October 27, 2014

Thirumazhisai Alwar

திருமழிசை ஆழ்வார்

Thirumazhisai Alwar

Thondai Naadu is one of the parts of Tamil Nadu where lots of well knowledged and religious persons were born. In this thondai Naadu, Thirumazhisai sthalam is found where lots of Munis and Yogis are found. Among them, one munivar by named Bargava muni was found who didn't have a baby. Because of this, he did tapas towards the Perumal and did a Yaagam by named "Sathram". As a result of the Yaagam, his wife gave birth to a baby which is said to be the Hamsam of Sudharsana Chakkaram of Sriman Narayanan.

Thirumazhisai AlwarThe baby was found in an incomplete manner (ie) it did not have hands, legs etc. On seeing the baby, both of his parents, Bargava muni and his wife were worried and felt bad for the baby and left it into a Perambhu (tree that belongs to Bamboo family) ditch. After they left, the Perumal along with Lakshmi Devi came towards the baby and blessed him with his sevai and as a result, the baby was completely filled up with all of his parts and his Gnana seemed to be enlightening. After this, the Perumal and Lakshmi Devi disappeared from that place.
An Andhanan(stranger) by name "Thiruvaalan", was coming along that side and heard the baby crying. He didn't have any child, so he thought that the God has gifted him this and took the baby towards his house.

On seeing the child, the Andhanan's wife, Pangaya selvi felt so happy and she tried to feed the baby with milk. But, the baby didn't drink it and it didn't even sleep. But, his health didn't seem to be losing. This miracle news spread all over the place and an old man was found in Thirumazhisai to see the child. When he saw the child, he noted the shine on his face and thought the child would be a blessed child of the Perumal. Since, the child was blessed by the Emperumaan, it was named as "Thirumazhisai piraan". He gave a cup of cow's pure milk and asked the child to drink it. The child accepted it and drank the milk. On seeing this, both the Andhanan and his wife were happy and asked the old man to come daily to feed the milk.

Likewise, the old man came daily and gave milk to the child and told the Andhanan that the remaining milk that the child has kept should be taken by his wife, Pangaya selvi, so that she might give birth to a child. As told by the old man, daily, they took the milk that was kept by the child. As the days passed on, Pangaya selvi gave birth to a Male child and they named him as "Kani kannan". Kani Kannan was taught will all sorts of good vedic philosophies and spiritual books. He became the close friend of Thirumazhisai piraan and kani kannan started to treat Thirumazhisai piraan as his Guru. He learnt lots of spiritual knowledge from his Guru and followed him.

Thirumazhisai AlwarOnce, Thirumazhipiraan went to Thiruvekka, the Avathara sthalam of Poigai Alwar and worshipped the Yadhotthakaari Perumal who is found in Aadhi seshan. He wanted to stay there for sometime and started to be in Dhyana stage. At that time, an old lady was working for Thirumazhisai piran. On seeing the help rendered by her, he was so happy about her work. Hence, he asked her that he shall give her one varam(boon).

She asked him that she is feeling bad about her old age and as a result she asked him to change her into a youth. Seeing the lady, he changed her to a beautiful young woman.

Once, the Pallava king was passing by the side of the young lady, found her and was stunned to see her beauty. After going to his palace, he sent his soldiers and sent a message that he wanted to marry her. She accepted his wish and they both got married and led the life happily. The days passed on and king became old and at the same time, his wife seems to be young and beautiful. He asked her about the secret of her beauty. She told about her story and how she became young and beautiful.

On hearing the secret, the king sent some of soldiers to Thirumizhisai alwar's place to ask his Sishyan, Kani Kannan to come to his palace. Kani Kannan went to the palace and met the king. The king said that his Guru Thirumazhisai Alwar should sing a poem on praising him. But, Kani Kannan told that his guru is said to be blessed by the Emperumaan and his mouth will praise only the God, but not the king. As satisfied by this, the king asked if atleast he (Kani Kannan) could praise him through his poem. But, Kani kannan refused to do so and said that he is not an ordinary person who praises for the need of ornaments and food and he will follow his Guru by praising only the Perumal.

