January 28, 2015

Thiruppaan Alwar

Thiruppaan Alwar  

Courtesy: Divyadesam

Cauvery river which flows towards the Chozha Empire, makes the land rich in all of its production and wealth. Lots of Andhanars (Who always thinks of Sriman Narayanan) and good knowledged poets are found here. Lots of poets and Sri Vishnu bhaktas has raised the popularity of the Chozha Empire.
Uraiyoor is the capital of Chozha Empire at that time and lots of big buildings and houses full of lights are found which is one of the beautiful scene that has to be seen and enjoyed.
Uraiyoor is found near Sri Rangam. Since, Uraiyoor is rich in all of its wealthness, Sri Emperumaan is found in this sthalam as found in Sri Rangam as "Aranga Naadhan".
Dharma Varman, who ruled the Chozha Empire, wanted her daughter, Neela Devi to get married to Sri Ranganathan. But, he doesnt know that Neela Devi was the hamsam of Naachiyaar (Uraiyoor Naachiyaar and got married to Sri Ranganathar.
Sri Rangam, which is called the Bhoologa Vaikundam is surrounded by divine breeze and musical people. Nearer to Sri Rangam, is found a small village named "Alagapuri", where lots of musical people are found. One small place named "Baanar Cheri" is found, where Baanar (or) musicians, who are capable of arresting the minds of all people and even the Devas and Rishis.
But as the time went on, these baanars are separated and kept as a separate categorised peoples and who were treated as untouchables. But, in that categorised people, as the hamsam of the small mole, called as "Srivatsam" which is found in the chest of Sriman Narayanan, a small child born in this world in Purthurmadhi year, Kaarthigai month, Wednesday in Rohini Natshatram and it is "Thiruppaan Alwar".
His Characters and all of his activities are same as that of a pure Vaishnavas have. Having a veena in his hand, he always sang on Sri Vishnu and his fame and spread his capabilities and the love he offers to his bhaktas, in his songs. Because of this, he is also named as "Paan perumal".
The untouchable people are ordered not to keep their feets on Cauvery river. Because of this and to obey the order, Paan Alwar did not touch the cauvery river, but stood along the banks of the river facing Thiruvaragam temple and sung various songs, praising the Lord.
But, the Emperumaan wanted to explain the greatness and his Bhakthi of Thiruppaan Alwar towards Him and as an action to it, he started to play a small drama.
The cauvery water is used for the Thirumanjanam for Sri Ranganadhar. Loga Saaranga Maha Muneetharar, who is the strict follower and a devoted bhakta of Sri Ranganathar, daily bring the cauvery water of Thriumanjanam. One day, when he was sleeping, he had a dream in which the Aranganadar explained about Paan Perumal and he should be taken on the shoulders of Loga Saaranga muni, without having the mind that he is an untouchable person.
Loga Saarangamuni, who being the strong follower of Sri Vishnu, got up early next morning and went to the other side of Cauvery river and met Thiruppaan Alwar. On seeing him, he explained about the dream he had last night and told him that he should climb on his shoulders, so that he can be taken to the other side of the Cauvery river, where Sri Ranganathar is giving his seva.
On hearing this, thiruppaan Alwar started crying, since he is not the right person, should climb on his shoulder, since Logasaranga Muni is a well known Vaishnavan.
But, Saranga Muni explained without having any jealous that on behalf of him only, Sriman Narayanan came in his dream and praised him that he is the person who will be honoured if he climbs on his shoulders.
Thirupaan Alwar could not convince him and finally he sat on on his shoulders. Saranga Muni started walking towards him Sri Arangathan through the Cauvery river. All the people of the village were surprised to see this scene and stood in silence without knowing what to do.
After reaching the temple,Saranga Muni made Thiruppaan Alwar to get down from his shoulders and raising his hands, he went to the corner of the Sannadhi and stood in silence, seeing the Perumal.
After getting down, Thiruppan Alwar could not believehis eyes because he was seeing Perumal who thinks that he could not see him in his life. His body was cooled and the eyes started to drop the tears. Both of his hands were raised above his head and he started to sing slokas on Sri Arangathan.
First he saw was the Thiruvadi(lotus feet)of Aranganathan and started to sing the pasuram:-
"Neel madhil Arangathamman thrukkamalpadham vandhu en Kanninullana okkinrathe."
After seeing the beaauty of the thiruvadi,he started to see step by step of the whole body of Emperumaan,he sung ten paasurams which explain the beauty of Sri Ranganathar from his thiruvadi (foot) to thirumudi(head).
He explains in his ten paasuram about the clean safron cloth which is worn on the body of Ranganathar, his jewels the thiru vayiru(stomach) from where Lord Brahma originated, the broad chest, the red lips and finally on explaining the beauty of the two broad eyes, he fell down. After some time, Thiruppaan Alwar was not found and he went in to the body of Thiruvarangathan. Like Andal, whose thought was always on Aranganathan, who was captured by the love of the Perumal, Thiruppaan Alwar was also captured by the love and he went towards the Aranganathan.
Thiruppaan Alwar has sung only ten paasurams,but in that itself,he has explained about how a human should be. He explains in that ten paasurams tha Perumal is the leader and our aim should be to reach Him and to get the complete Saranagathi(total surrender) in HIs thiruvadi, and that is the final place,where all of us has to reach.
Inspite of born in an untouchable category, but as a result of his devotion towards Sriman Narayanan,he was listed among the great twelve Alwars.
Likewise,even though if we are not like Thiruppaan Alwar, we can atleast think of him and do our daily duties of helping others. so that we can attain the Perumal's thiruvadi, where all the Alwars reached. 

