Poigai Azwar
Birth Period | 7th C. AD |
Birth Place | Kanchipuram |
Month | Iyppasi |
Star (Natshatram) | Thiruvonam (Sravana) |
Hamsam | Panchajanya (Conch) |
Day | Tuesday |
His works | first thiruvantathi |
Songs | 100 |
In Kanchipuram Thiru vekka, also called as "Yadhothakaari
Sannadhi" which is found in Kanchi, has its own speciality and Sriman
Narayanan's Anugraha (Blessings). Nearer to the Yadhothakaari temple, is
found a Poigai (small pond), which is full of beautiful, fresh lotus
flowers are found. Sonna Vannam Seitha perumal, is found close to this
pond and giving his seva to the entire world.
The Pond, which is found in the Great Ksthetram, inspite of
having the nourishing smell and beauty, it has another speciality to be
said. In Siddhartha year, Iyppasi Month, Suklashtami Tuesday in
Tiruvona Natshatram, as an Hamsam of one of the Panjayudham (5 Weapons)
of Sriman Narayanan - Thiru Sangu, Poigai Alwar was born in this world.
Since, he was born in this poigai (Pond), he is called as "Poigai
Alwar".
From the Childhood, his thinking was always on the
almighty, Sriman Narayanan and made up his mind that he should follow
him and want to spread his fame to the world. He learnt all the
Vaishhava's speech and acted according to it and led his life as how a
Vaishnava should be.
Knowing the greatness of Thirumaals devotion and thought
him fame has to be spread to all the humans in the whole world, he left
all of his general human characters like Love, Angry and having the mind
to earn wealth.
Poigai Alwar composed the first 100 verses starting with
the words ' Vaiyam Tagaliya, Varkadale Neyyaaga' ( the universe being
the lamp and the oceans being the lubricant).
Vaiyam Thagaliyaa Vaar Kadale Neyyaaga /
Veyyak Kadirone Vilakkaaaga /
Sudar Aazhiyaan Adikke Soottinen Son Malai /
Idar Aaazhi Neengukave Enru /
Sudar Aazhiyaan Adikke Soottinen Son Malai /
Meaning:
" Lord Narayana is the cause of this wonderful universe and
the seas; He holds the divine discus; As a means to cross the miserable
ocean of 'Samsara', I am dedicating this garland of verses. I had
His vision in the light of the lamp of earth, the lubricant ghee being
the waters of the ocean. The bright Sun is the one that sheds light on this."
Vaiyam : Universe, VaarKadal : The sea surrounding it, Thagazhi : Lamp,
Veyyak Kadirone : The hot Sun, Seyya : Beautiful, Sudar
Aazhi : Lustrous discus, SonMalai : Garland of words (verses), Idar
Aazhi : ocean of misery (Samsara)
The Divya Desams consecrated by Poigai Alwar :
He went the most Divyadesams to sang and obeyed lord narayana.
A total of 108 Tirupatis Poigai Alwar along with other Alvars consecrated of 6 temples.
Poigai Alvar, Thirumangai Alvar (1)
1. Kanchipuram (Aadi Keshava Perumal Temple, astapujam, Kanchipuram)
1. Kanchipuram (Aadi Keshava Perumal Temple, astapujam, Kanchipuram)
Poigai Alwar, Bhoothathalva, Thirumangai Alvar(1)
1. Tirukkoyilur (tirivikkiramar Temple, tirukkoyilur, Villupuram)
1. Tirukkoyilur (tirivikkiramar Temple, tirukkoyilur, Villupuram)
Poigai Alwar, Tirumangai Alwar, Peyazwar, Thirumazhisai Alwar(1)
1. Tiruvekka (Sonna vannam Seitha Perumal Temple, Kanchipuram District)
1. Tiruvekka (Sonna vannam Seitha Perumal Temple, Kanchipuram District)
Poigai Alwar, Bhoothathalva, Peyazwar, Nammalvar, Andal,
Periyalvar, Thirumangai Alvar, Kulashekhara Alvar, Thirumazhisai Alwar,
Thiruppaan Alvar (2)
1. Tirupati (Venkatachalapathy Temple, Tirupati, Chittoor, Andhra Pradesh)
2. Tirupparkatal
1. Tirupati (Venkatachalapathy Temple, Tirupati, Chittoor, Andhra Pradesh)
2. Tirupparkatal
Poigai Alwar, Bhoothathalva, peyazwar, Nammalvar,
Andal, Periyalvar, Tirumangai Alwar, Kulashekhara Alvar, Thirumazhisai
Alwar, Thiruppaan Alvar, Thondaradippodi Alvar (1)
1. Srirangam (Ranganathar Temple, Srirangam, Trichy)
1. Srirangam (Ranganathar Temple, Srirangam, Trichy)
பொய்கையாழ்வார்
(courtesy:The History of Sri Vaishnavam)
(courtesy:The History of Sri Vaishnavam)
பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !
இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார்.
வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர் காஞ்சி நகர்
திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர்
பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும்
கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது
திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின்
தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம்
செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு
அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார்.
தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.
ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை
வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை
மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை
செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின்
தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல
காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார்.
ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது
ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து
சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு,
சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர்
பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று
பரந்தாமனைப் பாடி பணிந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)
பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
Next
No comments:
Post a Comment