The king was angry on hearing the words from Kani Kannan and ordered him that he would be killed. After this, Kani Kannan went straight towards Thirumazhisai Alwar and explained all about what had happened to him in the palace. As ordered by the king, Kani kannan started to leave Thiruvekka. Hearing this, Thirumazhisai alwar stopped Kani Kannan and said he is also coming along with him, since they were found together from the Childhood. While vacating from Thiruvekka, they crossed the Yadhothakari temple.

Thirumazhisai Alwar told to the Perumal that since Kani Kannan is leaving Kanchipuram, he is also going along with him and he asked the Perumal to get up from the Aadhiseshan, the mat of the Perumal to roll it and he wanted the Perumal to join them. As said by the alwar, the Perumal rolled his mat (Aadhiseshan) and all these 3 quit from Kanchi. After the Perumal went out along with the Alwar and Kani Kannan, the entire empire seemed to be dull and all the people feared that the world is going to end.

The king heard from his palace officials that the Perumal has also gone out from the temple along with them and that's the reason for the empire becoming dull. The king realised his fault and went towards the place where they stayed for one night. The king felt for his fault and asked Kani Kannan to return back to Kanchi. As requested by the king, Kani kannan accepted his words and started towards Thiruvekka. Thirumazhisai alwar came along with Kani Kannan, sang on the Perumal that since Kani Kannan is returning back he can also return and can sleep on the Aadhiseshan on his Vekka temple.

"Kanikkannan pokkozhinthaan Kaamarupoonkacchi
Manivanna Nee Kidakka Vendum - Thunivudaya
Sennappulavanum Pokkuzhinthaan
Neeyum undhan painnaagap Paaippaduthuk kol".

The place where Thirumazhisai Alwar, Kani Kannan and the Perumal stayed for one night is called as "Oar Iravu Irukkai" and now it is called as "Oarikkai".

After sometime, Thirumazhisai Alwar along with Kani Kannan left from Thiruvekka and went towards Thirukkudanthai. After worshipping the Perumal, Alwar went to cauvery river and left all of his Prabhandhams that he had written in praise of the Perumal. Except Thirucchanda Virutham (which has 120 Paasurams) and Naanmughan Thiruvandhathi (which has 90 Paasurams) did not merge into the river, instead they came towards his legs. He took both of the Andhathees and went towards AaravamudhapPerumal and did Mangalasasanam in Kudanthai temple. For more years, he stayed in Thirukkudanthai and sang lots of Paasurams on Perumal. In Thirucchanda Virutham, he explains about Sriman Narayanan who is found in various Divya Desams as :

"Nindrathu Enthai Ooragathu
Irundhathu Enthai Paadagathu
Andru Vakkanaik kidanthu
Ennilaadha Munnellaam
Andru Naan Piranthilen
Pirandhapinn Maranthilen
Nindrathum Irunthadhum
Kidanthum ennenjulae".

In this, the alwar explains about how the Perumal is found in Ulagalandha koil as Thiru Ooragathaan, and as a Thoodhuvan (diplomat or representative) for Paandavas in Thiru Paadagam and likewise he explains the various positions of the Perumal and finally he says that he is found in his heart. 

திருமழிசையாழ்வார்  

முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். (கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.) ("தொண்டை நன்னாடு சான்றோருடைத்து" என்கிறார் ஒளவையார்.) 

இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.  தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)திருமழிசையாழ்வார்

பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி

பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்
திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் பிறந்த திருமழிசை என்ற திருநாமம் கொண்ட ஆண் மகவு, கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால் வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது.

