February 11, 2016

Alagar Malai Siddhar ~ Ramadevar - Yacop - Part 5


Picture 
 “ஆதியென்ற மணி விளக்கை அறிய வேணும்                                       
            அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும் 
சோதியென்று துய்யவெளி மார்க்க மெல்லாஞ் 
         சுகம் பெறவே மனோன்மணி யென்னைத்தாள் தன்னை 
நீதியென்ற பரஞ்சோதி ஆயிபாதம் 
         நிற்குணத்தினின்ற நிலையாருங் காணார் 
வேதியென்ற வேதாந்தத்துள்ளே நின்று 
       விளங்குவதும் பூசையிது வீண் போகாதே” 

மேற்கண்ட பாடலில் உள்ளமாகிய கோவிலில் இறைவனை இருத்தி, அன்றாடம் சித்த சுத்தியுடன் வழிபட்டால் எல்லா சித்திகளும் கைவரப்பெறலாம் என்பது இராம தேவரின் பூசை விதி முறையின் பொதுக்கருத்தாக அமைகிறது. சிந்தையை அடக்கி சும்மா இருப்பது சுகம் என்பர் யோகிகள். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. 

இராமதேவர் தன்னுடைய பாடல்களில் மனதை அடக்கவும், உள்ளத்தை ஒருநிலைப்படுத்தவும் உலகின் முழுமுதற் பொருளை வணங்கிவழி காட்டுகிறார். இராமதேவர் வாழ்ந்தது நாகப்பட்டினத்தில். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். இராமதேவர் பல சித்தர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இராமதேவன் அரபுமொழியில் 17 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இராம தேவருக்கு நபிகள் நாயகம் ஒருமுறை காட்சி கொடுத்ததாகக் கூறுகின்றனர். அதன்பின்பு சிலகாலம் சமாதி நிலையில் இருந்தார். 

போகமுனிவர் ஒரு நாள் இராமதேவர் தியானத்திலிருக்கும் போது வந்தார். அப்போது இராமதேவரிடம் “மெக்காவால் யாக்கோபுகளாவும் தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கும் சமாதி அடைய வேண்டிய காலம் இதுவல்ல,  இன்னும் ஏராளமான பயனுள்ள காரியங்கள் நீ செய்ய வேண்டியுள்ளன. எனவே, அவற்றையெல்லாம் முடித்த பின்பு சமாதியடைவது நல்லது என்றார். போகரின் உபதேசத்தால் இராமதேவர் பல்வேறு அரிய கற்ப மூலிகைகளைப் பற்றி அறிந்து, அவற்றைச் சேகரிக்க தமது ஒப்பற்ற சித்தியால் காடுமலைகளையெல்லாம் சுற்றித்திரிந்தார். இராமதேவருக்குச் சதுரகிரி மலையில் சித்திகள் பல கைகூடியதால் அங்கிருந்து தவம் செய்தார். அவர் சதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களைத் தமிழில் எழுதினார். இராமதேவர் எழுதிய நூல்கள்: வைத்திய காவியம் பரிபாஷை தண்டகம் வைத்திய சூத்திரம் நிகண்டு கலைஞானம் அட்டாங்கயோகம் முப்பு சூத்திரம் சிவயோகம் பட்கணி-பரஞானகேசரி வாத சூத்திரம் யாக்கோபுசவுக்காரம் வைத்திய சிந்தாமணி, சதுரகிரி வனத்தில் இராமதேவர் தங்கியதால் இராமதேவர் வனம் என்ற பெயரும் உண்டு. இவர் அழகர் மலையில் சமாதி அடைந்தார். மெக்காவில் சமாதியடைந்ததாகச் சில நூல்கள் கூறுகின்றன.

இராமதேவர் – பூஜாவிதி

இராமதேவர் சித்தர் பெருமானின் இந்தப் பத்துப் பாடல்களும் பெதுவாக பூஜாவிதி என அழைக்கப்பெறுகின்றன.சிலர் இராமதேவரை யாகோபு எனவும் வேறுபெயரிட்டு கூறுகின்றனர். எளிமையான தமிழ் மொழியில் அனைவருக்கும் பயன்படும் படி இவர் எழுதியுள்ள பாடல்கள் இதோ....

1. ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்சுகம் பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்நிற்குணத்தி னின்றநிலை யாருங் ணார்வேதியென்ற வேதாந்தத்துள்ளே நின்றுவிளங்கவும் பூசையிது வீண் போகாதே. 