திருப்பாணாழ்வார்

 
Photobucket - Video and Image Hosting
 
காலம் - 7 ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)
ஆண்டு - பிரசோத்பதி (தவறென்றால் திருத்தவும்)மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - ரோகிணி
ஊர் - உறையூர்.
அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் ராயணனின் மார்பில் இருக்கும் ச்சம்)
கங்கையிற் புனிதமான காவிரி பாயப்பெரும் ஸ்ரீவைஷ்ணவ தலைநகரான திருவரங்கம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப் பெரும் திவ்யதேசத்திற்கு அருகிலுள்ள திருவுறையூர் என்னும் திவ்யதேசத்தில்,பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய்,  துர்மதி வருடம், கார்த்திகை மாதம், ரோகினி நக்ஷத்திரத்தன்று திருமாலின் ஸ்ரிவத்சத்தின்  அம்சமாய் (நாராயணனின் திருமார்பில் உள்ள மச்சக்குறி) ஒரு அந்தணனின் கழனியிலே நெற்பயிர்க்கடியில் திருவவதாரம் செய்தருளினார்.  இவரது பெற்றோர், பணி குறித்து தகவல் எதுவும் இவரது வாழ்வுக் குறிப்பில் இல்லை. இவ்வாழ்வாருக்கு முனிவாகனர், யோகிவாகனர், கவீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு.
அந்தத் தெய்வக் குழந்தையை பாணர் குத்தில் பிறந்த ஒருவர் எடுத்து வந்து, தானும் மனையாளுமாக பரிசுத்தமான ஆகாரங்களை மட்டுமே கொடுத்து அன்போடு பேணி வளர்த்து வந்தார்கள்.  அவர் புகுந்த குலத்தில் பிரசத்தி பெற்ற யாழ் இசையில் சிறு வயதிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்றதனால், 'பாணர்' என்றே அழைக்கப்பட்டார். அவர் யாழைத் தொட்டபோதெல்லாம், அதிலிருந்து கேட்டவர் மனதை உருக்கும் இசை வெளிப்பட்டது !
திருமாலின் இயற்கையான இன்னருளினால் ஆழ்வார் திருவவதரித்த படியால், உலகப்பற்று சிறிதும் இல்லாதவராய், ஞான பக்தி வைராக்யங்கள் நிறைந்தவராய், நாரத பகவான் போலே சங்கீத சாமர்த்தியம் பெற்றவராய் வாழ்ந்து வந்தார். இப்படி வாழ்ந்து வரும் சமயத்தில் ஸ்ரீ விஸ்வக்சேனர் இரகசியமாக எழுந்தருளி பஞ்சசம்ச்காரம் சாதித்தார்.
மகா பாகவதரான ஆழ்வாரும் பண் இசைத்துக்கொண்டே திருவரங்கம் பெரிய பெருமாளுக்கு மங்களாசாசனம் பண்ணுவதற்காக திருவரங்கம் வந்தடைந்தார். பாணர் குலத்தில் அவதரித்தவர் என்பதாலும், கோயிலுக்குள் சென்று எம்பெருமானை சேவிக்க முடியாத சூழ்நிலை காரணமாகவும், ஆழ்வார் காவிரி ஆற்றங்கரையில் யாழும் கையுமாக நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார். {பாணர் என்னும் இனம் உண்மையில் தீண்டத்தகாத இனம் அல்ல. அவர்கள் இறைவன் பேரிலும், மன்னனைப் பற்றியும் பாண் என்னும் இசைக்கருவியினால் இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அத்தகைய இனத்தில் வளர்ந்த நம் திருப்பாணாழ்வாருக்கு பாடல்கள் பாடப் பயிற்சியும் வேண்டுமோ??}
