மதுரகவி ஆழ்வார் - Alwar 6
Madhura Kavi Alwar. ( Chitra - Chitrai ) - Courtesy: Mr. Anbil Ramaswamy
Madhurakavi (Sweet poetic), the incarnation of Vainatheya (the divine bird) was born in the year Easwara, Chitrai month, Sukla Paksha, Chaturdasi day ( a Friday) in the constellation of Chitrai at Tirukkolur in tne Pandya kingdom. He was well versed in Tamil and Sanskrit, was of excellent conduct and absolutely devoted to Lord Narayana.
He returned from Ayodhya drawn by the bright light at Tirkkurugur and his encounter with Nammalwar. Madhurakavi was so much devoted to his Guru Nammalwar that he held him much higher than even Lord Narayana himself. In just 11 hymns, he composed a poem 'Kanninun Siruthambu' ( the rope with minute knots) that commenced with those words in praise of Nammalwar also in Antaadhi style.
After Nammalwar's departure from the world, he installed an Archa Vigraha (idol) of Nammalwar in Tirukkurugur and performed festivals in his honour. He used to proclaim the various honorifics of Nammalwar such as " Vedam Tamizh Seitha Maaran' - 'Maaran who rendered Vedas in Tamil", " Alavilaa Gnaanathu Aasiriyar' - the great preceptor of infinite knowledge' etc.
The Sangam poets objected to his praising Nammalwar who they said was not affiliated to the Sangam. Madhurakavi placed a birchbark leaf with the first line of Nammalwar's verse starting with the words " Kannan Kazhalinai" on a boat in which the poets were sailing. The boat capsized throwing out the haughty poets leaving the leaf alone intact.
Each one of the poets who came ashore struggling through the waters composed a dedicatory verse each acknowledging the greatness of Nammalwar. When they published the verse which they had composed independently, they were surprised to find that all of them had written down exactly the same text without any variation. The verse reads thus :
" Seman Kurugaiyo Seyyat Thirup Paarkadalo? /
Thaamam Paraankusamo? Naaranamo?- Thaaman /
Thulavo? Vagulamo? Thole Irando? Naangum /
Ulavo Peruma Unakku ? /
The president of the Sangam acknowledged the superiority of Nammalwar's works in a poem comparing other poets to flies in the presence of the divine vulcan, fire flies in the presence of the Sun, dogs before the terrific tiger, wolf before the Man- Lion Narasimha, to ugly clumsy goblins dancing before the beautiful nymph Urvasi - concluding that not all the works of all the other poets put together could ever equal even a single utterance of Nammalwar".
The Verse reads as follows :-
" Yee Aaduvatho Garudarku Edhirae? /
Iravikku Edhir Minmini Aaduvatho ? /
Naay Aaduvatho Uru Vempuli Mun?/
Nari Aaduvatho Nara Kesari Mun? /
Pey Aaduvatho Azhagu Oorvasi Mun? /
Perumaan Vagulabharanan Arul Koorndhu /
Ovaadhu Uraiyaa Biramaa Maraiyin /
Oru Sol Perumo Ulagir Kaviye? ?/
Of the two verses dedicated to Alwars, Swami Sri Vedanta Desikan has grouped together all other Alwars in his first verse and has dedicated the whole of his second verse exclusively to Madhurakavi Alwar in Guruparampara Saaram of his Rahasya Traya Saaram.The various aspects in Kanninun Siruthaambu have been listed out in this verse. Swami Sri Vedanta Desika remarks that while Lord Krishna was very much there for -
(i ) Inbattil - (i) conferring bliss on his devotees,
(ii ) Irainjutalil - (ii) to be their refuge
(iii)Isaiyum Petril - (iii) to be their final goal
(iv) Igazhaatha Palluravil - (iv) to stand in relation to them as mother,
father etc -
(v) Iragam Maarril - (v) to change their desires for the earthly pleasures into
(vi) Thun Patril - (vi) a desire for Himself
(vii ) Vinai Vilakkil - (vii) to remove all their sins
(viii) Thagavokkattil - (viii) to show them infinite compassion
(ix) Tattuvam Unarthil - (ix) to reveal the eternal truths and
(x)Thanmai Aakkil - (x) also to bring about in them a likeness of Himself-
Anbarkke Avatarikkum Maayan Nirka, /
Arumaraikal Tamizh Seithaan Thaale Kondu /
Tunpatra Madhurakavi Tonrak Kattum /
Tolvazhiye Nal Vazhigal Tunaivar katke"
-
while Krishna was ever ready to do all these, the blemishless Madhurakavi
chose to seek the feet of Satakopa only who rendered Veda in Tamil and
showed us the royal road to Supreme bliss":
'Kanninun Siruthambu' emphasizes that Acharya
Bhakti is more important than even Bhakti towards the Lord.
