கொங்கணவர் வாழ்க்கை வரலாறு – பாகம் 2
பின்
கொங்கணவர் ஒரு நாள் மூலிகைகளைத் தேடி மலை காடுகளில் அலைந்து திரிந்தார்.
அங்குள்ள சிற்றூர் ஒன்றில் கொங்கணவர் ஓர் பரிதாபமான காட்சியா கண்டார்
மலைவாசிகளான பளிங்கர்கள் வாழும் சிற்றூர் அது. அங்குள்ள இளம் வயதுடைய
பளிங்கன் ஒருவன் இறந்து போனதால் அவனது பெற்றோர் மற்றும் சுற்றத்தார்
துக்கம் தாளாது கதறியழுதனர். அதைக் கண்டு கொங்கணவர் மிகவும் மனம் வருந்தி
உடனே தம் உடம்பை விட்டு நீங்கி உயிரற்ற பளிங்கனின் உடம்பில் புகுந்து
அப்பளிங்கனாக உயிர் பெற்று எழுந்தார்.
இறந்து
விட்டான் என்று கருதப்பட்ட பளிங்கன் உயிருடன் எழுந்து விட்டதைக் கண்டு
பெற்றோரும் சுற்றமும் வியந்து மகிழ்ந்தனர். ஆனால், அப்பளிங்கர் இனத்துப்
பெரியோர் இந்நிகழ்வில் ஏதோ மர்மம் உள்ளது என்று ஐயம் கொண்டனர்.சற்று தொலைவில் உயிரற்றுக் கிடந்த கொங்கணவரின் உடலைக் கண்டனர். உடனே சற்றும் தாமதிக்காது அவரது உடம்பை தீ மூட்டி எரித்து விட்டனர்.
அதன்பின்
கொங்கணவர் பளிங்கருடன் தாமும் ஒரு பளிங்கராக மலைப் பகுதிகளில் வாழ்ந்து
வந்தார். கற்வ மூலிகைகளைத் தேடியலைந்து கண்டுபிடித்து அவற்றை உண்டு
காயசித்தி செய்து கொண்டார்.
இந்நிகழ்வைச் சித்தரான கருவூரார் தம் பாடல்களில்,
வந்திடும் போது அங்கே தான்
மலைப் பளிங்கனுமே செத்து
விந்தையாய்ப் போகப் பார்த்து
மிகவேதான் இர்க்கம் கொண்டு
சந்தோஷமாகத் தம் தன்
சரீரத்தை வைத்து விட்டு
இந்த நற்சரீரம் தன்னில்
இயல்புடன் பாய்ந்து விட்டாரே
– கரு – வாத – 217
விட்டதைப் பளிங்கர் கண்டு
மிக்கவே கொங்கணர் தேகத்தை
கட்டையில் வேகவைத்துக்
களிப்புடன் இருந்து விட்டார்
திட்டமாய்ப் பளிங்கரோடு
சேர்ந்திலை செடிகள் கண்டு
சட்டமாய்த் தெரிந்து கற்பம்
தானுண்டு மலையில் வாழ்ந்தாரே.
– கரு – வாத – 218
என்று பாடியுள்ளார்.
No comments:
Post a Comment