May 16, 2015

Pathinettu Siththargal - Part 3

பதினெட்டு சித்தர்கள் - 3

உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த சித்தர்களின் பெயர்கள்,குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன:

"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர் நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர் கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி) சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர் செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."



சித்தர் பெயர்கள்மரபுஅடங்கிய தலம்
நந்திவேதியர்காசி
அகத்தியர் வேளாளர்அனந்த சயனம்
திருமூலர்வேளாளர்தில்லை(சிதம்பரம்)
புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி
புலத்திய சிங்களவர்யாழ்ப்பாணம்
பூனைக் கண்ணர் எகிப்தியர் எகிப்து
இடைக்காட்டு சித்தர்இடையர் திருவண்ணாமலை
போகர்சீனக் குயவர் பழனி
புலிக் கையீசர்
கருவூரார்கன்னரர் கருவூர்
கொங்கண சித்தர் கன்னட இடையர் திருப்பதி
காளங்கி நாதர் சீனத்து ஆசாரியார் காஞ்சீபுரம்
அழுகண்ணச் சித்தர்சீனத்து ஆசாரியார் திருக்குறுங்குடி
அகப்பேய் சித்தர் வேளாளர் அழகர் மலை
பாம்பாட்டி சித்தர் கோசாயி விருத்தாசலம்
தேரையர் வேதியர் பொதிகை மலை
குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம்
சட்டை முனி்சிங்களவர் திருவரங்கம்

பின் வருபவர்களும் சித்தர்களே என்பர் சிலர்;


சித்தர்கள் மரபு அடங்கிய தலம்

இராமலிங்க சுவாமிகள்
கருணீகர் குலம் மேட்டுக்குப்பம்
கமல முனி உவச்சர் திருவாரூர்
கடுவெளிச் சித்தர்
கணபதி தாசர்
காக புசுண்டர் சமணர் அன்னவாசல்
காளைச் சித்தர்
கோரக்கர் மராட்டியர் / கள்ளர் பேரூர்(கோவை)
கைலயக் கம்பளிச் சட்டை முனி

சிவவாக்கியர்
சங்கர குலம் சூரியானந்தர்
சுந்தரானந்தர் வேளாளர் மதுரை
தன்வந்திரி அந்தணர் வைத்தீசுவரன் கோயில்
பதஞ்சலியார் கள்ளர் இராமேசுவரம்
பத்திரகிரியார்
பட்டினத்தார் நகரத்தார் திருவொற்றியூர்

பீரு முகமது

பூரணானந்தர்
மச்ச முனி செம்படவர்திருப்பரங்குன்றம்
இராம தேவர்ஓதுவார்அழகர் மலை
வான்மீகர் வேடர் எட்டிக்குடி
மதுரை வாலைச் சாமி
உரோமரிஷி மீனவர்


இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது. ஆயினும் இவர்கள் பாடிய பாடல்கள் காணக் கிடைப்பது இல்லை.

சித்தர் மரபு அடங்கிய தலம்


எனாதிச் சித்தர்
சேட(ஷ)யோகியார்
காரைச் சித்தர்
குடைச் சித்தர்
பூகண்டம் வன்னியர்
புலிப்பாணி வேடர்
வியாசர் சந்திர குலம்
சோதி முனி பள்ளர்
டமரகர் மறவர்
வரரிடி(ஷி) கள்ளர் 
அறிவானந்தர் வள்ளுவர்
ச(ஜ)மதக்கினி சைனர்
சண்டேசர் வள்ளுவர்

"உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி. இந்தப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல்தான் சித்த மருத்துவம். சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய தமிழகத்தின் பண்டைய அறிவியலாளர்கள்தான் சித்தர்கள்.சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலக சித்தர் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடபடுகிறது.சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வண்ணமும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சித்தர் தின விழா கொண்டாடப்படுகிறது.
சித்தர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகள்.. 

  5783009.jpg?489


சித்தர்மரபை நோக்குங்கால், இது வரைகண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது. பதினெட்டு சித்தர் என்ற மரபு பன்னெடுங் காலமாய் இருந்து கொண்டே வந்துள்ளது. நூலுக்கு நூல் எண்ணிக்கை வேறுபட்ட போதிலும் கீழ்க்கண்ட சித்தர்கள் மிக முக்கியமான வர்களாக கருதப்பெற்று அவர்களின் பாடல்கள் ஞானக் கோவையாகவும் சித்தர் பாடல்களாகவு ம் பல்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்றுள்ளன. சித்தர்களின் எண்ணிக்கையை பதினெட்டு என்று பல சித்தர்பாடல்களே கூறுகின்றன.

