December 04, 2014

Kulasekara Azhwar

KulasEkara AzhwAr

Alwar 7 - Part 1



Biography

: KulasEkara AzhwAr was born to the cEra king DhiDavrathan and his queen nAdhanAyaki in the year 767 CE. From his childhood he was taught the sAstrAs, epics, arts, Thamizh, Sanskrit, and martial arts. In due course he became the king and fought several wars with the adjoining sOzha and PANDya kings and won. He ruled his kingdom to the satisfaction of his subjects for quite a few years. Then he had a dream in which Lord Venkateswara appeared and from then on he diverted his attention to devotion and religion. At one time in his court a religious scholar was giving a discourse on Ramayana and the predicament that Rama faced in fighting Ravana. KulasEkara got perturbed and asked his army general to get his army ready to be sent to help Rama. Such was his devotion to Rama. He had to be consoled later by the scholar that all was well with Rama and that he prevailed in the war.

His ministers got disenchanted with his attention on religion and not on royal affairs. Eventually he renounced his kingdom, anointed his son on the throne and started visiting shrines. By virtue of his extreme devotion to Rama he had a vision of Rama in his dreams and Rama named him KulasEkara perumAL akin to iLaiya perumAL (LakshmaNa). He is considered a representation of kausthubham (the gem on the chest of Lord Vishnu). He lived till he was 67 and attained mukthi at a place called mannArkoyil (near ThirunelvEli).


PerumAL thirumozhi: Being a scholar in Thamizh, KulasEkara AzhwAr wrote 105 pAsurams in praise of the deities at Srirangam, Thirumalai (Thiruppathi), ThiruviththuvakkODu, ThirukkaNNapuram, ThiruccitrakUDam, AyOdhdhi, and also on Rama and Krishna. All the pAsurams have been compiled into 10 decads. It is important to point out here that it was the common practice among AzhwArs to do thematic 10 verses on each deity, episode, or shrine. Let us examine what each decad covers. In the first three decads (31 pAsurams in all) the AzhwAr agonizes about when he would be able to visit Srirangam and see Lord Ranganatha whose feet are washed by the river Cauvery.. He wants to do service to the Lord and his devotees. He recognizes that the real duty of the Lord’s servitors is to shun worldly pleasures.

He wants to be a slave to the Lord in all seven births. In Srirangam he built a maNTapam and did renovation work in the 3rd enclosure surrounding the temple. It now bears KulasEkara’s name.

 
In the fourth decad he longs to be associated with ThiruvEngaDam (thirumalai/Thiruppathi) in any form—be it animate or inanimate in the sacred hills. He mentions that he does not want his royalty, wealth, and even the opportunity to rule the heavens if given. He would rather want to be born as the fish in the temple pond or the bird (a crane for instance) that circles there. The desire to be born as a crane is indicative of his earnestness to catch a glimpse of the Lord just as the crane would eagerly wait for the fish to swim by. He would want to be born as a flower bush, the hilltop, and even the flagpole at the entrance to the temple. The wild river, the path leading to the temple and even the steps at the entrance to the temple are his choices. Let us examine one pAsuram here.

 
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. NDP 685

SeDiyAya valvinaigaL tIrkkum thirumAlE!
neDiyOnE! vEngaDavA! ninkOyi linvAsal
aDiyArum vAnavaarum arambaiyarum kiDandhiyangum
paDiyayk kiDandhun pavaLavAy kANbEnE!


In this pAsuram he appeals to Lord VenkaTEswara of Thiruppathi who quells the miseries of his devotees that he would like to be a stone step at the entrance to His shrine which will be stepped on by the devotees, and celestials who come to visit Him. That way he could watch the Lord forever. To this day the step that leads to the sanctum sanctorum of VaishNavaite shrines is known as “KulasEkara thiruppaDi” (KulasEkara Sacred Step) in recognition of his intense desire to be born as the stone step.

