56. Pusalar Nayanar
Pusalar was a Brahmin of Tiru Ninravur in Thondai Mandalam. He excelled
in the mental worship of the Lord. Mental worship is thousands of times
better than external ritualistic worship: mental worship soon leads to
Samadhi (superconscious state) and Self-realisation. He strongly desired
to build a temple for Lord Siva, but he did not have the money for it.
So, mentally he gathered the necessary materials for the purpose. He
laid the foundation stone on an auspicious day. He raised the temple and
had even fixed an auspicious day for the installation of the deity in
it.
The
Kadava king who was also a great devotee of Lord Siva had built a
magnificent temple in Conjeevaram. By chance he had also fixed the date
which Pusalar had mentally chosen, for the installation of the Lord in
his temple. The Lord wanted to show the king the superiority of
Pusalar’s great devotion. So, the Lord appeared in the king’s dream and
asked him to postpone the installation ceremony in his temple, as He
would be going to the temple constructed by His devotee at Tiru
Ninravur. The king woke up from sleep and was intensely eager to have
the Darshan of the devotee mentioned by the Lord and also have a look at
the great temple he had built, which he thought would be far superior
to his temple.
The
king came to Tiruninravur and searched all over the place for the
temple: he could not find any. Then the king enquired about Pusalar. He
found out Pusalar’s house and approached him. Pusalar was stunned when
he heard of the king’s dream. Soon, he recovered and was filled with
joy. He thought: ‘How kind and merciful is the Lord. I am only a
wretched creature and He has accepted my mental shrine as His Abode. I
am really blessed.’ He told the king that that temple was only in his
mind. The king was greatly surprised to hear this. Admiring Pulasar’s
devotion, the king fell at his feet and worshipped him. Pulasar
installed the Lord in his mental temple and continued to worship Him
till he attained His Abode.
பூசலார் நாயனார்
ஒழுக்கத்தால்
எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும்
திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவரது உள்ள
உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியில் மட்டுமே பதித்திருந்தது. ஆகம
வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார். பிறை அணிந்த
பெருமானுக்குத் தமது ஊரில் எப்படியும் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று
திருவுள்ளம் கொண்டார். ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட
முடியவில்லை. பூசலார் மனம் புண்பட்டு நைந்தார். செய்வதறியாது சித்தம்
கலங்கி ஏங்கினார் நாயனார். புறத்தேதான் புற்றிடங்கொண்ட பெருமானுக்குக்
கோயில் எழுப்ப இயலவில்லை; அகத்திலே, அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப
எவ்வளவு பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா? என்று தமக்குள்
தீர்மானித்தார். அதற்குத் தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய
கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள்
பார்த்து, தனி இடத்தில் அமர்ந்து ஐம்புலங்களையும் அடக்கி ஆகம முறைப்படி
மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதையே
சிந்தையாகக் கொண்டு இறைவன் கோயிலை அகத்தே இருத்தி கர்ப்பகிருஹம், ஸ்தூபி,
அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, கோபுரம் முதலிய
அனைத்தும் புத்தம் புதுப் பொலிவோடு உருவாக்கினார்.
புறத்தே கோயில்
எழுப்புவதற்கு எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது, அகத்தே கோயில்
எழுப்புவதற்கு! இதே சமயத்தில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த
பல்லவ தேசத்து மன்னன் காஞ்சியிலே ஈசனுக்கு கற்கோயில் ஒன்று கட்டி
முடித்தான். நாயனார் மானசீகமாகக் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நன்னாளில்
காஞ்சியிலும் கும்பாபிஷேகத்துக்குரிய நாள் குறித்து அதற்கான எல்லா
ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் மன்னன். கும்பாபிஷேகத்திற்கு முதல்
நாள் இரவு எம்பெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளினார். அன்பா !
திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளக்
கோயிலில் கட்டி முடித்துள்ள கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம். அந்த ஆலயத்துள்
நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ வேறு ஒரு நாளில்
கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார். பல்லவர்
கோமான் கண் விழித்தெழுந்தான். கனவை நினைத்து வியந்தான். திருநின்றவூர்
சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வருவது
என்று ஆவல் கொண்டான் மன்னன்; அமைச்சருடனும், பரிவாரங்களுடனும்
புறப்பட்டான். திருநின்றவூரை அடைந்த அரசன், பூசலார் அமைத்துள்ள
திருக்கோயில் எங்குள்ளது? என்று பலரைக் கேட்டான். ஊர் முழுவதும் தேடினான்.
எவருக்கும் தெரியவில்லை. இறுதியில் மன்னன் அவ்வூரிலுள்ள எல்லா
அந்தணர்களையும் வரவழைத்துப் பூசலாரைப் பற்றி வினவ, அவர்கள் மூலம் பூசலார்
இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டான் மன்னன்.
பூசலார் இருப்பிடம் நோக்கிப்
புறப்பட்டான் மன்னன். பூசலாரைக் கண்டான். அவரது அடிகளைத் தொழுது எழுந்தான்.
அண்ணலே! எம்பெருமான் என் கனவிலே தோன்றி நீங்கள், அவருக்காக எட்டு திக்கும்
வாழ்த்த, திருக்கோயில் கட்டி அமைத்துள்ளதாகவும், இன்று நீங்கள்,
அத்திருக்கோயிலில் ஐயனை எழுந்தருள்விக்க நன்னாள் கொண்டுள்ளதாகவும், அதனால்
நான் காஞ்சியில் கட்டி முடித்த திருக்கோயில் கும்பாபிஷேகத்தை வேறு நாள்
பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார்.
இவ்வெளியோன், தேவரீர் கட்டி முடித்துள்ளத் திருக்கோயிலைத் தரிசித்து வழிபட
பெருமகிழ்ச்சி கொண்டு வந்துள்ளேன். தாங்கள் அமைத்துள்ள அத்திருக்கோயில்
எங்குள்ளது? என்று கனிவோடு வினவிப் பணிவோடு வணங்கினான் மன்னன். மன்னன்
மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரம் வியப்பில் மூழ்கினார். அவர் உடல் புளகம்
போர்ப்ப மன்னனிடம் காடவர் கோமானே! அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு
இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினார் போலும் ! இவ்வூரில் அரனார்க்கு
ஆலயம் அமைக்க அரும்பாடுபட்டேன். பெருமளவு பொருள் இல்லா நான், புறத்தே தான்
ஆண்டவனுக்குக் கோயில் கட்ட முடியவில்லை. அகத்தேயாகிலும் கட்டுவோம் என்ற
எண்ணத்தில், வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டினேன். இன்று அவரை
இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார்.
அடியார் மொழிந்தது கேட்டு மன்னன் மருண்டான். இறைவழிபாட்டின் இன்றியமையாத
சக்தியை உணர்ந்தான். உள்ளக் கோயிலில் குடியேறப் போகும் இறைவனின் அருள்
நிலையை எண்ணிப் பார்த்தான். சங்கரனைச் சிந்தையில் இருத்தி, அன்பினால்
எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக, பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில்
ஒருபோதும் இணையாகாது என்பதை உணர்ந்தான். மன்னன் நினைவில் பலவாறு எண்ணி
நைந்தான். திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து அவரைப்
போற்றிப் புகழ்ந்தான். மன்னன் பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினாள்.
பிறையணிந்த பெருமானார் பூசலார் எண்ணியபடியே குறித்த காலத்தில் அவரது உள்ளக்
கோயிலில் எழுந்தருளினார். பூசலார் நாயனாரும் சிவபெருமானை உள்ளத்திலே
நிறுவிப் பூசனை புரியத் தொடங்கினார். அன்று முதல் தினந்தோறும் முக்காலமும்
ஆகம நெறிவழுவாமல் நித்திய நைமித்தியங்களைச் செய்து உள்ளக் கோயில்
முக்கண்ணப் பெருமானை வழிபட்டு வந்த நாயனார், பிறவாப் பேரின்பமாகிய
பெருமாளின் திருவடி நீழலையே அடைந்தார்.
குருபூஜை: பூசலார் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
மறைநாவன் நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்.