“சித்தர்கள் தான் பதினென்ப ராத்தாள் சொன்ன/செயலெல்லாம் கண்டுணர்ந்து தெளிந்திட்டார்கள்” என ஞானவெட்டியான் 1500ல் பாடல் 220ம்,

“பாடுவார் பதிணென்பேர் நூல்கள் எல்லாம்/பாலகனே இத்தயிலம் கொண்டு சாதி” என்று அகத்தியர் பரிபாஷை 500ல் பாடல் 100ம்,

“வாத நூல் ஆதீதம் பதிணென்பேர் சித்தர் வசனித்த நூல்களும் பலிதம்” என புலத்தியர் கற்பம் 300ல் பாடல்54ம்

“மூலரோடு பதிணென்பேர் பரநாதாக்கள்’’ என மச்சமுனி பெருநூல் பாடல் 2ம்

“துலக்கு மந்தப் பதினெட்டுச் சித்தரையா/ தொல் புவியில் சொல்லாமல் மறைத்தார்” என யாகோபு வைத்திய வாத சூத்திரம் 400ல் பாடல் 179ம்

சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுத்து சொல்லுவதாகப் பாடல் பல உள்ளன.

ஒவ்வொரு சித்தர்களின் காலமும் வெவ்வேறானபோது எவ்வாறு அவர்களே அவர்களின் எண்ணிக்கையை பற்றி எப்படி இயலும் என ஐயமும் எழத்தான் செய்கிறது. இருந்தபோதும் முக்கியமாகக் கருதப்பெறும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் தாண்டி அதிகமாக உள்ளது என்பதே உண்மை.

சில பட்டியல்களைக் கூர்ந்து நோக்கினால், நாயன்மார், ஆழ்வார், ரிஷிகள், ஆச்சாரியார்கள், அருளாளர்கள் என்று நாம் அறிந்தவர்களையும் அவர்கள் பால் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகவோ என்னவோ சித்தர் பட்டியல்களிலும் சேர்த்திருக்கின்றனர். 48, 108, 1008 என்ற ஒரு எண்ணிக்கையை மனதில் கொண்டு அதை நிரப்பும் பொருட்டும் சேர்த்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை சில பட்டியல்கள் காட்டுகின்றன.

அபிதான சிந்தாமணியில் சித்தர்கள் பற்றிய குறிப்பில் சித்தர் ஒன்பதின்மர் என்று

1.சத்தியநாதர்
2.சதோகநாதர்
3.ஆதிநாதர்
4.அனாதிநாதர்
5.வெகுளிநாதர்
6.மாதங்க நாதர்
7.மச்சேந்திரநாதர்
8.கடேந்திரநாதர்
9.கோரக்க நாதர்

ஆகிய ஒன்பதுபேரையும்,தொடர்ந்து

சித்தர் பதிணென்மர் என்று
அகத்தியர்,
போகர்,
கோரக்கர்,
கைலாச நாதர்,
சட்டைமுனி,
திருமூலர்,
நந்தி,
கூன் கண்ணர்,
கொங்கணர்,
மச்சமுனி,
வாசமுனி,
கூர்மமுனி,
கமல முனி,
இடைக்காடர்,
புண்ணக்கீசர்,
சுந்தரானந்தர்,
உரோமரிஷி,
பிரமமுனி

இவர்களின்றி
தன்வந்திரி,
புலஸ்தியர்,
புசுண்டர்,
கருவூரார்,
ராமதேவர்,
தேரையர்,
கபிலர் முதலியவரும் பட்டியலிடப்படுகின்றனர்.

சித்தரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களைப் பற்றிய உண்மைகளைப் போலவே அவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒவ்வொரு நூலிலும் முரண்களைக் காண முடிகிறது. எனினும் சித்தர் ஒன்பதின்மர் எழுதியதாக எந்த ஒரு பாடலும் நமக்குக் கிடைக்கவில்லை. பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலில் 44 சித்தர் வகை பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

அவற்றில் சிவவாக்கியரின் பாடல் முதன்மைப்படுத்தப்பட்டு
பட்டினத்தார்,
பத்திரகிரியார்,
திருவள்ளுவர்,
சட்டைமுனி,
பாம் பாட்டி,
இடைக்காடர்,
அகப்பேய்ச்சித்தர்,
குதம்பைச் சித்தர்,
கடுவெளிச்சித்தர் என மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன..

சித்தர்கள் தம் வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் பெரு வாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்த சித்தர்கள், பாமரர் நலனுக்காக உண்மையான முறை யில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அவர்கள் நலன் குறித்த அக்கரையில் மருத்துவம் முதலாய பல நல்ல பணிகளை அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிக் கொணரவும், தெய்வங்கள் பற்றிய தேவையற்ற பயத்தைப் போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வே லைகள் செய்து சித்தர்பால் மக் களுக்குள்ள பயங்களைப் போக்கியு ம், தம்கருத்துக்களை மக்கள் முன் வைத்துச் செயல்பட்டுள்ளனர். சித்தர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்று எண்ணிக்கை பாராமல், எண்ணிக் கை சோராமல், அவர்கள் சொன்னது என்ன? அவர்கள் நமக்குக் காட்டிய வழி எத்தகையது ? அவைகளில் நாம் எந்த வழிகளை எளிதாகப் பின்பற்றலாம் என்று கருதுவது நன்மை பயக்கும். அவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது நமக்கு ஒரு ஆன்ம பலத்தையும் நல்ல வழியையும் காண்பிக்கும்.

