Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

April 29, 2016

Kuthambai Siddhar - Pathinen siddhar

Kuthambai Siddhar Life History:


Kuthambai Siddhar songs tamil history
Image of Kuthambai Siddhar
  • One cannot learn or find siddha medicine without encountering philosophies, which is highly reflected in the works of kuthambai siddhar.
  • As medicine is for both soul and mind, Kuthambai Siddhar is one such person, whose teachings to the world show the importance of sound soul for healthy body.
  • He is one among the celebrated 18 Siddha’s, who was born in the lineage of Yadavas.
  • Kuthambai is an ornament worn by girls in ear i.e… a type of earring.
  • Kuthambai Siddhar was only child to his parents and since, there was no girl child with him, his mother brought him up like a girl by wearing him the earring.
  • In his previous birth Kuthambai Siddhar’s life expired before attaining the Siddhi.
  • Kuthambai Siddhar had much propensity for Siddha Science right from his sixteenth year due to the remaining good karma.
  • Kuthambai Siddhar took birth again and got initiation and knowledge transfer at the age of sixteen.
  • Learning his complete background from his preceptor, he no more wasted his life.
  • He embraced path of Siddhars and started his inward journey i.e. trance for years to attain siddhi.
  • Kuthambai Siddhar is famous for his work of three lined verse embedded with volumes of philosophical teachings.
  • His songs are highly embedded with indirect meanings and one who understands it can easily get going on the Siddha’s path.
  • He compiled his songs with the word Kuthambai in every stanza, and it is constructed in perception of advising his Kuthambaii.e. ear ring.
  • Kuthambai Siddhar’s philosophy applies to men of all era.
  • He attained samathi at Mayiladuthurai in Tamil Nadu
Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

April 21, 2016

Sattaimuni - Part 3

சட்டைமுனி 

Sattaimuni Siddhar's photo.“ஓம் நமோ நாராயணாய ” என்ற மந்திரத்திற்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது? அதனின் மகிமை என்னவென்று தெளிவாகக் கூறினார் ஸ்ரீராமனுஜர். அதை கேட்ட அவருடைய குருநாதருக்குக் கோபம் வந்ததுவிட்டது. அதுபோல சட்டை முனி சித்தர் போகரிடமும், கொங்கணச் சித்தரிடமும் சில வித்தைகளைக் கற்றார். தான் கற்ற வித்தைகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக எளிமையாக எழுதினார். பொதுவாகச் சித்தர்கள் பரி பாஷையில் வடிவிலும்தான் எழுதுவார்கள். ஆனால் சட்டை முனி சித்தர், எளியோருக்கும் புரியும்படியாக எழுதினார். இதனால் கோபம் கொண்டு சட்டை முனி சித்தர் எழுதிய நூல்களைக் கிழித்து எறிந்தார் திருமூலர். சட்டை முனியோ அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதுவும் இறைவனின் செயல் என்று இருந்துவிட்டார்.

நல்ல மனம் படைத்தவர்களுக்குதான் துன்பங்கள் துரத்தி கொண்டே வரும். அப்படி ஒரு துன்பம் சட்டை முனி சித்தரையும் துரத்தியது. அது என்ன? அரங்கன் கோயில் கதவு தானாக திறந்தது சட்டைமுனி ஊர் ஊராகச் சென்று எண்ணற்ற ஆலயங்களைத் தரிசித்தார். இப்படி ஒவ்வாரு ஊரில் இருக்கும் ஆலயங்களை தரிசித்து வந்து கொண்டு இருக்கும் போது, வெகு தூரத்தில் திருவரங்கம் கோயில் கலசத்தைக் கண்டார். “அட அரங்கனைத் தரிசிக்க வேண்டுமே” என்ற ஆவலில் திருவரங்கப் பெருமாளைத் தரிசிக்க தன்னுடைய நடையில் வேகத்தைச் செலுத்தினார். இருந்தாலும் நள்ளிரவு பூஜை முடிந்துவிட்டது. ஆலயத்தின் கதவு சாத்தபட்டது. ஆலயக் கதவு சாத்தி இருப்பதைக் கண்ட சட்டைமுனி மனம் வருந்தினார். “அரங்கா உன்னைக் காண விரைந்தோடி வந்தும், என்னால் உன்னைத் தரிசிக்க முடியவில்லையே” என்று வருந்தினார். இந்த வார்த்தை கேட்ட அடுத்த நொடியே ஆலயத்தின் கதவுகள் சலசலவென மணி ஓசையுடன் திறந்தது. ஆலயமே முழுவதும் தீப வெளிச்சம் சட்டை முனி சித்தரை வரவேற்றது. அதை கண்ட சட்டைமுனி மகிழ்ச்சியடைந்து அரங்கனின் கருவரைக்குள் சென்று அமைதியாகத் தியானத்தில் அமர்ந்தார்.

திருவரங்க ஆலயக் கதவு திறப்பதின் ஒசை கேட்ட அக்கம் பக்கத்தினரும் ஊர்மக்களும் அரங்கன் ஆலயத்தில் திரண்டார்கள். ஆலயத்தின் கதவு திறந்திருப்பதையும், கருவரைக்குள் யாரோ ஒருவர் அரங்கனின் உடலில் இருந்த நகைகளை தன் உடலில் அணிந்திருப்பதையும் கண்டு, “கள்வன் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்து நகையைத் திருடிவிட்டான். மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து தவத்தில் இருப்பது போல நடிக்கிறான்.” என்று கூறி சட்டை முனி சித்தரை அடி அடி என்று அடித்துவிட்டார்கள் ஊர்மக்கள். அத்துடன் அரசரிடம் இழுத்து சென்றார்கள்.

கம்பளிச் சட்டை முனி “நீ யார்? எந்த ஊர்?” என்றார் அரசர்.

“நான் சட்டை முனி“ என்றார் சித்தர். “நீ சட்டைமுனியா?

நிச்சயமாக இருக்க முடியாது. அவரை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். சிவபெருமானின் சிறந்த பக்தர் அவர். மாபெரும் சித்தர். கயிலாய மலையின் குளிர் தாங்காமல் இருந்தபோது ஈசனால் கம்பளிச் சட்டை தரப்பட்டது. அவர் எங்கு சென்றாலும் கயிலாயநாதர் தந்த கம்பளி சட்டையுடன் செல்லும் வழக்கம் கொண்டவர். அதனால் அவருக்குக் கயிலாயக் கம்பளிச்சட்டை முனி என்ற பெயரும் உண்டு அத்துடன் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவர் எனக் கேள்விபட்டு இருக்கிறேன். அப்படி உயர்ந்த ஒருவரின் பெயரை சொல்லித் தப்பிக்கவா பார்க்கிறாய்?“ என்று கோபம் கொண்டார் அரசர்.

“அரசரே ஆத்திரம் வேண்டாம். புத்தியை மறைக்கும் கோபத்தால் எடுக்கும் முடிவும் பாதகமாகும் என்பதை நீ அறியாதவன் அல்ல” என்று அமைதியாகப் புன்னகையுடன் கூறினார் சித்தர்.

“ஒரு திருடன் நீ, எனக்கே உபதேசம் செய்கிறாயா? அதுவும் அரங்கனின் ஆலயத்தில் திருடிவிட்டு எதுவும் அறியாதவனாக இருக்கிறாயே? என்ன நெஞ்சழுத்தம்?” என்றார் அரசர்.

“அரசனே அமைதியாக இரு. வேண்டும் என்றால் என்னுடன் வா. அரங்கனிடமே கேள் நான் கள்வனா என்று” என்றார் சட்டை முனி.

“சரி அதையும்தான் பார்க்கிறேன்.” என்று கூறிய அரசர், சட்டை முனியை எல்லோரும் பார்க்கும் படியாக ஒரு திருடனை அழைத்துச் செல்வது போல் இரும்பு சங்கலியால் கட்டி கோயிலுக்கு இழுத்து வந்தார்கள் காவலர்கள். திருவரங்கம் ஆலயத்தின் முன் நிறுத்தப்பட்டார் சித்தர். “அரங்கா… நீ எனக்கு அணிவித்த நகையை நான் திருடி அணிந்துக்கொண்டேனாம். என்னைக் கள்வன் என்கிறார்கள்.

இரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்தப் பாழும் மனிதர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். சிவபெருமான் அளித்த கம்பளிச் சட்டையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, அரங்கா.. அரங்கா.. அரங்கா…” என்று மூன்று முறை அரங்கனை அழைத்தார் சட்டை முனி. 
அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்க ளெல்லாம் பதறிப் போனார்கள். 
அப்போது கோயிலுக்குள் இருந்து மணியோசை ஒலித்தது. மேளதாளங்கள் ஒலித்தது. கருவரையில் அரங்கன் அணிந்திருந்த நகைகள் தானாகக் கருவரைக்குள் இருந்து வெளியேறி, கோயிலின் வாசல் வழியாக வெளியே வந்து சட்டை முனி சித்தரின் கழுத்தில் விழுந்தது. அரங்கனின் நகைகள் சட்டை முனி சித்தரை அலங்கரித்தது. அப்போது திருவரங்கநாதன் சட்டைமுனி அருகில் காட்சி தந்தார்.

இந்த அற்புத காட்சியை கண்ட அரசரும் ஊர்மக்களும் மெய்சிலிர்த்துப் போனார்கள். உண்மையை உணர்ந்தார்கள். 
மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.
“உன் அருமை தெரியாதவர்களின் அருகில் கூட நிற்க வேண்டாம். இனி நீ என்னுடனும் சிவபெருமானுடனும் இருப்பதே நல்லது.” என்று எண்ணினாரோ என்னவோ, சட்டைமுனிவர் இறைவனுடன் ஒளிவடிவமாக இரண்டறக் கலந்தார். பிறவி இல்லா வரத்தை பெற்றார். இறைவனை நம்பினால் ஆபத்தில் இருந்தாலும் அவனே முன் வந்து காப்பார். .

