57. Mangaiyarkkarasi Nayanar
The history of Mangaiyarkkarasi Nayanar
(Courtesy: Shaivam.org)
There
were two small firelets, which in presence of a huge storm destroyed a
big dense forest of ignorance. They were the two lights who drove away
the clouds of false philosophies for the shaivam Sun to shine again in
the historic pANdiya kingdom. They were the queen of all womenfolk -
queenmaN^gaiyak^rkkarachiyAr and highly intelligent and caring minister for the king and kingdom - kulachchiRaiyAr (2).
There
are two people who could best shape the life of any man. One is the
mother who brings him up and after that it is the wife. In fact it is
the wife who is completely with the man as his better half. She is the
company throughout the life. The husband and wife should
live for the principles and love. Wife is not a slave to follow
whatever the husband says but the spouse should be a caring friend who
encourages the good deeds and corrects when the partner goes off the
track. This splendid devotee who could be seen as the model of such good
qualities who with her patience, determination, love and above all
great devotion to
The glorious feet of the Lord opened the eyes of her
husband.
aN^gaiyarkkarachiyAr was born in the royal family of the chOza kingdom. She grew up with genuine love and devotion for the Lord of pArvati. Superior in actions container of good characters she got married to the pANdiya king, n^edumARan . The king n^edumARan was valiant, powerful but did not get right guidance to enjoy the Sun of shaivam but was sitting with a small lamp.
He restrained himself to the philosophies of Jainism. During that
period in the pANdiya kingdom the old, time proven, not force or
condition based sanAtana dharma was under the shadow of
Jain philosophies. The Jain philosophies which are good in general but
which were out of a limited domain of knowledge and putting on the
followers hard to follow means as the only way of liberation, went high
in the minds of the people who failed to realize or did not get an
enlightening sage to know the ocean of knowledge available for ages
through the sages in sanAtana dharma. The abodes of the Lord in that
famous kingdom became the places of Jains. The Jains for whom non
violence is a major basis went violating that principle itself.
The
reverend maN^gaiyarkkarachiyAr who had an unshrinking love for the Lord
who is form of love, was quite shocked with the state the pANdiya
kingdom was. She was bothered much that her respectable husband was
unable to enjoy the superior nectar of shaivam. That lady of wonderable
endurance was waiting for a dawn. There was one more person - the prime
minister kulachchiRaiyAr who was also worrying day and night about the
philosophical fall of the kingdom. There were only these two devotees with whom the blissful shaivam was present. They were praying to thean^dhakAn^thaka (killer
of ignorance) for the salvation of all the people in the kingdom. Their
prayer and patience gave fruit when they received the message that the
saint who cried to get the Lord of chIrkAzi reached in thirumaRaikkAdu . For those two seekers of Truth it was the news of all theirgood deeds giving
fruit all in a sudden. They sent knowledgeable attendants to salute the
prodigy and request his blessings. The young saint who had lots of
mercy for all the creatures accepted thier request to come to pANdaiya
kingdom. With good omens appearing she felt now it is going to be only
good for the king, her beloved husband. With overwhelming eagerness to
salute the young saint who came to protect the king and the kingdom from
falling, she told the king that she was going to salute the Lord of
madhurai and went to receive him. Along with the queen and the minister
the saint went and worshiped the Lord of madhurai.
The
queen who was anxious about the troubles the Jains would make to him
decided to sacrifice herself if something bad happens to the prodigy.
She was praying all the time for the safety of that son of Lord shiva.
The Jains put on fire in the place where thirunyAnachampan^dhar and
other devotees who came along were staying. But by the grace of God he
transferred it to become a fire in the stomach of the king. The queen
and the prime minister were very much worried on hearing that the Jains
set fire to the saints place, and it added to their worry when they
heard the king got a serious pain in the stomach. Because the king was
the husband of maN^gaiyarkkarachiyAr the dawn like saint asked the fire
to go slow to the kings stomach. When the entire Jain sages tried out
their mantras without any alleviating effect on the king, the young
saint smeared the Holy ash chanting the Holy five letters. The king was
immediately cured of the illness. The queen maN^gaiyarkkarachiyAr, the
great lady who led her life in the real meaning a wife should be for the
husband - correcting the mistakes of the husband and making him lead
the proper life was very happy at this. When that abode of knowledge won
the arguments with the Jains and taught the excellence of shaivam to
the king and the people, the queen was felt really blessed by the Lord
for enlightening her beloved husband and the entire kingdom. Let the
patience, determination and strong love for the Lord of lords the queen
maN^gaiyarkkarachiyAr possessed stay in mind.
