற்றும் இடமளிக்காமலே அவ்வாறு
செய்துவிடவைத்த இந்த நாயனாரின் பக்திவைராக்கிய முதிர்ச்சி இருந்தவாறென்னே!
ஒரு சிறுபொழுதுக்காயினும் அவர் உள்ள அமைதியைச் சிதைத்து விட்டிருக்கக்கூடிய
அளவுக்குச் காட்டமான அச்செயலால் நாயனார் சற்றேனுஞ் சித்த சலனமடையாமல்
அன்றையமேல் நிகழ்ச்சிகளை நிம்மதியாக அவர் நடத்தி முடிக்கவைத்த அவரது
சித்தத்திடமானது அவர் திருத்தொண்டுறுதியின் உயர்தரமாகப் போற்றப்படும்.
அது சேக்கிழார் வாக்கில், "வெறித்த கொன்றை
முடியார்தம் அடியார் இவர்முன் மேவுநிலை குறித்து வெள்கி நீர்வாரா
தொழிந்தாள் என்று மனங்கொண்டு மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம்
வாங்கிக் கைதறித்துக் கரக நீரெடுத்துத் தாமே அவர்தாள் விளக்கினார்" -
"விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து துளக்கில் சிந்தையுடன்
தொண்டர் தம்மை யமுது செய்வித்தார் அளப்பில் பெருமை யவர்பின்னும் அடுத்த
தொண்டின் வழிநின்ற களத்தில் நஞ்ச மணிந்தவர்தாள் நிழற்கீ ழடியா
ருடன்கலந்தார்" என வந்துள்ளவாறு காண்க.
No comments:
Post a Comment