விளையாடுவதும் அவன்தான், நம்மை ஆட்டுவிப்பதும் அவன்தான். இறைவனை நம்பி எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாக அமையும். முதலில் வெற்றி பெறத் தேவை முழுமையான நம்பிக்கை. அந்த நம்பிக்கையே வெற்றிக்குப் பாதையாக அமையும்.

யார் இந்தச் சட்டை முனி? கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர், அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார்.


சட்டைமுனி (நாதர்) .

ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும், என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும், என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து, அவர்களின் நம்பிக்கையை பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார். கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு, நண்பன் போல இவருடன் பேசினார்.
 
சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக் குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார். இறந்தவர்களை எழுப்பும் கலையை சித்தர்கள் சங்கேத மொழியிலேயே குறித்து வைப்பர். ஏனெனில், சித்தர்களின் குறிப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். சட்டை முனி பகிரங்கமாக எழுதியதால் ஆத்திரப்பட்ட சில சித்தர்கள் அந்தக் குறிப்புகளை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவரது மருத்துவக் குறிப்புகளும், இன்னும் சில பயனுள்ள தகவல்களும் மட்டுமே எஞ்சின. மேலும், சட்டைமுனிவர் பற்றி சிவபெருமானிடமும் புகார் சொல்லி, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீரங்கம் வந்த சட்டைமுனி ரங்கநாதனைச் சேவிக்கச் செல்லும்முன் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விட்டது. சட்டைமுனி வெளியில் இருந்தபடியே, ரங்கநாதா! உன்னை இன்றைக்குள் தரிசிக்க அவசர அவசரமாக வந்தேனே! பயனின்றி போய் விட்டதே, எனச் சொல்லி அரற்றினார்.தன் பக்தனின் அபயக்குரலைக் கேட்ட பெருமாள் நடையைத் திறக்கச் செய்தார். சித்தர் கருவறை அருகே சென்றதும், தனது அணிகலன்களை அவருக்கு சட்டை போல் அணிவித்தார்.(இதனாலும் இவர் சட்டைமுனி என பெயர் பெற்றார் என்பதுண்டு). அப்போது, ஊர் மக்கள் அவரைத் திருடனென சந்தேகித்து அரசனிடம் கொண்டு போய்விட, மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்தது.
இவர் திருவரங்கம் அல்லது சீர்காழியில் சமாதியாகி இருக்கலாம் என நம்புகின்றனர். சித்தர்களில் குறிப்பிட்ட நாளில் விரதம் இருப்பது இவருக்கு மட்டுமே. திருவோணம், புனர்பூசம், பூசம், திருவாதிரை நட்சத்திர நாட்களிலும், புதன்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் வாஸ்து தினத்தன்றும் ஸ்ரீசட்டைநாத மாமுனி தர்ப்பயாமி என்று குறைந்தது 18 முறையும், அதிகபட்சமாக 108 முறையும் சொல்லி வழிபட்டால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
 
திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர் இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது. 
சட்டைமுனி இயற்றிய நூல்கள்:
சட்டைமுனி நிகண்டு – 1200
சட்டைமுனி வாதகாவியம் – 1000
சட்டைமுனி சரக்குவைப்பு – 500
சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500
சட்டைமுனி வாகடம் – 200
சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200
சட்டைமுனி கற்பம் – 100
சட்டைமுனி உண்மை விளக்கம் – 51
 

தியானச் செய்யுள்
சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!
 

சட்டைமுனி சுவாமி பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி!
2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி!
3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி!
4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி!
5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி!
6. வருண பகவானை வணங்குபவரே போற்றி!
7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி!
8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி!
9. கவலைகளை அகற்றுபவரே போற்றி!
10. நோய்களை அழிப்பவரே போற்றி!
11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி!
12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி!
13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி!
14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
15. ராமநாமப் பிரியரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான
“ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.
பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.


ஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்,


1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.
2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும்.
3. சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும்.
4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும்.
5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும்.
6. போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.
8. இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம்.
பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.

Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

April 14, 2016

Sattaimuni - Part 2

சட்டைமுனி.

Picture
தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மேலாடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார்.     சட்டை முனி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமிழைக் கற்றார். ஞானம் கொண்டார். சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து அநேக வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்றும் கருவூரார் கூறுகிறார்.     
தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் தரணியில் உள்ளோர்க்கு எடுத்துக் காட்ட , சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது. இதிலுள்ள வேதியியல் விந்தைகளை, விவரிக்க முடியாத அதிசயங்களை, அற்புதங்களைக் காட்ட முயல்வதும், மிகவும் அரிய செயலாகும்.
சட்டைமுனி இரசவாதம் என்ற நூலில் பாதரசத்தை மணியாக்கி, அதற்கு உலோகங்கள் இரத்தினங்கள், உபரசங்கள் எல்லாவற்றினுடைய சத்துக்களையும் கொடுத்து, அவற்றை உயிருள்ள இரசமணிகளாக்கும் விதத்தையும் கூறுகின்றார்.     சட்டை முனி, திருவரங்கத்தில் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார்; இன்றும் அவர் அங்கேயே இருக்கிறார் என்று கருதப்படுகிறது. 
சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர். சேணிய வகுப்பைச்சார்ந்தவர். தாய், ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டு தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் செய்து பிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்டக் காரணத்தால் விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின் வாசல்களில் தட்டை ஏந்தி யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.
ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது வட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர் விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழி தான் செல்லும். தாய், தந்தையரைக் காப்பாற்றும் பொருட்டு நீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும். சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார். 
சட்டைமுனி மன மகிழ்ச்சி கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனை ஆலயம் சென்று தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்குத் தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடை பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்தினார். அனுதினமும் கோயில் சென்று சிவனை வழிப்படத் தவறவில்லை.
ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டு வெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது. ‘ஏனப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதவிட எண்ணமில்லையா? ‘ சட்டைமுனி திடுக்கிட்டுத் திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில் வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்று தாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். [இவரைக்  ‘கயிலாய சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளி சட்டைமுனி என்றும் அழைத்து வந்தனர்] சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை. இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கே இது போகப்போக விளங்கும்” என்றார். 
அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்து சித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார்.போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர், கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞான நிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார்.இவரின் தவத்தால் கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்..ரோமசர் போன்ற சித்தர்களின் நட்பும், ஆதரவும் பெற்று சிறந்து விளங்கினார் சட்டைமுனி ஆயிரத்து இருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, நிகண்டு, வாத காவியம், தீட்சை, ஞான விளக்கம் என பதினான்கு நூல்களையும் இயற்றியுள்ளார்.” கயிலாய பரம்பரையில் வந்த பேர்க்குக் கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே..“     என்று இவர் பாடுவதால் கயிலாயத்தில் வாழ்ந்தவர் என உறுதிப் படுத்தியுள்ளார். அதனால் இவர் இயற்றிய பாடல்கள் மானிட உலகிற்குக்  கிடைத்த மாபெரும் சொத்தாகும். இவர் இயற்றியதெல்லாம்  ஞானப் பாடல்களாகும்.
ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்
அறிந்து கொண்டே அறிவாலே நின்று பாரு;
சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்
செகமெலாம் பெண்ணான வுருத்தானப்பா!
ஓமப்பா பொன்மண் வா சணை வி னாசை
ஒற்றி நின்ற விந்திரிய மயக்கத் தாசை
நாமப்பா வென்று சொன்ன ஆண்மையாசை
நல்வினைக்குத் தீவினைக்கும் வித்து மாச்சே.  
[இவ்வுலகை எல்லாம் அடக்கி ஆளும் “திரோதாயி’’ எனும் மாபெரும் சக்தி பெண் சக்தியாகும்.    இவ்வுலகப் பொருள்களின் மேல் கொள்ளும் ஆசைதான் துன்பங்களுக்கு மூலகாரணம்.   இதனை நன்கு அறிந்துக்கொள்ளவேண்டும். நாம் கொள்ளும் ஆசை, ஐம்புலன்கள் தம் வழியே   செயல்படும்போது நல் வினைக்கும் தீவினைக்கும் வித்தாக அமைகிறது. ]
சட்டைமுனி ஒருநாள் இரவு திருவரங்கம் கோயில் கோபுரத்தை தரிசித்து “அரங்கா….. அரங்கா…” என்று குரல் கொடுக்க, வாசல் திறந்தது. கோயிலுக்குள் சென்று இறைவனை மனமுருகி வேண்டினார். கோயில் வாயிற் திறந்திருப்பதைக் கவனித்த காவலர்கள் சட்டைமுனியை கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். நிர்வாகத்தினர் அரசனிடம் அழைத்துச் சென்றனர். மன்னர் விசாரணையில் நடந்த விபரத்தினை கூற மன்னன் இந்தக் கூற்றை நம்பவில்லை.     இது உண்மையா என அறிய சட்டைமுனியை மீண்டும் கோயில் வாசலில் நிறுத்தி….,  “எங்கே குரல் கொடு மணி அடிக்கிறதா… வாயிற் கதவு திறக்கிறதா என்று பார்ப்போம்.. என்றனர்.   
சட்டைமுனி மீண்டும் “அரங்கா……, அரங்கா…” என்று மூன்று முறை குரல் கொடுக்க வாயிற் கதவு தானே திறந்து மணியும் ஒலித்தது. மன்னரும் மக்களும் அவரின் மகத்துவைத்தை உணர்ந்து வணங்கி நின்றனர். மன்னன் தான் தவறு செய்ததை உணர்ந்து அவரைத் தம்மோடு தங்கியிருக்க வேண்டினார். சட்டைமுனியும் திருவரங்கத்திலேயே தங்கி இறைவனுடன் கலந்தார்.
       மயங்குவான் பொண்டேப் புரட்டுப் பேசி
       மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்
       தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;      
       சாதகமா யோகத்திற் சார்ந்தே என்பான்;      
       தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே என்பான்
       செகசால் திரோதாயி சிரிப்பான் பார்த்து;      
       முயங்குவான் சமாதிவிட்டே னையோ வென்பான்
       மூடமொற்ற ஞான்மெல்லா முலகிற் பாரே. 
[ மனிதன் பொன்னையும், பொருளையும் தேடப் பொய் பேசுகிறான்.        ஞானம் (மெய்யறிவு) எதுவும் பெறாமலேயே மகத்தான ஞானம் தாம் பெற்று விட்டதாக வீண் ஜம்பம் செய்வான். யோகத்தில் என்னை ஈடுபடுத்தி கொண்டு விட்டேன் என மக்களை மயக்குவான் தனக்கு நோயோ, வேறு எந்தத் துயரங்களோ வருமாயின் இறைவா !        எனக்கா இந்த சோதனை என்பான். செலவந்தனாக இருந்த போது இறைவனை நினையான். இதனை கண்டு மாயை [திரோதாயி]        சிரிக்கிறாள் ]
        பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;      
       பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு;    
        மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்
        தங்கிநின்ற யோகம் போய் ஞானம் பாழாய்ச்
       சமாதியென்ன மிந்திரியச் சார மூடித்
       தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகத்
       சுனியமாய் ஞானமெல்லாம் தோற்றுமாறே.  
உடலில் தோன்றுகிற ஆசையால் மனம் சுகங்களில் அலைப்பட்டு   வாழ்வு வீணாகிறது. இறுதியில் வாழ்க்கை சூனியமாகிறது. அதன்   பின்தான் மனிதனுக்கு ஞானமும், அறிவும் தோன்றுகிறது.   இதனைத்தான் கண்ணதாசன் “ கெட்ட பின்பு ஞானி “ என்றார்.
"பாலனாம் சிங்களவ தேவ தாசி
பாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான்
சீலமுடன் சட்டை முனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு"
- போகர் 7000 - 
சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.
பொதுவாகச்  சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால் சட்டை முனி என்று அழைக்கப்பட்டார். இவர் போகருடைய சீடர் என்று சொல்லப் படுகிறது. இவர் சீர்காழியில் சமாதியடைந்ததாகவும் சொல்லப் படுகின்றது.
சட்டைமுனி ஞானம் 
எண்சீர் விருத்தம் 
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப்
பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே.1 
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே.2 
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக்கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே.3 
பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!4 
தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே.5 
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே.6
(பாடல்கள் நிறைவுபெற்றது.) 
சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி ! நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

