July 14, 2014

Nesa Nayanar - Nayanmar 58

58. Nesa Nayanar


NESA NAYANAR: While Peria Puranam deals with devotees hailing from Tamil Nadu, Nesar is the lone exception. He is said to have been a weaver in the city of Kampili in North India who served Siva yogis by gifting them garments including loin cloths which they needed. A karma yogin with a devotional bent of mind, Nesar was granted salvation by the Lord for his selfless service.

நேச நாயனார் 
Courtesy: dinamalar

Temple imagesகாம்பீலி என்னும் பழம்பெரும் பதியில், காளர் மரபில் நேச நாயனார் என்பவர் அவதரித்தார். நேச நாயனார் ஈசரிடத்தும் அவர்தம் நேசரிடத்தும் அளவிலாப் பாசமுடையவராய் வாழ்ந்து வந்தார். இவர் மனம் முக்காலமும் முக்கண்ணனின் மென்மலர்த் தாளினை நினைக்க - வாக்கு திருவைந்தெழுத்து மந்திரத்தைச் சொல்ல - காயம் திருசடைபிரானுக்குத் திருப்பணிகள் பல செய்தன. நேச நாயனார் நெய்தல் தொழிலைச் செய்து வந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய ஆடைகளும் கீளும் கோவணமும் நெய்து வழங்கும் பணியைத் தட்டாது செய்து வந்தார். நேச நாயனார் சிவனடியார்களுக்காகவே வாழ்ந்தார். உயர்ந்த பேரின்பப் பெருவாழ்வு பெற்று பரமனின் மென்மலர்த்தாள் நீழலை அடைந்தார்.

குருபூஜை: நேச நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


நேச நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவனடியார்க்கு உடைகள் கோவணம் உதவுதல் சிறந்த சிவ தொண்டாதல்

சிவனடி யார்களாவார் சிவனடிமைத்திறமொன்றே கண்ணாயிருப்பதன்றித் தமது உடலுயிர் வாழ்வியல் பற்றிய ஏதொன்றையுங் கருதிப் பேணா நிலையினராவர். அது, "ஆரங் கண்டிகையாடையுங் கந்தையே பார மீசன் பணியல தொன்றிலார்" எனத் திருத்தொண்டர் புராணத்தும், "மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெலாங் கேடுண் டெனும்படி கேட்டுவிட்டோமினிக் கேள்மனமே ஓடுண்டு கந்தையுண் டுள்ளே எழுந்தைந்து மோதவுண்டு தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே" எனப் பட்டினத்தார் பாடலினும் வருவனவற்றாற் பெறப்படும். திருவருள் விட்ட வழி, தமது இன்றியமையாத் தேவைகளாகிய உண்டி உடையாதியன எவரேனும் தாமாக வழங்கினாற் கண்டுகொள்வதே அவர்கள் நிலையாதலின் அவர்களின் அத்தேவைகளை எவருந் தாமாக நினைந்து முன்வந்துதவி அவர்களைப் பேணுதல் சிறந்த சிவ புண்ணியமாகும். இச்சிவ புண்ணியத்தாற் சிவப் பேறுற்ற அமர்நீதி நாயனார் செய்தி ஏலவே அறியப்பட்டதொன்றே.

நேசநாயனார் சாலியர் எனப்படும் நெசவுத் தொழிலாளரா யிருந்தமையின் சிவனடியார்க் குதவும் உடை கீள் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அவர்கள் மகிழக் கொடுக்கும் வாய்ப்புடையராயினார். சிவனால் அருளப்பட்டனவாகிய திரிகரணங்களுஞ் சிவன்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுவன என்னும் ஞான விவேகத்தினால் அவர் தம் மனத்தொழிற் பாடெல்லாம் சிவன் திருவடிகளையே நினைதற்கும் வாக்கின் தொழிற் பாடெல்லாம் அவர் திருநாமமாகிய அஞ்செழுத்தையே ஓதுதற்கும் அர்ப்பணித்துக் கொண்டவராய்க் கையின் தொழிற்பா டெல்லாம் சிவனடியார்க்கு உடை கீள் கோவணம் நெய்வதாகக் கொண்டிருந்த அவரது பத்திமை யொழுக்க மாண்பினை அவர் புராணங் காட்டும். அது, "ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக் காக்கித் தாங்கு கைத் தொழிலின் செய்கை தம்பிரானடியார்க்காகப் பாங்குடை உடையுங் கீளும் பழுதில் கோவணமுஞ் செய்வார்" என வரும்.

திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment