வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்
சுந்தரானந்தர் சிவஅம்சமாக திகழ்ந்தவா். அவர் தம் ஆத்மாவை நெற்றி மூலம் வெளிக் கொணர்ந்து இன்றும் நம்மில் கலந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் வல்லப சித்தர் எனும் மகாசித்தர். இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவா் தம் நெற்றியில் சந்தனம் வைத்து மூடப்பட்டு இருக்கும்.
சுந்தரானந்தர் இயற்றிய நூல்கள்:
1. சுந்தரானந்தர் காவியம்
2. சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
3. சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
4. சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
5. சுந்தரானந்தர் கேசரி
6. சுந்தரானந்தர் சித்த ஆன
7. சுந்தரானந்தர் தீட்சா விதி
8. சுந்தரானந்தர் பூசா விதி
9. சுந்தரானந்தர் அதிசய காரணம்
10. சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
11. சுந்தரானந்தர் மூப்பு
12. சுந்தரானந்தர் தண்டகம்
ஆகிய நூல்களை எழுதினார். மேலும் பயிர்த் தொழில் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் கூறியுள்ளார்.
தியானச்செய்யுள்
சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆய சித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன் பாதம் சரணம்.
சுந்தரானந்தர் பூசை முறைகள்
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்குமத் திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் ஐந்து முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதாரக் கூறிப் பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1. ஒளி பொருந்தியவரே போற்றி!
2. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
3. லோக ஷேம சித்தரே போற்றி!
4. யோக மூர்த்தியே போற்றி!
5. அவதார புருஷரே போற்றி!
6. அபயமளிப்பவரே போற்றி!
7. சிவ யோகியே போற்றி!
8. இந்திரனுக்கு அருளியவரே போற்றி!
9. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
10. சகல சித்திகளையும் உடையவரே போற்றி!
11. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
12. சுகங்களைத் தருபவரே போற்றி!
13. தாய் போல் காப்பவரே போற்றி!
14. தண்டனைகளை நீக்குபவரே போற்றி!
15. தைரியத்தை கொடுப்பவரே போற்றி!
16. சித்த மருத்துவத் தெய்வமே ஸ்ரீ சுந்தரானந்த சித்தரே போற்றி! போற்றி!
எனக் கூறி நிவேதனமாகக் கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடம் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும். நிறைவாக “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி!” என 108 முறை கூறி வழிபட வேண்டும்.
சுந்தரானந்த சித்தரின் பூசை பலன்கள்:
1. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
2. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை ஏற்படாது.
3. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
4. புத்திர பாக்கியம் உண்டாகும்.
5. குரு பிரீதி அடைவர்.
6. புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. சித்த பிரமை அகலும்.
8. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
9. வறுமை அகன்று வளமான வாழ்வு அமையும்.
No comments:
Post a Comment