April 07, 2016

Sattaimuni - Pathinen siddhar

Sattaimuni Siddhar Life History.

Sri Sattaimuni Siddhar was bom in Sri Lanka and came to Tamil Nadu. Seeing Maha Bogar in a temple and captivated by his radiance he abandons his family and becomes his disciple. His works in simple language appeal greatly to the common man his works include Sri Sattaimuni Karpam 100 and Sri Sattaimuni Nigandu 1200.
    Sattaimuni Siddhar books, padalgal,JeevaSamadhi.
  • In the annals of Siddha History Sattaimuni Siddhar occupies a vital place for his anthropological work.
  • Keeping the benefit of people in mind, he exposed the secret codes followed in the realm of Siddha, which was adhered by others.
  • Sattaimuni Siddhar was born in Srilanka and was living with his family as a mendicant friar outside a temple.
  • Enchanted by the glow of a saint from North India, he quit his family life and followed the seer to seek Siddha knowledge.
  • He also gained knowledge from Siddhar Agathiyar and Siddhar Bogar.
  • He also learned under Siddhar Bogar and hence had healthy relations with SiddharKaruvurar and SiddharKonganavar.
  • Since he learned under Siddhar Bogar, he grasped chemistry to the finer nuances.
  • Soon he unfurled his ingenuity in the field of chemistry in transmuting base metals to higher level and in developing muppu and mercuric pills etc…
  • He being an ardent devotee of lord Shiva was presented a woolen shirt “kambali sattai” by Shiva himself. Since then, he was called “kailaaya kambali sattaimuni”.
  • He initiated PambattiSiddhar and transferred his knowledge to him.
  • Against the common rule of Siddha community, he wrote all the Siddha secrets without encryption for the easy understanding of common man.
  • Angered by SattaimuniSiddhar’s act, SiddhaThirumoolar destroyed one of his works and ordered others to be kept secret in a cave.
  • Sattaimuni Siddhar is expert in Siddha rejuvenation medicine science and his “Sattaimuni Karpam -100” is followed by many even now.
  • His works on universal salt – Muppu and kaya Karpam is of major importance.
  • Sundaranaar is one of his disciples, who installed Sathuragiri Sundara Mahalingam in Sathurairi Hills.
  • The following theory of SattaimuniSiddhar is of high importance in the spheres of Siddha Medicine System.
“Man is said to be the Microcosm and the Universe is said to be the Macrocosm; because the elements in the universe exists in Man too; or in the other words, There is nothing in the Macrocosm of nature that is not present in Man. So man must be looked upon as an integral part of universal nature and not as anything separate or different from the later. This closely follows the Siddhars doctrine.
"அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்"
"அண்டமும்,பிண்டமும் ஒன்றே அறிந்து தான் பார்க்கும் போது"
                                          - சட்டைமுனிஞானம்
                                    
"Andatthil ullathe pindam, Pindatthil ullathe andam"
"Andamum pindamum ondre Arinthuthaan paarkkum pothe"
                                          - Sattaimuni  gnanam

He attained samathi in sree rangam thiruchi.

Sattaimuni Siddhar works/Books on Siddha Medicine

  • சட்டைமுனி நிகண்டு–1200 sattaimuni nigandu 1200
  • சட்டைமுனி வாதகாவியம்–1000 sattaimuni vaatha kaaviyam 1000
  • சட்டைமுனி சரக்குவைப்பு–500 sattaimuni sarakku vaippu 500
  • சட்டைமுனி நவரத்தினவைப்பு–500 sattaimuni navarathina vaippu 500
  • சட்டைமுனி வாகடம்–200 sattaimuni vagadam 200
  • சட்டைமுனி முன்ஞானம் பின்ஞானம்– 200 sattaimuni munpin gnanam 200
  • சட்டைமுனி கற்பம்–100 sattaimuni karppam 100
  • சட்டைமுனி உண்மைவிளக்கம்–51 sattaimuni unmai vilakkam 51
Home
Pathinettu Siththargal
Previous                                                    Next
 

March 31, 2016

Nandi Devar - Part 3

நந்தீசர் வாழ்க்கை வரலாறு பகுதி - 2


Inline image 1 சிலாதர் என்ற தவ முனிவர் இருந்தார். அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தது. இந்திரன் அவர் முன் தோன்றி சிவபெருமானை நோக்கித் தவம் புரியக் கூறினான். ஆனால் "கருவில் உதிக்காத குழந்தை வேண்டி தவம்புரி. கருவில் உதிப்பவர்கள் இறந்து விடுவார்கள். எல்லாவற்றையும் படைக்கும் கடவுள் பிரம்மன். ஹிரண்ய கர்ப்பன். அவர் கூட ஊழிக் காலத்தில் மறைந்து மீண்டும் மீண்டும் பிறக்கிறார். திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிப் பிறகே படைப்புத் தொழிலைத் தொடர்கிறார். ஆதலின் கருவில் தோன்றுவோர் மறைவர்" என்று அறிவுரை வழங்கினான். சிலாதர் கருவில் உதிக்காத குழந்தை வேண்டிக் கடும் தவம் புரிந்தார். அவர் உடல் முழுதும் கரையான் புற்று மூடியது. பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் அவருடைய தசை இறையாகியது. வெறும் எலும்புக் கூடே எஞ்சியது. அவர் தவத்தை மெச்சி சிவபெருமான் வரம் அளித்தார். "சிலாத உன் வேண்டுகோளுக்கு இணங்கிக் கருவில் தோன்றாத குழந்தையை உணக்கு அளிக்கிறேன். அந்தக் குழந்தையாக நானே உனக்கு தோன்றுகிறேன்" என்று அருள் செய்து மறைந்தார்.

சிலாதர் யாக அங்கணத்துக்கு வந்தார். அங்கு சிவ பெருமானின் அருளால் திவ்ய தேஜஸுடன் ஒரு குழந்தை காணப்பட்டது. தலையில் சடாமுடியும் மூன்று கண்களும் நான்கு கரங்களில் சூலம், பரசு, கதை, வஜ்ரம் ஆகிய படைகள் தென்பட்டன. அந்தக் குழந்தையைக் கண்டதும் பிரும்மா முதலிய தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்ஸரப் பெண்கள் எல்லாம் ஆனந்தக் கூத்தாடினர். கால சூரியனுக்குச் சமமான தேஜுடைய அந்தக் குழந்தையை எடுத்து பிரும்மா, விஷ்ணு, ருத்ரர், ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி முதலிய அனைத்தது தேவதைகளும் மகிழ்ந்தனர். சிலாத மகரிஷி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு எனக்கு மகவாக தோன்றியிருக்கும் பெருமானே உன்னை வணங்குகிறேன். ஆனந்தத்தை அளிப்பதால் இந்தக் குழந்தையை நந்தி என்று அழைக்கிறேன் எனப் பெயரிட்டு அக்குழந்தையைத் தம்குடிலுக்கு எடுத்துச் சென்றார்.