Nammalwar knew none other than Bhagavaan true to his ' Unnum Sorum, Parugum
Neerum, Thinnum Vetrilayum Ellaam Kannane'-
'the food he ate, the water he drank and the pleasures he enjoyed
( figuratively referred as chewing Paan) - all was Kannan for him. For
Madhurakavi, Nammalwar was all these ( Vide his statement ' Thevu
Matrariyen'). His practice of "Acharya Nishta' is non-pareil (except long
after we see when Thiruvarangattu Amudhanar wholeheartedly devoted himself
to Emperumaanaar).
A quetion arose as to how this work exclusively devoted to the Alwar could be
counted as part of the 4000 Divya Prabandham- the whole of which is claimed
to be dedicated to Bhagavaan. Manavaala Maamunigal has answered this question
thus :
Vaitha Thiru Manthirathin Maddhimam Padham Pol /
Seertha Madhura Kavi Sei Kalaiyai- Aartha Pugazh /
Aariyarkal Thangal Aruli Cheyal Naduve /
Servithaar Taathparyam Therindhu /
The greatness of its contents raises it to be the central gem that sheds
lustre on the other gems of the garland. That is why it was counted in the
midst of the 4000 Divya Prabandhams.
Pillai Lokacharya explains that ' Kanninun Siruthambu' reveals the ideas
underlying such psalms as ' Payilum Sudar Oli', 'Nedumaararku Adimai' etc of
Tiruvoimozhi.
It is said that all the other psalms of the 4000 Divya Prabandhams cannot be
a match to the 11 Paasurams of Madhurakavi- because it is this work that
holds the key to the treasure of the rest and it is this work that helped Sri
Nathamuni to unravel the rich treasures to the world. It is truly said " If
there were no ' Kanninun Siruthambu', there would be no 4000 Divya
Prabandhams at all" Thus, Madhurakavi was responsible for literally the
rebirth and publicity of the Prabandhams. It is, therefore, customarily
incumbent in ' Anusanthaanam' to traditionally first recite ' Kanninun
Siruthambu' before beginning the other Pasurams especially Nammalwar's
Tiruvoimozhi.
There are four kinds of poets viz Aasukavi- Instant poets, Chitrakavi-
Artistic poets, Vistaarakavi - Elaborate poets and Madhurakavi- Sweet poets.
Of these, this Alwar was a specialist in composing sweet songs. Hence, he is
called ' Madhurakavi'.
Since Madhurakavi helped through his work to retrieve the 4000 Divya
Prabandhams from oblivion for the benefit of humanity, its importance cannot
be brought out better than what Swami Sri Vedanta Desikan had done as
explained above.
Thanians on ' Kanninun Siruthambu' composed by Sr Nathamunigal
Aviditha Vishaya Antharahs /
Sadaarer Upanishadam Upagaana Matra Bogah /
Abhi Saguna Vasaath Tad Eka Seshee /
Madhura Kavir Hridaye Mamaavirastu /
" Here is one who knew none other than Nammalwar; the one who made it his
mission in life to sing the Dramidopanishad of Nammalwar; The one being
overwhelmed by Nammalwar held him as his very God; Let such Madhurakavi fill
my heart"
Veronrum Naan Ariyen Vedam Tamizh Seitha /
Maaran Sadakopan Vun Kurugur - Yeru Engal /
Vaazhvaam Enru Ethum Madhura Kaviyaar Emmai /
Aalwaar Avare Saran /
Madhurakavi said -" I do not know anything other than Nammalwar also known as
Maaran who rendered in Tamil the essence of the Vedas and who is the head of
Tirukkurugur. This Madhurakavi is OUR master.
He is THE guardian of the group
of Prapannaas.