In the fifth decad he talks of the glory of the divya dEsam vittuvakkODu, located in PAlakkADu district (in KEraLA). There are so many similes in this decad. He says he considers the Lord as his mother and himself as the Lord’s child. Even if the mother were to desert the child, the child would cry and go to the mother. A patient would continue to see his medicine man although the medicine man may use harsh techniques (using knife) to cure him. Likewise even if God subjected him to undergo miseries, he would continue to visit the Lord in order to get deliverance. Another pAsuram talks about a bird which circles a ship would fly away to find the shore but not finding it would come back to the ship’s tall pole and sail. The AzhwAr finds himself in the same situation as the bird and that he would always surrender unto the lord.

In the sixth decad he describes the despair/disappointment experienced by the gOpis at gOkulam when Krishna does not turn up as promised. He expresses the separation pangs experienced by the gOpis in several pAsurams. One pAsuram resorts to a complaint against Krishna by the gOpis. The gOpis tell Krishna that they are not gullible enough to be taken by the glib talk by him. It is a mock complaint telling Krishna not to come to see them because he utters deceitful words to attract them but does not follow through with his promises.

 
The seventh decad is very heart wrenching. It deals with dEvaki’s misfortune with respect to her not being able to fondle and enjoy her infant son Krishna. The AzhwAr experiences her agony vicariously. DEvaki missed all the childhood pranks of Krishna. He even pleads with the lord on behalf of dEvaki to reenact such childhood activities to satisfy his birth mother. In addition he mentions that when baby Krishna was asked “where is father?” he turned his eyes towards NandagOpan (foster father) while that privilege was not available to VasudEva (real father). Let us look at one specific pAsuram here which describes YasOdha’s pleasure.

 
முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்
முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்*
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்*
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள்
செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்*
தொழுகை யுமிவை கண்ட அசோதை தொல்லை
யின்பத் திறுதிகண் டாளே. NDP 715


Muzhudhum veNNaiyaLaindu thoTTuNNum
mugizhiLanjciRuttAmaraik kaiyum
ezhilkoL tAmbu kONDaDippadhaR keLgum
nilaiyum veNtayir tOyndha sevvAyum
azhugaiyuM anji nOkkuman nOkkum
aNikoL senjciRu vAy neLippadhuvum
tozhugaiyum ivai kaNDa asOdhai
tollai inbattiRudhi kaNDALE

 
Meaning: YasOdha witnessed all the mischievous deeds of baby Krishna such as: eating butter with the lotus-bud-like tender little hands stirring in the pots of butter; laughing derisively upon being whipped by the soft rope; walking around with white curd spilling from the red mouth; mock crying and the fake look of fear; the curving of the red little mouth; and the appearance in front of his mother with folded hands seeking mercy.
 

These mischievous deeds were the divine child’s way of teasing YasOdha. These were the very same activities that would have given dEvaki (the real mother) immense pleasure which she was denied since the infant was transported in the middle of night soon after birth to gOkulam. The AzhwAr experiences such agony of dEvaki himself.
 

The eighth, ninth, and tenth decads deal with Rama, the favorite deity of KulasEkara. The 10 songs in the eighth decad constitute a lullaby to baby Rama. All these songs were dedicated to the lord at ThirukkaNNapuram. Let us read one such lullaby.
 
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ. NDP 719


Mannupugazh kausalaithan maNivayiRu vAyttavanE!
Tennilangaik kOnmuDigaL sinduvittAy! semponsEr
kanninanmA madhiLpuDaisUzh kaNapuratten karumaNiyE!
ennuDaiya innamudE! irAgavanE! tAlElO.

 
In the above pAsuram the AzhwAr sings a lullaby to baby Rama placing himself in the position of a mother. He sings: Oh, Rama! the darling son of Kausalya you beheaded the king of lanka. You are now occupying the shrine here at ThirukkaNNapuram which is surrounded by the golden ramparts. You are my nectar. Please fall into sleep gently.
 

In the ninth decad he assumes the role of Dasaratha (Rama’s father) and agonizes over KaikEyi’s demand that Rama should be exiled for 14 years, Rama having to sleep on the stone platform in the forest, and curses himself over such a predicament that befell Rama. In the tenth decad he describes the whole episode of Ramayana while observing Lord Govindaraja of ThirucitrakUDam (Cidambaram). Although Lord Govindaraja is in the recumbent position, the AzhwAr sees the lord as Rama seated on the throne or in the standing posture there.

KulasEkara AzhwAr was also well-versed in Sanskrit and accordingly sang 53 slOkhams in Sanskrit on Krishna. It was in praise of Krishna titled Mukunda Mala (garland for Krishna). In the 52nd slOkham he signs it as a bee at the lotus feet of the lotus-eyed lord. In the final slOkham he declares the benefit (phalastuti) of reciting all the slOkhams, viz., the eradication of all sins and the attainment of the Lord’s abode. He is revered as PerumAL and his pAsurams (105 of them) are known as PerumAL Thirumozhi in recognition of his exalted status.

குலசேகர ஆழ்வார்


குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.

இவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. . இவரும், மகளான சேரகுலவல்லி தாயாரும் அரங்கனையும், ராமனையுமே அடிபணிந்துவந்தனர்.

குலசேகர ஆழ்வார்

பிறந்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 - 780)
ஆண்டு - பிரபவ
மாதம் - மாசி
திருநட்சத்திரம் - புனர்பூசம்(புனர்வசு, வெள்ளிக்கிழமை)
அம்சம் - கௌஸ்தூபம்(பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்)
நாடு:கொங்கு நாடு,
ஊர்; கரூர் வஞ்சி,
மலை: கொல்லிமலை






திருடவரதன் என்ற சேர மன்னனுக்குப் பிறந்தவர்தான் குலசேகரன். இவர் பெருமாளின் அபூர்வமான கெளஸ்துப மணியின் அம்சமாகப் பிறந்தார் என்று வைணவப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