 இவர் திருமழிசையில் பிறந்ததால் திருமழிசையாழ்வார் என்றும், பக்திசாரர், மழிசைப் பிரான் என்றும் அழைக்கப்பட்டார். [சில சமயம் திருமழிசை ஆழ்வாரை, திருமழிசைப் பிரான் என்றும் சொல்லுவதுண்டு. இறைவனுக்குரிய 'பிரான்' என்ற பெயரை இவர் ஏற்று, ஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாகக் (ஆராவமுதாழ்வார் என்று) கூறுவர். ]

பின்னாளில் பெருமாள் மேல் கொண்ட ஆறாத பக்தியால் பல பாசுரங்களை இயற்றித் திளைத்தது. சக்கரத்தாழ்வாரே இத்திருக்குழந்தையாகப் பிறந்து திருமழிசை ஆழ்வார் என பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது வரலாற்றில் காணப்படும் அற்புதங்கள்:

பிரப்பங்காட்டில் இருந்த இக்குழந்தையை, பிரம்பு வெட்டிச் செல்ல வந்த திருவாளன் என்பவர் கண்டார். கண்ணுக்கு இனிய அக்குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். இக்குழந்தையோ பால் அருந்தவில்லை. பசியென்று அழவும் இல்லை.
ஆனாலும் பிறந்த பச்சிளங்குழந்தை உண்ணா நோன்பு இருந்ததால் பார்ப் போருக்கு மனம் பதைத்தது. அதில் ஒருவர் தன் மனைவி யிடம் பசும்பாலைக் காய்ச்சி இனிப்புச் சுவையேற்றிக் கொடுக்கச் சொல்ல, குழந்தையும் பால் அருந்தத் தொடங்கியது. காலம் பல சென்ற பின்னர் ஓர் நாள் சிறுவனான அக்குழந்தை சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அத்தம்பதி யினரைப் பருகக் கூற, அருந்தியவுடன் அவர்கள் முதுமை நீங்கியது. இளமை பெற்ற அவர்களுக்கு இப்பாலின் மகிமையால் குழந்தையொன்று பிறக்க அக்குழந்தைக்கு களிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

சீரும், சிறப்புமாய் வளர்ந்த களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். ஆரம்ப காலங்களில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார் திருமழிசை. இவரை முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், வைணவ சமயத்தை ஏற்கச் செய்து, திருமந்திர உபதேசம் செய்தார்.  இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை,இவரே பாடினார்-
சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்
இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு.
பின்னாளில் காஞ்சிபுரம் சென்ற திருமழிசை தன் ஆசிரமத்தை சுத்தம் செய்யும் வயோதிகப் பெண்ணை அவளது விருப்பப்படி இளமையாக்கினார். இப்பெண்ணின் இளமையைக் கண்ட பல்லவ மன்னன், அப்பெண்ணை மணந்தான். தானும் இளமையாக வேண்டும் என்று விரும்பினான் மன்னன். தன் விருப்பத்தை ஆழ்வாரின் சீடனான களிக்கண்ணனிடம் தெரிவித்தார். இப்படிப்பட்ட வரங்களை அனைவருக்கும் அளிக்க இயலாது என களிக்கண்ணன் எடுத்துக் கூற கோபம் கொண்டான் மன்னன்.

சீடரை உடனடியாக நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார், சீடனுடன் தானும் காஞ்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தான் பூஜித்து வந்த காஞ்சி வரதராஜப் பெருமாளிடம், `நாங்கள் இல்லாத இக்காஞ்சியில் உனக்கும் வேலை இல்லை. பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு நீயும் எங்களுடன் வந்துவிடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையைச் சுருட்டிகொண்டு ஆழ்வாருடன் சென்றார் என்கிறது இத்திருத்தல வரலாறு.

இவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.
1)  திருஅரங்கம் 2) திருஅல்லிக்கேணி  3) திருஅன்பில் 4) திருஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திருஎவ்வுள் (திருவள்ளுர்) 6)திருகஇத்தலம் (கபிஸ்த்தலம்)7) திருக்குடந்தை (கும்பகோணம்)8) திருக்குறுங்குடி 9) திருக்கோட்டியூர்10) திருத்துவாரபதி (த்வாரகா)11) திருக்கூடல்12) திருப்பரமபதம் 13) திருப்பாடகம் 14)  திருப்பாற்கடல்15) திருவடமதுரை (மதுரா)16) திருவெகா (காஞ்சிபுரம் அருகில்) 17) திருவேங்கடம் ]
திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணிகண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது.


இவரது சீடனான கணிகண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, கச்சியை விட்டு வெளியேறிய போது, திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்பத் திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமான், தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன், இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டதாகக் கூறுவர்.