Divya Desams consecrated by Madhurakavi Alwar are the 'Punya Kshetras' of (1)
Ayodhya (2) Mathura (3) Gaya (4) Kasi (5) Kanchi (6) Avanti and (7) Dwaraka.
மதுரகவி ஆழ்வார்
திருக்கோளூரில் சிறப்போடு வாழ்ந்த மக்களிடையே, முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபினரும் இருந்தனர். அந்த மரபில், முன்குடுமிச் சோழிய மரபு சிறக்கும் வண்ணம்,ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை பொருந்திய சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைனதேயாம்சராக (கருடனின் அம்சமாக)"குருகூர் சடகோபன்" என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார்அவதரித்தார்.
இவர் குலவழக்கப்படி வேதங்களைக்கற்றுத் தேர்ந்தார். இவர் தமிழ் மொழியிலும்,உயர்ந்த ஞானமும் வைராக்கியமும்
சிறந்த ஒழுக்கமும், திருமாலிடம் அன்பு, பக்தி முதலியனவும் வாய்க்கப் பெற்றிருந்தார். தமிழில் தேனினும் இனிய கவிதைகளைப் புனைந்து, திருமால் மீதான தம் பாடல்களைப் பாடிவந்தார். மதுரமான கவிதைகளைப் பாடிய காரணத்தால், இவருக்கு 'மதுரகவியார்' என்னும் பெயர் ஏற்பட்டது.
. திருமால் பக்தியும் பெற்றவராய் இருந்ததோடு அல்லாமல் செவிக்கினிய கவி பாடுவதிலும் திறன் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அந்தக் காரணம் பற்றி "மதுரகவி" என்றும் பெயர் பெற்றார்.
இவர் நம்மாழ்வாரை குருவாக அடைந்தது ஓர் சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது. ஒரு முறை வடநாட்டில் உள்ள புண்ணியம் நல்கும் திருப்பதிகளான அயோத்தி, மதுரா, கயை, காசி, காஞ்சி, அவந்தி,
துவாரகை ஆகிய ஏழு தலங்களையும் சேவிக்க யாத்திரை சென்றார்.
அங்கெல்லாம் சென்று, இறைவனைச் சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்தார். அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற ராமபிரானையும், சீதாப்பிராட்டியையும் சேவித்துத் திருவடி தொழுது அங்கு வசிக்கலானார்.
ஒரு சமயத்தில் அயோத்தியில் தங்கி இராம பிரானையும் பிராட்டியையும் மங்களாசாசனம் செய்து வந்த காலத்தில் ஒருநாள் நள்ளிரவு. இவர்தன் சொந்த ஊரான திருக்கோளூர் எம்பெருமானை எண்ணி, அந்தப் பதி இருக்கும் தென்திசை நோக்கித் தொழுதார். அப்போது அவர், தென்திசையில் வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்வியமான பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. அது இன்னதென்று அறியாமல், கிராம, நகரங்கள் ஏதும் வேகின்றனவோ?
அல்லது காட்டுத் தீ சூழ்ந்ததோ? எனத் திகைத்து நின்றார். இவ்வாறே அடுத்த சில தினங்களிலும் கண்டு ஆச்சர்யத்தால் மேனி சிலிர்த்தார்.
அந்தத் திவ்விய
ஒளி, முன்னினும் சிறப்புற அதிக ஒளி பொருந்தியதாய் விளங்கியதால், பெருவியப்புற்ற அவர், அந்த அற்புதமான ஜோதி தனக்கு ஏதோ செய்தி தெரிவிப்பதாக உணர்ந்தார்.
தொடர்ந்து அந்த அதிசயமான ஜோதி தெற்கு நோக்கிப் பயணம் செய்வதை உணர்ந்து, தெய்வத்தின் செயல் என எண்ணி அதனை பின் தொடர்ந்தார். நெடுந்தொலைவு அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நடந்து, திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருவில்லிபுத்தூர் ஆகிய திவ்ய தேசங்களைத் தரிசித்துவந்தார். அந்தத் தெய்வீகப் பயணத்தின் முடிவில்திருக்குருகூரை அடைந்தார். அதுவரையில் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இவ்வளவு தூரம் நடத்தி அழைத்து வந்த அந்த ஒளி, திருக்குருகூரில்
பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.