ஸ்ரீரங்கத்துப் பெருமானின் மீது அளவிலா பக்தியின் வெளிப்பாடாக, இரவும் பகலும், காவிரிக் கரையில் நின்று, யாழை மீட்டி, கோபுரத்தை பார்த்தபடி (அவர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர் என்று கருதி உயர்சாதியினர் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காத காரணத்தால்) இனிமையாகப் பாடி வந்தார். காவிரிக் கரையின் மணற்குன்றுகளில் உறங்குவார். அவருக்கு ஸ்ரீரங்கநாதரைத் தவிர உறவினர் யாரும் கிடையாது !!! உயர் குலத்தவர் (என்று தங்களை எண்ணிக் கொண்டவர்!) அவர் ஸ்ரீரங்கத்து தெருக்களில் கூட, தான் வருவதை முன் கூட்டியே அறிவித்த பின் தான், உலவலாம் என்று கட்டளையிட்டிருந்தனர் !
திருப்பாணாழ்வார் முக்தியடைந்தது குறித்து சுவையான நிகழ்வு ஒன்று பண்டைய குறிப்புகளில் சொல்லப்படுள்ளது ! 
ஒரு சமயம், அவர் காவிரியின் தென்கரையில் நின்றபடி, அரங்கநாதரே பேருவகை கொள்ளும் வண்ணம், அற்புதமாக பல நாட்கள் பாடிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த, ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானுக்கு நித்யம் தீர்த்த கைங்கர்யம்  செய்து வந்த லோகசாரங்கமுனி என்ற அந்தணர்,  எம்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வருவதற்காக பொன்னித் துறையை அடைகையில், வழியிலே பாணரைக் காண்கிறார்; கண்டவுடன் பாணரே எட்டச் செல் என்று சொல்ல, அரங்கனின் பக்தியில் திளைத்து, மோன நிலையில் நின்ற  பாணரும் அதைப் பொருட்படுத்தவில்லை. 
எம்பெருமான் அனுபவத்தில் மூழ்கி மெய் மறந்து நகராது அங்கேயே நிற்க; அருகில் இருக்கும் மற்ற அந்தணர்களும் எட்டச் செல் என்று சொல்லியும் செவி சாய்க்காமல் அங்கயே நின்றார். அது கண்டு இவன் கான யோகி போலும் என்று நினைத்து சிலர் நகர்ந்து செல்ல, மூர்க்க குணம் கொண்ட சிலர் எப்படியும் பானரை அங்கிருந்து துரத்தியே ஆகவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்டு அவர் மீது கற்களை எறிந்தனர். குருதி வழிய  வழிய அங்கேயே எம்பெருமானையே நினைத்துக் கொண்டு நின்றாராம் பாணர்.
சினமுற்ற லோகசாரங்கர், பாணர் மீது கல்லெறிய, அது ஆழ்வாரின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. கண் விழித்த ஆழ்வார், தன் செய்கைக்கு லோகசாரங்கரே வெட்கும் அளவில், மன்னிப்பு கேட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.  பிறகு, திருமஞ்சன நீரை எடுத்துக் கொண்டு, ஆலயத்திற்குள் நுழைந்த இலோக சாரங்க முனி, அங்கே லோகசாரங்கரின் இச்செய்கையால், திருவுள்ளம் கலங்கிய, கோயிலில் எழிந்தருளிய ஸ்ரீரங்கப் பெருமானின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்குக் குருதி பெருக்குற்றதைக் கண்டு, லோகசாரங்கர் துணுக்குற்றார்.   நெஞ்சம் பதறினார், மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார்.  இரவில் தூக்கமின்றித் தவித்தார். 
இந்நிகழ்வுகளைக் கண்டு அர்ச்சகர் கோவில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்களும் அரசனிடம் முறையிட்டார்களாம். அரசன் மந்திரிகளோடு ஆலோசனை நடத்திய பின்னரும் காரணம் கண்டு பிடிக்க முடியாமல் அந்தப் பாரத்தை எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்க, கருணையே வடிவெடுத்தவளான பிராட்டி எம்பெருமானைப் பார்த்து நித்யம் நம்மை அநவரத பாவனை பண்ணி வருகிற நம் பாணனைப் புறம்பே நிற்கப் பார்க்கலாமோ என்று விண்ணப்பிக்க எம்பெருமானும் பாணரைத் தம்மிடம் அழைத்துக் கொள்ள திருவுள்ளம் கொண்டானாம்.