அரசராகப் பிறந்தாலும் பெருமாள் பக்தி மிகுந்தவர். அரச சுக போகங்களை விடுத்து, ஆன்மிக நாட்டம் கொண்டவராக வாழ்ந்தார். எனவே ஸ்ரீவைஷ்ணவர்களை நன்கு உபசரித்துவந்தார். காலட்சேபங்களைக் கருத்தூன்றிக் கேட்பார்.
ஒரு நாள் அவர் ஸ்ரீராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது கரன், தூடணன், திரிசரன் உள்ளிட்ட அரக்கர்கள் தலைமையில் பதினான்காயிரம் அரக்கர்கள் ஸ்ரீராமனை எதிர்க்கப் படை திரட்டிப் போரிட வந்துள்ளனர் என்றும், ஸ்ரீராமரோ படைத் துணை ஏதுமின்றி போருக்குத் தயாரானார் என்றும் சொற்பொழிவாளர் சொன்னார்.
குலசேகரன் மன்னன் அல்லவா? உடனடியாகப் படை திரட்டிக்கொண்டு, ஸ்ரீராமருக்குத் துணை சேர்க்க ஆணையிட்டார். சொற்பொழிவாளர், மறுநாள் காலட்சேபத்தில் போரில் ஸ்ரீராமன் வென்றார் என்று கூற, படையைத் திரும்புமாறு ஆணையிட்டார் அரசர்.
மற்றொரு நாள், சீதையை ராவணன் கொண்டு சென்றான் என்று வேறொரு சொற்பொழிவாளர் கூற, இதனைக் கேட்ட மன்னன் குலசேகரன் படை திரட்டிக்கொண்டு சென்று கடலில் இறங்கிவிட்டார். அங்கே ஸ்ரீராமன், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சகிதமாக, மன்னனுக்குக் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரைக் குறித்து அறிந்த அவர், அங்கு சென்று பெருமாளைத் தரிசிக்க விரும்பினார். இவரது பக்தியை அறிந்திருந்த அமைச்சர்கள், அவர் அங்கேயே தங்கிவிடுவாரோ என்று அஞ்சி இவரை அங்கு செல்ல விடாமல் தடுக்க முனைந்தார்கள். மன்னர் கிளம்பும்போதெல்லாம், பாகவதர்களை அழைத்துவிடுவார்கள். மன்னனும் உபசரிக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால் பாகவதர்களின் வருகையால் பலமுறை அவரது பயணம் தடைபட்டது.
மன்னனின் உபசரிப்பில் திளைத்த பாகவதர்களோ, அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய உரிமையுடன் இருந்தனர். இதனைப் பொறுக்காத அமைச்சர்கள் சிலர், ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராம திருமூர்த்தத்திற்கு வழக்கமாக அணிவிக்கும் முத்து மாலையை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, பாகவதர்களே திருடினர் என்று குற்றம்சாட்டிவிட்டனர்.
மனவேதனை அடைந்த மன்னர் திருட்டைக் கண்டுபிடிக்க ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு வெள்ளிக் குடத்தில் விஷப் பாம்பை விடும்படி சொன்னார். பாகவதர்கள் முத்து மாலையை எடுத்திருந்தால் பாம்பு என்னைக் கொத்தட்டும் என்று சொன்னபடி குடத்தினுள் கையைவிட்டார். பாம்பு அவரைக் கொத்தாமல், குடத்தில் இருந்து நழுவிச் சென்றுவிட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியும் குற்ற உணர்வும் அடைந்த அமைச்சர்கள் உண்மையைக் கூறி மன்னிப்பு கேட்டதுடன் முத்துமாலையை எடுத்துக் கொடுத்துவிட்டனர். இந்நிகழ்ச்சியால் மன்னர் மனம் கசந்தது. அரசியல் நாடகம் வெறுத்தது. மகன் திருடவிரதனுக்கு முடிசூட்டிவிட்டு ஸ்ரீரங்கம் சென்று அங்கேயே தங்கிவிட்டார். இன்றும் பள்ளி கொண்ட அரங்கனின் திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரம் குலசேகர வீதி என்று அழைக்கப்படுகிறது.


குலசேகராழ்வார் இவரை ஆழ்வார் என்று அழைப்பதைவிட குலசேகர பெருமாள் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது ஆகும்.


'சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்' என்னும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவனும் அவதரித்துள்ளார். யார் அவர்? நம் குலசேகரப் பெருமாள் தான்

நம் குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அவர் சிறுக்குழந்தையாய் இருந்த போது

என்ன! இவர் வாழ்விலும் ஏதேனும் அதிசயமா...?

ஆமாம்! என்ன அதிசயம்... !அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய் இருந்தோமா, மண்ணைக் கைப்பற்றினோமா.... என்று வாழாமல், அந்த மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர் அல்லவா இவர்! அதுவே மிகப்பெரிய அதிசயம் தானே!.


பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.


எல்லா அரசர்களையும் போல் எல்லைக் கைப்பற்றலிலே இவர் வாழ்வும் கழிந்தது. இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீ ரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரைக் கண்டு பொறாமை கொள்ளாத மன்னர்களே இல்லை எனலாம். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.


மன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு
திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது. 

 
எம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர். இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார். அப்பப்பா, எத்துனை பக்தி! எவ்வளவு தூரம் அவர் அந்தக்கதைகளில் ஆழ்ந்திருந்தால் இவற்றை எல்லாம் செய்து இருப்பார் என்று பாருங்கள்.

அவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.

மன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர். என்னவென்றால்,

ஒருநாள், அவர் அணுதினமும் பூசித்து, வணங்கி வழிபடும் ஸ்ரீ ராம பிரானின் திருவுருவசிலையில் இருந்த நவரத்தின மாலை ஒன்று காணாமல் போய்விட்டது. அதை, விஷ்ணு பக்தர்கள் தான் எடுத்து விட்டனர் என்று, அவரது அமைச்சர் அவரிடம் உரைத்தார்.

இதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார். உடனே அவர், கொடிய விடமுள்ள பாம்பு ஒன்றை ஒரு குடத்திலிடச்சொல்லினார். பின், "எம்பிரான் பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்" என்று கூறிக் குடத்தினுள் தன் கையைவிட்டார். ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை.

அப்பொழுது, அவரது அமைச்சர், அந்த மாலையை எடுத்து மறைத்து வைத்தது, நாங்கள்தான்... இராமபிரானின் மீதான உங்கள் பக்தியை நீக்கவே அவ்வாறு செய்தோமென்று கூறி, அந்த மாலையைத் திருப்பிக் கொடுத்து, தம் தவற்றிற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார்.

இதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடத்து ஒப்படைத்து விட்டு, இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார். இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானைபெரிய பெருமாள்.

எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதாலோ என்னவோ, இவரும் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்டச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.

குலசேகர ஆழ்வார், சென்று வணங்கிய திருத்தலங்கள் எவைஎவை என்றால், திருவரங்கம்,  திருவேங்கடம்,
திருவித்துவக்கோடு,
திருஅயோத்தி, திருக்கண்ணபுரம்,திருசித்திரக்கூடம், திருச்சித்திரக்கூடம் என்பது எந்த ஊர்னு கேக்குறீங்களா? அது வேற எந்த ஊரும் இல்லை, நம்ம தில்லை நடராச பெருமான் வீற்றிருக்கும் திருச்சிதம்பரமேதான். ;-))




அரவு அரசப் பெருஞ்சோதி,......
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?

(647)
என முதல் பாசுரத்தில் ஏங்கும் குலசேகரப் பெருமாள் அரங்கனை ‘அந்தமிழின் இன்பப் பாவினை வடமொழியை’ (650) என்று தமிழாகவும், வடமொழியாகவும் காண்பது சிறப்பு.
அடியார்
இப்பதிகத்தில் அடியார்களின் கூட்டத்தைக் கண்டால் கண் பயனைப் பெறும்; தொண்டர் அடிப்பொடியில் (தூள்) ஆடப் பெற்றால் கங்கையில் குளித்தாடும் பேறு பெறுவதற்கு ஒப்பாகும். அரங்கன் கோயிலின் முற்றத்தில் (முன்பகுதி) உள்ள அடியார்களின் திருவடிப்பட்ட சேற்றைத் தலையில் அணிந்து கொள்வேன், தொண்டர் சேவடியை ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சம், அடியாரை எண்ணிச் சிலிர்க்கின்றது. ‘காதல் செய் தொண்டருக்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சம்,
தொண்டர் வாழ்வுக்கு மாலை (காதல்) கொண்டது என் மனம் எனப் பலவாறு (658-657) தொண்டர்களுக்குத் தொண்டரான அடியவர்களுக்குத் தாம் அடியவர் ஆன பாங்கைப் புலப்படுத்துகிறார். ஆழ்வார் நோக்கில் வழிபடுபவர்கள் உயர்ந்தவராகின்றனர். பகவானை விடப் பாகவதர்கள்
உயர்ந்தவர்கள் என்பது வைணவக் கோட்பாடு.நிலையான வாழ்வைத் தேடும் பக்தரான குலசேகரர், ‘எம்பிரானுக்கு ஏழ் பிறப்பும் பித்தன் ஆனேன்’ (673) என்றும் ‘பித்தனாய் ஒழிந்தேன்’ (674), ‘பேயனாய் ஒழிந்தேன்’ (675) என்றும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அரங்கன் மீது தாம் கொண்ட ஈடுபாட்டைப் பாசுரத்தில் வடித்து வாசிப்பாரையும் மெய்மறக்கச் செய்கின்றார்.