மங்கையர்க்கரசியார்courtesy: Dinamalarமங்கையர்க்கரசியார் சோழ மன்னருடைய அன்புடைச் செல்வியராய்ப் பிறந்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். இவரது இயற்பெயர் மானி என்பதாகும். மங்கையர்க்கெல்லாம் தலைவியான பேறு பெற்றதால் மங்கையர்க்கரசி என்று சிறப்புப் பெயர் பெற்றாள். இளமை முதற்கொண்டே எம்பெருமானின் திருவடிகளில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்த அம்மையார் பாண்டிய நாட்டில் பரவி வந்த சமணக் கொள்கையை ஒழித்துக்கட்ட அரிய தொண்டாற்றினாள். திருஞானசம்பந்தரைத் தமது நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றினாள். இவ்வாறு மங்கையர்க்கரசியார், சைவத்திற்கும், சைவக் கொள்கைக்கும் ஆற்றிய அருந்தொண்டினை, சேக்கிழார் சுவாமிகள் வெகுவாகப் புகழ்ந்து சிறப்பித்துள்ளார். |
குருபூஜை:மங்கையர்க்கரசியாரின் குருபூஜை சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
வரிவளையால்மானிக்கும் அடியேன்
மங்கையர்க்கரசியார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
கணவனின் ஆத்மலாபப்பேறே கண்ணாக அவனுக்கு வழித்துணையாதல் உத்தம மங்கையர் இயல்பெனல்
சைவாசாரப்
படியான தாம்பத்திய வாழ்வு, இம்மையின்பம் மட்டிலன்றி அம்மையின்பமான
சிவப்பேறுங் குறித்தமைவதாகும். வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் சிவசத்தி
பாவனையின் வழுவாது அதற்கருகமாம் தூய வாழ்வு வாழ்ந்து சிவப்பேறடைய வைக்குந்
தீர்ந்த நோக்கில், மணவறையில் அவர்களை உமாமகேஸ்வரர்களாகப் பாவித்துத்
திருமணக்கிரியை நடத்தும் வழக்கம் இதற்கு நிதர்சனமாகும். ஆதி நூலாகிய
தொல்காப்பியமே வாழ்வின் அத்யந்த இலட்சியம் இது என்பதனைக் "காமஞ் சான்ற
கடைக்கோட்காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங்
கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பண்பே" என வகுத்தோதி யிருப்பதுங்
கருதத்தகும். எனவே, தாம்பத்திய வாழ்வில் ஈடுபடும் இருவரும் பரஸ்பரம்
ஒருவரது ஆன்மிகப் பேற்றில் மற்றவர் கண்ணாயிருக்க வேண்டுங் கடப்பாடு
முடையவராவர். இவ்வகையில் மனைவி, கணவருடைய ஆன்மிகப் பேற்றிற் கண்ணாயிருந்து
மாபெருஞ் சாதனையொன்றைச் சாதித்த செய்தி மங்கையர்க்கரசியார் புராணத்தில்
வருதல் காணலாம்.
புராதன
சைவத்தமிழ்ப் பேரிராஜதானியாகிய மதுரையிலிருந் தரசாண்ட நின்ற சீர்
நெடுமாறன் ஒருகால் சமணர் மந்திர தந்திர வஞ்சனைகளால் மதிமோசம் போய்ச்
சைவநெறி கைநழுவிப் போகத் தானுந் தன் நாடும் சமண
ஆதிக்கத்துட்படவிட்டிருக்குங் கட்டத்தில் அவன் பட்டத்துத் தேவியாகிய
மங்கையர்க்கரசியார் தன்போல் சைவப் பிடிப்பினின்று நழுவாதிருந்த மந்திரியார்
குலச்சிறையார் அநுசரணையுடன் திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குத் தூதனுப்பி
மதுரைக் கழைத்து அதன் விளைவாகப் பாண்டி நாட்டிற் சைவ மறுமலர்ச்சி பெற
வைத்தவிபரம் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராண வரலாற்றால்