பிராட்டியின் இஷ்டத்தைப் பூர்த்தி பண்ணவும், பகவத் ப்ராப்திக்கு சாதி முக்கியமில்லை பக்தியே முக்கியம் என்பதை உலகோர்க்கு எடுத்துரைக்க, ஸ்ரீ லோகசாரங்கரின் கனவில் எம்பெருமான் தோன்றி அரங்கன், ஆழ்வார் தன்னை தரிசிக்க வந்தாலொழிய, தனது கோயில் கதவுகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆழ்வாரை எப்பாடு பட்டாவது தன் முன் கூட்டி வருவது தான் லோகசாரங்கர் செய்த பெரும்பாவத்துக்கு பிராயசித்தம் என்றும் கூறி மறைந்தார். 
முற்றும் மனம் திருந்திய லோகசாரங்கமுனி மறுநாள் காலை இந்தச் செய்தியை எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டு  காவிரிக்கரைக்கு ஓடி,, அங்கு நின்றிருந்த பாணரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து எம்பெருமான் திருவுள்ளத்தை தெரிவித்து கோயிலுக்கு வருமாறு பாணரிடம் மன்றாடிக் கேட்டார். பாணரும் நீச்சனான அடியேன் திருவரங்கப் பெருநகரை மிதிக்கலாமோ என்று பாணரோ கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க மறுக்க,   அடியேன் தோள் மீது எழுந்தருளவேணும் என்று மீண்டும் பிரார்த்தித்து நிற்க, பாணர் அதைப் பாகவத அபசாரமாகக் கருதி மறுத்து விட்டாராம்.  
பின்னர் இது எம்பெருமான் ஆணை என்று லோகசாரங்கர் மூலமாக தெரிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தோள் மீது ஏறி அமர, ஸ்ரீ லோகசாரங்கர் அவரை அரங்கநாதன் திருமுன்பே இறக்கிவிட்டாராம். (ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அரங்கன் நடத்திக் காட்டிய அரிஜன ஆலய பிரவேசம். சில வருடங்களுக்கு முன்னால் இதைச் செய்து காட்டியவர்கள் மிகப் பெரிய புரட்சியாளராக விளம்பரப்படுத்தப் பட்டார்கள்.)
மிகுந்த நிர்பந்தத்தின் முடிவில், லோகசாரங்கமுனி ஆழ்வாரை தன் தோளில் சுமந்து கோயிலுக்குக் கூட்டி வந்தார். இதனால் தான், இவர் 'முனிவாகனர்' என்றும் அறியப்படுகிறார்.
திருமாமணி மண்டபத்தில் வீற்றிருந்த அரங்கநாதப் பெருமான் முன் வந்திறங்கிய திருப்பாணாழ்வார், அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது!!!  
அரங்கன் சந்நதியில் இந்தப் பத்து பாசுரங்களில்  அரங்கனின் திருவடி முதல் திருமுடி வரைத் தன் தமிழ்ப்பாக்களால் அலங்கரித்தார் பாணர். அன்று முதல் இவர் 'திருப்பாண் ஆழ்வார்' என்று புகழ் பெற்றார். காவியத்தில் அமங்கலச் சொல் இல்லை என்னும் இலக்கணம் இருந்தாலும் அதை மாற்றியவன் கம்பன் என்பார்கள் சிலர். ராமனின் அழகைச் சொல்லும்போது கம்பன் 'ஐயோ' இவன் அழகென்ன அழகோ! என்று வருணிப்பதாகச் சொல்வார்கள்! அதற்கும் முன்னோடியாகத் திருப்பாணாழ்வார் திருமாலை வருணிக்கும் போது தன் பத்துப் பாடல்களில் இரண்டு முறை 'ஐயோ'! எனக் கூறியுள்ளார்.

இறைவனைக் கண்ட பிறகு எதுவும் காண்பதற்குத் தகுதியில்லை! என்று அரங்கனுடனே கலந்து விட்டதாக வரலாறு சொல்கிறது. அவரின் கடைசி சொற்களில் அதை அழகாக முத்தாய் கோர்க்கிறார்.

''அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே''
திருப்பாணாழ்வார் கடைசிப்பாகத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று திருவரங்கப் பெருமானுடன் ஒன்றறக் கலந்தார் !!!
பெருமாளின் 108 திருப்பதிகளில் திருப்பாணாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 3 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்,  (2)
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

இவர் இயற்றிய பத்துப் பாடல்களுக்கு இவர் சொல்லிய முதல் சொல்லே இவர் பாடலின் தலைப்பாக உள்ளது. அதுதான் 'அமலன் ஆதிபிரான்'.

அமலனாதிபிரான் உங்கள் வாசிப்புக்கு:

927
அமலன் ஆதிபிரான்  அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், திருக்-
கமல பாதம் வந்து
 என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே.  (1)

928
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற,
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத் தம்மான்,
அரைச்சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே. (2)

929
மந்தி பாய் வட வேங்கட மாமலை, வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்,
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே.  (3)

930
சதுரமா மதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி, ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயில் ஆடரங்கத்து அம்மான்,திருவயிற்று-
உதர பந்தம் 
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* 
அடியேனை ஆட்கொண்டதே. (5)

932
துண்ட வெண்பிறையான் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்டர் அண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை, முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர் 
அடியேனை உய்யக்கொண்டதே. (6)

933
கையினார் சுரி சங்கனல் ஆழியர், நீள்வரை போல்-
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்,
செய்ய வாய் ஐயோ. என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

934
பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட, அமரர்க்கு-
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்து,
கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப்-
பெரிய வாய கண்கள்
 என்னைப் பேதைமை செய்தனவே. (8)

935
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்
நீல மேனி ஐயோ,
 நிறை கொண்டது என் நெஞ்சினையே.  (9)

936 
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்-
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே
. (10)

எம்பெருமானைத் திருமுடி முதல் திருவடி வரை சேவித்து, அவன் அழகில் ஈடுபட்டு அவ்வழகின் பெருமையை உலகோர்க்கு புரியும் வகையில் திருப்பாணாழ்வார்  பாடின பிரபாந்தமே அமலனாதிபிரான் என்னும் திவ்யப்ரபந்தம் ஆகும். அதை நாமும் அனுபவிப்போம்.

 
துக்கடா
 

தீண்டத்தகாதவர் என்று ஒதிக்கவைத்த ஒருவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்தச் சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்லாமல் அருள் புரிவான் அரங்கன்.

தன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்குச் சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது...

திருப்பாணாழ்வார், பாண் என்னும் இசைக்கருவியில் வல்லவராயும், எப்பொழுதும் பெருமாளைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பதாலும், அவர் பாண் பெருமாள் எனவும்,
இலோக சாரங்க முனியின் தோளில் ஏற்றிச் சென்றதால், முனிவாகனன் எனவும் அழைக்கப்படுகிறார்.

இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும்.

அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.

  'வேதம் பயின்றவனே என்றாலும், என் பக்தனை நிந்தித்தான் என்றால், உடனே அவன் சண்டாளத் தன்மை அடைகிறான்' என்கிறார் பகவான்.
இதனையே தொண்டரடிப்பொடிகளும்,
அமரவோர் அங்கம் ஆறும் வேதமோர் நான்கும் ஓதித்

தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவிலாங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே


'ஒப்பற்ற ஆறு வேத அங்கங்களையும், நான்கு வேதங்களையும், நன்கு கற்று, ஓதி உயர்ந்த பிராமண குலத்தவரே ஆனாலும், அவர்கள் உன் அடியார்களைப் பழிப்பாரேயாகில், அந்த நொடிப் பொழுதிலேயே அவர்கள் புலையர்கள் ஆகிறார்கள்' என்கிறார்.



'தாழ்ந்த குலத்தவர், காலப்போக்கில் தம்முடைய உயர்ந்த பக்தியினாலே பாகவதன் ஆவதற்கு யோக்கியதை உண்டு. ஆனால், பாகவதர்களிடத்தில் செய்த தவறுகளினால், கேடான நிலை அடைந்த இந்தப் பாவிக்கு அந்தத் தகுதியும் இல்லை...' - இது ஸ்ரீவசனபூஷணத்தில் காணப்படும் வசனம்.

இதையெல்லாம் நன்கு கற்று அறிந்தவராகத்தான் இருந்திருப்பார் லோகசாரங்கர்; நடந்ததை எண்ணி கண்ணீர் உகுத்திருப்பார்; கதறி அழுதிருப்பார். அதனால்தான், தன் பக்தனான லோகசாரங்கரைத் தேற்றுவதற்காக, அவரது கனவில் வந்தான் அரங்கன். அவர் செய்த பாவத்துக்கு, மறைமுகமாக ஒரு பரிகாரமும் சொன்னான்.

பாரத்வாஜ ஸ்மிருதி என்று ஒரு ஸ்மிருதி. அதில் வரும் ஒரு கருத்து இது. 'விலங்கு, பறவை, மனிதன் என எப்படி இருந்தாலும் சரி... இவை பரம பக்தனான ஒரு வைணவனைச் சார்ந்திருப்பவை என்றால், அந்த வைணவனின் தொடர்பு இருப்பதாலேயே அவை பரமபதத்தை அடைகின்றன.'

பரம கிருஷ்ண பக்தரான ததிபாண்டன், கிருஷ்ணரிடம் மோட்சத்தை வேண்டினார். கிருஷ்ணரோ, அவருக்கு மட்டுமல்லாது, அவரிடம் உள்ள உயிரற்ற பொருட்களான சட்டி பானை களுக்குகூட மோட்சத்தைக் கொடுத்தார்.

வைணவ ஆச்சார்யரான பிள்ளைலோகாச் சார்யருக்கு ஜ்யோதிஷ்குடி என்ற ஊரில் உயிர் பிரியும் நேரம். அரங்கனின் நினைவாகவே இருந்த அவருக்கு அரங்கன் காட்சி கொடுத்து, 'நீர் காணுகின்ற, தொடுகின்ற அனைத்துக்கும் எம்பக்கம் இடம் உண்டு' என்றான். அதாவது, 'உம்மைச் சேர்ந்த அனைத்துக்கும் மோட்சம் உண்டு' என்றான். உடனே பிள்ளைலோகாச்சார்யர் அருகில் இருந்த தாவரங்கள், கல், மண் என அனைத்தையும் தன்னோடு அணைத்துக் கொண் டார். எதிரேயுள்ள மலையை முடிந்த மட்டும் பார்த்தார் - அவை எல்லாம் மோட்சத்தை அடையட்டுமே என்ற உயர்ந்த குணத்தால்!

இதேபோல், பரம பாகவத உத்தம வைணவரான திருப்பாணரின் தொடர்பினை லோகசாரங்கர் பெற வேண்டும் என்பதற்காக, திருப்பாணரை அவரது தோளின் மீது ஏற்றிக்கொண்டு கோயிலுக்குள் வர ஆணையிட்டான் அரங்கன்.

இன்னொரு காரணமும் உண்டு!
திருவரங்க மண்ணை மிதிக்கக் கூடாது என்று தனக்குள்ளே உறுதியுடன் இருந்தார் திருப்பாணாழ்வார். அவரது சங்கல்பத்துக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்பதற்காகவே அரங்கன் இப்படி உத்தரவிட்டான். 

லோகசாரங்கர் மீது அரங்கன் எவ்வளவு கருணை வைத்திருந்தால் இத்தகைய உயர்ந்ததொரு பரிகாரத்தைச் சொல்லியிருப்பான்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளான் அரங்கன். 

திருப்பாணாழ்வாருக்கும் ஏற்றம்; 
லோகசாரங்கருக்கும் பாப நிவர்த்தி.

தவறைத் திருத்துவதாகட்டும், திருத்திப் பணி கொள்வதாகட்டும், அரங்கனின் பாணியே தனி!

''என்னடியார் தவறு செய்ய மாட்டார்... அப்படியே செய்தாலும் அது உலக நன்மைக்காகவே இருக்கும்'' என்று அரங்கன் சொன்னதற்கு இணங்க, லோகசாரங்கர் செய்த ஒரு சிறு தவறும்கூட, அர்ச்சா ரூபமாகவுள்ள அரங்கனை திருப்பாணர் காண்பதற்கு ஏதுவானது.

அரங்கனின் பூஜைக்காக தூய நீர் எடுத்து வரும் போது, நாம்தான் தவறு செய்து விட்டோமோ? என வருந்திய திருப்பாணரை, பரிவுடன் நெருங்கினார் லோகசாரங்கர். வருத்தம் தெரிவித்தார். திருப்பாணர் எவ்வளவோ மறுத்தும், ''இது அரங்கனின் ஆணை!'' என்று சொல்லி, அவரை வலுக்கட்டாயமாக தோளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார் பலவானான லோகசாரங்கர்.

திருவரங்கம் கோயிலில், நம்பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்பவர்கள், பலவானாகவே மாறி விடுவார்கள். அந்த மிகப்பெரிய செப்புக்குடத்தைத் தேய்த்து, தினமும் இரண்டு முறை காவிரிக் கரையில் இருந்து பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருவதே ஒரு சிறந்த உடற்பயிற்சிதானே!

எதற்காக பாணர் ஏங்கித் தவித்தாரோ... இதோ! அரங்கனை, அழகனை, அர்ச்சையின் முதல்வனை, ஆசை தீர தரிசிக்கப் போகிறார். லோகசாரங்கரின் தோளிலிருந்து இறங்கி, அரங்கனின் திருவடிகளைத் தரிசித்தார் திருப்பாணர். இடுப்பில் கட்டிய சிவந்த ஆடையினால் கவரப்பட்டார்; பாசுரம் பாடினார்; கருத்த, விசாலமுள்ள, செவ்வரியோடிய அரங்கனது கண்ணழகு அவரைக் கவர்ந்தது! கண்ணீர் மல்க துதித்தார்! 

எண்ணிப் பத்தே பாசுரங்கள்... ஒரு பேரொளி தோன்றியது. இந்தத் தூண்டா விளக்கு, அதனுடன் கலந்தது; பாணர் கலந்தார் அரங்கனுடன்!

கடவுளுடன் ஒன்றுவதற்கு குலபேதம் ஏதுமில்லை; குணம் இருந்தால் போதும் என்று உணர்த்தினார் திருப்பாணாழ்வார்!

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை யாட்படுத்தவிமலன்! விண்ணவர்கோன் விரையார்பொழில்வேங்கடவன்நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ள வொக்கின்றதே!
- இதுதான் திருப்பாணாழ்வார் பாடிய முதல் பாடல்!

திருப்பாணர், திருவரங்கத்தைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லையே! எப்படி இந்தப் பாடலில் திருவேங்கடமுடை யானைப் பற்றியும் வர்ணித்தார்?

