January 27, 2016

Kamala Muni Siththar - Part 4

காளாங்கி நாதர். (அ) காலாங்கி நாதர்.

Picture
துரகிரி மலையில் காலங்கி நாதரால் உருவாக்கப்பட்ட வகார தைலக் கிணறு உண்டு. உலோகத்தைத் தங்கமாக மாற்றும் தைல மூலிகைக் கிணறு. சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம் எனும் கிராமத்தில் இறைபக்தியும், திருப்பணி கைங்கர்யங்கங்களில் சிறந்த வாமதேவன், கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று ஆலயப்பணியைத் தொடந்தான்.ஆலயம் பாதிபாகம் கட்டி முடிவதற்குள் பொருள் பற்றாக் குறையால் பணியைத் தொடர இயலவில்லை. பலரிடம் யாசித்தும் யாரும் உதவி புரியவில்லை. 
சதுரகிரியில் தவம் புரிந்து கொண்டிருக்கும் காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை சந்திக்க சென்றான்.நடந்தவற்றைக் கூறி நின்று போன சிவாலயப் பணி தொடர வழி செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி நின்றான்.ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக இருந்தார். ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். 

வாமதேவன் உண்மையிலேயே ஆலயம் கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான் என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை நிறைவேற்ற நினைத்தார். மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை, உதிர வேங்கை,ஜோதி விருட்சம்,கருநெல்லி முதலியவற்றாலும், முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார். அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களைத் தங்கம் உண்டாக்கினார். 'வணிகரே..! ஈசன் கோயில் கட்ட உனக்கு எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து கோயிலைக் கட்டி முடி போஎன்றார். காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த பொன்னை எடுத்துச் சென்ற வணிகன் வாமதேவன் தன் விருப்பப்படியே சிவாலாயம் கட்டி முடித்தான். அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர். பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றைக் கொண்டு மூடிவிட்டார்.

துஷ்டர்கள், பேராசைக்காரர்,வீணர்களிடம் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,நான்கு திசைகளுக்கும் வாரகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் ஆகிய தெய்வங்களைக் காவலுக்கு நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். [தைலக் கிணறு சதுரகிரியில் இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி ஆலயத்தின் அருகில் இன்றும் காணலாம். கிணற்றின் மீது இரும்புச் சட்டங்களால் மூடப்பட்டு
ள்ளது. இன்றும் சித்தர்கள் அங்கு உருவாகவும், அருவுருவாக நடமாடுவதைப் பலரும் கண்டுள்ளனர். குறிப்பாக பெளர்ணமி காலங்கள் விசேஷம்] காலாங்கிநாதர் ககனகுளிகையின் உதவியோடு விண்வெளியாக சீன நாடு சென்று காலனுடைய அருள் பெற்று சமாதி அடைந்தார். சீன நாட்டில் காலங்கி நாதர் சமாதி அடைந்திருந்த முக்காதக் கோட்டைக்குள் நுழைந்து போகர் முனிவர் வணங்க சமாதியின் கதவு திறந்து ஒளிமயமாக காலாங்கிநாதர் போகருக்கு தரிசனம் தந்தார். வினை, எதிர்வினை என்பது பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம். இதன் அடிப்படையில்தான் எல்லாமே இயங்குகிறது. மனிதனும் கூட தான் செய்யும் வினைகளுக்கான எதிர்வினையை எதிர் கொள்கிறான். இந்த வினைப் பயனை முழுமையாய் களைந்து “பிறவாப் பேரின்ப நிலை” அடைவதே உயரிய சித்த நிலை எனப்படுகிறது. இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை, குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும்.

சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும் பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர்.அநேகமாய் எல்லா மதங்களிலும் இந்த வினைப்பயன் பற்றிய கூற்றுகளை முன்வைத்து அதை தீர்த்திடவும், குறைத்திடவும் பல்வேறு உபாயங்களை கூறியிருக்கின்றன.இவை யாவும் செலவு பிடிப்பதும், நடை முறைக்கு சாத்தியமில்லாத வைகளாகவும் இருக்கின்றன.

