July 18, 2014

Sadaiya Nayanar - Nayanmar 62

62.Sadaiya Nayanar 
 
SADAIYA NAYANAR, ISAIGNANIYAR AND SUNDARAR IN THE PICTURE. Father, mother and son are the Nayanmars.
SADAIYA NAYANAR is an Adi 
Saivite saint who is one of the 63 nayanars. He lived in Tirunavalur in Tirumunaipadi. All his ancestors were ardent devotees of Lord Siva. He was also pious and devoted. Isaijnaniyar was his dutiful wife. She was also devoted to the Lord and one of the 63 nayanars too. Due to their honourable deeds in their past life, a heavenly child was born who was none other than Sundarar. He is also a Nayanar. In the history of all the nayanars, these three nayanars got a credit that they all belongs to the same family. Both sadaiya nayanar and his wife led the idealGrihastha (household) life and finally attained the lord's abode.
 
சடைய நாயனார்  
Courtesy: Dinamalar
Temple images 
சைவவளமும், செல்வமும் கொழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார். இவரது மனைவியார் பெயர் இசைஞானியார். தமிழுலகம் செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார். தமது மகனை நரசிங்கமுனையார் தம்மோடு அழைத்துப் போக  எண்ணிய போது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையயைப் பெற்றவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத் தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வபுதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நீழலை அடைந்து இன்புற்றனர்.

குருபூஜை: சடையனார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்.
ஒரே பார்வையில் ...
இவர் நடுநாட்டிலே, திருநாவலூர் என்னும் தலத்திலே, ஆதிசைவக்குலத்திலே அவதிரித்தவர். இசைஞானியாரை மணந்து, சுந்தரமூர்த்தி நாயனாரைப் புதல்வராகப் பெறும் பேறு பெற்றவர். 
சுந்தரரைப் பிள்ளையாகப் பெற்று, நரசிங்கமுனையரிடம் வளர இசைவு தந்து, புத்தூர் சடங்கவி சிவாசாரியாரின் செந்திரு அனைய புதல்வியைத் திருமணம் செய்விக்க முயன்றவர்.

சங்கையிலா வரன்மறையோர் நாவ லூர்வாழ்
    தவரதிபர் தம்பிரான் றோழ ராய
வெங்கள்பிரான் றவநெறிக்கோ ரிலக்கு வாய்த்த
    விசைஞானி யார்தனய ரெண்ணார் சிங்க
மங்கையர்க டொழும்பாவை மணவாள நம்பி
    வந்துதிக்க மாதவங்கள் வருந்திச் செய்தார்
வெங்கணரா விளங்குமிளம் பிறைசேர் சென்னி
    விடையினா ரருள்சேர்ந்த சடைய னாரே.