நன்கறியப்படும். அவருடைய இப்பிரயத்தனத்துக்கு முக்கிய காரணம் தன் கணவன்
அங்ஙனம் அவநெறிப் பட்டிருத்தல் மூலம் அவன் பெற்றாகிவிட வேண்டியதாகிய
சிவப்பேற்றுக்குப் பெரும் பின்னிடைவு நேரப் போகிறதென்ற அவர் உள்ளத்
துடிப்பேயாம். அது அங்ஙனமாதல், திருவாலவாய்த் திருக்கோயில் வாய்தலில்
முதன்முறையாக நாயனாரை வரவேற்றுப் பணிகையில் அவர்நிலை இருந்தவாற்றை, "பானலங்
கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி யானும் என்பதியுஞ் செய்த தவமென்கொல்
என்றார்" எனச் சேக்கிழார் எழுதிக் காட்டுமாற்றாற் பெறப்படும். மேலும்,
அங்குப் பிள்ளையாரிருந்த மடத்துக்குச் சமணரிட்ட தீவெப்பு அரசனுக்கு
வெப்புநோயாய்ச் சென்று வருத்தியதன் சார்பில் பிள்ளையார் முன்னிலையிற்
குலச்சிறையாருடன் கூட்டாக அவர் புரிந்து கொண்டதாக வரும் விண்ணப்பம்,
"வெய்யதொழில் அமண்குண்டர் விளைக்கவரும் வெப்பவர்தாம் செய்யுமதி மாயைகளால்
தீராமைத் தீப்பிணியால் மையலுறு மன்னவன்முன் மற்றவரை வென்றருளில்
உய்யுமெமதுயிரும் அவன் உயிருமென உரைத்தார்கள்" எனச் சேக்கிழார் வாக்கில்
வந்திருத்தலினாலும் அது பெறப்படும்.
அரசியார்
கணவனது சிவப்பேற்று நலம்பற்றிக் கொண்ட இம்முயற்சியானது அன்றைய நிலையிற்
சைவத்துக்குப் பெருநலம் விளைப்பதாயும் நாட்டின் தன்னியல்பான சமய
சுதந்திரத்தை மீட்டுறுதிப் படுத்துவதாயும் நெடுமாறன் மட்டிலன்றி அவன்
குலத்தையே மலினப் படுத்தவிருந்த கொடும் பழியைத் தவிர்ப்பதாயும்
அமைந்தவாறுணரத்தகும். தூய்மையான பதிபக்தியுள்ள கற்பரசி யொருத்திக்குத்
தெய்விக ஆற்றல் தானே விளையும் என்பதும் அதன்மூலம் சூழ்நிலை நன்மைகள்
அளப்பில விளையும் என்பதும் இதனாற் பெறப்படும். திருவள்ளுவர், "தெய்வந்
தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்றதனாலும் அது
வலுவுறும். அரசியாரின் இத்தகு தெய்விக மேன்மை கண்டன்றே மாநுடம்
பாடாவியல்புள்ள திருஞான சம்பந்தப் பிள்ளையார் ஒருகால், "மங்கையர்க்கரசி
வளவர்கோன் பாவை" என்றெடுத்தும் மற்றொருகால் "மானினேர்விழி மாதராய்
வழுதிக்கு மாபெருந் தேவிகேள்" என விளித்தும் இரு திருப்பதிகங்கள்
இசைத்தருளியதும் என்க.
இம்மங்கையர்க்கர்சியார்
புராணத்தில் அவர் மங்கலப் புகழ் நலன்களைத் தொகுத்துரைக்குஞ் சேக்கிழார்
சுவாமிகள் அவரை, "எங்கள் தெய்வம்" எனவும் "தென்னர் குலப் பழிதீர்த்த
தெய்வப் பாவை" எனவும் போற்றியதோடு, அவர்தம் பதிபக்தி நலம் விளங்கத்தக்கதாக,
"நெடுமாறன் தனக்குச் சைவவழித் துணையாய் நெடுங்காலம் மருவிப் பின்னை ஆசில்
நெறியவரோடுங் கூட ஈசர் அடிநிழற் கீழமர்ந்திருக்க அருளும் பெற்றார்" எனவும்
போற்றி, மேலும் "பூசரர் சூளாமணியாம் புகலி வேந்தர் போன ஞானம் பொழிந்த
புனிதவாக்கால் தேசுடைய பாடல் பெறுந் தவத்தி னாரைச் செப்புவதியா
மென்னறிந்து" என்றுரைத் தடங்குந்திறம் உற்றுணர்ந்து நயத்தற்பாலதாம்.
பெண்மையின் தெய்விக ஆற்றல் நோன்மைக்கும் அதன் லோகோபகாரத் தன்மைக்கும்
இவ்வரசியார் வரலாறு அசையாத அத்தாட்சியாகும்.
No comments:
Post a Comment