திருவேங்கட மலைத்தொடர்பு
திருவரங்கப் பெருமானை வாழ்த்தி வணங்கிய குலசேகரர் திருவேங்கடத்தானை நினைந்து உருகும் நிலை, பயில்வோர் மனங்களை உருகக் செய்யும் கனிவு கொண்டது.

திருவேங்கட மலையின் சுனையில் மீனாக, குருகு என்னும் பறவையாக, வேங்கடத்தான் உமிழுகின்ற பொன்வட்டில் பிடிப்பவனாக, செண்பக மரமாக, தம்பகமாக (புதர்ச்செடி), சிகரமாக (மலை உச்சி), காட்டாறாக, நடக்கின்ற பாதையாக (வழி) ஆக வேண்டும் என ஏங்கியவர் பின், படியாக ஏதேனுமாகக் கிடக்க வேண்டும் (677-687)
எனச் சொல்லும் பாசுரங்கள் ஆழ்வாரின் ஏக்கத்தைக் காட்டுவதோடு உயிரானது இறைவனை அடையத் துடிக்கும் துடிப்பையும் அல்லவா புலப்படுத்துகிறது? அந்த அனுபவத்தை உணர முடியுமே தவிர உணர்த்தவா முடியும்?

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலேநெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

(685)
(செடி = துன்பம். நெடியோன் = வாமனாவதாரத்தில் வானுற
வளர்ந்தவன், கிடந்தியங்கும் = நடமாடும்)

பக்தி / வழிபாடு
அரங்கனைக் காணும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் போது அற்புதமான உவமைகள் இடம் பெறுகின்றன. சான்றாக, ‘கண்டார் இகழும்படியானசெயல்களைக் காதலன் செய்தாலும், கொண்டவனைத் தவிர வேறொருவரை நினைக்காத குலமகள் போல, (689) நீ என்னை ஆளாவிட்டாலும் உன் பாதத்தைப் பாடித் தொழுவேன். ‘கோபத்தால் தாய் குழந்தையை நீக்கினாலும் அவளை நினைந்து அழும் குழவி போல உன் அன்புக்காக ஏங்கினேன் (688).’ உன் திருவடியே சரணம், நடுக்கடலில் பாய்மரத்தில் உச்சியில் உள்ள பறவை பறந்து கரை காணாமல் மீண்டும் பாய்மர உச்சிக்கு வருவது போல ‘693) உன்னையே என் மனம் விரும்புகின்றது என்பதை,

எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே
அடையல்அல்லால்

எங்கும் போய்க் கரைகாணா நெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே

(693)
எனப் பாடுகின்றார்.
இப்பதிகம் முழுக்க அரங்கத்தான் மீது கொண்ட காதலை உவமை வழி விளக்கிச் செல்கிறார். உவமையின் உச்சத்திற்குச் சான்று:

எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்;
மற்றவைபோல்
மெய்த்துயர் வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா!
என் சித்தம்மிக உன்பாலே வைப்பன் அடியேனே

(694)

(பைங்கூழ் = பயிர், முகில் = மேகம், மெய்த்துயர் = துன்பம், சித்தம் = மனம்)

வானம் மழை பொழியாது போனாலும் பயிர்கள் மேகத்தையே  நோக்கி இருக்கும். அதுபோல இறைவா! நீ என்மேல் கருணை காட்டாவிடினும் என் மனம் உன்னிடம் தான் எனச் சொல்லும் குலசேகரர் அவன் தாள் (திருவடி) வேண்டி நிற்கின்றார்.

தாயாகிய ஆழ்வார் குலசேகர ஆழ்வார் தாயாகிறார். தம் ஏக்கத்தைப் புலப்படுத்த கண்ணனைப் பெற்ற தாயாகிய தேவகியாகிறார். ‘ஒருத்தி
மகனாய்ப் பிறந்து (தேவகி - வசுதேவன்) ஒருத்தி மகனாய் வளர்ந்தவன் (யசோதை - நந்தகோபன்). எனவே மகன் வளர்ந்த காட்சியைக் காணும் பேறு, யசோதைக்குக் கிடைத்தது போலத் தனக்குக் கிடைக்க வில்லையே என்பதை நினைத்துப் பெற்ற தாயாகிய தேவகி புலம்புவதாக 11 பாசுரங்கள் உள்ளன (708-718).