மதுரகவியார் அவ்வூரில்
உள்ளவர்களைப் பார்த்து, "இந்த ஊரில் என்ன விசேஷம்?" என்று வினவ, அவர்கள் "ஆதிநாதர் கோயிலில் புளிய மரம் விசேஷம். நீரே சென்று காணும்" என்று பதில் உரைக்க உடனே கோயிலுக்கு விரைந்து சென்று ஓர் அதிசயத்தைக் கண்டார். புளிய மரத்தின் பொந்தில் இருந்து கொண்டு, சாதாரணமாக உயிர்களுக்கு ஏற்படும் பசி, தாகம் எதுவும் இல்லாமல், சின் முத்திரையோடு எப்பொழுதும் இறையனுபவத்தில் திளைத்திருந்த நம்மாழ்வாரைக் கண்டார்.
கண்ட மாத்திரத்தில் பிறவிப் பயனை அடைந்தோம் என்று பேருவகை எய்தினார்.
மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சரியப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார்.
''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று கேட்டார் மதுரகவியார்.
''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்றார் ஆழ்வார்
அதாவது மனிதன் இருக்கும் வரை மூளை அவன் அறிவு உடல் ஆத்மாவோடதொடர்புடன்
செய்ல்படுகிறது
இறந்தபின்பு ஆத்மா அப்படியே இருக்கிறது, உடம்பு செத்துவிடுகிறது, ஆத்மா தொடர்ந்து பகவானின் தொடர்புக்கு இணங்கச் செயல்படுகிறது என்ற அர்த்தம் பிறந்தது.
(சிறியது) ஆத்மா, (செத்தது மனித உடம்பு),பகவானின் கட்டளைக்குக் காத்து இருக்கும் ஆத்மாவோ, நமோ நாராயணா என்று இருக்குமாம்,தனக்குத் தகுந்த விடை கிடைத்தவுடனே, மதுரகவி நம்மாழ்வாரின் கால்களில் விழுந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டினார், நம்மாழ்வாரின் பதிலில் இருந்த தெளிவும் ஆழமும் மதுரகவிக்கு நம்மாழ்வாரை தன்னோட குருவாக ஏற்றுக்கொள்ள ஏக்கம் கொள்ள செய்தது, ஆத்ம தத்துவம் குறித்து அதுகாறும் தனக்கு இருந்த அங்ஙானம் நீங்கப் பெற்றவராய், "அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும்" என்று நம்மாழ்வாரிடம் சரணம் அடைந்தார்.
நம்மாழ்வாரும் உயர்ந்த சீடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து, "நாம் பகவானை அனுபவித்தற்குப் போக்குவீடாகச் சொல்லும் பாசுரங்களை நீர் ஓலைப்படுத்தும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
மதுரகவியாரும், நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களை ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேதச் சாரமாக கருதப்படுகின்றன.
" மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
" என்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.
மதுரகவியாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் மிகுந்த பற்றுதல் உண்டாயிற்று.
நம்மாழ்வார் பெயரை உரைக்கும் மாத்திரத்திலே தன் நாவில் அமுதம் ஊறுகின்றது என்றும் ("தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
...), "இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் ஏத்த அருளினான்" என்றும் நம்மாழ்வாரின் புகழையே பாடிக் களித்து, மதுரகவியார்
தமது ஆசார்யரான நம்மாழ்வாரிடம் ஆழங்கால் பட்டு "மதுரகவி ஆழ்வார்" ஆனார்.
மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. நாளடைவில் நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப் பாமாலையின் முதற்பா ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' எனத் தொடங்குவதால் அதற்குக் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்பதே பெயராயிற்று.
இவ்வாறு இருக்குங்காலை, நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்துகொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.
மதுரகவியார், நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்; திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்; அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.
இதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ''உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?'' என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.
அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி, ''இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்'' என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.
நம்மாழ்வாரும் ஒரு கிழப்பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து, திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று, சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.
அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார்.
அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது. மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொண்டு மிதந்தது.
அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர். பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.
தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார். சில காலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.
மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!
மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டார் மதுரகவி. அவருக்கு மற்ற தெய்வங்கள் எதுவும் தேவைப்படவில்லை.
பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்றுதான். அவை 'குருகூர் சடகோபன்' என்னும் நம்மாழ்வாரின் புகழை மட்டுமே கொண்டிருக்கின்றன. இருப்பினும் மதுரகவியாரே நம்மாழ்வாரைக் கண்டுபிடித்து பாடல்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் என்கிற தகுதியில் அவர் வைணவ உலகால் கொண்டாடப்படுகிறார்.
இவர்
11 திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை இயற்றியுள்ளார். இப்பாசுரங்கள் அனைத்தும்
நம்மாழ்வார் மேல் மதுரகவி ஆழ்வார் கொண்ட பக்தியைத் தெரிவிக்கின்றன. ஆச்சாரியனைக்
கொண்டாடும் விதமாக நம்மாழ்வரை அர்ச்சா ரூபமாக எழுந்தருளச் செய்தார். அவர் அருளிய
திவ்யப் பிரபந்தங்களை நாம சங்கீர்த்தனமாக உலகோருக்குக் கற்றுக் கொடுத்தார்.
அன்பன்
தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்
அன்பன் தென்
குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய்
மதுர கவி சொன்ன சொல்
நம்புவார்
பதி வைகுந்தம் காண்மினே –11
இப்பாசுரத்தில் மதுரகவி ஆழ்வார் அன்பன் என்ற சொல்லை மூன்று முறை பயன்படுத்தியிருக்கிறார். மூன்று இடங்களிலும் மூன்று வெவ்வேறு பொருள்களை இந்தச் சொல் தருகிறது. முதல் அன்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கருணை. இரண்டாம் அன்பன் என்பது ஆச்சார்யன் பெயர் (அதாவது தென் குருகூர் நம்பியான நம்மாழ்வார்). மூன்றாம் அன்பனுக்குப் பொருள் அடியவன், அதாவது தன்னையே சொல்லிக்கொள்கிறார்.
நிதர்சனமான
ஆச்சாரிய பக்திக்கு வேறு எங்கும் தேடிக்கொண்டு போக வேண்டாம் மதுரகவி ஆழ்வார்
பாசுரங்களைப் படித்தாலே போதுமானது.
வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார். தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும்எல்லாம் கண்ணனே', என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வாருக்குக்
கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர்.
ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் போன்ற பெரியவர்கள், பகவத் பக்திகூட
வந்துவிடும், பாகவத பக்தி வருதல் அபூர்வம் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள்
இவருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து
வந்தார்கள். எனினும் நாளடைவில் அவை வழக்கில் இருந்து காணாமல் போயின. பின்னாளில் ஆசார்யர்
நாதமுனிகள், குருகூரை அடைந்து இவரது மரபில் வந்த சீடர்களிடம் "கண்ணிநுண் சிறுதாம்பு"
பிரபந்தத்தை (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு, அதனைப் பன்னிரண்டு ஆயிரம்
முறை ஓதி நம்மாழ்வார் அருளினைப் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மீட்டார் என்பது
வைணவ சம்பிரதாயம்.
மதுரகவி, ஆழ்வார்
தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் மதுரகவி ஆழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற
ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்தக்கோயிலிலும்
பெருமானைக் கூடப் பாடாத மதுரகவி ஆழ்வார் தன் குருவான நம்மாழ்வாரைப் போற்றி கண்ணிநுன் சிறுத்தாம்பு
என்ற திவ்ய பிரபந்தத்தை பாடினார்.
பிறந்த காலம்
|
9ம் நூற்றாண்டு
|
பிறந்த இடம்
திருகொல்லூர்
பிறந்த மாதம்
சித்திரை
திருநட்சத்திரம்
அவிட்டம்
வேறு பெயர்கள்
இங்கவியார் , அழ்வாருக்கு அடியான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு - இரண்டாவது பாடல்:
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே.