சடைய நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

ஞாலம் வாழ மகப்பெற்றார் போற்றற்பாலரெனல்


திருநாவலூருலே, "மாதொரு பாகனார்க்கு வழிவழியடிமை செய்யும்" வேதியர் குலமாகிய ஆதிசைவர் குலத்திலே தோன்றிச் சிவன் திருநாமமாகிய சடையன் என்பதே தமக்கும் நாமமாகக் கொண்டிருந்து சிவனடிமை நெறியில் வாழ்ந்து திருவருளுக்குப் பாத்திரமாய் விளங்கியவர் இந்த நாயனார். அது, "அரும்பா நின்ற அணிநிலவும் பணியு மணிவா ரருள் பெற்ற சுரும்பார் தொங்கற் சடையனார்" எனுஞ் சேக்கிழார் வாக்கினால் தெளியப்படும். அவர், திருத்தொண்டத் தொகையளித்த திருவாளனும் திருத்தொண்டர் புராண காவியத்தின் தன்னிகரில்லாத் தலைவனுமாகவல்ல நம்பியாரூரைத் தமக்கு மகனாகப் பெற்றதன் மூலம் தமது குலம் நலம் தலம் மூன்றும் ஒப்புயர்வற்ற விளக்கம் பெற வைத்ததுடன் தம்பிரானையே தோழனாகக் கொண்டு தூதனுப்பியதும் உற்ற உருவுடனே தான் கயிலாய மடைந்ததுடன் தன் தோழனாகிய சேரமானையும் அவ்வண்ணமே தன்னுடன் அங்கெய்த வைத்தது மாகிய அம்மகன் செயல்களால், மெய்த்தொண்டராவார்க்குத் திருவருள் வழங்கத்தகும் அளப்பரிய பெருமகிமை இத்தகையதென அறிந்துணர்ந்து ஞாலமெலாம் வாழவந்த பெருவாழ்வுக்கு முன்னிலைக் காரணமாயிருந்து தாமுஞ் சிவப்பே றெய்தியுள்ளார். அத்தகைய பெருந்தகையாகிய அவர்பெருமை போற்றத் தகுமெனல் சொல்லாமே யமையும். அந்நயம் புலப்படுமாறு அவர்புராணச் செய்யுளிலும் பெருமை போற்றுதல் சொல்லாமலே கொள்ள விடப்பட்டிருத்தல் காணலாம். அது "தம்பிரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர் கொம்பனார் பால் ஒருதூது செல்ல ஏவிக் கொண்டருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம் நம்பியாரூ ரரைப் பயந்தார் ஞாலமெல்லாங் குடிவாழ" என வரும்.

திருச்சிற்றம்பலம்.

 

இசைஞானி அம்மையார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

அம்மையார் மகிமை புகழ்ச்சி வரம்புள் அமையாதெனல்


"கமலாபுரத்தில் (திருவாரூர்) சிவ கௌதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் மரபில் அவதரித்தவர்" எனக் கூறுஞ் சிலாசாசனத்தாலும் ஆரூர்ப் புனித அரன் திருத்தாள் தன் உள்ளத்து நயந்தாள் என்னுந் திருத்தொண்டர் திருவந்தாதி உண்மையாலும் திருவாரூர்ப் பிறந்து திருவாரூர்ச் சிவபெருமானிடத்து வெகு ஈடுபாடு கொண்டிருந்தவராக அறியப்படும் இசைஞானியார் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை என்பதிலிருந்து, "ஆரூர்த் திருமூலத்தானத்தே அடிப்பேரன் ஆரூரன்" என அவரே பாடியதற்கிணங்கவுள்ள, அவர் இயற்பெயராகிய நம்பியாரூரர்ப் பெயர் வழக்குக்கும் திருத்தொண்டர்புராணங் கூறுதற்கிணங்க, அவரின் அதிசயான்விதமான வாழ்விய லற்புதச் சிறப்புகளுக்குத் திருவாரூரே கேந்திர நிலையமா யிருந்துள்ளமைக்கும் ஒருகால், கொடுங்கோளூரில் சேரமானோடு நண்புறவு கலந்து களித்திருக்கையில் அவர் அன்பநுசரணைத் தடையையும் மீறி, "ஆரூரானை மறக்கலுமாமே" என அவரை ஆவலித் தெழுவிக்கு மளவினதும் மற்றொரு கால் திருவொற்றியூரில் திருவாரூர்த் தொடர்புக்குப் பாதகமாம்படி, சிவன் சந்நிதியில் தாம் செய்து வைத்த சபதத்தையும் மீறி, "எத்தனை நாட் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே" என அவரை உத்வேகங்கொளவைக்கு மளவினது மான அவரது திருவாரூர்த் தலப்பற்று முதிர்வுக்கும் நேரடிக் காரணம் இவர் அந்த அம்மையாரின் கர்ப்பவாசம் பெற்றுப் பிறந்தமையே எனல் நன்கு துணியப்படு மாகலின் அத்தகைய அவர் பெருமகிமை புகழ்ச்சி வரம்புள் அடங்க வாரா தென்பதே அதற்காஞ் சரியான மதிப்பீடாதல் அமையும். அது அவர் புராணத்தில், ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்களெய் தழித்தா ராண்ட நம்பிதனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன் மொழியாற் புகழ முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால் என வரும்.


திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment