September 16, 2015

Korakkar Siththar - Part 2

கோரக்கர்.

கோரக்கரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது.


அல்லமா தேவரிடம் நீங்கள் யார் என்று கோரக்கர் கேட்டார்.


அதற்கு அல்லமத்தேவர் இறந்து போகும் உடலில் பற்றுக் கொண்டுள்ளவரை மதித்துச் சொல்லத் தக்கது ஒன்றுமில்லை என்றார்.


வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன் என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள் வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் ‘கிண்’ என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார்.


கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலைப் பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார்.


அல்லமர் கோரக்கரை நோக்கி ”சரி, உன் திறமையை நிருபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு” என்று கூறினார்.


கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது.

தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, வணங்கித் தன் பிழையைப் பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர்.

இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார்.

கோரக்கரே இவரை வெட்டியவர். அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார். பின்னாளில் பிரம்ம முனியின் நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது.

கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியைச் சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிலையும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள்.

Pictureயாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சாச் செடியாகவும் மாறினார்கள்.

‘கோரக்கர் மூலிகை’ (கஞ்சா), ‘பிரம்மபத்திரம்’ (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, “இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.

கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள். இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள்.

கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை:

கோரக்கர் பலநூல்களை எழுதியுள்ளார், அவரது நூல்கள் பல வைத்தியம், வாதம், யோகம் மற்றும் ஞானம் என்னும் நான்கு பாடப்பிரிவுகளை அடிப்படியாகக் கொண்டதாகும்.
1. கோரக்கர் சந்திர ரேகை
2. கோரக்கர் நமநாசத் திறவுகோல்
3. கோரக்கர் ரக்ஷமேகலை
4. கோரக்கர் முத்தாரம்
5. கோரக்கர் மலைவாக்கம்
6. கோரக்கர் கற்பம்
7. கோரக்கர் முத்தி நெறி
8. கோரக்கர் அட்டகர்மம்
9. கோரக்கர் சூத்திரம்
10. கோரக்கர் வசார சூத்திரம்
11. கோரக்கர் மூலிகை
12. கோரக்கர் தண்டகம்
13. கோரக்கர் கற்ப சூத்திரம்
14. கோரக்கர் பிரம்ம ஞானம்

மனித வாழ்வில் ஏற்படும் முதுமைக்கும் உடலின் தளர்ச்சிக்கும் எது காரணம் என ஆராய்ந்து உடம்பினை என்றும் இளமையாய் அழகாய் இருக்க உதவும் காய கல்பத்தைக் கண்டு பிடித்தவர். கோரக்கர் 80 வயது வரை வாழ்ந்த வட இந்தியர் என கூறப்படுகிறது. கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் 2ம் மாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாட்டின் தென் வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் கோரக்கர் வரலாறு அறியப்பட்டுள்ளது.  மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் கோரக்கர் என்று கூடச் சொல்லலாம். மச்சேந்திரரிடம் இலக்கணங்களோடு ஞான நெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஆலயம் உள்ளது. நாள்தோரும் 3 காலபூசைகள் இந்த ஆலயத்தில் நடந்து வருகின்றன. நாள்தோரும் ஒவ்வொரு சித்தராக ஆண்டு முழுவதும் தொடர்ந்து சித்தர் பலர் இவ்விடம் வந்து கோரக்கரை வழிபட்டுச் செல்வதாக மரபு உள்ளது. கோரக்கர் எழுதிய நூல்கள்: நமநாசத்திறவு கோல் முக்திநெறி பிரம்மஞானம் மலைவாகடம் கற்பம் அட்டகர்மம் சந்திரரேகை வகாரசூத்திரம் கண்டகம் ஞான சோதி கற்பசூத்திரம் கல்ப போதம் ரச மேகலை மரளி வாதம் மூலிகை முத்தாரம் காளிமேகம் கோரக்கர் பொய்கை நல்லூரில் சமாதி கூடியகாலம் கி.பி. 1233ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்குப் பின்னும் வாழ்ந்திருந்தார் எனக்கூறப்படுகிறது.

an style=“color: blue”>கோரக்கரின் ஜீவசமாதி இடங்கள்:

1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு)
4. வடக்கு பொய்கை நல்லூர்
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (வட நாடு)

இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருளும் பேரருளாளர்

"சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை

சுந்தரனார் வசிஷ்ட மகா ஷியாருக்கு
புல்லவே காணக் குற ஜாதியப்பா
புகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும்
வேதாந்த கோரக்கர் சித்து தாமும்
நல்லதொரு பிரகாசமான சித்து"
- போகர் 7000 -

கோரக்கர் வசிட்டரின் மகன் என்று போகர் தனது போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார். சட்டை முனி, கொங்கணவர் போன்றோரின் நெருங்கிய நண்பாராக இருந்ததாய் தனது நூலான கல்ப போதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற ஊரில் இவர் தவம் செய்ததாகவும் அதனால் அந்த ஊருக்கு கோர்க்காடு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு எளிமையாகாவும் பொருள் புரிந்து கொள்ள இலகுவாகாவும் உள்ளது குறிப்பிட தக்கது. ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாக சொல்லப் படுகிறது

அண்டசராசரங்களும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு காகபுஜண்டரின் எண்ணற்ற சீடர்களுள் ஒருவர் கோரக்கர். இந்த சித்தர் கொல்லிமலையின் அதிபதியாவார் (கொல்லிமலையானது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது). பதினெண்சித்தர்களில் மிகப்பெருமை பெற்றவர் இவர். பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்ட மிக உயர்ந்த உயிர்மருந்துகளைத் தயாரித்த சித்தர் இவர் மட்டுமே. அட்டமாசித்திகளையும் பூரணமாகப் பெற்றவர் இவர். "கஞ்சா" என்னும் மூலிகையை அடிப்படை குருமூலிகையாகக் கொண்டு மிக உயர்ந்த மருந்துகளைத் தயாரித்து வைத்தியம், வாதம், யோகம், மற்றும் ஞானம் போன்றவழிகளை உலகிற்குப் பூரணமாக உணர்த்தியவர் கோரக்கரே! எனவே தான் கஞ்சாவிற்கு கோரக்கர் மூலி என்கிற தனிப்பெயரொன்றுண்டு. பல சித்தர்கள் தேவரகசியங்களை வெளிப்படையாக ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்ததை அறிந்த பதினெண்சித்தர்களின் தலைவராக விளங்கக்கூடிய அகத்தியர், அனைத்து சித்தர்களையும் ஒன்றுகூடி அவர்கள் எழுதிய அனைத்து ஓலைச்சுவடிகளையும் கைப்பற்றி ஒரு பேழைக்குள் வைத்துப்பூட்டி ஒரு பெரும் பாறையில் வைத்து மூடிவிடும்படி கோரக்கருக்கு கட்டளையிட்டார். அவ்வாறே, அகத்தியரின் வார்த்தையை மதித்த கோரக்கர் பெரும்பாறையொன்றினுள் அனைத்து ஓலைச்சுவடிகளையும் அடைத்து மறைத்து வைத்துவிட்டு அதன் சாவியை மட்டும் (திறவு கோல்) தானே வைத்துக் கொண்டார். எனவே தான் தற்காலத்தில் சொற்ப அளவில் சித்தர் நூல்கள் உலாவிக் கொண்டு வருகின்றன. பிரம்ம சுவடிகளைக் காண விரும்பும் சித்தர்களுக்கு வசதியாக அவர்களுக்கு மட்டும் "சூட்சுமத்திறவுகோல்" மந்திரத்தை கோரக்கர் உபதேசித்தார். எனவே, இன்றளவும் குருமுகாந்திரமாக தீட்சை பெற்று சித்தரானவர்கள் கோரக்கரை வழிபட்டால்தான் சுருதியின் உண்மை நிலையை உணரமுடியும் என்கிற நிலை சித்தர்களின் சாபத்தால் விளங்கிவருகின்றது.

கோரக்கர் குண்டம்: கொல்லிமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கோரக்கர் பல்லாயிரம் உயிர்மருந்துகளையும், சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன் தான் ஞானத்தாலுணர்ந்த தேவரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு வகைப்பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் "கோரக்கர் குண்டம்" என்னும் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார்.

கோரக்கரின் கர்மசித்தி மூலமந்திரம் " ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீகோரக்க தேவாய சர்வசித்தர் அனுகிரகாய தேவாய நமஹ " கோரக்கரின் ஞானசித்தி மூலமந்திரம் " ஞானபிரம்ம ரூபமயம் ஆனந்தசித்தி கர்மமயம் அமிர்தசஞ்சீவி ஔடதமயம் கோரக்கம் உபாஸ்மகே!"

கோரக்கர் சித்தர்.

கோரக்கர் சித்தர் தியானச் செய்யுள்

சந்திர விழியும் மந்திர மொழியும்கொண்ட
சிவபக்தரேசாம்பலில் தோன்றிய
தவமணியேவிடை தெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும்
எம்மைகைப்பிடித்து கரை
சேர்ப்பாய்கோரக்க சித்த பெருமானே

கோரக்கர் சித்தரின் பூசை முறை 

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையை மஞ்சளிட்டு மெழுகி கோலமிட்டு, மஞ்சள், குங்குமம், மலர்களால் அலங்கரித்த குத்துவிளக்கை வைத்து தாமரைத் தண்டு அல்லது வாழைத்தண்டு திரி போட்டு ஐந்தெண்ணை ஊற்றி ஐந்து முக விளக்கேற்ற வேண்டும். பலகையின் மேல் சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து படத்திற்கு பல வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லி, தாமரைப்பூ, சம்பங்கி அழகிய மலர்களால் பின்வருமாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்து வணங்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. முருகக் கடவுளின் பிரியரே போற்றி!
2. வாக்கில் சுத்தமுடையவரே போற்றி!
3. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
4. கஷ்டங்களை போக்குபவரே போற்றி!
5. அடுப்புச் சாம்பலில் தோன்றியவரே போற்றி!
6. ஆசைகளற்ற அருளே போற்றி!
7. மாயைகளை களைபவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. மாசற்ற மனமே போற்றி!
10. புகழும், அருளும் நிறைந்தவரே போற்றி!
11. ஞான வழி காட்டுபவரே போற்றி!
12. ஞானஸ்கந்தரே போற்றி!
13. ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி!
14. காவி வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
15. உலக மக்களில் நண்பரே போற்றி
 16. உறுதியான மனதிடம் உள்ள கோரக்க 
சித்தரே போற்றி! போற்றி! என கூறி வணங்க வேண்டும்.

பிறகு மூலமந்திராமான “ஓம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை சொல்லி வழிபடவேண்டும். நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பொறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுச் சக்கரை கலவை வைத்து வழிபடவேண்டும். மனமுருக வேண்டி நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும்.

கோரக்கர் சித்தர் பூசை பலன்கள்

1. ஜாதகத்திலுள்ள சனி தோஷங்கள் வலகி நன்மை உண்டாகும்.
2. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சனைகள் தீரும்.
3. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும்.
4. எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
5. படிப்பில் உள்ள மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.
6. நன்மக்கட் பேறு கிடைக்கும்.
7. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
8. பிரம்மஹத்தி தோசம் நீங்கும்.
9. வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.

பூசைக்கு ஏற்ற நாள் கார்த்திகை நட்சத்திர நாள், நல்ல பலன் தரும்.

ஸ்ரீ கோரக்க சித்த ஸ்வாமியே போற்றி!

Home Pathinettu Siththargal  Previous                                                             Next

No comments:

Post a Comment