தென்தமிழ் நாட்டில் ஸ்ரீவைகுண்டத்தின் அருகே விளங்கும் திருத்தலம் ஆழ்வார் திருநகரி ஆகும். ஆழ்வார் பாடல் பெற்றதால் இது திவ்வியதேசமும் ஆகும். இவ்வூருக்குள் அவதரித்து அசையாப் பிண்டமாய்இருந்து பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் நினைவிலேயே நிறைந்திருந்தவரே நம்மாழ்வார். பிறந்தவுடனே இப்பிறவி பற்றிய தொடர்பையும் சிந்தனையையும் கொடுத்துப் பிறப்பு- இறப்புச்சுழலில் நம்மைத் தள்ளுவது சடம் என்னும் வாயு. அந்த வாயுவைக் கோபித்து விலக்கியவர் நம்மாழ்வார். அதனால் சடகோபர் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த நம்மாழ்வாருக்குச்
சீடராகி, இவரது புகழை மட்டுமே பாடித் தாமும் ஓர் ஆழ்வாராக ஏற்றம் பெற்றவரே மதுரகவியாழ்வார் ஆவார். மதுரகவியாழ்வார் காலத்தால் நம்மாழ்வாருக்கு மூத்தவர். ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள திருக்கோளூரில் அவதரித்தவர்.
வைணவர்களின்
விக்கினம் போக்கும் தெய்வம் விஷ்வக்சேனர் எனப்படுகிறார். பெருமாள் கோயில் பிரம்மோற்சவங்களின் போது வெவ்வேறு வாகனங்களில் எம்பெருமான் வீதிவலம் வருவதற்கு முன்பாக விஷ்வக்சேனர் திருவுருவம்
வீதியுலா எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
விஷ்வக்சேனர்,
சேனை முதலியார் என்று அழகுத்தமிழில் அழைக்கப்படுகிறார். எம்பெருமான் சேனைகளின் தலைவராகிய விஷ்வக்சேனரே பூவுலகில் நம்மாழ்வாராக அவதரித்தார். நம்மாழ்வார் ஓர் அசைவுமின்றி நீண்டகாலம்
இறைச்சிந்தனையிலேயே லயித்திருந்திட இடமளித்த புளியமரம் ஆதிசேசனின் அவதாரமாகும்.
ஆழ்வார் திருநகரியில்
இன்று காட்சிதரும் இம்மரம் திருப்புளி ஆழ்வார் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்பெருமானின்
கணங்களில் ஒருவராக விளங்கிய குமுதர் என்பவரே மதுரகவியாழ்வாராக அவதரித்தார்.
நம்மாழ்வாரின்
அருகில் சென்று மதுரகவி, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்
தின்று எங்கே கிடக்கும்? என்று வினவ, யோக நிலையிலிருந்த நம்மாழ்வார் அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று பதில் கூறிவிட்டு மீண்டும் யோக நிலைக்குச் சென்று விட்டாராம்.
இக்கேள்வி பதில்
சாரம் இது:
இவ்வுலகில் பிறக்கும் ஜீவாத்மாக்கள் அனுபவிப்பது என்ன? என்பது மதுரகவியாழ்வாரின் கேள்வி.
ஜீவாத்மாக்கள்
இப்பிரபஞ்சத்திலுள்ள பொருள்களின் போகத்திலேயே திளைத்து இந்தச் சம்சார வாழ்வில் உழன்றுகொண்டிருக்கும் என்பதே நம்மாழ்வாரின் பதில்.
மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிக் கூறிய நம்மாழ்வாரையே அதுமுதல் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவியாழ்வார்.
நமது ஆன்மிக மரபில் சாதி வித்தியாசங்களுக்குச் சற்றும் இடம் இல்லை என்பதற்கு நம்மாழ்வார்-
மதுரகவியாழ்வார் ஆகிய இருவருமே எடுத்துக் காட்டுகள் ஆவார்கள்.
குருவாகிய நம்மாழ்வார் வேளாள இனத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரையே தெய்வமாகப் போற்றிய மதுரகவியாழ்வார் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்பதும் நம் மனத்தில் குறித்துக் கொள்ள வேண்டியதாகும்.
நம்மாழ்வாரைத் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்ட மதுரகவியாழ்வார், தம் குருநாதர் யோக நிலையிலிருந்து
மீண்ட நேரங்களில் எல்லாம் உதிர்க்கும் திருவாய்மொழிப் பாசுரங்களைப் பட்டோலையிட்டுப் பாதுகாத்து வந்தார்.