2. போகாமல் நின்ற தோரையா நீதான்பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றேஆகாம லானந்த வல்லி யாலேஅடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளேவாகாமல் வாலையுடை மூலத் தாலே வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 

3. முக்கோண மூசுழிதற் கோண மாகிமுதலான மூலமணி வாலை தன்னில் நாற்கோண நாலுவரை நயந்து காக்கநாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்தெரிந்திட வேயுரைத்திட்டேன் விவர மாகதாக்கோண விட்டகுறை வந்த தென்றால் தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 

4. சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதிசீரியவை யுங்கிலியும் சவ்வு மாகிமுத்தான லட்சவுரு செபிக்கச் சித்திமுற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்வித்தான வித்தையடா முட்டும் பாருவிரிவான முகக்கருவு மூன்று கேளுசத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்சதுரான விதிவிவர மறியக் கேளே. 

5. கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்துகிருபையுள்ள வுருவேற்றித் திட்ட மாகவாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்வளமாகப் புதைத்துவிடு நடுச் சாமத்தில்ஆளப்பா அடியற்று மரண மாகிஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்துகாணப்பா கண்மணியே வீழ்வான் பாவிகதைதெரியச் சொல்லுகிறேனின்னம் பாரே. 

6. இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்அறிவுடைய முளைச்சீவிச் சிங்கை யோதிவன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்வலுவான நூற்றெட்டு வுருவம் போடுசன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டுசதிராக ஆணிகொண் டடித்தி டாயே. 

7. அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடுஆனந்த வுருக்குலைந்து பட்டுப் போகும்தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானுந்தொகைமுடிந்து வாச்சுதடா விந்தப் போக்குவிடுத்தபின்பு விடமேறிக் கருவிப் போகும் விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாதுதடுத்துவிடு நகரத்தி லடித்துப் பாருதட்டழிந்து உயிர்புதலாய்ச் சேத மாமே. 

8. ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு விளையாட்டே யில்லையடா இந்தப் போக்குசோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்தாமப்பா சத்தியமே சொன்னேன் பாருதவறாது ராமனுடை வாக்யந் தானே.

9. தானென்ற மூலமுடன் சித்தி பண்ணுதனதான நூற்றெட்டுக் குள்ளே சித்திஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்கோனென்ற கோடு சித்துக் கணத்திலாடுங்குணமாக ரேவதிநாட் செய்ய நன்றுவானென்ற அட்டமியிற் செய்ய நன்றுவளர்பிறையில் செய்தவனே யோகி யாமே. 

10. யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன்ஓகோகோ முன்னுரைத்த மூலத் தாலேயோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சுதாகிகளாயத் தாயுடைய கிருபை யாலேதவமாகும் மவமாகும் பமுண்டாகும்மோகிகளால் மூலபூசா விதிபத் தாலேமுத்திபெறச் சித்திவிளை பத்து முற்றே

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். 

இக்கருத்தை அவர் தம் பாடலில்,

மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா

எனவுரைத்துள்ளார்.

இவர் மெக்காவுக்குச் சென்று இசுலாமுக்கு மதமாறி யாக்கோபு என்ற பெயருடன் தமிழகம் வந்தததாக சொல்லப்படுகிறது

சித்தர்கள் இராச்சியம் யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணம்காண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" - 

இராமதேவர் பூசாவிதி என்பது இராமதேவர் என்வரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று.

இவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
இவர் சிறியனவும் பெரியனவுமாக 27-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

1. இராமதேவவைத்தியக்காவியம்
2. இராமதேவநிகண்டு
3. இராமதேவஜாலம்
4. இராமதேவகலைஞானம்
5. இராமதேவ சிவயோகம்
6. இராமதேவ பரிபாஷை
7. இராமதேவ தண்டகம்
8. இராமதேவ பட்சணி
9. இராமதேவ பரஞான கேசரி
10. இராமதேவ வைத்திய சூத்திரம்
11. இராமதேவ சுத்திமுறை
12. இராமதேவ அட்டாங்க யோகம்
13. >இராமதேவ முப்பூ சூத்திரம்
14. இராமதேவ பரிபாஷை விளக்கம்
15. இராமதேவ களங்கம்
16. இராமதேவ வாத சூத்திரம்
17. இராமதேவ வைத்திய சிந்தாமணி
18. இராமதேவ வைத்தியம்.
19. இராமதேவர் கருக்கடைச் சுருக்கம்
20. இராமதேவர் கருமான சூத்திரம்
21. இராமதேவர் கேசரி சூத்திரம்
22. இராமதேவர் சோசிடம்
23. இராமதேவர் பூசாவிதி

போன்றவை இவரது தமிழ் நூல்கள்.

அரபுமொழியில் 17 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.
“ நாடியது கைகூடும் நன்மையாவும் சேரும்

தனமானது தானே சேரும் எண்ணமெல்லாம் ஈடேறும்

முன்னே வினையும்
இராம தேவர் சித்தர் தாள் சரணம்.
 Previous                                                                Next

No comments:

Post a Comment