October 09, 2014

Bhoodathalwar

Bhoodathalwar

Bhoodathalwar
Period7th C. AD
PlaceMahabalipuram
MonthIyppasi
Star (Natshatram)Avittam (Dhanishta)
HamsamKaumodakee (Mace)

In Thondai Naadu, a city, which is found on the shore of the sea, which is called as "Kadal Mallai" is found. The Adiyaars (or) the bhaktas who praise the Emperumaan are found in large number in this Kadal Malai Kshetram.

This Kadal Mallai Kshetram is also popularly called as "Maamallapuram" and as the years passed, this sthalam is now called as "Mahabalipuram". Since this sthalam was ruled by Maamallan, a great of Pallava King, the sthalam is named as "Maamallapuram". This sthalam is also called as "Mahabalipuram" because Mahabali Chakaravarthy, who ruled this sthalam, as asked by Sriman Narayanan who came as "Vaamanar" (Dwarf) asked for 3 feets of land. Since, he could not give him the 3rd feet, he surrended his head as the 3rd one. As a complete surrender towards the Emperumaan, Mahabali was sanctified him to attain Moksha. Beacuase of this, the sthalam is also known as "Mahabalipuram".

Emperumaan Sriman Narayanan is found in some sthalams in Nindra Kolam and in some sthalam as "Veetrirundha thirukkolam" and in "Kidantha Kolam" in some sthalam. Likewise, this is one of the greatest sthalam where the Emperumaan, "Sthala Sayana Perumal" is found in Kidantha Thirukkolam.

Having these kinds of specialities, this sthalam has another speciality to say.

In Siddhartha year, Iyppasi month, Navami, Avitta Natshatram, Bhoodhathalwar was born, who is considered to be the Hamsam of one amongst the Panja Aayudham (five weapons) of Thirumaal, the Koumothagi, the Gadha, in a small Madhavi flower.

From the child hood, his heart and all of his thinking are towards Sriman Narayanan and spent his life by praising the fame of him.

The Divya Desams consecrated by 

Budat Alwar : ( 14 ) Tiruvarangam, Tanjai, Tirukkudanthai, Tirumaliruncholai,

Tirukkoshtiyur, Tiruthankaal, Tiruvidanthai, Tirukkovilur, Tirukkachi, Tiruppaadakam,

Tiruneermalai, Tirukkadanmallai, Tiruvenkadam, and Tiruppaarkadal 

 பூதத்தாழ்வார்


பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் :  7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்

எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள் : 100

சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

                                                    
கடல் வணிகத்திலும் சிற்ப கலையிலும் சிறந்த பெயர் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மஹாபலிபுரம். கலைக்கோவிலாக விளங்கும் இந்நகரில் எங்கு பார்த்தாலும் மலர்ந்த தோட்டங்கள் மல்லிகை பூக்கள் காடு போல் வளர்ந்து இருக்கும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் நீலோற்பவ மலர்கள் நிறைந்த தடாகங்களும் நிறைய உண்டு.

இந்த மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமிதிதி புதன் கிழமை அவிட்ட நக்ஷத்திர நாளில் திருமாலின் அம்சமான கதாயுதமே குழந்தையாக பிறந்தது.

ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் திருஅவதாரம் பண்ணின இந்த குழந்தையே பூதத்தாழ்வார் ஆகும். மக்கள் அந்தகுழந்தையை பூதத்தான் என்று அழைத்தனர். 

அக்குழந்தையை பூமணத்தோடு வீசும் தென்றல் தாலாட்ட நீரிலே நீந்தி வரும் அன்னப் பறவைகள் சூழ்ந்து நின்று காக்க ஸ்ரீமந்நாராயணனும் பிராட்டியாரும் கருடாழ்வார் மீது ஆரோகணித்து பேரருளை மழைப் போல் வருவித்தனர். முகத்தில் காணப்பட்ட தேஜஸ் மெய்யன்பர்களை தடுமாறச் செய்தது. பூதன் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். தன்னுயிர் போல்  மண்ணுயிரைப் பேணிக் காத்து வந்ததால் அக்குழந்தைக்கு பூதத்தாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.

அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும் பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் அவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள். செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார். எப்போதும் பரமன் புகழ் பாடும் பூதத்தாழ்வாரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.

'நமோ நாராயணாஎன்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து உலகத்தாரையும் உணரச் செய்தார். உட்காரும் போதும்நிற்கும் போதும்,உறங்கும் போதும்நடக்கும் போதும்உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிந்தார் பூதத்தாழ்வார்.