வாயிலார் நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
அகப்பூசை முத்தி சாதனமாதல்
சரியைத்
திருத்தொண்டுகளான திருவலகிடல், திருமெழுக் கிடல், திருவிளக்கேற்றல், தலை
வணங்கல், சிவன் புகழ் பாடல் ஆதியன புறவுறுப்புக்களாகிய கை, தலை, நா முதலியன
சிவஞ்சாரும் நெறியில் நிற்கப் பயிற்று மாறுபோல தூபம், தீபம், மலர்நீர்,
நைவேத்தியம் முதலியன கொண்டாற்றுங் கிரியைத் திருத்தொண்டாகிய சிவபூசை
இந்திரியம் அந்தக்கரணம் ஆகிய அகவுறுப்புகளைச் சிவஞ்சாரும் நெறியில் நிற்கப்
பயிற்று மியல்பினதாம். அகத்துக்கும் அகமாகிய சிவத்தொடு அகவுறுப்புக்களை
நேரடியாகத் தொடர்புறுத்தும் பண்பினதாதலின் இது புறவுறுப்புக்களாலாஞ்
சரியைத் தொண்டைவிட வீறும் விறலும் மிக்கதாதல் கொண்டு இதன் இன்றியமையாமை
துணியப்படும். அது அவ்வாறாதல், "பூக்கைக் கொண்டரசன் பொன்னடி போற்றிலர்
நாக்கைக் கொண்டரசன் நாமம் நவிற்றிலார் ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே" எனத் தேவாரத்தும் "மறப்புற்று விவ்வழி
மன்னி நின்றாலுஞ் சிறப்பொடு பூநீர் திருத்தமுன் னேந்தி மறப்பின்றி யுன்னை
வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் எந்தை பிரானே" எனத் திருமந்திரத்தும்
"தமக்கருக மோருருவிற் பூசைசமையார் தமக்குத் துணையாதோ தான்" எனச் சைவ சமய
நெறியினும் வருவன கொண்டறியப்படும். குறித்த இந்திரியம் அந்தக் கரணாதிகள்
தமது இயக்கத்துக்கு உயிரை இன்றியமையாதனவாயிருந்தும் அதே உயிரைப்
பராதீனப்படுத்தித் தேகாதிபோகங்களுக்கு அடிமையாக்கும் வகையில்
அவற்றுக்கிருக்கும் ஆற்றல் அவற்றைப் படைத்தவனது ஆணையால் நேர்ந்ததென்பது
ஆத்மஞான அந்தரங்க உண்மையாதலின் ஆணையாளனாகிய அவன் பணியி லழுந்தி அவன்
கருணையால் தம்நிலை மாறித் திருந்து மளவுக்கு அவற்றை அவன் முகப்பட்டு
நிற்கப் பயிற்றுதல் ஒன்றே அவற்றாற் பராதீனப்படுத்தப்படும் நிலை நீங்கி
உயிர் தன்னுடனான சிவனைச் சாருந் சுயாதீனநிலை பெறுதற்கு உகந்த வழியாம்
என்னும் விவேகம் பற்றியும் அப்பண்பினதாய் சிவபூசையின் இன்றியமையாமை
துணியப்படுவதாம். அது, "இந்திரியம் எனைப் பற்றிநின்றே என் வசத்தில் இசையாதே
தன்வசத்தே எனையீர்ப்ப திவற்றைத் தந்தவன் தன் ஆணைவழி நின்றிடலால் என்றுந்
தானறிந்திட்ட வற்றினொடுந் தனையுடையான் தாள்கள் வந்தனைசெய் தவற்றின்
வலியருளினால் வாட்டி வாட்டமின்றி இருந்திடவும் வருஞ் செயல்களுண்டேல்
முத்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள் மூளாவங்காளாகி மீளா னன்றே" எனச்
சிவஞானசித்தியாரில் வருவது கொண்டும் வலுவுறுவதாம்.
இங்ஙனம்
இந்திரியங்கள் அந்தக்கரணங்களைச் சிவனன்பால் நேர்படுத்தும் அகமுயற்சி
அழுத்தம் பெறற் பொருட்டே புறத்திற் சிவனுருவொன்றைத் தாபித்துத்
தூபதீபாதிகள் கொண்டு சிவபூசையாற்றும் நிலை நேர்ந்துள்ள தென்பது, இப்புறப்
பூசையிலும் அந்தர் யாகம் என்ற அகப்பூசை முன் நியமமாக இருந்து வருதலினாற்
பெறப்படும். அத்துடன் அந்தர் யாகம் பண்ணாது செய்த சிவபூசை பலனிழக்கம்
என்பதுங் கருதத்தகும். அது, "அர்ச்சித்தா னந்தரியாகம் புரியாதே பலத்தை
வர்ச்சித்தானென்றே மதி" என்னுஞ் சைவசமய நெறித் திருக்குறளானும்
"சிறந்தகத்து ளான்மாவினுறை சிவனைச் சிவபூசை செய்யா னாகி மறந்து புறத்தினிற்
பூசை வருந்தியே யியற்றுமவன் வயங்குமாவின் கறந்த பாலடி சிலகங்கையுளே
யிருப்பவுந்தான் கண்டுணாது புறங்கையினை நக்குமவன் போலுமால் யாமறியப்
புகலுங்காலே" என்ற அதன் உரை மேற்கோட் செய்யுளானும் வலுவுறும்.