தாய் தேவகிக்காக மட்டுமல்ல தந்தை வசுதேவருடைய நிலையையும் உணர்ந்து சிறு நாடகக் காட்சியைக் கண்முன் நிறுத்துகின்றார் ஆழ்வார். அதாவது அன்புடைய மகளிர் தம் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு அப்பா எங்கே? எனக் கேட்கிறார்களாம்; அதுகேட்ட குழந்தை பதில் சொல்லுவது போல் தன் கண்களைத் தந்தை இருக்கும் பக்கம் திருப்புகிறதாம். அக்காட்சியைக் காணும் பேறும் வளர்த்த தந்தை நந்தகோபனுக்குக் கிடைத்ததாம்; பெற்ற தந்தை வசுதேவருக்குக் கிடைக்கவில்லையாம். 

குழந்தை தள்ளாடித் தள்ளாடி நடந்துவரும் அழகைக் காணவும் உண்ட உணவின் மீதியை உண்ணவும் தனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று ஏங்குகின்றாள் தேவகி.

இராம அவதாரம்
ஆண்டாள் நாச்சியார் கோகுலத்தில் வாழ்ந்த கண்ணனை நினைந்து உருகிப் பாடியது போல, குலசேகரர், இராம அவதாரத்தில் ஈடுபாடு கொண்டு தாயாகத் தாலாட்டியும் (719-729)

தசரதன் (தந்தை) நிலையில் (703-740) 
நின்றும், திருச்சித்திர கூடம் இராமன் கதையை (741-751) 
அடியார் நிலையில் நின்றும் (658-667) 
உள்ளம் உருகப் பாடுகின்றார் (8,9,10 ஆகிய மூன்று பதிகங்கள்),

திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத்தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள் அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வேண்டேன் மற்றரசு தானே

(747)
இப்பாசுரம் இராமபிரானின் திருவடிகளைச் சூடிக்கொள்ளும் அரசைத் தவிர, மற்றைய அரசபதவி அரசு அல்ல என அரசனாக நாட்டை ஆண்ட குலசேகரர் ஆழ்வாராகி இராம காதலனாக மாறிவிடும் நிலையைக் காட்டுகின்றது.திருவேங்கடமலையானிடம் மண்ணை ஆளும் அரச பதவி வேண்டாம் எனச் சொன்னவர் (678) உண்மையான பொருளை- நிலையான பொருளை நாடி அடையத் துடிக்கும் தேடல் இது! தாலாட்டு

‘மன்னுபுகழ்க் கௌசலை (இராமன் தாய்) தன் மணிவயிறு
வாய்த்தவனே! என்னுடைய இன்னமுதே! இராகவனே
தாலேலோ’
(719)
எனத் தாலாட்டும் ஆழ்வார், தாலாட்டுப் பாடுவது போல
இறைவனின் பெருமைகளைப் பாடிப் பரவுகின்றார். 

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலக முண்டவனே!வாலியைக் கொன்றரசிளைய வானரத்துக் களித்தவனே! காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே! ஆலிநகர்க் கதிபதியே! அயோத்தியனே! தாலேலோ!
(725)
(கால் = காற்று, மணி = கடல்மணி)
தசரதன் புதல்வன், மைதிலி (சீதை) கணவன் (722), 
சனகன் மருமன் (மருமகன்) (721) எனத் தாலாட்டு என்னும் உத்தியைப்
பயன்படுத்தி இராமாவதாரக் கதையைச் சுட்டுகின்றார்.