அரங்கனைக் காணும் முன்பே, ஸ்ரீரங்கத்திலேயே ஏழுமலையான் இவருக்கு காட்சி அளித்திருப்பார். அவரை வணங்கி, பிறகு அரங்கனைத் துதிக்க வந்திருப்பார்.

'நீண்டவப் பெரியவாய கண்கள்’ அப்படின்னு திருப்பாணாழ்வார்  தன்னோட பாசுரத்துல அழகாச் சொல்றார். அதாவது, திருமாலோட கண்கள் காது வரைக்கும் நீண்டிருக்காம். 'ஏன்னா, பக்தர்கள் முதலில் என் கண்களைத்தானே பார்க்கிறார்கள்! அதனால், உடல் முழுக்க கண்களை வைச்சுக்கிட்டா என்ன?’ன்னு பெருமாள் நினைக்கிறாராம். ஒரு ராஜா, பெரிய ராஜ்ஜியத்தை வளைச்சுப் போடறதுக்கு முன்னால, அதுக்குப் பக்கத்துல இருக்கிற சின்னச் சின்ன நாடுகளையே முதல்ல ஜெயிப்பானாம். 

அதேமாதிரி, திருமால் தன் மேனி முழுவதும் கண்களாக ஆக்கிக்கிறதுக்கு முன்னால, பக்கத்துல இருக்கிற காது வரை கண்களின் எல்லையைப் பரப்பறாராம்.

இதில்... 'திருக்கமலப் பாதம்' என்ற வார்த்தையை முன்னோர்கள் மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.

1. திருப்பாதம்: துயரறு சுடரடி இது. துயர்போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதராஜ பெருமாளைக் குறிக்கும்.

2. கமலப்பாதம்: பூவார் கழல்கள்- புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதுக்கு சுகத்தைத் தரக்கூடிய திருவேங்கடமுடையானின் கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: அனைத்து உலகையும், அனைவரையும் உய்வுபெறச் செய்யக்கூடிய, எல்லோருக்கும் பொதுவான பாதங்கள். இது ஸ்ரீரங்கநாதனுடையது!
திருப்பாணாழ்வார், முதலில் அரங்கனின் பாதத்தை தரிசித்து, படிப்படியாக வந்து, இறுதியில் அவன் கண் அழகைக் கண்டு இன்பம் கொள்கிறார்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணைஉண்ட வாயன், என் உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே.
- 10-வது பாடலைப் பாடி முடித்தார் திருப்பாணாழ்வார்.

அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன் றினைக் காணாவே என்று சொன்ன பின்பு, அவர் மேற்கொண்டு பாடவும் இல்லை. எவரையும் காணவும் இல்லை - அந்த அரவரசப் பெருஞ்ஜோதி இவரை ஆட்கொண்டது. அமுதம் உண்டவருக்கு இறப்பில்லை. ஆசைதீர அரங்க அமுதத்தினைப் பருகிய இவர், இறப்பில்லாது அவனுடனேயே கலந்தார்.

நாமஸங்கீர்த்தனத்தில் புகழ்பெற்று விளங்கியவர் ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள். இவரின் நாமஸங்கீர்த்தனம் கேட்பவரை சுண்டி இழுக்கும்; அவனருகில் கொண்டு சேர்க்கும். அபங்கங்கள் எனும் மராட்டிய பஜன்கள் பாடுவதில் இவருக்கு நிகர் இவரே!
இவர் ஒருமுறை, தன் சீடர்களுடன் கங்கையில் இறங்கி குளித்தார். சுற்றிவர குளித்துக் கொண்டிருந்த சீடர்கள் கரையேறினார்கள். இவர்களின் மத்தியில் குளித்துக் கொண்டிருந்த சுவாமிகளை மட்டும் காணவில்லை! 

ஸ்ரீசைதன்ய மஹாப்ரபு கங்கையில் கலந்ததுபோல, இவரும் கங்கையுடன் கலந்துவிட்டார். ஆம்! அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்ற திருப்பாணரின் வழியைப் போல! 


Home  Previous                                                              Next

No comments:

Post a Comment