கடல்மல்லையில் பள்ளிக் கொண்ட பெருமானை அல்லும் பகலும் பைந்தமிழ் பாசுரங்களால் பாடி பரவசமடைந்த பூதத்தாழ்வாருக்கு தொண்டை மண்டலத்திலுள்ள மற்ற திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

சுற்றிருக்கும் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு தொடர்ந்து சென்று எம்பெருமானை தரிசித்து வந்தார். உலகளந்த பெருமானை தரிசிக்க ஆசை கொண்டிருந்த அவரின் ப்ரார்த்தனையை அறிந்திருத்த பரந்தாமன் திருக்கோவிலூருக்கு வரும் படி அவருக்கு கனவில் உரைத்தார். திருமாலவனை பற்றிய ஆனந்த பரவசம் கொண்டு திருக்கோவிலூர் சென்றார் அவர். அக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு பகல் பொழுது போக்கி இரவு ஆனபோது இடியும் மழையும் சூறைக்காற்றும் பலமாக அடித்ததைக் கண்டு, இரவு தங்குவதற்கு இடம் தேடினர். அப்போது அவரது கண்ணுக்கு ஒரு ஆசிரமம் தென்படவே அதை நோக்கி விரைந்து அங்கு போய் தாளிட்டிருக்கும் கதவைத் தட்டினார்.
  
பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார். பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார். மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை, பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி, திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார். 

இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார். இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர்.

பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார்.பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (5)
1. திருநீர்மலை (அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2. திருவிடந்தை (அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருக்கடல் மல்லை (அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்)
4. அத்திகிரி (அருள்மிகு வரதராஜப்  பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
5. திருத்தங்கல் (அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்)

பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)

பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)

பூதத்தாழ்வார், பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)
1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)

பூதத்தாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

பூதத்தாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)








  • பெயர்க்காரணம்
  • பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருளாவது, சத்தைப் பெற்றது என்பது. (சத்து = அறிவு) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர்.
    6.3.1 பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் (திருநூல்)
    பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் இரண்டாம் திருவந்தாதி. இது இயற்பா என்னும் பிரிவில் அடங்குவது. தனிப்பாடல் நீங்கலாக இதில் 100 இனிய வெண்பாக்கள் அடங்கியுள்ளன. பாடல் தோறும் எம்பெருமானின் கலியாண (நல்ல) குணங்கள் பற்றிய புகழ்ச்சியும், அவருடைய அருட்செயல்களும் நிரம்பிய நூல் இது.







  • ஞானச்சுடர் விளக்கு
  • அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தவர் பூதத்தாழ்வார்.

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்      (1)

    (சிந்தை = உள்ளம்; நன்பு = நன்மை)
     
    6.3.2 கைதொழுவார் கண்ட பயன்
    திருமாலைக் கைதொழுதால், அதன்பிறகு ஒருவனுக்கு மண்ணுலகை ஆளும் பெருவளமும், வானவர்க்கு வானவனாய் வாழும் வாழ்க்கையும், விண்ணுலகப் பேறும் ஒரு பொருளாதல் இல்லை என்கின்றார் பூதத்தாழ்வார்.
    பூதத்தாழ்வாரின் இக் கூற்றினை, ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் என்ற குலசேகர ஆழ்வாரின் கூற்றோடு ஒப்பிடலாம்.





  • கற்பனை வளம்
  • திருவேங்கட மலையின் வளத்தைக் கூறவந்த ஆழ்வார், மதம் பெருகும் களிறு ஒன்று, இளமூங்கிலைத் தன் துதிக்கையால் வளைத்து, அருகிலுள்ள தேனடையில் இருந்த தேனில் தோய்த்துத் தன் காதல் பிடிக்கு ஊட்டும் சிறப்புடையது என்று கூறுவது சிறப்பாகும். (75)

    6.3.3 பெருந்தமிழன்
    தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்றும், தாமே ஏழு பிறவிகளிலும் தவமுடையவர் என்றும் இறுமாப்புக் கொள்கின்றார் இவ் ஆழ்வார். இதற்குக் காரணம் கூறுவாராய், யானே, இருந்தமிழ் நன்மாலை இணைடியக்கே சொன்னேன் என்றார். பெருமானின் இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான பெருமையினை,பெருந்தமிழன் நல்லேன் பெரிது (74) என்று கூறிப் பெருமிதம் அடைகின்றார்.

    Home  Previous                                                                     
                                                                Next

    No comments:

    Post a Comment