அவர் குடிலுக்குச் சென்றதும் அக்குழந்தையின் தெய்வீக உருவம் மறைந்தது. இரண்டு கைகளையுடைய சாதாரண மானிடக் குழந்தையாக மாறி விட்டது. ஆதலால் வருந்திய சிலாதர் அந்தக் குழந்தைக்குப் படிப்படியாக நான்கு வேதங்கள், ஆயுர்வேதம், தனுர் வேதம், கந்தர்வவேதம், அச்வ வேதம், கஜசாஸ்திரம், மனுஷ சாஸ்திரம் முதலிய பல சாஸ்திரங்களைப் போதித்தார். அந்தக் குழந்தைக்கு எழு வயது ஆகும் போது மித்ரன் வருணன் என்ற இரண்டு ரிஷிகுமாரர்கள் வந்தனர். அவன் தேஜஸைக் கண்டனர். அவன் தந்தையிடம் சென்று, இன்னும் ஒராண்டுக்குள் இவன் இறந்துவிடுவான் என்று கூறிச் சென்று விட்டனர். அதனால் சிலாதர் மனம் உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்டு நந்தி சிவனை நோக்கிக் கடும் தவம் புறிந்தான். அவன் தவத்தை கண்டு சிவன் தேவியுடன் நந்தியின் முன் தோன்றினார். நந்தியைத் தன் இருகரங்களாலும் இறுகத் தழுவிக் கொண்டு இன்று முதல் உனக்கு மூப்பு இறப்பு என்பது ஏதும் இல்லை. எனக்கு நிகரான ஒளியும், வலிமையும், யோகமும் பெற்று என் விருப்பத்துக்கு உகந்தவனாக என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாக நீ விளங்குவாய். என் அருகிலேயே விளங்குவாய் என்று அருள் புரிந்தார். அழகிய மாலையை எடுத்து நந்தியின் தலையில் சூட்டினார்.

உமையன்னை நந்திகேசுரரைக் கரத்தில் எடுத்து அணைத்து ஆனந்த பாஷ்பம் பெருகினார். சிவபெருமானின் ஜடையிலிருந்து விழுந்த நீரும், தேவியின் ஆனந்தக் கண்ணீரும், சிவபிரானின் வாகனமாம் காளையின் பெரும் கர்ஜனையில் தோன்றிய நீரும், மேகம் பொழிந்த நீரும், ஜாம்பூநாதமான மகுடத்திலிருந்து விழுந்த நீரும் அவர் மீது விழுந்து ஐந்து நதிகளாக ஒடின. ஆதலின் அவை பஞ்சநதம், ஐயாறு என்று பெயர் பெற்றன. அன்றிலிருந்து நந்திகேசுரர் சர்வலோகத்துக்கும் அதிபதியாகவும் எல்லாக் கணங்களுக்கும் தலைவராகவும் முடிசூட்டப்பட்டார். ஈசுவரரின் அதிகாரியாக எப்பொழுதும் அவர் அருகிலேயே அழியாத் தன்மையுடன் விளங்குகிறார். என்று நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது இந்தச் செய்தி புராண மரபு.

இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் சாலங்காயன கோத்திரத்தில் சிலாதர் அல்லது சிலாசினி என்ற முனிவர்க்கு மகனாகப் பிறந்து தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம். அவருடைய ஆற்றலையும் தொண்டையும் கண்டு வியந்த மக்கள் அவரை ஈசுவரருடைய அவதாரமாகவே கொண்டனர் என்று கருதத் தோன்றுகிறது. நந்திகேசுரர் அளித்த நூல்களில் இப்போது மிகவும் கற்கப்பட்டு, போற்றப்படும் துறைகள் தத்துவமும் நாட்டியமும் ஆகும். நாட்டியக் கலையில் பெரும்பாலானவர்கள் இப்பொழுது நன்கு அறிந்திருப்பது நந்திகேசுவரர் இயற்றிய "அபிநயதர்ப்பணம்" என்ற நூலாகும். சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

அம்முறைதன்னை நந்திகண்டே நாலாயிரம் கிரந்தமாக அருளிய அதனை பரதமுனிவன் அறிந்து அரன் நோக்கியே நடிக்க என்று உள்ள செய்யுள் இதைத் தெளிவாக்குகிறது. பரத நாட்டிய சாஸ்திரம் நந்திகேசுவரரைத் தண்டுரிஷி என்று குறிக்கிறது. சிவபெருமான் நாட்டியத்தில் பயன்படுத்தக்கூடிய அங்க பிரயோகங்களைத் தண்டுவின் மூலமாக பரதருக்கு கற்றுக் கொடுத்தார். "தத: தண்டும் சமாஹுய புரோக்தவான் புவனேஸ்வர: பிரயோகம் அங்கஹாரானாம் ஆசக்ஷவ பரதாய வை" என்பது அச்செய்யுள். தண்டு முனவரிடமிருந்து பிறந்தது தாண்டவம். அபிநவகுப்தர் என்று புகழ்வய்ந்த உரையாசிரியர் தண்டு என்ற சொல் நந்திகேசுவரரைக் குறிக்கும் என்கிறார்.

சார்ங்கதேவர் என்ற மற்றொரு நூலாசிரியர் தம் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூலில் பரதருக்கு நிருத்தபிரயோகங்களை தண்டு கற்றுக் கொடுத்தார் என்பதுடன் அவர் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவர் கணாக்ரனீ என்றும் கூறுகிறார்.

"நிருத்த ரத்னாவளி" என்ற நூலை 13 ஆம் நூற்றாண்டில் இயற்றய ஜயசேனாபதி என்பவர் இவரை "பட்டதண்டு" என்று அழைக்கிறார். இவற்றிலிருந்து நந்திகேசுவரர் தண்டுரிஷி என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர் உண்மையில் வாழ்ந்த வரலாற்றுப் பாத்திரம் என்றும் அறிகிறோம். அவரே பரத முனிவருக்கு நாட்டியக் கலையைப் போதித்தவர். இன்றைய நாட்டியக் கலையின் தந்தை என்று அவரை அழைக்கலாம்.

தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் நாட்டியாசாரியரைக் குறிக்கும் தொன்மையான உருவம் இதுவே.

காஞ்சிபுரத்தில் இராஜசிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார். கால்களைச் சுவஸ்திகமாக்கி நந்திமுகத்துடனும், மனித உடலுடனும் சதுர தாண்டவம் புரியும் நந்திகேசுவரரின் நடனம் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள கருத்தையும் தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதையும் காட்டுகிறது. நந்திகேசுவரர் சிறந்த நாட்டியசார்யராக மட்டும் இல்லாமல் சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார்.

அம்பலத்தரசர் ஆடுகின்ற போது நந்தி மத்தளம் வாசிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் பல சிற்பங்களும் ஓவியங்களும் இக்காட்சியைச் சித்தரிக்கின்றன. "குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக் கொண்டார்" என்பது தேவாரம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை பாரசவர் என்ற குலத்தோர் வாசிக்கின்றனர். அண்மையில் கிடைத்த "பஞ்சமுக வாத்தியலக்ஷணம்" என்னும் சுவடியில் இது நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆதலின் வாத்ய சாஸ்திரங்களிலும் நந்திகேசுவரர் சிறந்தவர் என்பது தெரியவருகிறது.

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள நாட்டிய நாடகங்களில் தொடக்கத்தில் வரும் பாத்திரத்தை முறையே "கட்டியக்காரன்" என்றும் "சூத்திரதாரி" என்றும் அழைப்பர். கட்டியக்காரன் ஜனரஞ்சகமான நாட்டியத்தை ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவான். அவன் கையில் "வேத்ரம்" என்ற "கோல்" இருக்கும். கட்டியக்காரன் என்னும் பாத்திரம் நந்திகேசுவரரைக் குறிக்கும். கும்பேசர் குறவஞ்சி என்னும் நாட்டிய நூல் "நந்திவாகனாம் கட்டியக்காரன், திகைக்க வெண்ணீறு பூசிச் செயஞ்செயமென வந்தானே" என்று கூறுகிறது. நந்தியாக முதலில் வந்து மொழிவதால் "சூத்ரதார வசனத்தை" சம்ஸ்கிருதத்தில் "நாந்தி" என்று சொல்லுவார்கள்.

காமசாஸ்திரத்தை தோற்றிவைத்தவரும் நந்திகேசுவரரே என்றும் பல நூல்கள் கூறுகின்றன. வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் என்னும் நூல் மூன்று முனிவர்களைக் குறிக்கிறது. தர்மசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் "மநு" என்றும் அர்த்தசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் "பிருஹஸ்பதி" என்றும் காமசாஸ்திரத்தை இயற்றியவர் "நந்திகேசுவரர்" என்றும் கூறுகிறது. நந்தி இயற்றிய பல செய்யுட்களை "ரதிரகசியம்" என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார். சிவபெருமான் சீகண்ட பரமேசுவரராகப் பதினெட்டுப் புராணங்களை நந்திதேவருக்குக் கூறினார். நந்தி அவற்றைச் சனந்தகுமாரருக்கு கூற அவர் அதை வேதவியாஸருக்குக் கூறினார் என்றும், அவரிடம் சூதபௌளராணிகர் அறிந்தார் என்றும் கூறுவர். ஆதலின் புராணங்களை எடுத்துரைத்த மரபும் நந்திகேசுவரரையே சாரும் என்றும் அறிகிறோம்.

ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. நந்திகேசுவரரிடமிருந்து சிவதத்துவத்தை அறிந்து நந்தீசர் பிறருக்குப் போதித்தார் என்று ரௌளரவாகமம் கூறுகிறது. சைவமரபில் தலையாயது "சிவஞான போதம்" என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார் என்றும் அந்த மரபே இந்நூல் என்றும் பல நூல்கள் குறிக்கின்றன.

சிவஞான போதச் சிறப்புப் பாயிரத்தில் மயர்வற நந்தி முனிகணத்தளித்த உயர் சிவஞான போத மளித்தோன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் "அருள் நந்தி தனக்கியம்ப நந்தி கோதில் அருட் சனற்குமாரருக்குக் கூற" என்று சிவஞானசித்தியார் என்னும் நூல் குறிக்கிறது.