இந்தக் கதையின் ஆதாரம் திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப்பாடல்கள்:


கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.


என்று முதல் பாட்டுக்குப் பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி


கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.


என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.


அதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது,  வளர்த்த தாயின் பாலையும் மறுத்து, தன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார் என்பதை


எந்தையே வினையேன், தந்த இந்தத்
     தொள்ளமுதினை அமுது செய்க என்று,
சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே
     அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்


என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.


முதல் ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் கிபி 6 நூற்றாண்டு என்பதால், அவர்களின் பாடல்களில் காணாத அளவுக்கு மாற்று சமயங்களைக் கண்டிக்கும் இயல்பு, திருமழிசை ஆழ்வார் பாடல்களில் காணப்பெறுவதால், அவர்கள் காலத்துக்குப் பின்னரும் திருமழிசை ஆழ்வார் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாலர்களின் கருத்து. இவர் காலம் கிபி 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் முன்னும் என்று கூறுவர் ( திரு. பு.ரா. புருஷேத்தம நாயுடு )


மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஆழ்வாரை, மணவாள பெருமாள் நாயனார், "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார். ( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )


மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்
அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த
வேதச் செழும் பொருள்


என்று வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.


நாலாயிர திவ்விய பிரபந்தத்தில், முதலாயிரத்தில், "திருச்சந்த விருத்தம்" இவருடையது. 120 பாசுரங்கள் கொண்டது. இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்துள்ளது.


இயற்பா என்ற பிரிவில் அமைந்த 'நான்முகன் திருவந்தாதி' என்ற பிரபந்தங்கள் 96 பாசுரங்களைக் கொண்டது. இவை வெண்பா என்னும் யாப்பினால் ஆனது.


வேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்மெய்ம்மிகுந்த திருச்சந்த  விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்


எழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.


"ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல்
கொண்மின் நீர்தேர்ந்து"


என்று தொடங்கி,


"இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை"
என்று திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.



திருக்குடந்தையில் திருமழிசையாழ்வார்

கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார்.பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்ந்தார்.அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர்.இதைப் புரிந்துகொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.அதன்பின்,பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர். ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார். ”கிருஷ்ணனாம் வ்ரீஹிணாம்நகநிர்பிந்நம்
என்ற ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.
ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர்.யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருகையைப் பொறுக்கவில்லை. இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்குக் காட்டுமாறு பாடினார்-
அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்
சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே
(இவர்கள் அறியாமையைப் போக்குவதற்குப் பயன்படாமல் இருக்கும் உன் கைககள் எதற்கு. சக்கரத்தை ஆயுதமாகக் கொண்ட திருமாலே, நீ கிடக்கும் கோலத்தை என்னுளே தோன்றி உன்னை இவர்களுக்குக் காட்டு)
பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்குத் தன்னைக் காட்டினார்.
ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருச்சந்த விருத்தம்-61)
குடந்தை ஆராவமுதன்
குடந்தை ஆராவமுதன்
இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஆராவமுதன் தன் சயனக் கோலத்தை விட்டு எழுந்திருக்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.அவர் சொன்னதை தட்டாமல், பெருமான் அப்படியே இருந்தார்.இக்கோலத்தை இன்றும் இக்கோயிலில் சேவிக்கலாம்.
இவர் நிறைய திவ்யபிரபந்தங்கள் எழுதிக் காவிரியில் விட்டார். அவற்றுள் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்தவிருத்தமும் திரும்ப வந்தது.இவரது காலம் 7ஆம் நூற்றாண்டு.திருமழிசையாழ்வார் தன் யோகபலத்தால் 2300 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்தார்.



மணவாள மாமுனிகள் "துய்மதி பெற்ற மழிசை பிரான்" (உபதேசரத்தினமாலை 4) என்றும் இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்.  நாமும் அதைக் கொண்டாடலாம்.


திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!
Home  Previous                                                                     
                                                            Next

web counter

No comments:

Post a Comment