கர்மவினை குறித்து சித்தர்கள் பல்வேறு விளக்கங்களையும், உபாயங்களையும் கூறியிருந்தாலும், கர்ம வினையினை களைய காலங்கிநாதர் தனது பாடலொன்றில் பின்வருமாறு உபாயமொன்றை கூறுகிறார்.

பெருமையாம் கோரக்கர் குண்டா ஓரம்
பிறங்கும் ஒரு தீர்த்தமதில் நீராடி செய்து
அருமையாம் குண்டாநீர் அள்ளி உண்ண
செய்த பாவவினையெல்லாம் அகன்றுபோமே
ஒருமையாம் உள்ளமதில் கோரக்கர் தம்மை
உன்னியே துதிசெய்ய நல்வாழ்வுண்டகும்
- காலங்கி நாதர் -

மிகுந்த பெருமைகளைக் கொண்ட கோரக்கர் குண்டாவின் அருகில் ஒரு தீர்த்தம் உள்ளதாம்.


அந்த தீர்த்தத்தில் குளித்து பின்னர் நேராக கோரக்கர் குண்டாவில் நிறைந்திருக்கும் அருமையானை நீரை அள்ளிப் பருகினால் ஒருவன் செய்த பாவ வினைகள் எல்லம் தீர்ந்துவிடுமாம். அத்துடன் கோரக்கரை மனதில் தியானித்து வணங்கினால் நல்வாழ்வும் கிடைக்குமென்கிறார் காலங்கி நாதர். காலங்கிநாதர் தனது “காலங்கிநாதர் ஞானவித்து ரகசியம் புத்தகம்” என்ற நூலில் கோரக்கரின் இருப்பிடத்தையும், தரிசனத்தையும் பின்வருமாறு கூறுகிறார்.

பார்க்கவே கோரக்கர் குண்டாதோன்றும்
தேரப்பா கஞ்சவுடன் மூலி சேர்ததிற் கடைந்து
சித்தர் முனி ஒவ்வொருவருக்கும் ஈவார்
நேரப்பா அதனருகே குகைதான் உண்டு
யென்றும் நிலையாக சிவயோகம் செய்வாரங்கே
கோரப்பா கோரக்கர் தம்மைக் கண்டு
கொண்டவனே ஞானாமிர்தம் உண்டோந்தானே
- காலங்கி நாதர் -

சதுரகிரி மலையில் கோரக்கர் கஞ்சாவுடன் மூலிகைகள் சேர்த்து அரைத்து சித்தர்களுக்கு கொடைத்த இடமான கோரக்கர் குண்டா இருக்கிறது. அதன் அருகில் அவரது குகையும் இருக்கிறது. அந்த குகையில் கோரக்கர் என்றும் சிவயோகத்தில் வீற்றிருப்பார்.அவருடைய தரிசனம் பெருபவர்கள் ஞான அமிர்தத்தை உண்டவர்கள் ஆவர் என்கிறார்.


அகத்தியரும், காலங்கி நாதரும் கோரக்கரின் தரிசனம் என்றும் கிடைக்குமென அருளியிருப்பதை அவதானியுங்கள். தூய மனதுடன் அவரை வணங்கும் அனைவருக்கும் அவரது தரிசனம் என்றும் கிடைக்குமெனவும், அப்படியான தரிசனத்தை பெற்றவர்கள் ஞான அமிர்தத்தினை உண்ட பலனை அடைவார்கள் என்பதே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்திடும் செய்தி! குருவருள் துனையுடன், தூய்மையான உள்ளத்துடன் ஆர்வமும்,அக்கறையும், தேடலும் உள்ள எவரும் இன்றும் கூட அந்த பெருமகனாரை தரிசிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

காலாங்கி நாதர் வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய 

வகாரத் திரவியம்,
வைத்திய காவியம்,
ஞான சாராம்சம் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
ஞான பூஜா விதி,
இந்திர ஜால ஞானம்,
ஞான சூத்திரம்,
உபதேச ஞானம்,
தண்டகம்
 

போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார்.
இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர்.

No comments:

Post a Comment