மனிதப் பிறப்பு உயரியது. சாதி சமயங்கள் சாத்திரங்கள் முதலானவை ஒரு போதும் ஒருவரை மேம்படுத்தாது. பிற உயிர்களிடத்து உண்மையான அன்பு செலுத்தி அத்தகைய உயிர்கள் ஆன்ம பலம் பெற்று இறைத் தன்மை பெற்று மற்றவர்களுக்கு மனதார உதவி புரிந்து வாழ்தலே சிறந்த வாழ்வு என்று கருதிச் சித்தர்கள் வாழ்ந்தமை இவர்களைப் பற்றிய செய்திகளை, வரலாற்றை நுணுகி ஆராயும் போது தெரிய வருகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியையோ, மதத்தையோ, வர்ணங்களையோ போற்றி இவர்கள் வாழவில்லை. சக மனிதர்களுக்கு உதவி அவர்களது வாழ்வு சிறக்க பிறவி எடுத்ததன் பயன் பெற, உடல் நலம் பெற, சக்தியுடன் திகழ ஒருவன் எப்படியெல்லாம் வாழலாம் என்பதை வாழ்ந்து காட்டிய மேலாளர்கள் சித்தர்கள். உண்மையான பகுத்தறிவுடன் திகழ்ந்தவர்கள்.

மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களைக் கடைத்தேற்ற முடியும் என்ற பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம்.

அதுபோன்றே மதப்பிரச்சாரங்கள் பின்னாளில் நிகழக்கூடும் என்பதனையும் அவர்கள் உணர்ந்தே செயல்பட்டவர்கள் என்பதனை கொங்கணச் சித்தர் எழுதிய இப்பாடலின் மூலமாக அறியலாம்:

“எல்லாமறிந்தவரென்றுசொல்லியிந் தப்
பூமியிலேமுழு ஞானியென்றே
உல்லாசமாகவே வயிறு பிழைக்கவே
ஓடித்திரிகிறார்வாலைப்பெண்ணே
-இதுதான் சித்தர்கள் நமக்குவிட்டுச் சென்றசெய்தி.

சித்தரின் பெயர் பிறந்த மாதம் நட்சத்திரம் வாழ்நாள சமாதியடைந்த இடம்
1.பதஞ்சலி பங்குனி மூலம் 5 யுகம் 7 நாட்கள் இராமேசுவரம்.
2.அகத்தியர்மார்கழி ஆயில்யம் 4 யுகம் 48 நாட்கள் திருவனந்தபுரம்.
3.கமலமுனி வைகாசி பூசம் 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.
4.திருமூலர் புரட்டாசி அவிட்டம் 3000 வருடம் 13 நாட்கள் சிதம்பரம்.
5.குதம்பையார்ஆடி விசாகம் 1800 வருடம் 16 நாட்கள்மாயவரம்.
6.கோரக்கர் கார்த்திகைஆயில்யம் 880 வருடம் 11 நாட்கள் பேரூர்.
7.தன்வந்திரி ஐப்பசி புனர்பூசம் 800 வருடம் 32 நாட்கள் வைத்தீச்வரன் கோவில்.
8.சுந்தரானந்தர்ஆவணிரேவதி 800 வருடம் 28 நாட்கள்மதுரை.
9.கொங்கணர்சித்திரை உத்திராடம் 800 வருடம் 16 நாட்கள் திருப்பதி.
10.சட்டமுனி ஆவணி மிருகசீரிடம் 800 வருடம் 14 நாட்கள் திருவரங்கம்.
11.வான்மீகர் புரட்டாசி அனுசம் 700 வருடம் 32 நாட்கள் எட்டுக்குடி.
12.ராமதேவர் மாசி பூரம் 700 வருடம் 06 நாட்கள் அழகர்மலை.
13.இடைக்காடர் புரட்டாசி திருவாதிரை600 வருடம் 18 நாட்கள்திருவண்ணாமலை.
14.மச்சமுனிஆடி ரோகிணி300 வருடம் 62 நாட்கள்திருப்பரங்குன்றம்.
15.கருவூரார் சித்திரைஅஸ்தம் 300 வருடம் 42 நாட்கள் கருவூர், தஞ்சை.
16.போகர் வைகாசி பரணி 300 வருடம் 18 நாட்கள் பழனி.
17.பாம்பாட்டி கார்த்திகை மிருகசீரிடம் 123 வருடம் 14 நாட்கள்சங்கரன்கோவில்.
18.சிவவாக்கியர்தெரியவில்லை தெரியவில்லை காலம் தெரியவில்லை கும்பகோணம்.


Home Pathinettu Siththargal  Previous                                                              Next

3 comments:

  1. போகர்,கருவூரார் மற்றும் கொங்கனர் விஸ்வகர்ம மரபைச் சேர்ந்தவர்கள்.இதில் போகரே தன்னை உயர்க் குடியான விஸ்வகர்ம வம்சத்தை சேர்ந்தவன் என்று குறிப்பிட்டுள்ளார்.பிழை இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. போகர் குயவர் தான்

    ReplyDelete
  3. குயவர் குலத்தில் பிறந்த சித்தர்கள்
    போகர்,அகத்தியர்,பூலிப்பானி,கோரக்கர் கும்பர்

    ReplyDelete