• தசரதன் புலம்பல்

தாயாகி ஏங்கியவர் தந்தையாகி (தசரதனாகி) இராமாவதாரம்
குறித்துப் புலம்புகிறார்.
இராமன் காட்டுக்குச் செல்ல, தசரதன் புலம்பல்;

நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ! எம்பெருமான்! என்செய் கேனே!

(721:3-4)
(நேரிழை = பெண் (சீதை) இளங்கோ = தம்பி) என்றும்,
‘என் பேச்சைக் கேட்டு, களிறு, தேர், குதிரை ஆகிய படைகளை
விட்டுவிட்டு காட்டு மரத்தின் நிழலில்,


கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே!

(732:4)
‘நீ சென்ற பிறகு என் நெஞ்சம் இரண்டாகப் பிளக்காமல்
உள்ளதே, கேகய மன்னன் மகளான கைகேயியின் சொல்
கேட்ட யான் தீவினையாளன் (734), எங்கள் கோலத்தை மாற்றி
என் துணைவியோடு நான் செல்ல வேண்டிய காட்டிற்கு நீ
செல்லுதல் சரியா என்றெல்லாம் புலம்பியவர்.
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
ஏழ்பிறப்பும், நெடுந்தோள் வேந்தே!

(738 : 3-4)
எனக் குலசேகரர் பாடும்போது தசரதனாகவே மாறிவிடுகின்றார்.
கிருஷ்ண அவதாரம்
ஆயர்பாடிப் பெண்களுள் ஒருத்தியாகக் கிருஷ்ணனின்

குறும்புகளைப் போற்றுகின்றார் குலசேகர நாயகி. இராம
அவதாரத்தில் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடிய
ஆழ்வார், கிருஷ்ண அவதாரத்தில் காளையாகக் கன்னியரைப்
படுத்திய பாட்டைப் பாசுரங்களில் வடித்துள்ளார்.
  • இராமன், இராமாயணக் கதை, அக்கதையில் வரும்
    பாத்திரங்களாக நிற்றல் (தசரதன், கௌசலை), கிருஷ்ண
    அவதாரம், ஆயர்பாடிப் பெண்கள் நிலை, பெற்ற தாய்
    (தேவகி) நிலை இப்படிப் பிற அவதாரங்களிலும்
    ஈடுபட்டு நிற்கின்றார் ஆழ்வார்.
  • தாயாகிக் கண்ணனின் குறும்பு
  • தந்தையாகி (தசரதன்) மகன் (இராமன்) பிரிவு
  • தாயாகித் (கௌசலை) தாலாட்டு
  • ஆய்ப்பாடிப் பெண்ணாகிக் காதல்
  • அடியாராகி இராமன் கதை
  • கிருஷ்ண அவதாரத்தில் பெற்ற தாயாகிய தேவகியாக
    மாறி, பெற்றதைத் தவிர வளர்க்கும் பேறு பெறவில்லை
    என்னும் தாய்மைத் துன்பத்தையும், தம் துணையாகிய
    வசுதேவருக்கும் அது இழப்பு என்பதையும் உணர்ந்து
    உணர்ந்து ஏங்கி ஏங்கிக் காட்சிப்படுத்துகின்றார்.
  •  ஆய்ப்பாடிப் பெண்ணாக அல்லது ஆய்ச்சியாகவே
    மாறிவிடுகின்றார். ஆழ்வார், அதாவது நாயகியாக நின்று
    ஏக்கத்தைப் பாடுகின்றார்.
  •  திருவரங்கம், திருவேங்கடம், வித்துவக்கோடு ஆகிய
    திவ்விய தேசங்களின் பெருமையைப் போற்றிப் பாடி
    உள்ளார்.
     
  • பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வார்
    தாமும் ஓர் அரசன் என்பதால் அரசனாக -
    சக்ரவர்த்தியாக வாழ்ந்த தசரதன் மீது ஈடுபாடு கொண்டார்
    போலும்.

(To be continued) 2 ஆவது பகுதி தொடரும் 
Home  Previous                                                                     
                                                            Next

No comments:

Post a Comment