திருமூலர் சிவபெருமானையே நந்தி என்று பல இடங்களில் குறிக்கிறார். நந்தி அருளாலே நாதனாம் பெயர் பெற்றோம் என்கிறார். சைவசித்தாந்த மரபு முழுவதும் நந்திகேசுவரர் மரபு என்பதில் ஐயமில்லை.

சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர். மற்றவர் மாகாளர் என்பவர். வழிபாட்டில் நந்திகேசுவரருக்கு முதலிடம் வழங்கப் படுகிறது. அவர் "சர்வலோகாதிபதி" ஆதலாலும், கணங்களின் தலைவர் ஆதலாலும் "அதிகாரி" என்றும் அதிகாரநந்தி என்றும் அழைக்கப்பட்டார். தாராசுரத்தில் முன்மண்டபத்திலிருந்து கர்ப்பக் கிருகத்துக்குள் நுழையும் போது அதிகாரநந்தியின் உருவத்தைப் பார்க்கலாம். இரு கரங்களை கூப்பி நீண்டவாளை மார்பில் இடுக்கி ஜடாமகுடத்துடன் நெற்றிக் கண்ணுடன் இவர் நிற்பார். சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். நான்கு கரங்களுடனும் சிவபெருமானுக்குரிய சின்னங்களுடன் இவர் காணப்படுகிறார். மேலிரு கரங்களில் மானும் மழுவும் உண்டு. கீழ்க்கரங்கள் கும்பிடும் நிலை சடை முடியும் நெற்றிக்கண்ணும் உண்டு.

மருத்தினுடைய பெண்ணாகிய "சுயஸ்" என்பவளை நந்திகேசுவரர் மணந்தார். அவளும் அவருடன் நிற்பதைக் காணலாம். அதிகார நந்தி மனித உருவுடன் கோபுரத்தின் நுழைவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின் பிரதான அதிகாரி ஆதலின் இவரது பார்வையிலேயே உள்ளே செல்லவும் வெளியே வரவும் இயலும். அருள்பாலிப்பதும், அறிவுரை புகட்டுவதும், தண்டனை அளிப்பதும் இவரே. ஆதலின் கோயில் கோபுரவாயிலில் உள்ள இவரது அனுமதி பெற்றே சிவாலயத்துள் செல்ல வேண்டும். இது தத்துவம். பரமேசுவர தத்துவம் நந்திகேசுவரர் மூலமாக உலகில் வெளிப்படுகிறது. அந்தத் தத்துவத்தைத் தாங்கி உலா வருவது இவரே. அதுவே அதிகார நந்தி சேவை என்னும் தத்துவம். பரமேசுவரனைத் தம் முதுகில் தாங்கி வருவதாகப் பாவனை.

இராமாயணத்தில் மிகவும் உன்னத பாத்திரம் அனுமன். அறிவின் சிகரமாக, சொல்லின் செல்வனாக, வீரர்களின் தலைவனாக, தூதுவர்களில் ஈடு இணையற்றவனாக, ஆற்றலும் தூய்மையும் நிறைந்த அமைச்சனாக, அனைத்துக்கும் மேலாகப் பக்தியின் உருவகமாக திகழ்வது அனுமானே. அத் தன்னேரில்லாத தகைமையாளன் யார்? நந்திகேசுவரரின் மறு அவதாரமே அனுமான். ஒரு முறை இராவணன் கைலயங்கிரிக்குச் செல்ல நந்தி அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆதலால் கோபம் கொண்டு அவரைக் குரங்கு மூஞ்சி என்று இழித்துரைத்தான். குரங்காகவே வந்து உன்னை அழிக்கிறேன் போ! என்றார் நந்தி. ஆதலால் பலமுறை அனுமனைக் கண்டபோது நந்தியே அனுமனாக வந்திருக்கிறானோ என்று திகைத்தான் தசமுகன் என்று வால்மீகி கூறுகிறார்.

சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது. இராமர் பரபிரும்ம தத்துவம் அனுமன் அவர் காலடியில் அமர்ந்து வாசிக்க அத்தத்துவத்தை ராமர் போதித்ததாகக் கூறுவது நம்மரபு. 

அக்ரே வாசயதி பிரபஞ்சனசுதே தத்வம் முனிப்ய: 
பரம் வியாக்யாந்தம் பரதாதிபி: 
பரிவ்ருதம் இராமம் பஜே சியாமளம் 

என்பது நாளும் படிக்கின்ற ஸ்லோகம். இது நந்திகேசுவர தத்துவத்தின் மறு வடிவம். இந்திய நாட்டு மக்களின் வாழ்வில் நந்திகேசுவரர் நாட்டியாச்சாரியாராக கலைகளின் பிறப்பிடமாக வைத்திய முறைகளைப் போதித்தவராக புராண ஆகம முறைகளைப் போதித்தவராக யோகியாக தத்துவத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார் என்பது நாம் அறிய வேண்டிய பண்பு. 

Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

March 24, 2016

Nandi Devar - Part 2

நந்தீசர் வாழ்க்கை வரலாறு 
Inline image 1வீரகன் என்பது நந்தீசர் இயற்பெயராகும். சிவகணங்களில் ஒருவராக இருந்த நந்தீசர் அன்னை உமையவளின் அந்தப்புரக் காவலராக இருந்தவர் ஆவார். ஒரு முறை கயிலையை விட்டு நீங்கிய அன்னை உமையவள், ‘கெளரி’ என்ற பெயருடன் பரமனை எண்ணித் தவமியற்றிக் கொண்டிருந்தார். அப்போது அடிகலன் என்ற அசுரனை அனுமதியின்றி சிவசந்நிதியில் புக அனுமதித்தால் நந்தீசர் பரமனது கோபத்துக்கு ஆளானார். பன்னிரெண்டு வருடங்கள் பூவுலகில் சிலாதர் என்னும் மகரிஷியின் புதல்வராகப் பிறந்து வசிக்குமாறு சாபமும் பெற்றார்.

சிலாதர் மகரிஷி தன் மனைவி சித்தரவதியுடன் இனிதே இல்லறம் நடத்தி வந்தார். ஒருநாள் சிலாதர் மகரிஷியின் ஆசிரமத்துக்கு சப்த ரிஷிகள் வந்தனர். அவர்களை வரவேற்று உபசரித்த சிலாதர் மகரிஷி சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். பின் ரிஷிகளைத் தம் ஆசிரமத்தில் உணவு உண்டு செல்லுமாறு வேண்டினார். ஆனால் பிள்ளைகள் இல்லாத வீட்டில் தாங்கள் அன்னம் கொள்ள மாட்டோம் என்றுரைத்து விட்டுச் சென்றுவிட்டனர்.

உடனே மகரிஷி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இயற்றத் துவங்கினார். சிவபெருமான் அவரது தவத்தை மெச்சி மகரிஷி முன்பாகத் தோன்றி, “மகரிஷியே…. என்ன வரம் வேண்டும்?” என்று வினவ, மகரிஷி, “ஐயனே… என்றும் இறப்பே இல்லாத மகன் எமக்கு வேண்டும்” என்று வேண்டினார். அதுகேட்டுப் புன்னகைத்த இறைவன். “சிலாதர மகரிஷியே… யாகம் ஒன்றினை நீ செய்வாயாக. அவ்வாறு செய்தால் உனக்கு அப்படிப்பட்ட மகன் கிடைப்பான் எனவுரைத்து மறைந்தருளினார்.”

அதுகேட்டு மகிழ்ந்த சிலாதர் மகரிஷி உடனே தாம் யாகம் இயற்ற வேண்டி நிலத்தை உழத் துவங்கினார். அப்போது பூமியிலிருந்து அவருக்கு ஓர் மாணிக்கப் பெட்டி கிடைத்தது. அதனுள் ஜடா முடியோடு நான்கு கரங்களுடன் நந்திதேவர் இருந்தார். அதுகண்டு திகைத்த மகரிஷி, “ஐயனே… இதனை நான் எப்படி வளர்ப்பேன்?” என்று மயங்கினார். அப்போது, “மகரிஷியே.. மீண்டும் பெட்டியை மூடித் திற” என்று அசரீரியாக இறைவனது கட்டளை பிறந்தது.

உடனே மகரிஷி நந்தி தேவர் இருந்த பெட்டியை மூடித் திறக்க, அதனுள் ஓர் அழகிய குழந்தை இருந்தது. சிலாதர் மகரிஷி தனது யாகத்தை மகிழ்வுடன் செய்து முடித்தார். பின் அக்குழந்தை சிலாதர் மகரிஷி தம்பதியரின் அன்புப் புதல்வனாக வளர்ந்தது. இறையருளால் சிலாதர் மகரிஷி தம்பதிக்கு ஓர் மகனும் பிறந்தான்.

என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்று கடுந்தவம் இயற்றிப் பெற்ற பிள்ளை தன் பன்னிரெண்டாம் வயதில் மித்திர வருணரால் மரணமடைவான் என்று அறிந்து சிலாதர் மகரிஷியும் அவரது மனைவியும் பெருந்துக்கம் அடைந்தனர். வீரர்கள் பன்னிரெண்டு வருடங்களே பூவுலகில் வாழ வேண்டும் என்னும் சாபத்தால் உண்டான வினையது. ஆனால் இறை இரகசியம் சிலாதருக்கு எவ்வாறு புரியும்?…….