மேலும், தம் குருவாகிய நம்மாழ்வாரைப் போற்றி, கண்ணி நுண் சிறுத்தாம்பினால்… என்று தொடங்கும் பதிகத்தைப் பாடித் தமது குருபக்தியை வெளிப்படுத்தினார். அப்பதிகத்தின் இரண்டாவது பாசுரத்தில்-
தேவும் மற்று
அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை
பாடித் திரிவனே! என்று கூறியிருப்பதன் மூலம், தமக்கு நம்மாழ்வாரைத் தவிர வேறொரு தெய்வம்கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
இவ்வாறு தெய்வபக்தியின்
எல்லை நிலமே குருபக்தி என்று வைணவம் கூறுவதற்கு எடுத்துக்காட்டாக இவர் விளங்கினார். தமது குருவைப் போற்றி ஒரேயொரு பதிகம் பாடிய மதுரகவியாழ்வாரும் ஆழ்வார்கள் வரிசையில் போற்றப்படுவது நமது இந்திய ஆன்மிக மரபின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.
மதுரகவியாழ்வார் தமது பதிகத்தின் கடைசிப்பாட்டில் (பலசுருதிப் பாசுரம்) நம்மாழ்வார் பெருமையைப் பேசும் தமது பாடல்களை நம்புகின்ற நல்லோர் வாழும் இடமே வைகுந்தம் ஆகும் என்றும் கூறுகிறார்.
… … தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே!
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே!
இத்தனைப் பெரும்
சிறப்புகளுக்கு இருப்பிடமான மதுரகவியாழ்வாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பினால் பதிகம் நாலாயிரம் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களையும் நமக்குக் கொடுத்தருளிய வரலாறு இன்னும் அற்புதமானதாகும்.
ஆழ்வார்கள் காலத்திற்குப்
பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் வைணவ ஆச்சாரியாரான நாதமுனிகள் (ஸ்ரீ ராமானுஜருக்கு
முற்பட்டவர்)
ஒரு சமயம் கும்பகோணம் நகரில் அமைந்த ஸ்ரீ ஆராவமுதப் பெருமாள் திருக்கோயிலில்
தரிசனம் செய்தபோது பக்தர்கள் சிலர் நம்மாழ்வார் திருவாய்மொழிப்பதிகம் ஒன்றை ஓதியதைக்
கேட்டார். அப்பதிகத்தின் இறுதியில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று அமைந்ததைக் கேட்டு,
மீதியுள்ள 990 பாசுரங்களை அறிவீரா என்று வினவ, அந்த பக்தர்களோ இந்த ஒரு பதிகத்தை மட்டுமே
செவிவழியாக அறிந்து ஓதி வருகிறோம் என்று பதில் கொடுத்தனர்.
நம்மாழ்வாரின்
அவதாரத் தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கே சென்று அறிந்து வர எண்ணி, அங்கு சென்றார் நாதமுனிகள்.
அந்தத்தலத்து
வைணவர்களோ, நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணி நுண் சிறுத்தாம்புப்
பதிகத்தின் பெருமையைக் கூற, நாதமுனிகளும் அந்தப் பதிகத்தை இடைவிடாது பன்னீராயிரம் முறை
ஓதினார்.
இதனால் மகிழ்ந்து
காட்சியளித்த நம்மாழ்வார், தமது திருவாய்மொழிப்பாசுரங்கள் ஆயிரம் மட்டுமின்றி, மற்ற
ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குப் போதிக்க, அவர் மூலமே திவ்வியப் பிரபந்தம் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.
இவ்வாறு மதுரகவியாழ்வாரின்
குருபக்தி, அவரையும் ஆழ்வார் ஆக்கி, நம் அனைவரையும் ஆழ்வார் பாசுரங்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த திறம் பெருமையிலும் பெருமை மிக்கதாகும்.
ஆதாரம்
|
மதுரகவிகளின்
காலம்
முனைவர் மா.
இராசமாணிக்கனார்
9ம் நூற்றாண்டின் பிற்பகுதி
சாமி சிதம்பரனார்
9ம் நூற்றாண்டு
பூர்ணலிங்கம் பிள்ளை
9ம் நூற்றாண்டு
கலைக்களஞ்சியம்
7ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை
இடைக்காலம்
No comments:
Post a Comment