ஆகவே,
இங்ஙனம் பல்லாற்றானும் சிவபூசையின் அந்தரங்க அடிநிலைப் பண்பெனக்
கொள்ளவுள்ள அகப் பூசை யானது மெய்யுணர்வுற்றோரால் அவரவர் அகப்
பண்பாட்டுநிலைக் கநுகுணமான வகையில் அனுஷ்டிக்கப்படுவ தொன்றாம். புறப்பூசை
அங்கங்களான கோயில், பஞ்சசுத்தி, தூபம், தீபம், அபிஷேகம், நைவேத்தியம்
என்பவற்றை ஒவ்வொன்றற்கும் சமதையான ஒவ்வோர் அகச்சூழ்நிலையாற் பாவனா ரூபமாக
அமைத்துக் கொண்டு சித்தத்தைச் சிவலிங்கமாகக் கண்டு பூசிக்கும் இவ்வகைப்
பூசை விபரம், திருநாவுக் கரசுநாயனார் தேவாரத்தில், "காயமே கோயிலாகக் கடிமன
மடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா
நிறையுநீ ரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவி காட்டி னோமே" எனவும்
திருமந்திரத்தில் "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ளற் பிரானார்க்கு
வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங் கள்ளப்
புலனைந்துங் காளா மணிவிளக்கே" - "வெள்ளக்கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக்
கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே" எனப் பலவேறு பாங்கினும் அறியப்படுவதாகும்.
வாயிலார்
நாயனார் இவ்வகையிலான அகப்பூசையே தமக்கேற்ற திருத்தொண்டாகக் கொண்டியற்றி
அதுவே சாதனமாகச் சிவபெருமான் திருவடி நிழல் சேர்ந்தின்புற்றுள்ளார். அது
சேக்கிழார் வாக்கில், "மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி உறவாதி
தனையுணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி இறவாத ஆனந்தம் எனுந்திரு மஞ்சன மாட்டி
அறவாணர்க் கன்பென்னும் அமுதமைத்தர்ச் சனைசெய்வார்" - "அகமலர்ந்த அர்ச்சனையி
லண்ணலார் தமைநாளும் நிகழவரு மன்பினால் நிறைவழிபா டொழியாமே திகழநெடு
நாட்செய்து சிவபெருமா னடிநிழற்கீழ்ப் புகலமைத்துத் தொழுதிருந்தார்
புண்ணியமெய்த் தொண்டனார்" என வரும்.
இவர்தம்
சிவபூசையின்கண், மறவாமை, சிவ உணர்வு, ஆனந்தம், அன்பு என்ற அகநிலைப்
பண்புகள் முறையே கோயில், திருவிளக்கு, அபிஷேகம், நைவேத்தியம் ஆக
அமைந்திருக்கின்றன. பூசை நெடுநாள் தொடர்ந்திருக்கின்றது. பூசைக்குப்
பிரீதியுற்ற சிவபெருமானால் அவர் திருவடி நிழல்தந்து வாழ்விக்கப்
பெற்றுள்ளார். இங்ஙனம் அகப்பூசைக்குச் சிவபெருமான் மகிழ்ந்து முத்திப்
பேறளித்தல், மன்னனொருவன், தன் அரண்மனையில் புறத்திலிருந்து தன்னேவல்
செய்வாரை விட அகத்திலிருந்து தன்னேவல் செய்வாரிடத்து விசேட அன்பாதரவு
கொண்டு வெகுமதி வழங்கல் போன்றதோர் காருண்யப் பண்பாகக் கொள்ளப்படும். அது,
"உள்ளேவல் செய்வாரைக் காந்தன் மிக உவப்பன் உள்ளேசெய் பூசை உவந்து" என வரும்
சைவ சமய நெறி உரை மேற்கோளானும் அறியப்படும்.
திருச்சிற்றம்பலம்
You tube links - Poosalar Nayanar:
https://www.youtube.com/watch?
No comments:
Post a Comment