ஒருநாள் தனது தாய் தந்தையர் மிகுந்த துயருற்று இருப்பதைக் கண்ட அப்பிள்ளை அதன் காரணம் என்ன? என்று தன் தாய் தந்தையரை வற்புறுத்தி வேண்டியது. அதற்கு அவர்கள் விபரம் கூறினர். அதுகேட்ட அப்பிள்ளை, “தந்தையே என்றும் இறவாத் தன்மை உடைய பிள்ளை கிடைப்பான் என்று தங்களுக்கு வரமளித்த அந்தச் சிவபெருமானிடமே இதற்கு நியாயம் கேட்கிறேன்” எனவுரைத்து திட வைராக்கியத்துடன் சிவபெருமானை எண்ணித் தவமியற்றத் துவங்கியது. பல ஆண்டுகளாகக் கடுந்தவம் இயற்றிய பின் அப்பிள்ளையின் முன்பாக இறைவன் தோன்றியருளினார்.
அப்போது நந்தீசர், என்றும் தான் இறையடி நீங்காதிருக்கவும், சிவகணங்களுக்குத் தலைமை வகித்திடும் அதிகாரத்துவமும், சிவத்துவங்களுக்கு ஆசானாக விளங்கும் மெய்ஞ்ஞானாசாரியத் தத்துவமும் இறைவனிடம் பெற்றார். பின் தேவர்களின் இதயக் கமலத்தில் இருந்து தோன்றிய சயஞ்ஞை என்பவளை மணந்து சிவலோகத்தில் எழுந்தருளும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பினார். இது நந்திதேவர் வரலாறு ஆகும்.

Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

Nandi Devar - Pathinen siddhar

Nandi Devar Siddhar:

Nandi Devar is one of the foremost of the 18 yoga siddhas. He has been directly initiated by Lord Shiva himself and some of his contributions include medicine, kaya kalpa & Alchemy. Some of his eminent disciples are Thirumoolar, Patanjali, Dakshinamoorthy, Romarishi & Sattamuni.

There was a sage named Shilada who underwent severe penance to have a boon — a child with immortality. Lord Indra pleased of the austerities of Shilada appeared in front of him to offer a boon. After hearing the request of Shilada and his desire to have an immortal child, Lord Indra suggested he pray to Lord Shiva: nobody else could provide such a boon. Sage Shilada continued his penance for 1,000 years. He was totally immovable for many years, so the termites settled on his body and slowly started to build up their nest. Finally, his whole body was covered up by them. The insects started to eat his flesh and imbibed his blood. At last, only bones remained.
Lord Shiva appeared in front of him and provided the boon for the child. Moreover, Lord Shiva provided Sage Shilada his old form with a single touch. Sage Shilada performed Yagna and a child appeared from the sacrificial fire. His body was clad in armour made out of diamonds. The celestial dancers and singers performed on this auspicious occasion and the deities showered flowers on the child. The boy was named ’Nandi’ — who brings joy. Shilada brought the child home. Immediately the boy lost his divine appearance to an ordinary child. The child completely forgot all about his birth. Sage Shilada was worried about the sudden change. He devoted his time for Nandi's upbringing his education etc. By the age of seven, the boy was well versed in Veda and all sacred texts.

One day the deities Mitra and Varuna visited Sage Shilada. At the first sight of the boy, they commented: Though the boy had all auspicious signs, he would have a very short life. He would not live after the age of eight. Sage Shilada was mortified at this remark. Nandi could not bear his father's sorrow; he began to pray to Lord Shiva. Lord Shiva appeared before him and blessed him. Lord Shiva adorned the boy with a necklace and made him immortal. Lord Shiva blessed the child and declared that he would be worshiped along with Him and become his vahana (vehicle). Immediately the boy got all the divine powers and transformed into half bull-half human. He and Shilada went to Lord Shiva's abode to live.

According to one incident, Nandi took the form of a whale. At Mount Kailash when Lord Shiva was explaining the Vedas to his beloved wife, Parvati lost her concentration and Lord Shiva cursed her to be born as a fisher woman. Later Lord Shiva repents for the mistake. Years later when Parvati reached her marriageable age, Nandi took the form of a whale and started to trouble the people. Later Parvati's father told that anyone who killed the whale will marry his daughter. Later Lord Shiva took the form of a fisherman and killed the whale. He married Parvati and returned to Mount Kailash happily.
In one puranic story, it is stated that once Siva and Parvathi were playing a game of dice. For any game there has to be an umpire, who has to declare who is the winner. Siva and Parvathi agreed to have Nandi (the divine bull) as the umpire. Nandi is a favorite of Siva, as he is Siva's vehicle. Although Siva lost the game, Nandi declared him the winner. It is stated that Parvathi was indignant over Nandi's partiality for Siva and cursed him that he should die from an incurable disease. Thereupon Nandi fell at the feet of Parvathi and pleaded for forgiveness. "Mother forgive me. Should I not show at least this amount of gratitude to one who is my master? Is it not humiliating for me to declare that my master has lost the game? To uphold his honor I no doubt uttered a lie. But am I to be punished with such severity for so small an offence?" Nandi prayed for forgiveness in this manner. Parvathi forgave Nandi and taught him the means to atone for his lapse. She told him. "The Chaturdasi day in the month of Bhadrapada is the day when my son's birthday is celebrated. On that day you have to offer to my son what pleases you most (green grass)". This means that one atones for one's sins when one offers to the Lord what is most pleasing and enjoyable to him. For Nandi the most enjoyable and relishing food is green grass. As directed by Parvathi Nandi worshipped Ganapathi by offering green grass. Nandi was then relieved of his dreaded disease. His health improved and by the grace of Parvathi he was redeemed.

When the positive forces, the devas, and the negative forces, the asuras, joined together on a rare occasion to churn the ocean with a mountain to obtain the nectar of immortality they utilized Vasuki, the serpent, as the rope. The devas pulled from one end and the asuras from the other. Lots of precious herbs and gems were produced during the Churning and one of them was a poison (halāhala) which became human karma. This "poison" was so dangerous that none of the devas or asuras wanted to go near it. It was extremely sticky and coming into contact with this poison, i.e., human karma, would drag the divinity down to the realms of human suffering and ego. As everyone else ran away, Lord Siva, followed by Nandi, came forward to help as he was the only one who could counteract this deadly poison. Siva took the poison into his hand and drank it, the descent of the poison was in turn stopped at His throat, by His divine consort. Siva is therefore also known as Nīlakaṇṭha (the blue-throated one) and Viṣakaṇṭha (the poison-throated one). Nandi saw some of the poison spill out of Siva's mouth and immediately drank if off the ground. The devas and asuras watching were shocked and wondered aloud what would happen to Nandi. Lord Siva calmed their fears saying, "Nandi has surrendered into me so completely that he has all my powers and my protection".

His contributions include on medicine, kayakalpa and alchemy. Some of his eminent disciples are Dhanvantri, Thirumular, Patanjali, Dakshinamurthy, Romarishi and Chattamuni. His samadhi is in Kasi.

There are sixty two references about Nandi in Thirumular’s Thirumandiram. Many medical treatises are in his name such as Vaidhya kaviyam 1200, Nandeesar 300, Nandeesar Karukkidai 300, Nandi nigandu 300, Nandi kalaignam 1000, Nandi Soothiram 500, Samavaadam 200, Dandaga patchini 100, Gana Soothiram 100, Muppu Soothiram 37, Vaidyam 12, Karukkidai Soothiram 33. Many astrological books are found with his name. His Kalai ganam explains about 32 varieties of herbal elixirs and details about various aspects of rejuvenation therapies.

Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

March 11, 2016

Machamuni - Part 3

Inline image 1 Picture
வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள். ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர். தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான் புற்று மூடி மறைக்கும் வரை உறுதியுடன் ஜெபித்தார். அதனாலேயே அவரை வான்மீகி என்றழைத்தனர். வான்மீகி முனிவர் ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினார்.


அக்காரணங்களால் தாமும் அமரத்துவம் பெற்றதை எண்ணி வான்மீகர் சற்றே கர்வம் கொண்டார். அச்சமயத்தில் அவரைக்காண அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் வந்தார். சிவபக்தரான மார்க்கண்டேயர் வான்மீகியிடம், "வான்மீகரே, அமர்த்துவம் எய்த ஆயிரம் ஆண்டுகள் தவம் எதற்குப ஒருநாள் ஒரு பொழுது சிவபூஜை செய்தால் போதுமே! என்றார்.


ராம பக்தரான வான்மீகர் அதனை கேட்டு சினம் கொள்ளவில்லை. தாமும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார். அதற்கான வழியை மார்க்கண்டேயரும் அவரிடத்தில் "தாங்கள் தென்னகத்து செல்லும் பொழுது ஓரிடத்தில் நான் இங்கு இருக்கிறேன் என்று அசிரீரி கேட்கும். அந்த இடத்தில் தவமியற்றினால் விரைவில் சிவதரிசனம் கிடைக்கும் என்றார்.


அதன்படியே தென்னகம் வந்த வான்மீகிக்கு நான் இங்கு இருக்கிறேன் என உணர்த்தி இறைவன் அருள்பாலித்த திருத்தலம் தான் திருவான்மியூர். இத்தலத்தில் இறை தரிசனம் பெற்ற வான்மீகி தான் தரிசனம் பெற்ற கடற்கரை தலம் எனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும். சிவபெருமானின் சடையில் உள்ள கங்கையின் ஒரு பகுதி அங்கு தீர்த்தமாக தங்க வேண்டும்.


ஈசன் தன் தாண்டவக் கோலங்களை தான் (வான்மீகர்) காணும்படி ஆடியருள வேண்டும் என சிவபெருமானிடம் மூன்று வரங்கள் கேட்டார். உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார்

வான்மீகர் ஆதிகாவியமாகிய ராமாயணத்தை இயற்றினார்.
யோகவாசிஷ்டம், வால்மீகன் பதினாற, அத்புத ராமாயணம், கங்காஷ்டகம்
ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் ...

போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்..தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் ..

வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார்.
Inline image 1

வால்மீகியும், தமிழும். - Jayasree, Sanadhana dharmist


தொல்காப்பியம் சொல்லும் அறுவகைப்பட்ட தமிழ்க் கல்வியில்,
தலையாய கல்வி, இடையாய கல்வி, கடையாய கல்வி என்னும் மூன்று வகைகளில்

“தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போலார் செய்தன தலை”.

என்று நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளது சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

நமக்குத் தெரிந்த வான்மீகனார், ராமாயணம் எழுதிய வால்மீகி ஆவார். அவர் எழுதிய ராமாயணத்தையே தலையாய கல்வியாகச் சொல்லியுள்ளாரோ என்று நினத்தால், அது அப்படியல்ல.

‘தமிழ்ச் செய்யுட்கண்ணும்’ என்று தெளிவாகச் சொல்லியுள்ளாதால் வான்மீகனார் என்பவர் தமிழில் இயற்றிய நூல்களையே சொல்வதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழில் வான்மீகனார் எழுதியுள்ளாரா என்று தேடினால், புறநானூறில் 358 ஆம் பாடலை ‘வான்மீகியார்’ என்பவர் எழுதியுள்ளார் என்றவிவரம் இருக்கிறது.

பாடினோர் வரலாற்றில், இவரைப் பற்றி எழுதும்போது, உ.வே.சா. அவர்கள் முதற் சங்கத்தில் வான்மீகியார் என்று ஒருவர் இருந்தார் என்றுசொல்லியுள்ளார்.

ஆனால் வேறு குறிப்புகள் கிடைக்காமையால், அவர் வேறு, இந்தப் பாடலை எழுதிய வான்மீகியார் வேறுஎன்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.


வான்மீகி என்ற பெயரே காரணப் பெயராக உள்ளதால் அதே பெயரில்
மற்றொருவர் இருக்க சாத்தியமில்லை. (வான்மீகி, வால்மீகி என்பவை ஒன்றுக்கொன்று இயைந்து வரும் ஒரேபெயர்களே. லகரம், னகரம் ஒன்றுக்கொன்று மாறிக் கொள்ளும்.) 
வால்மீகியால் கவரப்பட்டு தங்களை வால்மீகி குலத்தினர் என்று சொல்லிக்கொண்ட மக்கள் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் குலப் பெயராக இப்படி அமைத்துக் கொண்டது சிலநூறு வருடங்களுக்கு முன்புதான்.

ஆனால் வான்மீகி அல்லது வால்மீகி என்ற பெயரில் மற்றொருவர் இருந்ததாகத் தமிழிலும், சமஸ்க்ருத்த்திலும் குறிப்புகள் இல்லை.

ஆனால் அந்தப் பெயரைக் கொண்ட ஒருவரால் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன, அவை தலையாய கல்வியாகக் கற்பிக்கப்பட்டன என்பதுநச்சினார்க்கினியர் வாயிலாகத் தெரிகிறது.

வான்மீகனார் என்னும் பெயரில் புறநானூறில் மட்டுமல்ல, சித்தர் பாடல்களிலும் ’வால்மீகன் பதினாறு’ என்னும் ஒரு பாடல் தொகுப்பு உள்ளது. இவை தவிர வால்மீகியின் பெயரில் இருக்கும்
பாடல், ராமாயணம் ஆகும்.

இவை மூன்றையும் ஆராய்ந்தால், இவை அனைத்தையும் ஒருவரே எழுதியிருக்கிறார் என்பது புலனாகிறது.

ஆம், ராமாயணம் எழுதிய வால்மீகியே, புறநானூறுச் செய்யுளையும் எழுதியுள்ளார், சித்தர்கள் பாடல் தொகுப்பில் உள்ள ‘வால்மீகன் பதினாறும்’
அவராலேயே எழுதப்பட்டுள்ளது.
அது எப்படி என்று பார்ப்போம்.


இந்த மூன்று நூல்களிலும் முக்கியமானதாக ஒரு குறிப்பிட்ட செய்தியே சொல்லப்பட்டுள்ளது. 
அது சீதையாக அவதரித்த ’திரு’ அல்லது லக்ஷ்மி அல்லது ‘தாயார்’ என்றும் சொல்லப்பபடும் திருமகள் ஆகும்.

புறநானூற்றில் வான்மீகியார் எழுதிய செய்யுள், ‘திரு’ எனப்படும் லக்ஷ்மியை வழிபட வேண்டும் என்று சொல்கிறது.



வால்மீகி எழுதிய ராமாயணம் ‘மா நிஷாத’ என்றே ஆரம்பிக்கிறது. ‘மா’ என்னும் அந்தச் சொல் மாதா என்னும் லக்ஷ்மியைக் குறிக்கிறது என்றே பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

வால்மீகியார் எழுதிய வால்மீகன் பதினாறிலும் முடிவான செயலாகத் ‘தாயாரைப் பூசித்து வேதம் ஓது’ என்று லக்ஷ்மியான தாயாருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சித்தர் பாடல் கருத்துக்களிலேயே இது வித்தியாசமானது.

வால்மீகியின் பெயரால் வழங்கப்படும் மூன்று நூல்களிலும், லக்ஷ்மி என்னும்தாயார் குறித்த இந்தக் கருத்து ஒரே மாதிரியாக வருகிறதே, அது எப்படி?

ஒரே வால்மீகி எழுதியிருந்தால்தானே இது சாத்தியமாகும்?

அதிலும் அந்த வால்மீகி சீதையிடம் பக்தி பூண்ட ராமாயண கால வால்மீகியாக இருந்தால்தானே அப்படி எழுதியிருக்க முடியும்?

அந்த விசாரணைக்குப் போவதற்கு முன், இந்தப் பாடல்களைத் தெரிந்து கொள்வோம்.

புறநானூறு 358:-

"பரிதி சூழ்ந்த விப்பயன்கேழு மாநிலம்
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே
வையமும் தவமும் தூக்கிற்றவக்துக்
கையவி யனைத்து மாற்றா தாகலிர்
கைவிட்டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாள் திருவே
விடாதோர் இவள் விடப்பட்டோரே "

ஏழு வரிகளாலான சிறிய செய்யுள் இது. காஞ்சித்திணையில், மனையறம், துறவறம் என்னும் துறையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள. இது, வான்மீகியார் அல்லது வான்மீகையார் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது என்று உ.வே.சா அவர்கள் கண்டெடுத்த சுவடிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் :-

இந்த உலகம் எல்லாப்பக்கங்களிலும் சூரியனால் சூழப்பட்டு, அதாவது அதன் ஒளியால் சூழப்பட்டு, அந்த சூரியன் பொருட்டு கொடுக்கப்படும் அவிப்பயனையும் பெற்று, ஒரு பகலில் ஏழு பேர்களால் (ஏழு ஓரைகள்) அடையப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த உலகத்தின் பொருட்டு கிடைக்கின்ற பயனையும், தவத்தின் பயனையும், ஒரு தராசில் எடை பார்த்தால், உலக இன்பத்தால் கிடைக்கும் பயன், ஒரு வெண் சிறுகடுகளவும் இருக்காது. அதனால் காதலர்கள் (காதலர் = வீடு பேறு விரும்புவோர்). உலக இன்பத்தைக் கைவிட்டனர். அப்படி விட்டவர்களை திரு என்னும் லக்ஷ்மியானவள் கைவிடமாட்டாள். ஆனால் உலக இன்பங்களை விடாதவர்களை லக்ஷ்மியானவள் கைவிட்டு விடுவாள். இதுவே அந்தச் செய்யுள் தரும் விவரமாகும் .

பொதுவாக உலக இன்பத்துக்கும், செல்வத்துக்கும் லக்ஷ்மியே காரணமாவாள் என்று நினைக்கிறோம். அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி . ஆனால் நமக்குச் செல்வம் வேண்டுமா , அல்லது லக்ஷ்மியே வேண்டுமா என்றால் ,
லக்ஷ்மிதான் வேண்டும் என்கிறது இந்தச் செய்யுள். செல்வத்தின் மீது பற்று கொண்டால், லக்ஷ்மி நம்மைக் கை விட்டு விடுவாள் . 
செல்வத்தை நாம் விட்டால், லக்ஷ்மி நம்மை விடமாட்டாள் என்கிறது இந்தச் செய்யுள். அதாவது உலக இன்பத்தைத் துறக்க வேண்டும். அப்படித் துறந்தாருக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். அந்த நிலையில் உள்ளவர்களுக்கு அவள் தரும் கடாக்ஷம், அஷ்டமா சித்திகளும், ஆத்ம சாதனைகளும், வீடு பேறும் ஆகும்.

மேற்சொன்ன புறநானூறின் தொடர்ச்சியோ என்று நாம் நினைக்கும் வண்ணம் இதே கருத்தை வால்மீகன் பதினாறு தெரிவிக்கிறது .

பதினாறு செய்யுட்களைக் கொண்ட வால்மீகன் பதினாறு என்பது மற்ற சித்தர் பாடல்களிலிருந்து வேறுபட்டது .

எப்படி என்றால், மற்ற சித்தர்கள் சிவனையே முழு முதற் கடவுளாகப் போற்றி,சிவனருளால் முக்தியைத் தேடினர். அது அவர்கள் இயற்றிய பாடல்களிலும் எதிரொலிக்கிறது .

ஆனால் வால்மீகன் பதினாறின் முதல் செய்யுளிலேயே, 'சிவசக்தி திருமாலின் ரூபமாகும். வருமுருவே சிவசக்தி வடிவமாகும்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது திருமாலிலிருந்து சிவசக்தி ரூபம் உண்டானது என்கிறார் வால்மீகியார்.

இது மற்ற சித்தர்கள் கருத்துடன் ஒத்துப் போகவில்லை.

அதை வால்மீகியாரே ஒத்துக் கொள்கிறார்.

11-ஆம் பாடலில் அதைச் சொல்லுகிறார். தன்னுடைய நூலைப் பார்த்து (கருத்தைப் பார்த்து), மற்ற சித்தர்கள் எல்லாம் சிவனிடம் கோள் சொன்னார்கள்.

ஆனால் சிவன் அவர்களைப் பார்த்துத்தான் சினம் கொண்டான் என்கிறார். மற்ற சித்தர் பாடல்களுக்கெல்லாம் திறவுகோல் போன்ற தனது பாடலை ஏற்றுக் கொண்டான் என்று சொல்லுமிடத்தே, தாயாரைப் பூஜித்து பயன் பெற வேண்டும் என்று கூறுகிறார்.

அந்தச் செய்யுள் வரிகள் இங்கு கொடுக்கப்படுகின்றன:-

சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்:
சிவம்பெத்த சித்தரேல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்:
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக:
நவமான நவக்கிரகம் தன்னுளேயே
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கப்பால். (11)

நாக்கு வாய் செவி மூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்ய முதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்ற அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது: (12)

வேதத்தை விடு என்று சொல்லும் சித்தர் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் வால்மீகியார் வேதத்தை ஓது என்கிறார். அதிலும், தாயாரைப் பூசித்து வேதம் ஓது என்கிறார். இந்தத் தாயார் என்பது சிவ-சக்தியில் உள்ள சக்தியைக் குறிக்கலாமே எனலாம்.

இவரது பாடலில் வேறொரு இடத்திலும், மற்ற சித்தர் பாடல்களிலும் தாய்- தந்தை என்று ஒன்றாகவே சிவ சக்தியைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதிலும் அர்த்தநாரீஸ்வர ரூபத்தைச் சித்தர்கள் பல இடங்களில் போற்றியுள்ளார்கள்.

ஆனால் சிவனில் ஐக்கியமாகி சித்தி பெறுவதையே பிற சித்தர்கள் சொல்லியுள்ளார்களே தவிர, தாயாரைத் தனியே பூசித்து மேன்மை பெறுவதைச் சொல்வதில்லை. மேலும் சக்தியைப் பற்றிச் சொல்லுமிடத்தில் சக்தி என்றே சொல்லியுள்ளார்களே தவிர, வால்மீகியார் போலச் சொல்லவில்லை.

வான்மீகியார் சொல்லும் கருத்து வேதத்திலும் காணப்படுகிறது. திரு என்னும் செல்வத்தைத் தேடுவதைவிட, திரு தரும் லக்ஷ்மியைத் தன்னிடம் வரவழைப்பதே மிகவும் சிறந்தது என்று சொல்லும் ரிக் வேதப் பாடல் ஒன்று இருக்கிறது.

ஸ்ரீ சூக்தம் என்னும் அந்தப் பாடல் கருத்தை ஒட்டி, புறநானூற்றுச் செய்யுளும், வால்மீகன் பதினாறு சொல்லும் தாயாரும் அமைந்துள்ளன. ராமாயணம் எழுதிய வால்மீகி, தான் எழுதிய அந்த காவியத்தை ‘சீதாயா சரிதம் மஹத்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

அது சீதையின் மகத்தான சரித்திரம் என்பது பொருள். சீதையுடைய வாழ்கையின் முக்கியக் காலக்கட்டத்தில் வால்மீகியே அவளுக்குத் தந்தையாகவும், பக்தனாகவும் இருந்தார். சீதையின் மீது அவருக்கு இருந்த அன்பு மகத்தானது. இந்தப் பாடல்களில் திருவும், தாயாரும் சொல்லப்பட்டுள்ளதால், சீதையைப் போற்றின ராமாயண வால்மீகியே இந்தப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்று எண்ண ஏதுவாகிறது.


வான்மீகனார் என்னும் பெயர் தமிழ் நாட்டின் இரண்டு இடங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. ஒன்று எட்டிக்குடி, மற்றொன்று திருவான்மியூர்.

சென்னையில் உள்ள திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தின் தல புராணத்தில், வான்மீகனாரது வரலாறு சொல்லப்பட்டுள்ளது.

இது ராமாயணம் எழுதிய வால்மீகியின் வரலாறுடன் ஒத்துப் போகிறது.ராமாயணம் எழுதிய வால்மீகி உண்மையில் ஒரு முனிவரது மகன். அவரது இயற்பெயர் ‘ப்ராசேதஸ்’ என்பதே. அவர் சிறுவனாக இருந்தபோது காட்டில் தொலைந்து விடுகிறார். அவரை ஒரு வேடன் வளர்த்து வந்தான். அவர் வேடனாகவும், திருடனாகவும் இருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவதால் அவர் வாழ்க்கையை வெறுத்து தியானத்தில் அமர்ந்தார். பல வருடகாலம் அவர் அசையாமல் தியானம் செய்து வந்த போது அவர் மீது கரையான் புற்று எழும்பி விடுகிறது. வெண்மை நிறத்தில் இருக்கும் அந்தக் கரையானை ‘வால்மீகம்’ என்று சமஸ்க்ருத்த்தில் அழைப்பார்கள். அதனால் அவருக்கும் வால்மீகி என்ற பெயர் ஏற்பட்டது. இப்படி ஒரே வரலாற்றையே நாம் காண்கிறோம். மருந்தீஸ்வரரைப் பூசித்து வந்ததால், அந்தத் தலத்துக்குத் திருவான்மியூர் என்ற பெயர் ஏற்பட்டது.


அந்த வால்மீகி முனிவர் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள எட்டிக்குடி என்னும் தலத்தில் சமாதி அடைந்தார் என்று சித்தர்கள் பற்றிய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

எட்டி மரங்கள் அதிகம் காணப்பட்டதால் எட்டிக்குடி என்ற பெயர்.இப்பொழுது எட்டுக்குடி என்றும் வழங்கப்படுகிறது. இந்தத்தலத்தில் இருக்கும் முருகன் கோவிலில் வான்மீகியாருக்கு என சன்னிதியும் இருக்கிறது.

எட்டிக்குடியில் வான்மீகியார் சமாதி அடைந்தது உண்மையே என்பதை ஒரு சித்தர் பாடல் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழில் எழுதிய வால்மீகியார்,
ராமாயணம் எழுதிய வால்மீகியே ஆவார் என்றும் அந்த நூல் தெரிவிக்கிறது.

போகர் என்னும் சித்தர் எழுதியுள்ள ‘போகர் ஏழாயிரம்’ என்னும் நூலின் 5834 ஆம் பாடலில், ராமாயணம் எழுதிய வால்மீகியும், வான்மீகனாரும் ஒருவரே
என்று சொல்லப்பட்டுள்ளது.

அதற்கடுத்த பாடலில் (பாடல் எண் 5835), வான்மீகியார் தமிழ்ப் புலமை வாய்ந்தவர் என்றும் அவர் 700 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவர் எட்டிக்குடியில் சமாதி அமைந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இவ்வாறு தமிழ்நாட்டுடன் சம்பந்தம் பெற்ற வால்மீகியாரும், ராமாயணம் எழுதிய வால்மீகியும் ஒருவரே என்பதை போகர் தெளிவுபட எழுதியுள்ளார். ஆதி காவியம் என்று சொல்லப்பட்ட ராமாயணத்தை சமஸ்க்ருதத்தில் எழுதிய வால்மீகி முனிவரே, தமிழிலும் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார். வால்மீகி வாழ்ந்த காலம் ராமன் வாழ்ந்த காலமாகும். 
அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி வாழ்ந்திருக்கிறார்.
அந்தக் காலம் தென்னன் தேசத்தில் முதல் சங்கம் நடந்து கொண்டிருந்தகாலம். முதல் சங்கத்தில் வான்மீகியார் என்ற ஒருவர் இருந்தார் என்று உ.வே.சா. அவர்கள் சொல்வது, இந்த வால்மீகிக்குப் பொருந்துகிறது.

சரயு நதிக் கரையிலும், கங்கை நதிக்கரையிலும் ராமனைக் கண்டு அவன் புகழ் பாடிய இவர், அங்கிருந்து எங்கோ தென் முனையில் இருந்த தென் மதுரைக்கும் சென்று சங்கப் பலகையில் உட்கார்ந்திருக்கிறார்.
அவருக்குத் தமிழ்ப் புலமையும் இருந்திருக்கிறது. அது எப்படி?

அன்றைய பாரதம் முழுவதும் பரவலாகத் தமிழ் பேசப்பட்டிருந்தால் இது சாத்தியம். மேலும், தமிழ்ச் சங்கத்தில் பங்கு பெற வேண்டும் என்ற அவா அன்றைய பாரத மக்களுக்கு இருந்திருந்தாலும், அவர்கள் தமிழைக் கற்று இவ்வாறு சங்கத்தில் அரங்கேற்றியிருப்பார்கள்.

இதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம். அன்றைய தமிழ்ச்சங்கத்தில் இறையனார் என்ப்படும் சிவ பெருமானார், தனது சங்கத்தோடு அணிந்த செவியைத்தீட்டி, பாடல்களைக் கேட்டு ரசித்தார் என்றே சொல்லப்பட்டது என்று கண்டோம் (பகுதி 43).


சிவபெருமான் மீது மாறாக் காதல் கொண்ட ஒருவர், பாரதத்தின் எந்த மூலையில் இருந்திருந்தாலும், சங்கத்தில் பாடல் அரங்கேற்றுவதை ஒரு வரப்பிரசாதமாகவே நினைத்திருப்பார்.

அதற்காகவேனும் தமிழைக் கற்று, பாடல் இயற்றும் திறமை பெற்று, சங்கப்பலகையில் அமர்ந்திருப்பார். இந்தக் காரணத்தினாலும், தமிழ் மொழி பாரதம் முழுவதும் நன்கு அறிமுகமான மொழியாக இருந்திருக்கும்.

Home
Pathinettu Siththargal Previous                                                    Next